விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

விருதுகளும் தொடர் பதிவுகளும்!




ஹலோ....  மைக் டெஸ்டிங்!  One, Two, Three…. 

ஹலோ....  ஹலோ....  மைக் டெஸ்டிங்!  Three, Two, One!.....

நான் பேசறது உங்க எல்லாருக்கும் கேட்குதா.... 

Can you hear me! Can everyone hear me! 

என்ன ஆச்சு இந்த ஆளுக்கு! போன வாரம் என்னடான்னா “தொடர்ந்து வந்த பெண்அப்படின்னு ஒரு பதிவு போடறாரு! இந்த வாரம் என்னடான்னா “மௌன ராகம்கார்த்திக் மாதிரி மைக் போட்டு ஊரைக் கூட்டி யாரையோ காதலிக்கறத சொல்லப் போறாரா?அப்படின்னு யாரும் பயந்துட வேண்டாம்! அதெல்லாம் நம்மால முடியாத விஷயம்! :)

இப்படி மைட் டெஸ்ட் பண்ணி முன்னாடியே ஒரு பதிவு போட்டு இருந்தேன் – அது இருக்கும் ஒரு ரெண்டு வருஷம்...  என்ன பதிவுன்னு கேட்கறீங்களா? விருது வாங்கலையோ விருது!அப்படின்னு ஒரு பதிவு – அதுவும் காதலர் தினம் அன்னிக்கு போட்டிருக்கேன் – எனக்கே தெரியாம! :)



இப்ப திரும்பவும் அதே மாதிரி – அதே Versatile Blogger Award – படம் மட்டும் மாத்தி இருக்கோ! அதுவும் ஒருத்தர் இல்ல, இரண்டு பேர் இல்லை, ஐஞ்சு பேர் கடந்த பத்து நாளில் கொடுத்து இருக்காங்க! [டேய் உனக்கே இது அதிகமா தோணலை! ஓவரா சீன் போடாதே! அடங்கு! – வேற யாரு மனசாட்சி தான் கூவுது உள்ளுக்குள்ளிருந்து!]

வலையுலகில் ஒரு பழக்கம் – திடீர்னு யாராவது ஒருத்தர் இப்படி விருது குடுப்பாங்க! இல்லைன்னா ஒரு தலைப்பில் பதிவு போட்டு – அதை 5 பேர் தொடரணும், 10 பேர் தொடரணும்னு fine print-ல condition போடுவாங்க! உடனே தமிழ் வலையுலகமே அப்படியே பத்திக்கும்! சில நாள் பார்த்தா Dashboard-ல தொடர்பதிவு/விருது பதிவுகளா குவியும்! யாரு யாரை கூப்பிடறாங்க/விருது குடுக்கறாங்கன்னே புரியாது!

சில மாதங்களுக்கு முன்னர் தொடர்பதிவு – இப்ப விருது!  அதுவும் இந்த Versatile Blogger விருது!

சரி விஷயத்துக்கு வாடா ராசா!ன்னு நீங்க சொல்றதுக்கு முன்னாடி சொல்லிடறேன்! எனக்கு இந்த விருது மாதத்தில் விருது கொடுத்தவங்க ஐஞ்சு பேர் யாருன்னு சொல்லிடறேன்!

கமலா ஹரிஹரன் அவர்கள் தந்த விருது - என்னையும்தேடி வந்த விருது - 21.09.2014

எழில் அவர்கள் தந்த விருது – விருதுகள் - தூண்டுகோல்கள் – 18.09.2014

 

மதுரைத் தமிழன் அவர்கள் தந்த விருது – விஜய் டிவிகாரர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல இந்த வலையுலக பதிவர்கள்? – 18.09.2014

 

தில்லையகத்து துளசிதரன் அவர்கள் தந்த விருது - யாம் பெற்ற இன்பம் பெறுக எம் வலை அன்பர்கள்!  - 14.09.2014

 

துரை செல்வராஜூ அவர்கள் தந்த விருது - உங்களுடன் நான் – 13.09.2014

 

இப்படி விருது கொடுத்த பிறகும் அதைப் பத்தி என் வலைப்பக்கத்துல பதிவு போடலைன்னா “Blog” உம்மாச்சி கண்ணை குத்தும்னு மிரட்டல் வேற வருது! அதுனால தான் இந்த பதிவு!

