திங்கள், 29 செப்டம்பர், 2014

நடக்க முடியாதவர்களுக்கு.....மாதா வைஷ்ணோ தேவி பயணம்பகுதி 4

முந்தைய பகுதிகள்: பகுதி-1 பகுதி-2 பகுதி-3

 படம்: இணையத்திலிருந்து....

சென்ற பகுதியில் சொன்னது போல இந்த நடைப்பயணம் 12 கிலோ மீட்டர்! – அட இவ்வளவு தூரம் நடக்கணுமா என்று மலைத்து நின்று விட்ட நண்பர்களும், நடக்க இயலாத முதியவர்களும், குழந்தைகளும் கவலையே படவேண்டியதில்லை. அதற்கும் இங்கே சில வசதிகள் உண்டு.  முதல் வசதி – கச்சர் [KACHAR]/[G]கோடா என அழைக்கப்படும் குதிரைகள்.  மொத்த தொலைவினை இரண்டு/மூன்று பகுதிகளாக பிரித்து வெவ்வேறு குதிரைகளில் சவாரி செய்யலாம் – Darshani Darwaza விலிருந்து Adhkuari ஒரு பகுதியாகவும், அங்கிருந்து Bhavan என அழைக்கப்படும் கோவில் வளாகம் வரை ஒரு பகுதியாகவும் குதிரைச் சவாரி செய்யலாம்.

 ”நான் ரெடி.... நீங்க ரெடியா?” - காத்திருக்கும் குதிரைகள்

Shri Mata Vaishno Devi Shrine Board [SMVDSB] இந்த சவாரிக்கான கட்டணத்தினை ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள். இருந்தாலும், பல குதிரைக்காரர்கள் மொழி தெரியாதவர்களை ஏமாற்றுவது எல்லா இடங்களைப் போலவே இங்கேயும் நடக்கிறது. சுமந்து செல்வது குதிரைதான் எனினும், குதிரைக்காரரும் கூடவே நடந்து வர வேண்டும். நாளொன்றுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மேலும் கீழும் பயணிக்கிறார்கள் – நடுவில் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு!

 பால்கி, டோலி....  

போலவே “[D]டோலி என அழைக்கப்படும் வசதியும் உண்டு – ஒரு இருக்கை – அதன் இரு பக்கங்களிலும் வலுவான குச்சிகள் கட்டப்பட்டு இருக்க, பக்தர்களை அந்த இருக்கையில் உங்களை அமரவைத்து, இரண்டு அல்லது நான்கு மனிதர்கள் தூக்கிச் செல்வார்கள். இதற்கான கட்டணமும் கோவில் நிர்வாகம் நிர்ணயித்து வைத்திருக்கிறது.

 பேட்டரி வண்டிகள்...

சமீப காலத்தில் மேலும் சில வசதிகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள் – அதாவது பேட்டரி மூலம் இயங்கும் சிறு வாகனங்கள். இந்த வாகனங்கள் நடைபாதையில் செல்லாது வேறு வழியாக வருகின்றன. பாதைகள் அமைக்க, இயற்கையை அன்னையை ஆங்காங்கே செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள் – மலையை வெட்டி, அங்கிருக்கும் மரங்களையும் வெட்டி பாதை அமைத்திருக்கிறார்கள்!

 குதிரையில் சவாரி செய்யும் முதியவர்

பேட்டரி வண்டிகள் வந்தால் குதிரைக்காரர்களின்/[D]டோலி வாலாக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற தகராறுகளும் அவ்வப்போது வந்து போகிறது. இவர்களைத் தவிர “பிட்டூஎன்றழைக்கப்படும் மனிதர்களும் இங்கே இருக்கிறார்கள். பல பக்தர்கள் குழந்தைகளோடு வருவார்கள். குழந்தைகளையும் சுமந்தபடி நடக்கக் கஷ்டப்படுபவர்கள் இந்த “பிட்டூக்களை பயன்படுத்துகிறார்கள் - இவர்கள் சிறு குழந்தைகளையும் உடமைகளையும் முதுகில் தூக்கிக் கொண்டு நடப்பவர்கள். தூளி மாதிரி முதுகிலோ முன் பக்கத்திலோ கட்டி அதில் குழந்தையை அமர்த்திக்கொண்டு முதுகில் பயணிகளின் உடமைகளைக் கட்டிக்கொண்டு உங்களுடனே நடந்து வருவார்.  இவர்கள் பற்றி முன்பே ஒரு முறை எழுதி இருக்கிறேன். அந்த பதிவு படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம்!


