எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, July 8, 2013

ரெட் பஸ்ஸும் சினிமாவும்சமீபத்தில் ஜம்மு-கட்ரா செல்ல வேண்டியிருந்தது. என்னுடைய கேரள நண்பர் தில்லிக்கு அலுவல் நிமித்தம் வந்திருந்தார். அவருக்கு வைஷ்ணவ் தேவி கோவிலுக்குச் செல்லும் எண்ணம் கடந்த இரண்டு வருடங்களாகவே இருந்தாலும் இது வரை ஏனோ செல்லும் வாய்ப்பு அமையவில்லை. இந்த முறை எப்படியிருந்தாலும் சென்றே தீரவேண்டும் என்ற முடிவோடு இருந்தார்.  என்னையும் இன்னும் இரண்டு நண்பர்களையும் அங்கே போக அழைத்தார். ஒவ்வொருவராக கழண்டு கொள்ள கடைசியில் நாங்கள் இருவர் மட்டுமே செல்ல முடிவு செய்தோம்.

செல்ல வேண்டுமென முடிவானபோது ரயிலில் எந்த சீட்டிற்கும் முன்பதிவு செய்ய முடியவில்லை. அதனால் கட்ரா வரை பேருந்திலேயே செல்ல முன்பதிவு செய்யலாம் என www.redbus.in பக்கத்திற்குச் சென்றோம். இப்போதெல்லாம் “When you gotta go, you gotta go” என இத்தளத்திற்கு நிறைய விளம்பரம் வருவதைப் பார்த்திருக்கலாம். அட நீங்க பார்த்ததில்லையா...  சரி பாருங்க!
நாலு ஸ்டார், ஐந்து ஸ்டார் ரேட்டிங், e-சீட்டு, எஸ்.எம்.எஸ். என எல்லாம் பக்காவாக வைத்திருக்கிறார்கள் ரெட் பஸ் தளத்தில். இவர்களே பேருந்துகளை இயக்குகிறார்கள் என்று தப்பான எண்ணம் வேண்டாம். இது பயணச்சீட்டு முன்பதிவு செய்ய பயன்படும் ஒரு தளம் அவ்வளவுதான். இருக்கும் அத்தனை தனியார் பேருந்துகளும் இவர்களுடன் உடன்படிக்கை வைத்திருக்கிறார்கள் – இணையம் மூலம் முன்பதிவு செய்து தரும் வசதிக்காக.

தில்லியிலிருந்து நேராக கட்ரா வரை செல்ல வசதிக்குத் தகுந்தாற் போல பேருந்துகள் இருந்தன. AC, Non-AC, Sleeper, Semi Sleeper என பல வசதிகள். AC Semi Sleeper Volvo பேருந்தில் இரண்டு சீட்டுகள் முன்பதிவு செய்தேன். மொத்த கட்டணம் 2200/-. சாதாரணமாக Third AC ரயிலில் படுக்கும் வசதியோடு பயணம் செய்ய இரண்டு பேருக்கு 1600 ரூபாய் வரை ஆகும். பேருந்தில் உட்கார்ந்து செல்லவே 2200 ரூபாய். எப்போதும் எனக்கு பேருந்துப் பயணம் தான் வசதி! மாலை ஆறரை மணிக்குக் கிளம்பி காலை 07.30 மணிக்கு கட்ரா சென்று விடும் என தளத்தில் தெரிவித்திருந்தார்கள். கிட்டத்தட்ட 600 கிலோ மீட்டர் தூரம்.

06.15 மணிக்கே வீட்டின் அருகிலேயே இருக்கும் பஸ் கிளம்புமிடத்திற்குச் சென்றேன். ”காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி”ன்னு பாட்டு பாடி, பொழுதினைப் போக்கி பேருந்துகளில் செல்ல காத்திருந்தவர்களைப் பார்த்துக்கொண்டு, நானும் நண்பரும் பேசியபடி காத்திருக்க, 6.45 மணிக்கு இரு பேருந்துகள் வந்தன – ஒன்று Sleeper, மற்றது Semi Sleeper.

