புதன், 17 செப்டம்பர், 2014

தொடர்ந்து வந்த பெண்....





சென்ற வாரத்தில் ஒரு விடுமுறை நாள். தில்லி மெட்ரோவில் பயணித்து தில்ஷாத் கார்டன் பகுதிக்குச் சென்றிருந்தேன்.  அங்கே இருக்கும் சில நண்பர்களைச் சந்தித்து வீடு திரும்ப மீண்டும் மெட்ரோவினை நாடினேன். மெட்ரோ ரயில் நிலையம் வரை நடந்து செல்வது தான் எனது வழக்கம். எப்போதும் போல வேகமான நடை நடந்து நான் சென்று கொண்டிருந்தேன். எனது பின்னாலே ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள் என்பதை ஒரு சாலையில் திரும்பும் போது தான் கவனித்தேன்.

நான் சாலையைக் கடந்து, மேலும் நடந்தேன். மெட்ரோ நிலையம் வந்துவிட, வழக்கமான சோதனைகளை கடந்து எஸ்கலேட்டரில் பயணித்து நடைமேடைக்கு வந்து சேர்ந்தேன். வழக்கம்போலவே தில்லியின் மக்கள் கடல் அலையென திரண்டு மெட்ரோவில் பயணிக்கக் காத்திருந்தார்கள். பல்வேறு விதமான உடைகள், பலவித மனிதர்கள் – நடை, உடை, பாவனை, மொழி, கலாச்சாரம் என எத்தனை எத்தனை வேறுபாடுகள். அப்படியே பராக்கு பார்த்தபடியே இருந்தால் பொழுது போவது தெரியாது.

ஒவ்வொருவரும் அவரவர் நினைவுகளில் மூழ்கியிருக்க, நான் சக பயணிகள் அனைவரையும் நோட்டம் விட்டபடி இருந்தேன்.  கேமரா கண்கள் வழியே பார்க்காது சாதாரணமாகப் பார்க்கும்போது சாலையில் பார்த்த அதே பெண், சற்றே தள்ளி நின்று கொண்டிருந்தாள்.  இருபதுகளின் இளமையை அவள் பரைசாற்றிக் கொண்டிருந்தாள். தில்லியின் வழக்கப்படி உடலை இறுக்கிப் பிடிக்கும் ஒரு ஜீன்ஸ், மேலுக்கு Short Kurti, பின்னலாக போடாமல், குதிரை வாலாக ஒரு Rubber Band மட்டும். இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை அந்த Rubber Band-ஐ கழற்றி கூந்தலைக் கோதி மீண்டும் கட்டிக் கொண்டிருந்தாள். 

மெட்ரோ ரயில் வந்து நிற்க, கும்பலோடு கும்பலாக உள்ளே நுழைந்தேன் – அப்படிச் சொல்வதை விட, தள்ளி விடப்பட்டேன் எனச் சொல்வது சரியாக இருக்கும். எனைப்போலவே அவளும் உள்ளே வந்து சேர்ந்தாள்.

[DH]தில்ஷாத் [G]கார்டன் பகுதியிலிருந்து நான் இருக்கும் [G]கோல் மார்க்கெட் பகுதிக்கு மெட்ரோ ரயில் மூலம் வருவது தான் சிறந்த வழி. குளிரூட்டப்பட்ட வண்டியில் சுகமாக வரலாம் – இரண்டு இடங்களில் வேறு வழித்தடங்களில் செல்லும் மெட்ரோ வண்டிகளில் மாற வேண்டும் என்பது தான் ஒரு தொல்லை. முதல் மெட்ரோவில் பயணித்து ISBT நிலையத்தில் இறங்கி மீண்டும் எஸ்கலேட்டரில் கீழ் நோக்கிய பயணம் – தரைக்கு வெகு ஆழத்தில் இருக்கும் அடுத்த மெட்ரோ பாதைக்கு.

அடுத்த ரயிலுக்குக் காத்திருக்கும் போது மீண்டும் சக பயணிகளைப் பார்த்தால் அதே பெண் – எனக்கு அடுத்த வரிசையில். என்னடா இது, தொடர்ந்து வருகிறாளே என, அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்து முன்னால் சென்றேன் – கூடவே அவளும் எனது நிழலாக எனைத் தொடர்ந்தாள்.  ரயிலும் வந்து விட, உள்ளே நுழைந்தேன்.  பெண்ணும் கூடவே அதே ரயிலில். நான்கு நிலையங்களைத் தாண்டி நான் இறங்க வேண்டிய இடத்தில் கதவு திறக்க, எனக்குப் பின்னால் நின்றிருந்த மக்கள் வெள்ளம் எனை நடைமேடை நோக்கி தள்ளியது. 