 சாஞ்சி சத்த் ஹெலிபேட்

கோவில் சில மணி நேரங்கள் மட்டுமே மூடி இருக்கும் என்பதால், இரவு பகல் பாறாது பக்தர்கள் நடந்த வண்ணமே இருப்பார்கள் – இரவில் நடப்பதும் ஒரு வித சுகம் தான்! நாம் நடந்தாலும், நடக்க முடியாதவர்களுக்கென்றே இந்த தகவல்களை தர எண்ணி இந்த விவரங்களைத் தந்தேன்.  மேலும் என்ன வசதி இருக்கிறது என்று கேட்டால் ஹெலிகாப்டர் வசதி! கட்ராவிலிருந்து சாஞ்சி சத் [SANJHI CHHAT] என்று சொல்லக்கூடிய இடம் வரை ஹெலிகாப்டர் மூலம் பயணிக்கலாம். அங்கிருந்து பவன் [கோவில்] வரை இரண்டரை கிலோமீட்டர் தொலைவு மட்டுமே நடக்க வேண்டும்.

 தரையிறங்கும் ஹெலிகாப்டர்...

எட்டு நிமிடத்தில் உங்களை கட்ராவிலிருந்து சாஞ்சி சத் வரை விட்டு விடும் இந்த ஹெலிகாப்டர் – ஒரு சுற்றில் ஆறு பேர் வரை பயணிக்கும் வசதியுடைய இந்த ஹெலிகாப்டர் நாள் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்கும். இரவு நேரங்களில் இந்த வசதி கிடையாது. ஒரு வழி பயணத்திற்கு நபர் ஒருவருக்கு 1039/- கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்தப் பயணத்திற்கு முன்பதிவும் செய்து கொள்ளலாம்.

 முதுகில் குழந்தையை சுமந்தபடி பிட்டூ.  
படம்: இணையத்திலிருந்து....

நடக்க முடியாத நபர்களுக்கான வசதிகளை இதுவரை பார்த்தோம். இப்போது கொஞ்சம் கதையையும் பார்க்கலாம்.   

வைஷ்ணவிபிறந்தது முதலே ஞான மார்க்கத்தில் நிறைய ஈடுபாடுடன் இருந்தார். த்யானமும் தவமும் மட்டுமே தன்னை இறைவனை நோக்கி அழைத்துச் செல்லும் எனப் புரிந்து தனது லௌகீக வாழ்க்கையை விட்டு காட்டுக்கும் தவம் செய்யச் சென்றுவிட்டார். பதினான்கு வருட வனவாசத்தில் இருந்த ராமரைச் சந்தித்த வைஷ்ணவி, ராமர் ஸ்ரீவிஷ்ணுவின் அவதாரம் என்பதைப் புரிந்து கொண்டு தன்னை அவருடைய பாதாரவிந்தத்தில் அழைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகொள் விடுத்தாள்.

அவளது வேண்டுகோளை கேட்ட ஸ்ரீராமபிரான் தான் வனவாசம் முடிந்து வரும்போது மீண்டும் வருவதாகவும், அப்போது வைஷ்ணவி தன்னை அடையாளம் கண்டுகொண்டுவிட்டால் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வதாகவும் சொல்லி விடைபெற்றார். திரும்பி வரும் நேரத்தில் ஒரு வயதானவரின் தோற்றத்தில் ஸ்ரீராமபிரான் வர அவரை வைஷ்ணவியால் அடையாளம் காண முடியவில்லை. அதனால் மனமுடைந்த வைஷ்ணவிக்கு, திரிகூட மலைக்குச் சென்று ஆஸ்ரமம் அமைத்து த்யானமும், தவமும் செய்து பக்தர்களுக்கு அருள் புரியச் சொல்லிவிட வட இந்தியாவியை நோக்கிய கடும் பயணத்தினை மேற்கொண்டார். திரிகூட மலையின் அடிவாரத்தில் தனது ஆஸ்ரமத்தினை அமைத்து தியானம் செய்ய ஆரம்பித்தார்.    

கதையை அடுத்த வாரமும் தொடரலாம்!

இந்த வாரத்தில் நடந்து கொண்டே, வேறு சில விஷயங்களையும் பார்த்தோம். வரும் வாரங்களில் நடக்கும்போது நமக்கு கிடைக்கும் பல்வேறு அனுபவங்களையும், நிகழ்வுகளைகளையும் பார்க்கலாம்... 

