எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, September 8, 2014

அன்னையின் அழைப்பு!

மாதா வைஷ்ணோ தேவி பயணம் – 1

மாதா வைஷ்ணவ தேவி.....

ஏரிகள் நகரம் தொடரில் நைனிதால் மற்றும் ஜிம் கார்பெட் சென்று வந்தது பற்றி எழுதி இருந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். அப்பயணத் தொடர் முடிந்த பின் சில நாட்களாக பயணக் கட்டுரைகள் எழுத முடியாத சூழல். இப்போது மீண்டும் ஒரு பயணத் தொடர் ஆரம்பிக்கிறது. இப்பயணம் ஒரு ஆன்மீகப் பயணம். என்றாலும் ஆன்மீகம் அல்லாத விஷயங்களும் இத் தொடரில் எழுதப் போகிறேன் என்பதால் ஆன்மீகம் பிடிக்காதவர்களும் தொடர்ந்து படிக்கலாம்


மலையடிவாரத்தில் இருக்கும் நுழைவு வாயில்...

மாதா வைஷ்ணோ தேவிவட இந்தியர்களில் அனைவருக்கும் ஒரு இச்சை - ஒரு முறையாவது இங்கே சென்று மாதா வைஷ்ணோ தேவியின் அருளைப் பெற வேண்டும் என்பது தான் அது. ஆனாலும் எத்தனை தான் பணம் படைத்தவர்களாயினும் அவளது அழைப்பின்றி அவளை ஒருவரும் தரிசிக்க முடிவதில்லை என்றும் சொல்வார்கள்


சிலையோ என எண்ண வேண்டாம்....  ஒரு கட்டிடத்தின் மேல் நிற்கும் ஆடு!

இங்கே செல்ல நினைத்தாலும், அவள் அழைத்தால் மட்டுமே உங்களால் மேற்கொண்டு பயண ஏற்பாடுகளைக் கவனிக்க முடியும். எனது நண்பர்கள் சிலர் நான்கு நாட்கள் விடுமுறை சமயத்தில்  Wagah Border, Amritsar Golden Temple எனச் சுற்றிவிட்டு, பிறகு கட்ரா வந்து வைஷ்ணோ தேவியை தரிசிப்பதாக திட்டம்கட்ரா வந்து பார்த்தால் அப்படி ஒரு கூட்டம் அங்கேமலையடிவாரம் வந்து மேலே செல்வதற்கான பயணச் சீட்டு வாங்குமிடத்தில்நீங்கள் நான்கு நாட்கள் தங்கி பிறகு தான் மாதாவினை தரிசிக்க முடியும்என்று சொல்ல, விடுமுறை இல்லாத காரணத்தினால் தில்லி திரும்பினார்கள்


பயணிகளுக்காய் காத்திருக்கும் அலங்கார பூஷிதர்கள்....

சிலர் எல்லா வித ஏற்பாடுகளும் செய்திருப்பார்கள். ஆனாலும் அவளது அழைப்பு இல்லாத பட்சத்தில் கடைசி நேரத்தில் பயணம் தடைப்படும். இப்படி பல முறை கேட்டதுண்டு. அவளது அழைப்பு வந்துவிட்டால், எந்த வித திட்டமிடலும் இல்லாது புறப்பட்டு மிகவும் திவ்யமான தரிசனம் கிடைத்திடும்இப்படி பலமுறை நடந்ததும் உண்டு. எனக்கே கூட இந்த அனுபவம் உண்டு! ஒரு முறை மாலை ஐந்து மணிக்கு நண்பரிடமிருந்து அழைப்பு – “இன்றிரவு ஒரு பேருந்து புறப்படுகிறதுவைஷ்ணோ தேவி யாத்திரைவர வேண்டிய பயணிகள் சிலர் வர மறுத்துவிட்டார்கள். அதனால் நான் செல்ல இருக்கிறேன், நீயும் வருகிறாயா?” என.


மலையில் பாதி கட்டப்பட்ட நிலையில் ஒரு கோவில்.

அந்த நிமிடத்திலேயே முடிவு செய்து பயணம் செய்திருக்கிறேன்மிக திவ்யமான தரிசனமும் கிடைத்திருக்கிறது! அதன் பிறகு இரண்டு முறை சென்று விட்டேன். ஒரு சில சமயங்களில் அங்கே செல்ல, யாரையாவது அழைத்துச் செல்ல முற்பட்ட சமயங்களில் ஏதோ தடை வந்திருக்கிறது. எப்போது அழைப்பு வருகிறதோ அப்போது செல்வது நிச்சயம் நடக்கும்!