 

என்னைப் பத்தி சொல்லணும்னு ஒரு கண்டிஷன் – ஏற்கனவே நான் பல தடவை TPT வேலை பண்ணியாச்சு! – அதாங்க தற்பெருமை தக்காளி வேலை! அதனால Strict No No!

 

இந்த விருதை குறைஞ்சது ஐந்து பேருக்காவது பகிர்ந்து தரணும்! – ஸ்ஸ்.... அப்பா....  இப்பவே கண்ண கட்டுதே! இவ்வளவு லேட்டா பதிவு போட்டா யாருக்கு கொடுக்கறது! எல்லாருக்கும் யாராவது ஒருத்தர் கொடுத்துருப்பாய்ங்க! அதனால ஒரு Safe வழி! – “என்னைத் தொடரும், எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் இந்த விருதினை தரப் போகிறேன்! சரியா!

 

எனக்கு விருது அளித்த நண்பர்களான துரை செல்வராஜூ, துளசிதரன், மதுரைத் தமிழன், எழில் மற்றும் கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.....

 

 

தொடரட்டும் வலைப்பதிவுகள்.... 

மீண்டும் சந்திப்போம்..

நட்புடன்

 

வெங்கட்.

புது தில்லி.

வியாழன், 16 பிப்ரவரி, 2012

அன்பின் விருது


சென்ற ”விருது வாங்கலையோ விருது” என்ற பகிர்வில் சந்தோஷமாக எழுதிய எனக்கு இன்னுமோர் அன்பின் விருது கிடைத்துள்ளது.  அதைப் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு. 




விருது மழையில் தூறிய கவிதைத் துளிகள் என்று மதிப்புரிக்குரிய திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு பதிவிட்டு அந்த பதிவில் எனக்கு Leibster Blog என்ற இன்னுமொரு விருதினை அளித்திருக்கிறார்.  அவருடைய நல்ல உள்ளத்திற்கு நன்றி. 


இப்போது வலைப்பூக்களில் விருது வழங்கும் நேரம்.  பெரும்பாலான வலைப்பூக்களில் விருது மழை பொழிந்து கொண்டு இருக்கிறது.  Leibster என்றால் என்ன என்று பார்க்கலாம் என அதன் அர்த்தத்தினை தேடினேன்.  Leibster என்பது ஒரு ஜெர்மனி மொழி வார்த்தையாம்.  அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு Dearest என்று சொல்லியிருக்கிறார்கள். 

இந்த விருதினை 200-க்கும் குறைவான தொடர்பவர்களை பெற்றிருக்கும் ஐந்து பதிவர்களுக்கு வழங்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். இந்த விருதினை பெற்றவர்கள் செய்ய வேண்டியது:

·         விருது வழங்கியவர்களுக்கு நன்றி சொல்லி அந்த பதிவின் சுட்டியை தமது பதிவில் அளிக்க வேண்டும்.
·         தனக்குப் பிடித்த, 200-க்கும் குறைவான தொடர்பவர்களைப் பெற்றிருக்கும் ஐந்து வலைப்பூக்களை அறிமுகம் செய்து, அவர்களுக்கும் அதைத் தெரியப்படுத்த வேண்டும்.
·         இந்த விருதினை அவரது வலைப்பூவில் சேர்க்க வேண்டும்.

மற்றவர்களது தவறுகளை உடனே சுட்டிக்காட்டும் குணம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.  ஆனால் மற்றவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களைப் பாராட்டத் தவறி விடுகிறோம்.  நம்மை யாராவது பாராட்டினால் எவ்வளவு மகிழ்ச்சி பெறுகிறோம்.  அதுபோலவே நாமும் அடுத்தவரின் நற்செயலைப் பாராட்டி மகிழ்ச்சியைப் பரப்புவோம்…

எனக்கு கிடைத்த மகிழ்ச்சியை, இந்த ஐந்து நபர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…


பொறுமை அவசியம் தேவை எனச் சொல்லும் அமைதி அப்பா

நான் அறிந்தது கையளவு என்று அடக்கத்துடன் சொல்லும் எனது நெடுநாள் நண்பன் வேங்கட ஸ்ரீனிவாசன்.

