புதன், 24 செப்டம்பர், 2014

ஓஹோஹோ... கிக்கு ஏறுதே!படம்: இணையத்திலிருந்து....

நேற்று மாலை ஏழரை மணி அளவில் அலுவலகத்திலிருந்து வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் ஒரு குடிமகன் ஓட்டுனர் உரிமம் பெற எட்டு போடுவது போல, நடந்து வரும்போதே எட்டு போட்டுக் கொண்டிருந்தார். அவர் தள்ளாடுவதில் என் மேல் முட்டிக் கொள்வாரோ என்று சற்றே ஒதுங்கினேன்... “என்னவே.... குடிச்சிருக்கியா? தள்ளாடற! என்று என்னைக் கேட்டுவிட்டு குப்பைக்கூடையின் அருகில் இருந்த நாயிடம் பேசினார்! “இவன் கிடக்கான் குடிகாரன்.....  நீ வாடா செல்லம், உனக்கு லெக் பீஸ் வாங்கித்தரேன்!

போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு சரக்கடித்திருப்பார் போல!

எத்தனை விதமான போதைகள்! விதம் விதமாய் கண்டு பிடிக்கிறார்கள் இங்கே. வீட்டை விட்டு ஓடி வரும் சிறுவர்கள், தில்லியின் பல பகுதிகளில் நடைபாதையில் குடியிருக்கும் நாடோடிகள் என இவர்களது போதைப்பழக்கம் அளவிடமுடியாதது. குப்பைக்கூடைகளில் இருந்து பிளாஸ்டிக் பேப்பர்களை எடுத்து, அதை விற்று வரும் பணத்தில் உணவுக்கு செலவழிப்பதை விட போதைக்கு அதிகம் செலவழிக்கிறார்கள்.

அதிலும் சில சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி, White Fluid [Eraze-Ex] கூட வரும் Thinner-ஐ ஒரு துணியில் நனைத்து அதை நுகர்ந்து போதை ஏற்றிக் கொள்கிறார்கள்.  சில இடங்களில் இதன் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும், Stationary கடைகளில் இப்போதும் கிடைக்கிறது. விற்பனையும் அமோகமாக இருக்கிறது.  அதன் முதல் தேவையை விட போதை ஏற்றிக்கொள்ள வாங்குபவர்கள் தான் அதிகம் என்கிறது ஒரு கணக்கெடுப்பு!

இது இப்படி இருக்க, நண்பர் ஒருவர் தனது தம்பியின் போதைப்பழக்கம் பற்றி சில நாட்கள் முன்னர் சொல்லிய விஷயம் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதையும் உங்களுக்குச் சொல்லி விடலாம்! அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சி....  உங்களுக்கும் அதிர்ச்சி ஏற்படலாம்....  கவனமாகப் படியுங்கள்!

 படம்: இணையத்திலிருந்து....

நண்பரின் தம்பி - அவருக்கு வயது 45. குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி, ஒவ்வொரு நாளும் ஒரு அத்தா[adhdha] அதாவது Half இல்லாது இருக்க முடியாது.  தினமும் இப்படி குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வாராம். வீட்டிலுள்ளவர்கள் எத்தனை அறிவுரை கூறினாலும் அதனை கவனத்தில் கொள்ளாது குடிப்பழக்கத்தினை தொடர்ந்திருக்கிறார்.

குடிப்பழக்கமும் அதனால் வரும் தகராறுகளும், தொல்லைகளும் அதிகரிக்க, அவரின் குடிப்பழக்கத்தினை மறக்கடிக்க, சிகிச்சைகள் அளிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.  தில்லி நகரிலுள்ள ஒரு De-addiction Centre-க்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க அங்கேயே தங்க வைத்திருக்கிறார்கள்.  சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போது குடிக்க முடியாது ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். போதை ஏற்றிக்கொள்ள ஏதாவது செய்தே ஆகவேண்டும் என திட்டமிட்ட அவர் செய்த விஷயம் என்ன தெரியுமா? தனக்கு ஜலதோஷம் பிடித்திருப்பதாகச் சொன்னது!

ஜலதோஷம் பிடித்திருக்கிறது என்றும் அதனால் Vicks Vaporub வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.  ஆறுவிதமான தொல்லைகளிலிருந்து நிவாரணம் என அவர்கள் விளம்பரம் செய்ய, இவர் ஏழாவதாக அதற்கு ஒரு பயனைக் கண்டுபிடித்திருக்கிறார்.  காலை உணவாக தரும் bread இல் jam-க்குப் பதிலாக Vicks Vaporub-ஐத் தடவி அதை உட்கொண்டிருக்கிறார்.  ஒரே நாளில் ஒரு Vicks Vaporub காலியாக, அடுத்த நாளும் கேட்டிருக்கிறார். மூன்றாவது நாளும் கேட்க, சந்தேகம் வந்து அவரை கவனித்தால் அவர் அதை Jam போல உபயோகிப்பது தெரிந்திருக்கிறது.

எப்படியெல்லாம் போதை ஏற்றிக் கொள்ளத் தோன்றுகிறது அவருக்கு. சாதாரணமான ஒரு இச்சையாக தொடங்கிய போதை ஆசை, கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி அவரை அடிமையாக்கி விட்டதே....