கூட்டத்தோடு கூட்டமாக மீண்டும் எஸ்கலேட்டரில் மேல் நோக்கி பயணித்து அடுத்த மெட்ரோவுக்கான காத்திருப்பு.  இரண்டொரு நிமிடங்களில் ரயில் வந்து விட, வெளியே வரும் பெரிய கும்பலுக்கு வழிவிட்டு பின்னர் உள்ளே நுழைந்து கதவருகே நின்று கொண்டேன் – அடுத்த மெட்ரோ நிலையத்தில் இறங்க வேண்டும் என்பதற்காக! வண்டியின் கதவுகள் மூடப்போவதைப் பற்றிய எச்சரிக்கை அறிவிப்பு ஒலித்துக் கொண்டிருக்க, அந்தப் பெண் வேக வேகமாய் ஓடிவந்து நான் இருந்த அதே பெட்டியில் நுழையவும் கதவு மூடவும் சரியாக இருந்தது!......

எனக்கு மனதுக்குள் கொஞ்சம் சலசலப்பு – எதற்காக இந்தப் பெண் நம்மைத் தொடர்ந்து வருகிறாள்? என்ற கேள்வி மனதுக்குள் எழ, அவளை நோக்கி பார்வையை வீசினேன். பின்னணியில் “நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்”  பாடல் ஒலித்த மாதிரி ஒரு சந்தேகம்.  அதே சமயத்தில் அந்தப் பெண் என்னை நோக்கி ஒரு ஸ்னேக பாவத்துடன் பார்வையை வீச, எனக்குள் கொஞ்சம் சலசலப்பு குறைந்தது. மெலிதாய் அவள் புன்னகைக்க, நானும் புன்னகைக்க, அதற்குள் நான் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்தது!

வெளியே வந்தேன் – ஒரு சந்தேகத்துடன் திரும்பிப் பார்க்க – மெட்ரோவின் கதவுகள் மூடிக் கொண்டிருந்தன. மூடிய கதவுகளின் கண்ணாடி வழியே அவளைப் பார்க்க ஒரு புன்னகையுடன் அவள் அந்த ரயிலில் மேலும் பயணித்தாள்......  நான் சிந்தனையோடு வெளியே வந்து கொண்டிருந்தேன்.  “காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக அவளும் என்னைப் போலவே பயணிக்க, நானோ, அவள் எனைத் தொடர்வதாக நினைத்துக் கொண்டேனே என எண்ணி வெளியே வந்தேன்.

நல்ல வேளை என்னைப் போலவே அந்தப் பெண்ணும் “இந்த ஆள் நம்மை தொடர்ந்து வரானோஎன நினைத்து கூச்சல் போட்டிருந்தால் முதுகில் டின் கட்டி இருப்பார்கள் என்ற நினைப்பு வர சாலை என்று கூட நினைவில்லாமல் புன்னகைத்தபடி நடக்க, எதிரே வந்த பெண்மணி, அவளைப் பார்த்து புன்னகைக்கிறேனோ என நினைத்து புன்னகைத்தபடியே கடந்தாள்......

பல சமயங்களில் இப்படி பலரும் தவறாக புரிந்து கொண்டு விடுகிறார்களோ என நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்......

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

58 கருத்துகள்:

  1. ..ஹா.ஹா..ஹா... ஏதோ பெரிய சதி இருக்கிறது என்று நினைக்கிறேன் வெங்கட்! எதற்கும் ஜாக்கிரதையாகவே இருங்கள்!!! :))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திட்டமிட்ட சதியோ என்று தான் நானும் முதலில் நினைத்தேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா...

    அந்த பெண் தங்களை தொடர்வது பற்றி சொல்லி விதம் நன்றாக உள்ளது. அதுவும் சினேக்கா போல ஒரு புன்னகை... ஆகா.. ஆகா... கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி
    த.ம 3வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  4. ம்ம்ம்.. இப்படிப் பல சமயங்களில் ஏமாறுவதே நம் இனத்துக்கு வழக்கமாகப் போய் விட்டது. அவ்வ்வ்வ்வ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. எங்க பட டைட்டில காப்பி அடிக்கறீங்களே நியாயமா ;)

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
    3. அடுத்த பட டைட்டிலா? சொல்லவே இல்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி!

      நீக்கு



  6. //பல சமயங்களில் இப்படி பலரும் தவறாக புரிந்து கொண்டு விடுகிறார்களோ என நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்......//

    உண்மைதான். நினைப்புதான் பொழைப்பைக் கெடுக்கும் என்பது வழக்கு சொற்றொடர். நல்ல வேலை நீங்கள் அந்த பெண்ணிடம் எதுவும் கேட்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பெண்ணிடம் கேட்டிருந்தால் நிச்சயம் மண்டகப்படி தான்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  7. எதுக்கும் அடுத்த தடவை அதே ரோடிலே நடக்கும்போது,அதே ரயிலிலே பயணிக்கும்போது,வீட்டுக்காரியையும் துணைக்கு கூட்டிக்கொண்டு போங்க.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நல்ல ஐடியா தான்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

