எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, September 15, 2014

ஜெய் மாதா [dh]தி!
மாதா வைஷ்ணோ தேவி பயணம்பகுதி 2

முந்தைய பகுதி: பகுதி-1

 படம்: இணையத்திலிருந்து....

மாதா வைஷ்ணோ தேவி செல்கிறேன் என்று சொன்னாலே, இங்கே உள்ளவர்கள் “ஜெய் மாதா [dh]தி!என்று குரல் கொடுப்பார்கள். அப்படிச் சொல்வதன் அர்த்தம் வெற்றி வைஷ்ணவ தேவி அன்னைக்கே என்பதாகும்.

 ”விண்ணைத் தாண்டி வருவாயா?” என்று மலையிடம் கேட்கிறதோ வானம்!

சென்ற பகுதியிலும், ஒரு வருடம் முன்பு எழுதிய ரெட் பஸ் பயண அனுபவத்திலும் சொன்ன படி, தில்லியிலிருந்து பயணித்து ஜம்மு வழியாக “ரியாசிமாவட்டத்தில் இருக்கும் கட்ரா எனும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  கட்ரா நகரம் முழுவதுமே வைஷ்ணவ தேவியைத் தரிசிக்க வரும் பக்தர்களை நம்பியே இருக்கிறது. தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், கடைகள் என எந்த தொழிலாக இருந்தாலும், அது வைஷ்ணவ தேவியின் பக்தர்களைச் சார்ந்தே இருக்கிறது.

 ”எத்தனை கடினமான பாதை எனிலும் தொடர்ந்து பயணிப்போம்!”

எந்த வியாபார ஸ்தலமாக இருந்தாலும், தங்கும் விடுதியாக இருந்தாலும், உணவகமாக இருந்தாலும், அனைத்து இடங்களிலும் அன்னையின் புகைப்படம் இருக்கிறது.  புகைப்படம் வாயிலாகவும் நிறுவனத்தின் உரிமையாளர்களையும், வரும் பக்தர்களையும் பரிபாலனம் செய்து கொண்டிருக்கிறாள்.  சாதாரணமாக ஒருவரை சந்திக்கும் போது நாம் வணக்கம்”,  “நமஸ்காரம்”, “நமஸ்தேஎன்று பல வகைகளில் முகமன் கூறுவது வழக்கம்.  இங்கே உள்ளவர்கள் அடுத்தவர்களைச் சந்திக்கும்போது சொல்வது “ஜெய் மாதா [dh]தி!  அன்னையின் பெயர் சொல்லாது எந்த காரியமும் தொடங்குவது இல்லை!

  ”மலையைக் குடைந்து பாதை....  ஆங்காங்கே நிழற்குடைகள்”

சென்ற பகுதியில் சொன்னது போல பேருந்தின் மூலம் கட்ரா வரை வந்து சேர்ந்தோம். நகரமெங்கிலும் அன்னையின் பக்தர்கள் கும்பல் கும்பலாக இருக்கிறார்கள்.  அனைத்து பக்தர்களும் இந்த ஊர் மண்ணை மிதித்ததும் செய்யும் ஒரு விஷயம், மலையின் மேல் குடிகொண்டிருக்கும் அன்னையை மானசீகமாய் வணங்குவது தான்.  அடுத்ததாய் இக்கோவிலை நிர்வாகம் செய்து வரும் Shri Mata Vaishno Devi Shrine Board [SMVDSB] அலுவலகம் நோக்கி செல்கிறார்கள்.

 ”என்னைப் போல் நிமிர்ந்து நில்லடா” என்று சொல்லாமல் சொல்கிறதோ....

நாங்களும் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் அந்த அலுவலகத்தினை முற்றுகையிட்டோம். அனைத்து யாத்ரீகர்களும் முதலில் செய்ய வேண்டிய வேலையும் இது தான். மலையின் மேலுள்ள குகைக் கோவிலுக்குச் செல்ல அந்த அலுவலகத்தில் தான் Yatra Parchi – அதாவது பயணச்சீட்டு கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டு தான் மலையேற்றம் தொடங்கும். வழியில் பல இடங்களில் அதைச் சோதிப்பதும் உண்டு.

 ”கடகடா குடுகுடு.... நடுவிலே பள்ளம்” அது என்ன?

ஆகையால் நானும் அங்கே சென்று பயணச்சீட்டு வாங்கி வந்தேன். அதற்குள் நண்பர் அருகில் இருந்த சில தங்கும் விடுதிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இந்த பயணச் சீட்டினை இணையம் வழியாக முன்னரே வாங்கிக் கொள்ளும் வசதிகளும் உண்டு. நவராத்திரி சமயங்களில் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இந்தச் சிறிய அலுவலகத்தில் கூட்டம் அதிகமாகி விடும் – அச்சமயங்களில் இணையம் மூலம் பயணச் சீட்டு பெற்றுக் கொள்வது நலம் – அதை விட நலமானது அச்சமயங்களில் இங்கே பயணிக்காதிருப்பது!