மலைப்பாதையெங்கும் பூத்துக் குலுங்கும் சரக் கொன்றைப் பூக்கள்

அப்படிச் செல்லும் போது தாங்களாக செல்வதாக கூறிக்கொள்வதில்லை – “[ch]சலோ [b]புலாவா ஆயா ஹே!” அதாவதுஅழைப்பு வந்துவிட்டது, வாருங்கள் போகலாம்!” என்பதாகத் தான் சொல்வார்கள்அப்படி அழைப்பு வந்து விட்டால், பிறகென்ன, எல்லா ஏற்பாடுகளும் அவளே பார்த்துக் கொள்வாள்முதல் அடி எடுத்து வைப்பது தான் நமது வேலை! எத்தனை கடினமான பாதையாக இருந்தாலும் சுலபமாய் பயணித்து மாதா வைஷ்ணோ தேவியின் தரிசனம் கிடைத்துவிடும்!


இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதி

எனது கேரள நண்பர்தில்லி வரும்போதெல்லாம் வைஷ்ணோ தேவி சென்று தேவியை தரிசனம் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனாலும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு தடங்கல்அவருக்கு அலுவலக வேலை முடிந்திருக்காதுஇல்லையெனில் எனக்கு அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காதுஇப்படி தட்டிக்கொண்டே போனதுசென்ற முறை வரும்போது எல்லாம் சரியாக அமைய, அன்னையின் அழைப்பு வந்து விட்டது என்ற எண்ணத்தோடு ஜம்முவை நோக்கி பயணம் செய்ய முடிவு செய்தோம்.


எங்கே செல்லும் இந்தப் பாதை.....

திட்டமிடல் எதுவும் இல்லாத காரணத்தால், ரயிலில் முன்பதிவு எதுவும் செய்திருக்கவில்லைநாங்கள் பயணிக்க முடிவு செய்தபோது எந்த ரயிலிலும் முன்பதிவு செய்ய முடியவில்லைஅனைத்திலும் Waiting List. நாங்கள் இருவர் மட்டுமே என்பதால் ஜம்மு அல்லது கட்ரா வரை பேருந்திலேயே பயணம் செய்ய முடிவு செய்து WWW.REDBUS.IN நாடினோம்.


குப்பைக் கூடைக்குள் பொக்கிஷம் தேடும் குரங்கு..

கட்ரா வரை செல்ல பேருந்து கிடைத்ததுAC Semi Sleeper பேருந்துஎனது இல்லத்தின் மிக அருகிலிருந்து புறப்படும் என தெரிய அதிலேயே இரண்டு பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்தேன். Sleeper பேருந்துகளும் உண்டுஇருந்தாலும் அதில் பயணிப்பதை விட உட்கார்ந்தே பயணித்து விடலாம்! – ஆறடி மனிதனை ஐந்தடி படுக்கைக்குள் சுருட்டி விடுகிறார்களே! – ”பைநாகப் பையை சுருட்டிக் கொள்என்று சொல்லாதது தான் குறை!


மலைப் பகுதி...  ஒரு பார்வை.

இந்தப் பேருந்துப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை முன்னரே எழுதி இருக்கிறேன்அட படிக்கலையா? நினைவில் இல்லையாசரி இங்கே அந்த அனுபவங்கள் படிக்கக் கிடைக்கும்! நீங்க படிச்சு முடிச்சுட்டு ரெடியா இருங்க! அடுத்த பாகத்தில் வேறு சில சுவாரசியமான தகவல்கள், அனுபவங்களோடு உங்களைச் சந்திக்கிறேன்.


மலைப்பகுதி வேறொரு கோணத்தில்....

ஜெய் மாதா [dh]தி! இந்த வாக்கியத்திற்கு என்ன அர்த்தம் என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லிடிஸ்கி: புகைப்படங்கள் நண்பர் அவரது கேமராவில் எடுத்தவை.  அவற்றை என்னுடன் பகிர்ந்து கொண்ட அவருக்கு நன்றி.  

40 comments:

 1. ஹைய்யோ!!!!!