நல்ல வேளை Sleeper-ல் முன்பதிவு செய்யவில்லை! – ஐந்து அடி தான் இருக்கிறது படுக்கை வசதி! காலை குறுக்கிக்கொண்டு எட்டு போட்டு படுத்திருக்க வேண்டும்! காலை நீட்டிக்கொண்டு வசதியாக சாயந்தபடி பயணம் செய்ய வசதி இருந்தது. சீட்டு குழப்பங்கள், மாத்தி உட்காந்துக்கோங்க, ஏசி கம்மியா இருக்கு இங்கே, என பலவித குழப்பங்களுக்குப் பிறகு ஒரு வழியாக 07.30 மணிக்கு வண்டி கிளம்பியது.

கொஞ்சம் பழைய வண்டி தான் – வண்டியில் உள்ள நட்போல்ட் பகுதிகளின் குலுங்கல் சத்தம் உள்ளே வரைக் கேட்டது! தில்லி எல்லை தாண்டும்போது பேருந்தினுள் இருந்த டி.வி.யை போட்டார்கள் [அட கீழே இல்லைங்க!].  கையில் குறுந்தகடை எடுத்த உடனே மனதில் ஒரு கலக்கம் – எங்கேயாவது திராபையா ஒரு படம் போடப்போறானோன்னு! நான் மனசுக்குள்ளேயே நினைச்சது அவ்வளவு சத்தமா கேட்டுடுச்சு அந்த நடத்துனருக்கு! அதே மாதிரி திராபையான ஒரு படம் தான் போட்டார். என்ன படம்னு கேட்டா நீங்களே கூட ஓடிடுவீங்க!“குத்தே, கமீனே, மே தேரா கூன் பீஜாவுங்கா” என டாய்லெட் சீட்டில் அமர்ந்து முக்கியபடியே பேசினால் என்ன குரல் வருமோ அந்த குரலில் பேசும் தர்மேந்திரா, அவரது சத்புத்திரர்களான சன்னி தியோல், பாபி தியோல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ”யம்லா, பக்லா, தீவானா பார்ட் – 2” தான் அந்த படம். படம் முழுக்க ஒரே அபத்தம். ஐம்பது பேரை ஒரே ஆளாக சன்னி தியோல் அடித்து வீழ்த்துகிறார்.

பெரிய பெரிய மாமிச மலைகள் [Sumo Wrestlers] ஒரு விமானத்தினையே அசைத்து அசைத்து கவுத்து விட, அப்படிப்பட்டவர்களை தனது முஷ்டியால் ஒரு குத்து விட்டு பறக்க விடுகிறார் சன்னி தியோல்! என்ன கொடுமை! நம்ப முடியற மாதிரி படம் எடுங்கப்பா! சரி கண்ணை மூடிட்டு தூங்கலாம்னா, தர்மேந்திரா குரல் கொடுத்து எழுப்பி விட பாபி தியோல் இளித்து பயமுறுத்துகிறார்!

எப்படியோ, இரவு பன்னிரெண்டு மணிக்கு சாப்பிட நிறுத்திய இடத்தில் சாப்பிட்ட பிறகு டி.விப் பொட்டியை நிறுத்திட்டாங்க! நிம்மதியா உறங்கி காலையில் எழுந்தால் ஜம்மு வந்திருந்தது! அதே பேருந்தில் கட்ரா வரை செல்லப் போகிறோம் என நினைத்திருந்தால், வேறு ஒரு Non-AC பஸ்ஸில் மாற்றி விட்டார்கள் – இதையெல்லாம் redbus கண்டுக்காது போல! கேட்டால், ஒரு மணி நேரப் பயணம் தானே என அசால்டாக பதில் வருகிறது பேருந்து ஓட்டுனர்-நடத்துனரிடமிருந்து!

www.redbus.in மூலம் பேருந்து பயணத்திற்கு முன்பதிவு செய்வதாயிருந்தால் கொஞ்சம் விசாரித்து பயணம் செய்வது நல்லது!