ஜெய் மாதா [dh]தி!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

36 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.
  தரினத்துக்கு செல்லும்அடியார்களுக்கு நல்ல தகவலை பகிர்ந்துள்ளீர்கள்.. ஒவ்வொரு படங்களும் மிக அருமையாக உள்ளது இறுதியில் சொல்லிய கதையும் நன்று.... காத்திருக்கேன் அடுத்த பகுதிக்கு. பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 2. ஹெலிகாப்டரில் செல்வது வசதிதான். ஆனால் இயற்கைக் காட்சியின் அழகுகளை ரசிக்கும் வாய்ப்பை இழந்து விடுவோம் இல்லையா? தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எட்டே நிமிடத்தில் பயணம் முடிந்து விடும்..... இயற்கைக் காட்சிகளை கழுகுப் பார்வை கொண்டு பார்க்க முடியும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்!

   நீக்கு
 3. இயற்கையின் எழிலை ரசித்தபடி நடந்து செல்வதில் கிடைக்கும் சுகமே தனிதான்
  நன்றி ஐயா
  புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பேசுகின்றன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 6. நேர்த்தியான தங்களின் வர்ணனை - வழிப் பயணத்தில் உற்சாகமாக இருக்கின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 7. நல்ல தேவையான குறிப்புகளுடன் இனி போக விரும்புவர்களுக்கு ஏற்ற பதிவு.
  வைஷ்ணவி தேவி கதை படிக்க தொடர்கிறேன்.
  நாங்கள் சென்று வந்த நினைவுகளை மனதில் மலரசெய்கிறது.

  ஜெய் மாதா [dh]தி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 8. மாதா வைஷ்ணவி தேவி கோவில் செல்ல உள்ள வசதிகள் பற்றி மிக அழகாக விளக்கியமைக்கு நன்றி! தேவியின் கதையை முழுதும் அறிய காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 9. என்னுடைய தேர்வு அந்த ஹெலிக்காப்டர் சவாரிதான்.

  தகவல்களுக்கு நன்றி. பலருக்கும் பயன்படும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 10. சுவையான பயண அனுபவம்! தகவல்கள் அறியாதவை! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   நீக்கு
 12. ஹெலிகாப்டர் பயணம் செய்ய வாய்ப்பு இருப்பதால் ,எனக்கும் பறந்து பறந்து ரசிக்க வேண்டும் போலிருக்கிறது !
  த ம 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 13. நடக்க முடியாதவர்களுக்கு... என்றவுடன் நா..னும் ஆவலாகப் பார்த்தேன்!
  ஆனால் இப்படி மனுஷனை மனுஷன் தூக்கிச் செல்வது மனசைப் பிசைகிறது...

  குதிரை பரவாயில்லை என்றால் பாவம் அந்த விலங்கும்!..
  எப்படியோ அன்னையின் அழைப்பு வரும்போது
  பயணத்திற்கான ஒழுங்கும் அதுவாக அமையும்தானே!..

  படங்கள் மிக அருமை! வாழ்த்துக்கள் சகோதரரே!
  தொடர்கின்றேன்!....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   நீக்கு
 14. மலையரசியை அதுவும் இமயமலை அரசியை ரசித்துக் கொண்டு நடப்பது தனி அனுபவம்தான்! இமயமலை மனதை அப்படியே கட்டிப்போடுபவள்:. அவளது பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கும்.. அவள் அருகில் நின்றால் நாம் மிகவும் சிறியவர்களாகி விடுவோம்! இல்லையா வெங்கட்ஜி! தங்களது அனுபவம் ஆஹா என்று சொல்ல வைக்கின்றது!

  இதைப் படித்த போது, இப்போது காஷ்மீரில் பெய்த கன மழையால், இயற்கையின் சீற்றத்தால் கோயிலுக்குச் சென்றவர்கள் பலரது பயணம் பெரும் துயருக்குள்ளானது நினைவுக்கு வந்து...செல்வதில் உள்ள ரிஸ்க் உணர முடிந்தது! இடையூறு வராது தேவியை தரிசிக்க, அதற்கும் பாக்கியம் வேண்டும் என்றும் தோன்றியது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 15. வைஷ்ணவி மாதாவின் கதையை இப்பொழுது தான் அறிந்து கொள்கிறேன். வெங்கட் சார்.
  தொடருங்கள் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 16. அருமையான பணய அனுபவம்.
  தொடர்கிறேன் நாகராஜ் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   நீக்கு
 17. கடளை தரிசனம் செய்யக் கூட நிறைய ;டப்பு ’ வேண்டும். அப்போது வைணவி தேவியின் அவதாரமில்லையா. ஏனோ சபரி மலை மஞ்சமாதாவை நினைவு படுத்துகிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 18. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....