வெள்ளி, 1 செப்டம்பர், 2017

ஃப்ரூட் சாலட் 205 – காதல் அன்றும் இன்றும் – எழுத்தோவியம் – யார் புத்திசாலி

இந்த வார புகைப்படம்:

மாலை நேரச் சூரியனை படம் எடுப்பதில் ரொம்பவே ஆர்வம் அதிகமா? இல்லை, மாலை நேரத்தில் மட்டுமே சூரியனை படம் பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறதா என்பது புரியாத புதிர்.  மாலை நேரச் சூரியனை நிறைய படம் பிடித்திருக்கிறேன். பல முறை பயணங்களில், சாலையில் பயணித்தபடியே சூரியனை படம் பிடிக்க முயல்வேன். அப்படி சமீபத்திய பயணத்தில் எடுத்த சூரியன் புகைப்படம்!இந்த வாரத்தின் குறுஞ்செய்தி:

கடனே இல்லாதவன் பணக்காரன். நோயே இல்லாதவன் லட்சாதிபதி. கோபமே இல்லாதவன் கோடீஸ்வரன்!

இப்படிப் பார்த்தா உலகத்துல ரொம்ப கம்மியான பேர் தான் பணக்காரன், லட்சாதிபதி, கோடீஸ்வரன்! இல்லையா!

இந்த வார காணொளி

Cartoon தெரியும்….. WORDTOON தெரியுமா உங்களுக்கு?

சுபேந்து சர்கார் என்ற ஓவியர் கொல்கத்தாவினைச் சேர்ந்தவர். 1977-ஆம் ஆண்டு பிறந்த இவர் நிறைய WORD TOON வரைகிறார்.  இவரது சில காணொளிகள் கண்டு ரசித்ததுண்டு. குறிப்பாக FATHER என்று எழுதி அதை ஓவியமாக மாற்றும் காணொளி மிகச் சிறப்பு. போலவே, POLITICIAN என எழுதி மாற்றுவதும்! ஒரு மாதிரிக்காக, FATHER என எழுதி அதை ஓவியமாக்கும் காணொளி இந்த வாரத்தில் இங்கே…..


இந்த வார ரசித்த குறும்படம்:

காதல் – அன்றும் இன்றும்!இந்த வார முகப்புத்தக இற்றை:

வாழ்ந்து உயர்ந்து விட்டால் பொறாமையில் பேசுவார்கள். தாழ்ந்து வீழ்ந்து விட்டால் கேவலமாகப் பேசுவார்கள். இவ்வளவு தான் மனிதர்களின் உலகம்!

இந்த வார WhatsApp – படித்ததில் பிடித்தது!

இன்றைய அரசியல் பிரமுகர்களின் அறிவுத்திறன் பற்றிய ஒரு குட்டிக் கதை...!

புத்திசாலி!!!
மனைவியா??? புருஷனா?😳🤔

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மனைவி அவரிடம் வந்து ....

" என்னங்க...நானும் எல்லார்கிட்டையும் நாலு வருஷத்துக்கு மேலா நான் எம்.எல்.ஏ பொண்டாட்டி, நான் எம்.எல்.ஏ பொண்டாட்டின்னு சொல்லிகிட்டு இருக்கேன்..

எப்பதான் நான் மந்திரி பொண்டாட்டின்னு சொல்ரது..? உடனே சி எம் ஐப் பார்த்து, அதான் நம்ம தலைவரைப் பார்த்து, மந்திரியாகிற  வேலையைப் பாருங்க..

"அதுவும் நீங்க போலீஸ் மந்திரியாதான் ஆகணும்" என்றாள் மனைவி..

"அதென்ன வேற துறை மந்திரியா ஆகக் கூடாதா ? கேட்டார் எம்.எல்.ஏ...

முடியாது...நீங்க போலீஸ் மந்திரியாகத்தான் ஆகனும், ஏன்னா என் பிரண்ட்ஸ் பல பேர் இன்ஸ்பெக்டர் மனைவி, எஸ்.பி மனைவி, கலெக்டர் மனைவின்னு பெருமை பட்டுக்கொள்கிறார்கள்.

நான் போலீஸ் மந்திரியின் மனைவின்னு ஆயிட்டா...அதான் எனக்கு கெத்து...

சரி...சரி... கிளம்புங்க உடனே ! தலைவரைப் பார்த்து போலீஸ் மந்திரி ஆகுற வேலையைப் பாருங்க... என விரட்ட, சட்ட மன்ற உறுப்பினர் முதல்வரைச் சந்திக்க முதல்வரின் வீட்டிற்கு வருகிறார்...

முதல்வர் தன் வீட்டில் பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டு இருக்கையில் எம்.எல்.ஏ வந்துள்ள செய்தியை சொல்கிறார் உதவியாளர்.

