எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, September 23, 2014

விருதுகளும் தொடர் பதிவுகளும்!
ஹலோ....  மைக் டெஸ்டிங்!  One, Two, Three…. 

ஹலோ....  ஹலோ....  மைக் டெஸ்டிங்!  Three, Two, One!.....

நான் பேசறது உங்க எல்லாருக்கும் கேட்குதா.... 

Can you hear me! Can everyone hear me! 

என்ன ஆச்சு இந்த ஆளுக்கு! போன வாரம் என்னடான்னா “தொடர்ந்து வந்த பெண்அப்படின்னு ஒரு பதிவு போடறாரு! இந்த வாரம் என்னடான்னா “மௌன ராகம்கார்த்திக் மாதிரி மைக் போட்டு ஊரைக் கூட்டி யாரையோ காதலிக்கறத சொல்லப் போறாரா?அப்படின்னு யாரும் பயந்துட வேண்டாம்! அதெல்லாம் நம்மால முடியாத விஷயம்! :)

இப்படி மைட் டெஸ்ட் பண்ணி முன்னாடியே ஒரு பதிவு போட்டு இருந்தேன் – அது இருக்கும் ஒரு ரெண்டு வருஷம்...  என்ன பதிவுன்னு கேட்கறீங்களா? விருது வாங்கலையோ விருது!அப்படின்னு ஒரு பதிவு – அதுவும் காதலர் தினம் அன்னிக்கு போட்டிருக்கேன் – எனக்கே தெரியாம! :)இப்ப திரும்பவும் அதே மாதிரி – அதே Versatile Blogger Award – படம் மட்டும் மாத்தி இருக்கோ! அதுவும் ஒருத்தர் இல்ல, இரண்டு பேர் இல்லை, ஐஞ்சு பேர் கடந்த பத்து நாளில் கொடுத்து இருக்காங்க! [டேய் உனக்கே இது அதிகமா தோணலை! ஓவரா சீன் போடாதே! அடங்கு! – வேற யாரு மனசாட்சி தான் கூவுது உள்ளுக்குள்ளிருந்து!]

வலையுலகில் ஒரு பழக்கம் – திடீர்னு யாராவது ஒருத்தர் இப்படி விருது குடுப்பாங்க! இல்லைன்னா ஒரு தலைப்பில் பதிவு போட்டு – அதை 5 பேர் தொடரணும், 10 பேர் தொடரணும்னு fine print-ல condition போடுவாங்க! உடனே தமிழ் வலையுலகமே அப்படியே பத்திக்கும்! சில நாள் பார்த்தா Dashboard-ல தொடர்பதிவு/விருது பதிவுகளா குவியும்! யாரு யாரை கூப்பிடறாங்க/விருது குடுக்கறாங்கன்னே புரியாது!

சில மாதங்களுக்கு முன்னர் தொடர்பதிவு – இப்ப விருது!  அதுவும் இந்த Versatile Blogger விருது!

சரி விஷயத்துக்கு வாடா ராசா!ன்னு நீங்க சொல்றதுக்கு முன்னாடி சொல்லிடறேன்! எனக்கு இந்த விருது மாதத்தில் விருது கொடுத்தவங்க ஐஞ்சு பேர் யாருன்னு சொல்லிடறேன்!

கமலா ஹரிஹரன் அவர்கள் தந்த விருது - என்னையும்தேடி வந்த விருது - 21.09.2014

எழில் அவர்கள் தந்த விருது – விருதுகள் - தூண்டுகோல்கள் – 18.09.2014

 

மதுரைத் தமிழன் அவர்கள் தந்த விருது – விஜய் டிவிகாரர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல இந்த வலையுலக பதிவர்கள்? – 18.09.2014

 

தில்லையகத்து துளசிதரன் அவர்கள் தந்த விருது - யாம் பெற்ற இன்பம் பெறுக எம் வலை அன்பர்கள்!  - 14.09.2014

 

துரை செல்வராஜூ அவர்கள் தந்த விருது - உங்களுடன் நான் – 13.09.2014

 

இப்படி விருது கொடுத்த பிறகும் அதைப் பத்தி என் வலைப்பக்கத்துல பதிவு போடலைன்னா “Blog” உம்மாச்சி கண்ணை குத்தும்னு மிரட்டல் வேற வருது! அதுனால தான் இந்த பதிவு!

 

என்னைப் பத்தி சொல்லணும்னு ஒரு கண்டிஷன் – ஏற்கனவே நான் பல தடவை TPT வேலை பண்ணியாச்சு! – அதாங்க தற்பெருமை தக்காளி வேலை! அதனால Strict No No!

 

இந்த விருதை குறைஞ்சது ஐந்து பேருக்காவது பகிர்ந்து தரணும்! – ஸ்ஸ்.... அப்பா....  இப்பவே கண்ண கட்டுதே! இவ்வளவு லேட்டா பதிவு போட்டா யாருக்கு கொடுக்கறது! எல்லாருக்கும் யாராவது ஒருத்தர் கொடுத்துருப்பாய்ங்க! அதனால ஒரு Safe வழி! – “என்னைத் தொடரும், எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் இந்த விருதினை தரப் போகிறேன்! சரியா!