 ”இயற்கையின் நடுவே செயற்கைக்கு என்ன வேலை?” - மலைமேல் கட்டிடங்கள்!

பயணச் சீட்டினைப் பெற்றுக் கொண்டு எங்கள் பொருட்களைப் பாதுகாக்கவும், தங்குவதற்காகவும் தங்கும் விடுதிக்கான தேடலில் இறங்கினோம்.  கட்ரா நகரம் முழுவதுமே நிறைய தங்கும் விடுதிகள் தான். எல்லா நாட்களிலும் பயணிகள் வந்த வண்ணமே இருப்பதால் பலர் விடுதிகள் கட்டி வைத்திருக்கிறார்கள்.  நாங்களும் ஒரு தங்கும் விடுதியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்து கொண்டோம்.

 ”என்னை ஏன் சீரழிக்கிறாய் என்று இயற்கை கட்டிடங்களைக் கேட்குமோ?”

நாளொன்றுக்கு 500 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் தங்கும் விடுதிகள் இங்கே உண்டு.  நவராத்திரி சமயங்களில் அதிகமாக இருந்தாலும் மற்ற நாட்களில் குறைவான வாடகை தான் வசூலிக்கிறார்கள். குடும்பத்துடன் செல்வதாக இருந்தால் முன்னரே இணையம் மூலமாக தங்கும் விடுதியைத் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்து கொள்வது நல்லது. நாங்கள் இருவர் மட்டுமே சென்றதால் முன்பதிவு செய்து கொள்ளவில்லை. நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வாடகையில் நல்ல விடுதி கிடைக்கவே அங்கே தங்கினோம்.

 ”அன்னையைத் தாலாட்டும் இயற்கை அன்னை”

தனியார் தங்கும் விடுதிகள் தவிர SMVDSB நடத்தும் சில தங்கும் விடுதிகளும் உண்டு.

 ”நிம்மதியா சொரியக் கூட விடமாட்டேங்குதே பயபுள்ள” என்று எங்களைக் கேட்குமோ?

இரவு முழுவதும் பயணித்து வந்ததால் இருந்த அலுப்பு தீர, சாதாரண நாட்களை விட கொஞ்சம் அதிக நேரம் குளிக்க வேண்டும் என்று சொன்னபடியே நண்பர் உள்ளே நுழைந்தார்.  அவர் குளித்து வருவதற்குள் நாம் சில விஷயங்களை கவனிப்போம். சென்ற பதிவில், நண்பர் சுரேஷ் குமார் கட்ரா வரை செல்ல என்ன வழிகள், வசதிகள் இருக்கிறது என்று கேட்டிருந்தார்.

 ”பக்தர்களுக்கான பாதை” ஒரு தொலைதூரப் பார்வை!

தில்லியிலிருந்து கட்ரா வரை செல்வதற்கு SHRI SHAKTI EXPRESS [22461] எனும் ஒரே ஒரு ரயில் தான் உண்டு. தினமும் மாலை ஐந்தரைக்குப் புறப்பட்டு அடுத்த நாள் விடிகாலை 05.10 மணிக்கு கட்ரா ரயில் நிலையம் சென்றடையும்.  இதைத் தவிர ஜம்மு வரை செல்ல பல ரயில்கள் உண்டு. ஜம்மு வரை சென்று ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் இருக்கும் பேருந்து நிலையத்தில் கட்ரா வரை செல்வதற்கான பேருந்துகள் கிடைக்கும்.  வாடகை ஊர்திகளும் கிடைக்கும்.

ரயிலில் வரவேண்டாம் என நினைப்பவர்கள் ஜம்மு வரை விமானம் மூலமாகவும் வரலாம். SPICEJET, JET KONNECT, INDIGO, AIRINDIA [ஸ்ரீநகர் வழியாக], GOAIR என அனைத்து விமான போக்குவரத்து நிறுவனங்களும் விமானங்களை இயக்குகிறார்கள்.   ஒன்றரை மணி நேரத்திற்குள் நீங்கள் ஜம்மு வந்து சேரலாம்.  ஆனால் அங்கிருந்து கட்ரா வரை செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கு அதிகமாகவே நேரமாகும்!

என்ன நண்பர்களே கட்ரா வரை எப்படி வந்தடைவது என்ற விஷயங்களையும், கட்ரா பற்றியும், பயணம் தொடங்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் இப்பகுதியில் படித்து மலைப்பாதையில் பயணிக்க நீங்கள் தயாரா?  நண்பர் குளியலறையில் இருந்து வந்து விட்டார். நானும் குளித்து வருகிறேன். அன்னையை நோக்கிய நம் பயணத்தினைத் தொடங்குவோம்!