"ஜாதி ஓட்டிற்காக உங்க எல்லாரோட பேச்சைக் கேட்டு இவனை எம்.எல்.ஏ ஆகிட்டு நான் அனுபவிக்கும் கொடுமை கொஞ்சமா நஞ்சமா... சரி அவனை உள்ளே வரச்சொல்" என்றார் முதல்வர் வேதனையுடன்.

"வணக்கம் தலைவரே! நான் வந்த நேரம் எல்லாருமே இருக்காங்க.."

" என்ன விஷயம் ? "
கேட்டார் முதல்வர்..

" தலைவரே ! நேரா விஷயத்துக்கு வரேன். என்ன பண்ணுவிங்களோ, ஏது பண்ணுவிங்களோ, எனக்குத் தெரியாது, என்னை உடனடியா போலீஸ் மந்திரியா ஆக்கிடுங்க" என்றார்...

கோபம் கொண்ட முகத்துடன் பொதுச் செயலாளரைப் பார்த்து முறைத்தார் முதல்வர்.

உடனே பொதுச் செயலாளர், எம்.எல்.ஏ விடம் அவருடைய பொது அறிவுத்திறன் பற்றி அவருக்கு உணர்த்த ஒரு கேள்வி கேட்டார்.

"ஆபிரகாம் லிங்கனை சுட்டுக் கொன்றவன் யார்?" எனக் கேட்டார்.

பொதுச் செயலாளர் அருகில் வந்து " அடுத்த வாரம் இதே நாளில் வந்து சொல்கிறேன்." என்று சொல்லி முதல்வருக்கு வணக்கம் சொல்லி கிளம்பினார் எம்.எல்.ஏ.

இதைக் கண்ட முதல்வர், அவன் கோபமா போயிட்டான் போல என்று சொன்னார்.

வீட்டிற்கு வந்த எம்.எல்.ஏ மனைவியிடம், என்ன சாப்பாடு என்று கேட்டார்.

" முதல்ல போன விஷயத்தச் சொல்லுங்க" என்றாள்.

"ஏறக்குறைய முடிவு ஆன மாதிரிதான். அடுத்த வாரம் அறிவிப்பு வரும்."

"எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க? எனக் கேட்டாள் மனைவி.

" இல்லன்னா எடுத்த உடனேயே ஒரு கொலை கேசை எங்கிட்ட ஒப்படைப்பாங்களா ?

யாரோ ஆப்ரகாம் லிங்கனாம், எவனோ போட்டுத் தள்ளிட்டு இருக்கான், பெரிய இடம் போல, அதான் நியூஸ் இன்னும் வெளியில் வரலே. நான் ஒரு வாரம் டைம் கேட்டுகிட்டு வந்திருக்கேன்.

அந்த ஆப்ரகாம் லிங்கனை கொலை செய்தவனை கண்டுபிடுச்சி அவங்க முன்னாடி ஒப்படைத்து, நான் போலீஸ் மந்திரின்னு எல்லோருக்கும் காட்டுறேன்" என்று சொல்ல,

"உண்மையான குற்றவாளியைக் கண்டு பிடிக்க முடியலேன்னா யாரையாவது சும்மாவாவது ஒத்துக்க வச்சிருங்க, அதுக்கு எவ்வளவு செலவு ஆனாலும் பரவால்லை!!" என்றாள் மனைவிஶ்ரீ.

வாழ்வும் வேலையும்!:


நன்றி: கீதா இளங்கோவன்…..

நாளைய பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

34 கருத்துகள்:

 1. அரசியல் கதை அட்டகாசம் ரசித்து படித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 2. அரசியல்வாதியைவிட அவருடைய மனைவி புத்திசாலிதான்.
  நாடு உருப்படும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   நீக்கு
 4. அனைத்தையும் ரசித்தேன். அதி காலையில் எழுந்துகொள்வதில்லையா அல்லது பிரயாணம் செய்யும் வாய்ப்பு கிட்டுவதில்லையா? அரசியல்வாதி வாட்ஸ்ஸப்- ரசித்தேன், இன்றைய யதார்த்தத்தைச் சொல்லுவதால்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலும் அதிகாலை எழுந்துவிடுவது தான். ஏனோ காலை நேரச் சூரியனை படம் பிடித்தது ரொம்பவும் குறைவு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 6. FATHER என்று எழுதி அதை ஓவியமாக மாற்றும் காணொளி மிகச் சிறப்பு.//
  அருமை.
  இந்தவார குறுஞ்செய்தி அனைத்தும் அருமை.
  வாழ்வும் வேலையும் படம் மட்டும் வரவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் எனக்குத் தெரிகிறதே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 7. இந்த மாதிரி ஆட்களாலும் அவர்களது பெண்டாட்டிகளாலும் தான்
  நாடே விளங்கியிருக்கின்றது.. இன்னும் நாலு பேர் சேர்ந்தால் போதும்!..