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

54 comments:

 1. “குத்தே, கமீனே, மே தேரா கூன் பீஜாவுங்கா” என டாய்லெட் சீட்டில் அமர்ந்து முக்கியபடியே பேசினால் என்ன குரல் வருமோ அந்த குரலில் பேசும் தர்மேந்திரா//

  ஹா ஹா ஹா ஹா ஆமா ஆமா தர்மேந்திரா குரல் அப்படிதான் இருக்கும் நேரிலும் இவரை பலமுறை மும்பை ஏர்போர்ட்டில் பார்த்து ஹலோ சொல்லி பேசியதுண்டு.

  ஆன்லைன் புக்கிங் சிலசமயம் சொதப்பிவிடவும் சான்ஸ் உண்டு எனவே கன்பர்மேஷன் நம்பர் வாங்கி வைத்துக் கொள்வது நன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ.

   Delete
 2. இந்தப் படம் பாத்ததைப் பத்தி நம்ம ஊரு சிவகுமார் சாருக்குச் சொல்லிராதீங்க... பையன்களோட நாமளும் நடி்க்கலாமேன்னு நெனச்சுட்டா... யப்பா! பேருந்துப் பயண அவஸ்தைகளை அழகா சொல்லியிருக்கீங்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்....

   நீங்க சிவகுமார் கிட்ட சொல்லிடாதீங்க! ஏன்னா நீங்க தான் சென்னைல இருக்கீங்க!

   Delete
 3. பயனுள்ள எச்சரிக்கைப் பதிவு
  அவர்கள் விளம்பரங்களைப் பார்த்து
  கொஞ்சம் நல்ல அபிப்பிராயம் இருந்தது
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   திரும்புவதற்கும் அத்தளத்தின் மூலமே பதிவு செய்திருந்தேன். அது வேறு ஒரு அனுபவம் - நல்ல அனுபவம் தான்! அது பற்றி பின்னர்!

   Delete
 4. Replies
  1. தமிழ்மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 5. உலகத்தில என்னென்ன தில்லு முல்லுகளெல்லாம் நடக்குது. இதைத் தெரிஞ்சுக்கிறதுக்குள்ளேயே ஆயுசு முடிஞ்சிடும்பொல இருக்கே!

  ReplyDelete
  Replies
  1. அட ஆமாங்க! எல்லா விதமும் தெரிந்து கொள்ள ஒரு ஆயுள் பற்றாது தான்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 6. ரெட் பஸ்ஸில் ப்யணம் அனுபவம் அருமையாக நகைச்சுவையுடன் எழுதியுள்ளீர்கள்.

  பெங்களூரிலிருந்து திருச்சிக்கு சென்றவாரம் ஸ்லீப்பார் பேருந்தில் தான் வந்தேன். மிகவும் அருமையாக இருந்தது. ரூ.750 டிக்கெட். ரயில் செகண்ட் ஏ.ஸி.யை விட பயணக்கட்டணம் கூடவே ஆனாலும், நிம்மதியாக காலை முழுவதும் நீட்டி, ஏ.ஸி.காற்றில் ஜாலியாகப்படுத்துக்கொண்டு வந்தோம்.