புதுவை சந்திரஹரி என்ற பெயரில் நல்ல சிறுகதைகளை பத்திரிக்கைகளில் எழுதி வரும் திரு ஹரிதாஸ்.

கனவுகளைக் காதலிக்கும் நண்பர் கார்த்திக் பாலா.


மீண்டும் சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

விருது வாங்கலையோ விருது!




”என்னங்க! வாசல்ல கையிலே வீடியோ காமிரா, மைக் எல்லாம் வச்சுக்கிட்டு ஒரு பெரிய கும்பல், உங்க பேரைச் சொல்லி கேட்கறாங்க! நீங்க என்னடான்னா இன்னும் தூங்கிக்கிட்டிருக்கீங்க, சீக்கிரம் எழுந்து வாங்க" என்ற குரல் கேட்டு  ”ஞாயிற்றுக்கிழமை தானே இன்னிக்கு! காலையிலேயே எழுப்பறியே!” என்று கேட்டபடியே எழுந்தேன். 

”அட காமிரா, மைக் எல்லாம் எடுத்துட்டு ஒரு கும்பல் நம்மளத் தேடியா? தப்பா எதுவும் பண்ணலையே” என்று எண்ணியபடியே வெளியே வந்தேன்.  மத்திய அரசில் அமைச்சராக இருக்கும் அரசியல்வாதி வெளியே வரும்போது தள்ளுமுள்ளு பண்ணி ஒரே சமயத்தில் பல நிருபர்கள் மைக்கை நீட்டி கேள்வி கேட்பது போல, என்னிடம் கேள்வி கேட்க முட்டி மோதினார்கள் நிருபர்கள்.  என்ன விஷயம் என்றே புரியாமல் முழித்தேன். 

நான் பேய் முழி முழிப்பதைப் பார்த்த ஒரு நிருபர், “என்ன சார் அடுத்தடுத்த நாள்ல இரண்டு பெரிய விருது வாங்கிட்டு, இப்படி அடக்கமா ஒண்ணும் தெரியாத மாதிரி முழிக்கிறீங்களே!  நாங்க ஒண்ணும் பார்ட்டி வையுங்க என்றெல்லாம் கேட்க மாட்டோம்! தைரியமா வெளியே வாங்க! ”என்றார்.  விருதா? எனக்கா?  என்ன விருது என்று இன்னமும் புரியாமல் கேட்டேன்.





”அட என்னங்க எங்க கிட்ட போய்  விளையாடிகிட்டு” – என்றபடி “உங்களுக்கு மதுரகவி வலைப்பூ வைத்திருக்கும் ரமா ரவி “The Versatile Blogger Award” கொடுத்து இருக்காங்க.  அது மட்டுமா அதே விருதினை திரும்பவும் கற்றலும் கேட்டலும் ராஜி-யும் கொடுத்திருக்காங்க!  இப்படி இரண்டு தடவை ஒரே விருது வாங்கியும் இவ்வளவு அவை அடக்கமா!  அதான் உங்க கிட்ட பேட்டி வாங்க வந்துட்டோம் காலையிலே" என்றார்கள். 

"இந்த செய்தியை சொன்ன உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி…  நமக்குக் கொஞ்சம் கூச்ச சுபாவம்!  திடீர்னு நம்ம மேலே ஃபோகஸ் லைட் எல்லாம் பட்டா வெக்கத்திலேயே ‘அளுதுருவேன்!’.  அதுனால பேட்டின்னுல்லாம் வேண்டாம்!  காலையிலேயே வந்து இருக்கீங்க, அம்மணி நல்ல டிகிரி காப்பி தருவாங்க! வாங்கி குடிச்சுட்டு கிளம்புங்க!”  என்று ஒரு வழியாக சமாளித்து அனுப்பி வைத்தேன். 