  அருமை அருமை!

  எனக்குப் போக அதிக ஆசை இருந்தாலும் அவள் அழைக்கவில்லை:(

  லால்மாதா கோவில்களில் வைஷ்ணவோ தேவி குகைக்குள் போய் கும்பிட்டதோடு சரி.

  இப்போ உங்களால் தரிசனம்.

  நல்லா இருங்க, வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. அன்னையின் அழைப்பு விரைவில் கிடைக்க எனது பிரார்த்தனைகளும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 2. அன்னையின் அழைப்பு இருந்தால்தான் தரிசனம் கிடைக்கும் என்பது விசேஷம். எல்லாம் என்னால் முடியும் என்று எண்ணும் மனிதர்களின் அகந்தையை ஒழிக்கும். சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   தொடர்ந்து வருவீர்கள் என அறிந்து மகிழ்ச்சி.

   Delete
 3. தங்களுடன் பயணித்ததைப்போன்ற ஓர் உணர்வு
  படங்கள் அழகோ அழகு ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. மிகதிவ்யமான தரிசனமும் கிடைத்திருக்கிறது..பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. தன்னை எல்லோரும் மதித்திடவேண்டும் , நானே பெரியவன், என்னால்தான் இவ்வுலகம் இயங்குகிறது, நான் சாசுவதமானவன் என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு அலையும் சிறு மதி .படைத்தொரெல்லாம், இந்த குறுந்தொடரை படித்து தங்கள் வாழ்வினை சீர்திருத்திக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்திடவேண்டும் என்பதே எல்லோருடைய அவாவாக இருக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி VKN சித்தப்பா....

   Delete
 7. படங்கள் நானும் நேரில் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவலை எற்படுத்தி விட்டது !
  என் இ மெயிலுக்கு அழைப்பு வந்ததும் போகலாம் என்று இருக்கிறேன் ))))
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 8. Enathu manaiviyum Vaishnavo Deviyai tharisikka vendum endru indru varai kaathirukkiraal, alaippu illai.... Viraivil chella vendum endru thondrukirathu.
  Ungal katturaiyai naan paathukkaakka pogiren, train station patriyum konjam sollungalen !

  ReplyDelete
  Replies
  1. எல்லா விவரங்களும் வரும் கட்டுரைகளில்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்.

   Delete
 9. பரவாயில்லை ஸார்... நீங்கள் போய் வந்து விட்டீர்கள்...

  டெல்லியில் இருந்தபோது, நான் வைஷ்ணவ் தேவி பயணத்தை தவற விட்டுவிட்டேன்... பலமுறை பின் வருத்தப் பட்டிருக்கிறேன்... என் நண்பர்கள் சொல்வதெல்லாம், "நீ விருப்பப்பட்டாலும், தேவி அழைக்கும்போது தான் உன்னால் அங்கு போக முடியும்..." நானும் ஒரு வகையில் அதை மனதளவில் ஏற்றுக்கொண்டு விட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக் நீலகிரி.....

   விரைவில் உங்களுக்கும் வைஷ்ணவ் தேவி பயணம் அமையட்டும்.

   உங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.

   Delete
  2. ஆமாங்க... ஸ்ரீவிஜி பதிவில் பார்த்தேன்.. இதோ, feedly'இல் குறித்துக் கொண்டு தொடருகிறேன்...

   Delete
  3. தொடர்வதற்கு நன்றி கார்த்திக்.

   Delete
 10. ஆரம்பமே படு ஜோர்! நல்லதொரு ஆன்மிகப் பயணக்கட்டுரை1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 11. அன்னையின் அழைப்பு எனக்கும் கிட்டியுள்ளதோ!... அப்படித்தான் நினைக்கின்றேன்!.
  அவளிடம் செல்லப்போகின்றேனே நானும் உங்கள் பதிவினோடே!..:)

  அழகாய் எழுதுவதும் வர்ணிப்பதுவும் அற்புதமான நிழற்பட கைங்கரியமும் எனத்
  “ தனிச் சிறப்பு “ உங்களது சகோதரரே!!!

  ஈர்துக்கொள்கின்றீர்கள் எங்களையும்! மலைகளைப் பார்த்து மலைத்தேன்!
  குளிர் காற்று வருடவும் சுவாசத்தில் பசுமை மணமும் உணர்ந்தேன் உங்கள் படங்களைப் பார்த்து!