இவரது போதைப் பழக்கத்திலிருந்து இவரை எப்படியும் மீட்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் போராடி வருகிறார்கள். எப்படியாவது போதை ஏற்றிக்கொள்வதை தடுக்க இப்போது கண்கொத்திப் பாம்பாக அவரையே கவனித்து வருகிறார்களாம். இப்போது காட்டும் கவனத்தினை, ஆரம்பத்திலேயே செலுத்தியிருந்தால் குடிபோதைக்கு அடிமையாகி இருக்க மாட்டாரோ எனத் தோன்றினாலும், சுயபுத்தி இல்லாத போது என்ன சொல்லி என்ன பயன் என்றும் தோன்றுகிறது!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 கருத்துகள்:

 1. ஐயோ படித்தாலே பகீரென்கிறதே. போதையால் பாதை தவறிப் பாழாய்ப்போனவர்கள் எத்தனை எத்தனை பேர்? கிடைத்த வாழ்க்கையை வாழத்தெரியாத மூடர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூடர்கள்... சரியாச் சொன்னீங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 2. போதை கழுதையாக உதைத்து கிக்கு ஏற்றுகிறதே இவர்களுக்கு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 3. கலி புருஷனின் லீலைகளில் இதுவும் ஒன்று!..
  அரசாங்கமே முன்னின்று மது விற்கும் போது என்ன சொல்வது!?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 4. வணக்கம்
  ஐயா.

  போதைக்கு அடிமையாகிவர்களின் நிலையை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் இறைவன்தந்த வாழ்க்கையை வாழத் தெரியவில்லை.. என்றுதான்சொல்ல முடியும்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 5. முழு மதுவிலக்கு அவசியமானது...
  எத்தனையோ குடும்பங்கள் திக்கத்து போய்
  நிற்கின்றன இந்தக் குடியால்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   நீக்கு
 6. படிக்கவே பயங்கிரமாக இருக்கிறது.
  அப்பப்பா, எப்படியெல்லாம் யோசிக்க்கிராங்க. எல்லாம் போதை படுத்தும் பாடு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 7. இதை எல்லாம் படிக்கும் போது கவலை ஏற்படுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   நீக்கு
 8. கேட்கவே வருத்தமாக இருக்கிறது. குடி மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை அந்த பழக்கத்திலிருந்து மீண்டுவர மதுவை விற்கும் அரசே சிகிச்சை அளிக்கவேண்டும் மேலும் மதுவிற்பனையையும் நிறுத்தவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசாங்கத்திற்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக மதுவை அரசே விற்கும்போது என்னத்தைச் சொல்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 9. கொடுமை.விக்ஸ் சாப்பிட வேறு செய்வார்களா?

  திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் என்பது போல அவர்களாக மனம் வைக்கா விட்டால் அவர்களைத் திருத்த முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 10. போதையிலிருந்து மீள வேண்டுமென்றால் சம்பந்தப்பட்டவர்களும் கொஞ்சமாவது அதிலிருந்து மீள விருப்பப்பட வேண்டும்... குழந்தைகள் நிலை தலை நகரில் மட்டுமல்ல..இங்கும் அப்படித்தான் என்ன செய்ய?...அரசும் தடை செய்ய வேண்டும்...இருமல் மருந்தும் போதை தருகிறதென்று அதைக் குடிப்போரும் உண்டு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 11. போதையினால் இவர்கள் மெய் மறந்து உலகம் மறந்து போகலாம். ஆனால் குடும்பத்தினருக்கு உறக்கமும் நிம்மதியும் தொலைந்து போகிறதே! எந்தப்பொருளைக்கண்டாலும் அதில் போதைக்கான ஒன்றைத்தேடிப்பிடிக்கும் இவர்களைப்போன்றவர்களுக்கு அதிலிருந்து மீள வழியுண்டா, திருந்தும் மார்க்கமுண்டா என்று புரியவில்லை!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 12. சில பள்ளிகள் அருகே கடை வைத்திருப்பவர்கள் தின்பண்டங்களில் போதைப் பொருளைக் கலந்து சிறார் சிறுமிகளை அவர்கள் கடைகளுக்கு வரும்படி செய்கிறார்களாம். எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 13. பல போதை ஆசாமிகள் இதில் இருந்து மீள்வது இல்லை என்பதே வருத்தமான ஒன்று! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 14. அந்த காலத்துல இளைஞர்கள் எப்படி இருந்தாங்கனு தெரியல.. இப்ப, 'தண்ணி அடிக்கலனாலும், போற வர எல்லா பொண்ணுங்களையும் சைட் அடிக்கலனாலும் அவன் ஆம்பளையே இல்லன்னு' ஒரு தியரி சொல்றாங்க. நான் அவங்களுக்கு சொன்ன பதில்.. 'அப்டினா நான் ஆம்பளையே இல்லடா !!'

  வட்டங்களில் சுழலுது வாழ்க்கை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல பதில். இப்படித்தான் ஆண் என நிரூபிக்க அவசியமே இல்லை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிபி எஸ். குமார்.

   நீக்கு
 15. போதை தரும் பாதையைப் பாருங்கள்! சே எப்பதான் போதைப் பாதையிலிருந்து மாறுவாங்களோ?! பயங்கரமா இருக்கு போற போக்க பாத்தா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 16. பெட்ரோலை முகர்ந்து போதையில் அழியும் மெக்கானிக் சிறுவர்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள் !
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடரும் சோகம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 17. அரசே கடைகளைத் திறந்து குடி குடி என்கிறது
  பாவம் மக்கள்
  தம 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 18. இதுமாதிரியான ஒரு போதைப் பழக்கத்தை எப்போதோ ஒரு குறும்படத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். தங்களைத் தாங்களே கெடுத்துக்கொள்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு
 19. 'Adhadha' vukkkaaha petha Aththavaiye thalaiyil kallap pottuvidukiraarakale!!

  (Ullane Ayya!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உள்ளேன் ஐயா.... சரி ஐயா!

   ஜெய்ப்பூர் வாசம் எப்படி இருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 20. மாட்டிக் கொண்டவர்களை மீட்பது எளிதல்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....