சனி, 2 செப்டம்பர், 2017

மேகம் கருக்குது டக்குசிக்கு டக்குசிங்!Clicks and Colours என்ற முகநூல் குழுமம் ஒன்று உண்டு. ஒவ்வொரு வார இறுதியிலும் அவர்கள் சொல்லும் கருவிற்கு ஏற்ற படங்களை, குழுவின் உறுப்பினர்கள் முகநூலில் பகிர்ந்து கொள்வார்கள். நானும் அங்கே ஒரு Silent உறுப்பினர்! மற்றவர்களின் படங்களை ரசிப்பதோடு சரி. வெகு குறைவாகவே எனது படங்களை அங்கே பகிர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஒரு கரு கொடுத்து, அதற்குத் தகுந்த ஐந்து படங்களை பகிர்ந்து கொள்ளலாம். அவர்களுடைய முந்தைய கருக்களில் ஒன்றான ”மூன்று” என்பதற்கு ஏற்ற சில படங்களை எனது வலைப்பூவிலும் பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கான சுட்டி கீழே.


இந்த வாரத்திற்கான கருவாக “Clouds” அதாவது மேகங்கள் என்பதைத் தந்திருக்கிறார்கள். மேகங்களை நிறையவே படம் எடுத்ததுண்டு. சமீபத்தில் எடுத்த சில படங்கள் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அங்கேயும் பகிர்ந்து கொள்ள வேண்டும்! மேகங்கள் என்ற உடன் என் நினைவுக்கு வருவது சில மேகம் என்று தொடங்கும் சில பாடல்கள்! முக்கியமாக “மேகம் கருக்குது மழை வரப் பாக்குது” பாடல் – ஆனந்த ராகம் படத்திலிருந்து கானகந்தர்வன் யேசுதாஸ் மற்றும் ஜானகி பாடிய பாடல்.  இரண்டாவது உற்சாகத்துள்ளலாக இருக்கும் இன்னுமொரு பாடல்! பாருங்களேன்!


என்ன நண்பர்களே, பாடலை ரசித்தீர்களா? சரி இந்த வார Clicks and Colours கருவிற்குத் தகுந்த படங்களுக்கு வருகிறேன்.  சமீபத்தில் எடுத்த, கருவிற்குத் தகுந்த படங்கள் கீழே!

என்ன நண்பர்களே, பாடலையும், படங்களையும் ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

24 கருத்துகள்:

 1. பாடலும் படங்களும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   நீக்கு
 2. புகைப்படங்கள் அனைத்தும் ஸூப்பர் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 3. கடைசி புகைப்படம் மிகவும் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமல்.

   நீக்கு
 4. 16, 19 படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 6. எல்லாப் படங்களுமே செம!! கடைசி இருப்படங்கள் வெகு அருமை அதிலும் கடைசிப்படம் இன்னும்...அதோ போன்று கீழிருந்து 4 வது படம் !!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 7. படங்கள் மிக அழகு.. நானும் முன்பு கிளிக் அண்ட் கலேர்ஸ் இல் இணைந்திருந்தேனே...அகிலா அக்காவோடு,.. அமர்க்களம்.. கூத்து ... கும்மாளம் எல்லாம் பல போட்டிருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ நீங்களும் அங்கே இருந்திருக்கிறீர்களா? நான் ஒரு சைலண்ட் பார்வையாளர் மட்டுமே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 8. எல்லா படங்களும் ஸூப்பர். எங்கள் இந்த வார வெள்ளி வீடியோ கூட மேகப் பாடல்தான்! மேகம் கொட்டட்டும் என்று ஒரு பாடல் உண்டு. மேகத்துக்கும் தாகம் உண்டு என்கிற கவிதைத் தலைப்பில் ஒரு திரைப்படம் உண்டு. மேகம் அந்த மேகம் என்று 1000 பூக்கள் மலரட்டும் படத்தில் ஒரு பாடல் உண்டு. பாலைவனச்சோலையில் மேகமே... மேகமே...

  :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேகம் பற்றிய நிறைய பாடல்கள் உண்டு! ”மேகமே மேகமே” சோகம் சொட்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 10. கடைசி இரண்டு படங்களும் எனக்குப் பிடித்தன. அருமையான கலைக்கண்களோடு எடுக்கப்பட்ட படங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த இரண்டு படங்களும் திருவரங்கத்தில் எடுத்தவை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 11. பாடலையும் படங்களையும் இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 12. வெங்கட்,

  மேகங்களில்தான் எத்தனை வடிவங்கள் நிறங்கள் , நிமிடத்திற்கு நிமிடம் உருவத்தை மாற்றினாலும் உள்ளத்தை கொள்ளைகொள்ளும் மேகங்கள் மூலம் உங்களுக்கு நான் அனுப்பும் தூது, " அருமை, வாழ்த்துக்கள்".

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேகம் விடு தூது கிடைக்கப்பெற்றேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோ!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....