  மொத்தம் 30 படுக்கைகள் கொண்ட பஸ். பெங்களூரில் கிளம்பி திருச்சி வரும் வ்ரை அன்று நாங்கள் ஒரு 10 பேர்கள் மட்டுமே பயணித்து வந்தோம். 20 படுக்கைகள் காலியாக இருந்தன. அந்தத்தலையணிகளையும் நான் எடுத்துக் கொண்டு செளகர்யமாக வர முடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. சில சமயங்களில் மிக நன்றாகவே இருக்கிறது. ரெட் பஸ் வெறும் டிக்கட் மட்டுமே பதிவுசெய்யும் ஒரு நிறுவனம் என்பதால் சில சமயங்களில் இப்படி சொதப்பல்களும் நேர்ந்து விடுகின்றன.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 7. ரெட் பஸ் பயண சிரமத்தை கூட உங்கள் பாணியில் நகைச்சுவையாக சொல்லி உள்ளதை ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. சிரமப்பயணத்தை
  சிறப்பாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 9. அந்த நேரத்தில் அவஸ்த்தைப் பட்டிருந்தாலும் எங்களிடம் பகிரும் போது சிரித்து ஆற்றிக் கொண்டிருக்கிறீர்கள் சகோ...

  பணத்தையும் கூட வாங்கிக் கொண்டு இவர்களின் அட்டகாசம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 10. பேருந்துப் பயணத்தின் சிரமங்களைக் கூட சிரிக்கும்படி சொல்லியவிதம் அருமை!( இடுக்கண் வருங்கால் நகுக!) பெயரிலேயே அலர்ட் உள்ளதோ(RED Bus)! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 11. ///பேருந்தினுள் இருந்த டி.வி.யை போட்டார்கள் [அட கீழே இல்லைங்க!]. ///

  டைமிங்க் காமெடிங்க

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரை தமிழன்.

   Delete
 12. துன்பம் வரும் வேளையிலே சிரிங்க, என்று சொல்லி வச்சார் வள்ளுவரு, சரிங்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 13. சிறப்பான பயணம்... யார் செல்ல வேண்டும் என்றாலும் பயன் உள்ளதாக இருக்கும் இப்பதிவு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.

   Delete
 14. ரெட் பஸ் பயண அனுபவத்தை நகைச்சுவையாக சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 15. மொத்தத்தில் திருப்தியான பயணம் என்று சொல்லுங்கள்! ஹி ஹி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 16. ரெட்பஸ் சேவை தமிழ் நாட்டுல நல்லா இருக்கு சார், பஸ் பயணம் செய்த பின் பயணிகள் கொடுக்கும் ரேட்டிங் மிகவும் உதவியா இருக்கு, ரேட்டிங் கம்மியா இருந்தா நமக்கு வார்னிங் கொடுக்குறாங்க...

  ஆனா இந்த தனியார் பஸ் ஆளுங்க சீசன் டைம்ல வேற பஸ்ஸ கொடுகாங்க, நானும் இப்படி சிக்கி சின்னாபின்னம் ஆகியிருக்கேன்

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் தெரிவு செய்த பேருந்திற்கு ரேட்டிங் நல்லாதான் இருந்தது சீனு. சில சமயங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது....

   திரும்ப வரும்போது நல்ல பேருந்து - அதில் கிடைத்த அனுபவங்கள் வேறு விதமானவை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 17. ஆரம்பமே அசத்தல் பல்புகளா இருக்கே! அடுத்த பதிவுலாம் இன்னும் பிரகாசமா இருக்குமோ?!

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பயணம் பற்றிய பதிவுகள் நடுநடுவே வரும். ஒரு தொடராய் எழுத இயலாத நிலை! - நேரப் பற்றாக்குறை தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 18. பஸ் பிரயாணம் ரொம்ப அலர்ஜி எனக்கு. ஆனாலும் சிலசமயம் வேறு வழி இல்லாமல் போக வேண்டியிருக்கிறது.
  எல்லா பேருந்துகளிலும் இந்த மாதிரியான பிரச்னைகள் இருக்கவே இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. எனக்குப் பேருந்து பயணம் மிகவும் பிடித்தது ரஞ்சனிம்மா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 19. அய்யோடா அறுநூறு கிலோமீட்டர் பயணம் அதுவும் அறுவை படத்தோட ...! நெனச்சாவே ரெட் ரெட்டா பிளட் வருது ...