  அன்னையின் அருள் எனக்கும் தொடர்ந்து வேண்டும் இந்தப் பயணக்கட்டுரையைத் நான் தடையேதுமின்றித் தொடர!..

  தொடருங்கள் நீங்கள்! நானும் வருகிறேன்...

  நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 12. ஹஜ்ஜுக்குப் போகும்போது இப்படித்தான் சொல்வார்கள் - இறைவன் நாடினாலொழிய பயணம் சாத்தியப்படாது என்று. இதை நிரூபிக்க, பணம் கட்டி மாதக்கணக்கில் எல்லா ஏற்பாடுகளும் செய்து, ஏர்போர்ட் வரை வந்து திரும்பிப் போனவர்களின் கதைகளும் உண்டு. அதேபோல, எந்த முன்னேற்பாடும் செய்யாமலேயே திடீரென செல்ல முடிந்தவர்களும் உண்டு - என்னைப் போல. இறைவன் அருள். எல்லாம் அவன் செயலே. :-)

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் அவன் செயல்.....

   அதே அதே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா...

   Delete
 13. படங்களும் பகிர்வும் அருமை. தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 14. படங்களும் பகிர்வும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 15. அடாடா! தாமதமாக வந்து விட்டேனே.
  அருமையான தொடர். தொடர்கிறேன்.

  "ஜெய் மாதா [dh]தி!" - இதன் அர்த்தத்தை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 16. இங்கே செல்ல நினைத்தாலும், அவள் அழைத்தால் மட்டுமே உங்களால் மேற்கொண்டு பயண ஏற்பாடுகளைக் கவனிக்க முடியும்.//

  உண்மைதான் வெங்கட் ஜி! இது போன்ற பயணங்களுக்கு இறைவனின் சித்தம் இல்லை என்றால் நாம் எதுவுமே செய்ய முடியாது. அருமையாக உள்ளது ஆரம்பம். படங்கள் கண்ணையும் மனதையும் இழுக்கின்றன...எப்பொது அழைப்பு வருமோ தெரியவில்லை.....ஆசைதான்...அவள் ஆசை வைக்க வேண்டுமே!...அவனருள் இல்லையென்றால் நம்மால் இம்மியளவு கூட நகர முடியாதே.....

  இதை எப்படி மிஸ் செய்தோம் என்று தெரியவில்லை....தொடர்கின்றோம்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 17. மாதா வைஷ்ணோ தேவியைத் தரிசிக்க கிளம்பி விட்டீர்கள்...
  நாங்களும் வருகிறோம் தொடர்ந்து பயணிப்போம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 18. நீங்கள் சொல்வதே சரி. அழைப்பு இருந்தால் தான் அன்னையை சந்திக்கமுடியும் என்பது உண்மை தான். 2001 ஆம் ஆண்டு ஜம்முவில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தும் வைஷ்ணவா தேவி கோவிலுக்கு போகமுடியாத அளவுக்கு வேலைப் பளு. பிறகு போகலாம் என வந்துவிட்டேன்.

  இயற்கை அழகை தங்கள் படங்கள் மூலம் கண் முன்னே கொண்டு வந்தமைக்கு நன்றி! தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 19. முதல் அடி எடுத்து வைப்பது தான் நமது வேலை!//

  நாங்கள் மலை ஏறும் போதும் எதிரில் வந்த அம்மா அப்படித்தான் சொன்னார்கள். முதல்படி எடுத்து வைப்பது தான் உன் வேலை உன்னை அன்னை கைபிடித்து கூட்டிசெல்வாள் என்றார்கள். அந்த வைஷ்ணவ தேவியே சொன்னது போல் இருந்தது.

  வழி எங்கும் நடப்பத்தில் சோர்வு ஏற்படாமல் இருக்க வாத்தியம் வாசிப்பவர்கள் கொஞ்சதூரம் நம் பின்னாடி வந்து வாசித்து விட்டு நாம் கொடுக்கும் பணத்தை பெற்றுக் கொள்வார்கள்.

  படங்கள் எல்லாம் அழகு.
  தொடர்ந்து மறுபடியும் உங்களுடன் பயணிக்கிறேன் வைஷ்ணவதேவி அன்னையை தரிசிக்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....