அவர்களை அனுப்பிய பிறகு, “அது என்ன, ’The Versatile Blogger Award’?  Versatile-ன்னா என்ன”ன்னு…Google Translate பண்ணிப் பார்த்தேன். ”பல துறைகளிலும் திறமையுடைய” என்று சொல்லுது கூகுள்.  அட எனக்குள்ள பல துறை வேற இருக்கா?   என்னமோ வெறும் எலும்பும், நரம்பும் தான் இருக்குன்னு இல்ல நினைச்சேன்!”  சரி சரி நம்ம திறமையை அடுத்தவங்க எடுத்துச் சொன்னாத்தானே புரியுது!  இந்த திறமையை உலகுக்கு எடுத்துச் சொன்ன சகோதரி ரமா ரவி அவர்களுக்கும் சகோதரி ராஜி அவர்களுக்கும் மிக்க நன்றி. 





இந்த விருது பெற்றால் செய்யவேண்டியது என்ன என்று Fine Print-ல் சொல்லிட்டாங்க!  அதாவது விருது பெற்றவர்களுக்குப் பிடித்த ஏழு விஷயங்களைச் சொல்லி வேறு ஐந்து வலைப்பதிவாளர்களுக்கு வழங்க வேண்டுமாம்!  அதனால் முதல்ல எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைச் சொல்லிடறேன்.

  • புத்தகங்கள் படிப்பது [இப்போது வலைப்பூக்கள் இந்த இடத்தினை மெதுவாகத் திருடிக்கொண்டு விட்டது!]
  • திரை இசைப் பாடல்கள் சேகரிப்பது [முன்பு ஒலிநாடாக்களில் இப்போது குறுந்தகடுகளில்!] மற்றும் கேட்பது.
  • சில வருடங்களாக புகைப்படம் எடுப்பது [வளைத்து வளைத்து எடுக்கிறேன் – அதான் பிடிக்கலைன்னா ஈசியா அழிச்சிடலாமே – டிஜிட்டலில்]
  • இரவு நேரப் பயணம் [பெரும்பாலும் பேருந்தில் செல்லும் போது இரவு நேரப் பயணத்தினையே விரும்புவேன் – நான் தூங்காது இரவின் நிசப்தத்தில் கடந்து செல்லும் அமைதியான ஊர்களைப் பார்ப்பதில் ஒரு ஆனந்தம்!]
  • எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் உணவினை ரசிப்பதும் ருசிப்பதும் [இருப்பதை விட்டு இல்லாததைத் தேடுவானேன்!]
  • அட ஐந்து தான் ஆயிற்றா?  இன்னும் ரெண்டு எழுதிடுவோம்..  :)  நண்பர்களோடு நெடும்பயணம் செய்யப் பிடிக்கும்.
  • நடப்பது மிகவும் பிடிக்கும் – அதற்காகவே இரு சக்கர – நான்கு சக்கர வாகனம் வாங்கவில்லையெனில் பாருங்களேன்.


சரி இப்போது விருது வழங்கும் நேரம் வந்து விட்டது.  நான் ரசித்த, ரசிக்கும், சில வலைப்பூ எழுதுபவர்களுக்கு இந்த விருதினை வழங்குகிறேன். 

காரஞ்சன் சிந்தனைகள் எனும் வலைப்பூவில் எழுதும் ஈ.எஸ். சேஷாத்ரி;

சோமாயணம் எனும் வலைப்பூவில் எழுதி வரும் கலாநேசன்;

ஆனந்த வாசிப்பு வலைப்பூ வைத்திருக்கும் பத்மநாபன்;

எழுத்து அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லும் ”ஆரண்யநிவாஸ்” ஆர். ராமமூர்த்தி;

நானோர் வானவில் மனிதன் என்று சொல்லும் மோகன்ஜி.

விருது பெற்ற நண்பர்கள் அனைவரும் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டதற்கு அடையாளமாய் ஒரு பதிவு எழுதி விருந்தினை மேலே Fine Print-ல் சொன்னது போல செய்து விட வேண்டும் என்ற விண்ணப்பத்துடன்...

மீண்டும் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.