 

எனக்கு விருது அளித்த நண்பர்களான துரை செல்வராஜூ, துளசிதரன், மதுரைத் தமிழன், எழில் மற்றும் கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.....

 

 

தொடரட்டும் வலைப்பதிவுகள்.... 

மீண்டும் சந்திப்போம்..

நட்புடன்

 

வெங்கட்.

புது தில்லி.

52 comments:

 1. இம்மாதம் ஐவரிடமிருந்து விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! விருதுகள் என்பவை ஊக்க மருந்துகள். ஆனால் அவை அடிக்கடி தரும்போது அது எதிர்மறை விளைவுகளைத் தர வாய்ப்புண்டு. எனவே கொஞ்ச காலம் இந்த விருது வழங்குவதை பதிவுலக நண்பர்கள் தள்ளி வைக்கலாம் என்பது என் கருத்து.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 2. மனம்கனிந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 3. விருது பெற்றமைக்கு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. மேன்மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 5. விருது பதிவை நீங்கள் தந்தவிதம் படிக்க மிகவும் நகைச்சுவையாக இருந்தது. பாராட்டுக்கள்( ஒரு சந்தேகம் இவ்வளவு நகைச்சுவையாக அருமையாக எழுதிருக்கீங்களே மனைவி பக்கத்தில் இல்லையா?)

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே அவங்க approval இல்லாம Publish பண்ணறதே இல்லை! :) ஒரு முன் ஜாக்கிரதை தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 6. வாழ்த்துகள், வாழ்த்துகள், வாழ்த்துகள், வாழ்த்துகள், வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. gee don't mistake me those who created and give this to other will know what is the meaning of versatile (Tamil - Panmugathanmai) no one knows that why u are all just simply passing to others with curtsey. Please stop all this things.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லா நண்பரே....

   Delete
 8. விருதுகளுக்கு (ஐந்தாச்சே) வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 9. உங்களுக்கு விருது கொடுத்தவர்களுக்கு முதலில் நன்றி, வாழ்த்துக்கள்.
  நீங்கள் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 10. எனக்கே எனக்குன்னு ஒரு கருத்து. சகட்டு மேனிக்கு இந்தமாதிரி யார் வேண்டுமானாலும் யாருக்கும் விருது வழங்குதல் பதிவுலகில் தடை செய்யப் பட வேண்டும் .பதிவுகளுக்கு விஜயம் செய்து படித்துப் பின்னூட்டமிடுவதே பெரிய அங்கீகாரமும் விருதும் ஆகும். சங்கை ஊதிவிட்டேன் கர்ர்ர்ர்ர் முர்ர்ர் என்று சத்தம் கேட்கிறது எஸ் ஆவதே சிறந்தது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 11. பெற்ற விருதுக்கும், அளித்த விருதுக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 12. வாழ்த்துக்கள் வெங்கட் சார்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 13. வாழ்த்துக்கள் சகோதரா !இன்றைய பகிர்வும் மனதில் மகிழ்வைத் தந்து
  குதூகலிக்க வைத்தது தொடருங்கள் விருதுகளும் தொடரட்டும் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 14. தருவதும் பெறுவதும் மகிழ்வான ஒன்றே வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 15. ஐந்துமுறை பாராட்டுகள் + ஐந்துமுறை வாழ்த்துகள். :)))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.

   Delete
 16. ஒ! ஐந்தா???!!!
  வாழ்த்துக்கள் அண்ணா!:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 17. வாழ்த்துக்கள் என் விருது லிஸ்ட்லேயும் நீங்க இருந்தீங்க! அப்புறம் துளசிதரன் சார் கொடுத்திட்டாரேன்னு மாத்திட்டேன்! கலக்குங்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 18. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

   Delete
 19. உற்சாகத்திற்கும் உத்வேகம் அளிக்கவுமே விருதுவழங்குதல் என அடியேன் கருதுகிறேன்!
  உங்கள் பாணியில் தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணா ரவி.

   Delete
 20. ஐந்து பேரிடமிருந்து விருது வாங்குவது என்பது கொஞ்சம் ஸ்பெஷல் தான்... மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 21. விருது பெற்றதற்கும், அதை வித்தியாசமான பதிவாய் வெளியிட்டதற்கும் என் வாழ்த்துக்கள் வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்.

   Delete
 22. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 23. Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 24. எல்லோருக்கும் நல்லவராய் இருப்பது ரொம்பக் கஷ்டம். உங்களுக்கோ அது ரொம்ப இஷ்டம் சகோ... மகிழ்வான வாழ்த்துக்கள். எல்லா விருதுகளும் வை.கோ. சாரின் பரிசு போலிருந்தால் தேவலை...:)) அடடே... உங்க விருதை அனைவருக்கும் பகிர்ந்தாச்சு போல...!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 25. ஐந்துமுறை விருதுகள் பெற்றதற்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 26. முள்ளங்கிப் பத்தையாட்டம் அஞ்சு விருதுகள்! வாழ்த்துக்கள்! விருதுக்கான விருந்து எங்கே நண்பரே! அன்புடன் எம்ஜிஆர்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரவிஜி ரவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....