ஜெய் மாதா [dh]தி!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

42 comments:

 1. இயற்கையின் படங்கள் அழகு.

  அந்த மலைப் பள்ளத்தாக்குகளின் நடுவே தொலைந்து போனால் எப்படி இருக்கும்?!!!!!

  கடகடா குடுகுடு நடுவிலே பள்ளம் - உரல்!

  தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. நாங்களும் பயணிக்கத் துவங்கிவிட்டோம்
  படங்களுடன் பதிவு மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஐயா.

   Delete
 3. in 1987 i had been there.
  But I do not recollect any lodges . We had to stay in just roof tops.
  subbu thatha.

  ReplyDelete
  Replies
  1. 90-களில் இருந்தே இங்கே நிறைய தங்கும் விடுதிகள் வந்து விட்டன. இப்போது இன்னும் அதிகம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 4. அருமை! தொடர்கின்றேன்.

  தனிமடல் பார்க்கவும்:-)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மடல் கண்டேன். பதிலும் அனுப்பி இருக்கிறேன்..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 5. அன்னையை நோக்கி பயணிக்க காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. உங்கள் மூலமாக எங்களுக்கும் மாதா வைஷ்ணோதேவி தரிசனம் கிடைக்கப் போகிறது. நன்றி. தரிசனம் எங்களுக்கு. புண்ணியம் உங்களுக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 7. ”வெற்றி வைஷ்ணவ தேவி அன்னைக்கே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!..

   Delete
 8. அருமையான தொடர். இதுவரை நான் படிக்கவில்லை. இன்றுதான் உங்கள் வலைத்தளம் வந்துள்ளேன். :)

  நாங்களும் வைஷ்ணோதேவி சென்று வந்துள்ளோம் ஹிம்சாகர் என்று இரண்டு பேருந்துகள் எடுத்து ஒரு குழுவாக.. அது 1998 இருக்கும். ஒரு குச்சி ஒன்று விற்கும் அதைப் பிடித்துப் பலரும் சில டோலியிலும் சிலர் குதிரையிலும் வந்தார்கள். நாங்கள் நடந்துதான் போனோம்.

  அம்மா அழைத்தால்தான் போக முடியும் என்று டெல்லியில் உள்ளவர்களே சொல்வார்கள். மா புலாகி தோ ஜா சக்தே ஹை.. என்று :) ஜெய் மாதா தீ.

  ReplyDelete
  Replies
  1. தொடரின் இரண்டாம் பாகம் தான் இது. முடிந்தபோது படிக்கலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை லக்ஷ்மணன் ஜி!

   Delete
 9. வணக்கம்
  ஐயா.
  தங்களின் பயண அனுபவம் பற்றிய பதிவு நன்றாக உள்ளது படங்களும் அழகு பகிர்வுக்கு நன்றி
  த.ம 4வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 10. அழகான படங்கள்.. அன்னையைத் தரிசிக்க ஆவலுடன் நானும் தொடர்கின்றேன்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 11. நாங்கள் சென்று வந்தது நினைவுக்கு வந்து விட்டது.
  ஜெய் மாதா [dh]தி!”
  தொடர்கிறேன்.
  படங்கள் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா

   Delete
 12. அருமையாய் இருக்கிறது. தொடரக் காத்திருக்கிறோம்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

   Delete
 14. மிக அருமையான தகவல்களுடன் பயணக் கட்டுரை இனிமை! படங்கள் அழகு! தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 16. கண்களை மூட மனமே இல்லை. அத்தனை கொள்ளை அழகு! படங்கள் மிகச் சிறப்பு!
  பாதாளத்தைப் படத்தில் பார்க்கவே வயிற்றுக்குள் ரயில் போகிறதே!..:)

  அருமை! தொடர்கிறேன்...

  வாழ்த்துக்கள் சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 17. இயற்கை கொஞ்சும் அழகு காட்சிகளை கண்டு
  பிரமித்துக்கொண்டே உங்களுடன் பயணிக்கிறேன் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 18. இதயத்திற்கு இதமாய் குளுகுளு பாதை ,உங்கள் பயணத்தில் நானும் இணைந்து கொள்கிறேன் !

  மீண்டும் விருது பெற்றதற்கு வாழ்த்துகள்!
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 19. 1998 டிசெம்பர் ஜெய் மாதா வோட தரிசனம் எனக்கு கிடைத்தது. ஏறும்பொழுது சுமார் ஏழெட்டு மணி நேரமும், இறங்கும் பொது ரெண்டு ட்டு மணி நேரமும் ஆச்சு எங்களுக்கு. குழுவாக போய் வந்தா தான் பயணம் இனிமையா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்.

   Delete
 20. இயற்கை எழில் கொஞ்சுகிறது. படத்துக்கான கேப்ஷன்ஸ் ரசிக்க வைத்தன. பகிர்வு அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 21. அருமையாக சென்று கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....