  ஓஹோ என்று இருக்கும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 8. பதில்கள்
  1. உங்களது முதல் வருகையோ.... மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வான்மதி மதிவாணன்.

   நீக்கு
 9. காலையில் இருக்கும் வேலைகளுக்கு சூரியனை எங்கே படம் பிடிப்பது? எனவே ஓய்வான மாலை வேலைகளில்தான் முடிகிறது. ஆனால் மறையும் சூரியனா, உதிக்கும் சூரியனா என்பது எடுத்தவர் சொன்னால்தான் தெரியும்!

  ரசித்தேன் அனைத்தையும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கும் வேலைகளுக்கு நடுவே! :) உண்மை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 11. இந்த வார பழக் கலவையில் Wordtoon ஐ இரசித்தேன். பெங்களூருவில் வசிக்கும் எனது நண்பர் ஸ்ரீதர் என்பவரும் இதுபோல் எண்களிலிருந்து ஓவியம் வரைவார்.

  அரசியல்வாதியின் அறிவுத்திறன் பற்றிய குட்டிக்கதை அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 12. அனைத்தும் அருமையான தகவல்கள்.. வீடியோக்கள் பார்க்க இப்போ நேரம் போதவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 13. அனைத்தும் ரசித்தோம். அரசியல் கதை ரொம்பவே காமெடி..குறும்படம் மற்றும் வேர்ட்டூன்ஸ் அருமை. எனது இரண்டாவது மகன் கொஞ்சம் வரைவான். அவன் இப்படி முயற்சி செயததுண்டு பார்த்து.

  கீதா: காலை சூரியன் சில சமயம் வாக்கிங்க் போகும் போது சிக்கினால் எடுப்பேன். அல்லது பேருந்தில் அதுவும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்தால் எடுப்பேன்/எடுத்திருக்கிறேன்....பகிர நினைத்துள்ளேன்..அதே போன்று மாலை சூரியனும் பயண நேரங்களில் நீங்கள் சொல்லியிருப்பது போல எடுப்பதுண்டு. மாலைச் சூரியனைப் படம் பிடிப்பது என்பது மிகவும் ரசனையானது ஜி...உங்கள் வரிகளை டிட்டோ செய்கிறேன்...

  குறுஞ்செய்தியும் இற்றையும் செம!! குறுஞ்செய்தி அதிலும் டாப்!!

  வேர்ட் டூன்ஸ் இது போன்று நிறைய பார்த்துள்ளேன் ஆனால் இப்போதுதான் இவரைப் பற்றி உங்கள் பதிவில் தான் அறிந்து கொண்டேன். சூப்பர்..

  குறும்படம் இனிதான் பார்க்கணும் நெட் ஸ்லோவாக இருக்கு...

  வாட்சப் செய்தி எனக்கும் வந்தது. ரொம்பவே சிரித்துவிட்டேன் அதே சமயம் இப்படித்தானே நமது அரசியல்வாதிகள் பலர் உள்ளனர் என்ற நினைப்பும் வந்தது...

  வேலையும் வாழ்வும் மிகவும் பிடித்தது!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 14. புகைப்படம் நன்றாக இருக்கிறது ஜி சொல்ல விடுபட்டுவிட்டது!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 16. நான் அதிகம் காலைச்சூரியனையே ரசித்திருக்கேன். அதிலும் முதல் முதல் சின்னஞ்சிறிய சிவப்புப் பொட்டாகக் கிளம்பும் சூரியன் மெல்ல மெல்ல ஓர் சிவந்த பந்தாக மேலெழும்பும் காட்சி கண்கொள்ளாக் காட்சி! பல சமயங்களில் முழுக்கோணத்தையும் சேர்த்துப் பார்க்கையில் எங்கிருந்தோ ஓர் கருமேகம் வந்து மேல் பாதியையோ அல்லது கீழ்ப் பாதியையோ அல்லது நடுவிலேயோ வரும். அதைப் பார்க்கப் பார்க்க இன்னும் பரவசம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலைச் சூரியன் - ஒரு சில முறை மட்டும் காலைச் சூரியனை ரசித்து படம் எடுத்ததுண்டு - அதுவும் ஹிமாச்சலப் பிரதேசத்திலும், குஜராத்திலும் அப்ப்டி காலைச் சூரியனைப் படம் பிடித்தது ஒரு சுகானுபவம்.

   உங்கள் அனுபவங்களும் வெகு சிறப்பு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   நீக்கு
 17. அரசியவாதி கதை அருமை. கீதா இளங்கோவன் வாழ்வதைப் பற்றிச் சொல்லி இருப்பது இன்னும் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....