  9. ச்சே.. என்னவோ எதிர்பார்த்தேன்.. இப்படி முடிச்சுட்டீங்களே.. ! ஹஹஹா.. ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பவே எதிர்பார்த்து விட்டீர்களா! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

      நீக்கு
  10. இது போன்ற நிகழ்வுகள் எதேச்சையாக
    நிகழ்ந்துகொண்டே தான் இருக்கின்றன..
    நமது மனநிலைக்கு ஏற்றது போல...
    நம் எண்ணங்களும் விளைகின்றன....
    நீங்க சொன்னது போல.... உங்க மனநிலையில் அவங்களும்
    இருந்திருந்து கூச்சல் போட்டிருந்தால் அவ்வளவு தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் மகேந்திரன். பல சமயங்களில் நாம் தான் தவறாக நினைத்துக் கொள்கிறோம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  11. சுவாரஸயமாக ஒன்று மே..நடக்கவில்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடி வாங்கியிருந்தால் ஸ்வாரஸ்யமாக இருந்திருக்கும்! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  12. ஒரு பொண்ணு தான் உங்க பின்னாலே தொடரனுமா, ஏன் ஒரு ஆண் தொடர கூடாதா? நல்லா இருக்கே கதை,
    ஆதி மேடம், வெங்கட் சார் அந்த பெண்ணை தொடர்ந்து போயிட்டு, இப்ப நீங்க நம்புகிற மாதிரி ஒரு கதையை ஜோடிச்சிட்டாரு. பார்த்து சூதனமா இருந்துக்கோங்க!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா திசை திருப்பற மாதிரி இருக்கே! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன். உங்களுக்கு தனிமடல் அனுப்புகிறேன்.

      நீக்கு
  14. பிரயாணக் களைப்புத் தெரியாமல் வீடு போய் சேர்ந்திருக்கிறீர்கள். மீண்டும் அந்தப் பெண்மணியைப் பார்த்தால் நன்றி சொல்லி விடுங்கள் வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தித்தால் சொல்லி விடலாம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்...

      நீக்கு
  16. பல நேரங்களில் ஒரே நேரத்தில் பயணம் செய்வோரிடையே இம்மாதிரி கலக்கங்கள் வர வாய்ப்பு இருக்கிறது. உங்கள் பயம் நியாயமானதே. அவள் நீங்கள் அவளைப்பின் தொடர்வதாகக் கருதி கூச்சலிட்டிருந்தால்.........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  17. நல்ல வேளை என்னைப் போலவே அந்தப் பெண்ணும் “இந்த ஆள் நம்மை தொடர்ந்து வரானோ” என நினைத்து கூச்சல் போட்டிருந்தால் //

    நல்லவேளை !

    எதிரே வந்த என்னப்பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்று கேட்கவில்லையே! அதுவும் நல்லது தான்.
    அனுபவம் புதுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  18. ஐயே.... இவ்வளவு தானா.......)))

    நான் என்னவோ ஏதோன்னு நெனச்சிட்டேன்.... நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்!

      நீக்கு
  19. ஏதோ சஸ்பென்ஸ் காத்திருக்குனு வந்தால்..... ஏமாத்திட்டீங்களே! இது நியாயமா? :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  20. எழுத்து நடையும் நல்ல விறுவிறு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  21. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  22. தில்ஷாத் [G]கார்டன் பகுதியிலிருந்து [G]கோல் மார்க்கெட்பகுதி வரை நானும்தான் அந்த பெண்ணுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தேன்.அந்த பெண் மட்டுமே உங்கள் கண்ணில் பட்ட மர்மம் என்ன ?)))))))))))
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் என்னை கவனிக்கவில்லை என்று தெரிகிறது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
    2. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கவனித்துக் கொண்டேதானே வந்தேன் ))))))

      நீக்கு
  23. ஆனால் இது போன்ற அனுபவங்கள் எனக்கும் வாய்த்துள்ளது.. சரி இப்படியாவது பின் தொடருகிரார்களே என்ற சந்தோசத்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டியது தான் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  24. சில நேரங்கள்! சில நினைவுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  25. உங்களுக்காக ஒரு விருது என் தளத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்
    nigalkalam.blogspot.com/2014/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி எழில்.

      விருது அளித்து சிறப்பித்தமைக்கும் தான்!

      நீக்கு
  26. சில நேரங்களில் இதுபோல் நினைக்கவும் தோன்றும் நடக்கவும் செய்யும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  27. நல்ல சூப்பரா ஒரு பொண்ணை நோட்டம் விட்டுட்டு ஒன்னுமே தெரியாதமாதிரி ஒரு போஸ்டும் போட்டாச்சு! திருமதி. டில்லி அண்ணாச்சி எங்கு இருந்தாலும் மேடைக்கு வரவும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமதி டில்லிக்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் இந்த பதிவே போட்டேன் தக்குடு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....