  நீங்க ரெட் பஸ்ல டிக்கெட் செலக்ட் பண்ணும்போது கொஞ்சம் பயணிகள் கமெண்ட்ஸ் படிச்சுட்டு பஸ் கம்பெனி செலக்ட் பண்றது பெஸ்ட்டுன்னு நெனைக்குறேன் .

  ReplyDelete
  Replies
  1. சில சமயங்களில் பயணிகள் நன்றாக இருக்கிறது எனும் பேருந்துகள் நமக்குப் பிடிப்பதில்லை. நல்லா இல்லைன்னு சொன்ன பஸ் நல்லாவே இருக்கு!

   திரும்பவும் ரெட் பஸ் மூலம் தான் பதிவு செய்தேன். அதில் நல்ல அனுபவம்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜீவன் சுப்பு!

   Delete
 20. அப்பாடி.... இப்பத்தான் திருப்தியா இருக்கு. அங்கயும் எம்மாற்றுவது இருக்கே... அட அதென்ன தரம் குரலை இப்படிச் சொல்லிட்டீங்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   அடடா நீங்க தரம் ரசிகரா!

   Delete
 21. www.redbus.in மூலம் பேருந்து பயணத்திற்கு முன்பதிவு செய்வதாயிருந்தால் கொஞ்சம் விசாரித்து பயணம் செய்வது நல்லது! //
  நல்ல பயனுள்ள தகவல்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 22. ரெட்பஸ் அனுபவம் எனக்கு நன்றாகவே அமைந்தது - என் இந்தியப் பயணத்தில் நிறைய இடங்களுக்கு ரெட்பஸ் வழியாகத்தான் டிகெட் வாங்கினேன்.

  ReplyDelete
  Replies
  1. சில சமயங்களில் இப்படி ஆகிவிடுகிறது. மற்றபடி எனக்கும் நல்ல அனுபவங்கள் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 23. ஹை.. மாட்டிக்கிட்டீங்களா. y.b.d முதல் பாகம் பார்த்துட்டு இனிமே தியேட்டருக்கே வர மாட்டேன்னு என் பையர் சபதம் போட்டிருக்கார்.

  சன்னி தியோல்-- ஓங்கியடிச்சா நாலரை டன் வெயிட்டாக்கும் :-))

  ரெட் பஸ் விளம்பரமெல்லாம் ஜோராத்தான் இருக்கு. அனுபவம் பயமுறுத்துதே. இதுக்கு வழக்கமான ட்ராவல்ஸே போறும்போலிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஆகா நான் மாட்டிக்கிட்டதில் உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம்! :) அட நீங்க பார்ட் -1 பார்த்து அவஸ்தைப் பட்டீங்களா!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 24. சன்னி தியோலின் பிரபலமான வசனமான 'ye dai kilo ka haath hai'தான் நம்மூர்ல ஓங்கியடிச்சா ஒன்றரை டன்னுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்துருக்குமோன்னு எனக்கு எப்பவுமே ஒரு சம்சயம் உண்டு :-)

  ReplyDelete
  Replies
  1. டை கிலோ கா ஹாத்.. நானும் கேட்டு இருக்கேன்... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 25. // www.redbus.in மூலம் பேருந்து பயணத்திற்கு முன்பதிவு செய்வதாயிருந்தால் கொஞ்சம் விசாரித்து பயணம் செய்வது நல்லது! //

  தங்கள் எச்சரிக்கை மணிக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 26. சுவாரஸ்யமான பயணம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 27. எப்போதும் எனக்கு பேருந்துப் பயணம் தான் வசதி!//

  எனக்குப் பேருந்துப் பயணமே பிடிக்காது; ஒத்துக்கவும் ஒத்துக்காது. நம்மவர் உங்க டைப்! :)))) எனக்கு ரயில் தான் பெஸ்ட் ஃப்ரன்ட்!

  ReplyDelete
  Replies
  1. ஆதியும் உங்க மாதிரி தான்! ரயில், அதுவும் குளிரூட்டப்பட்ட பெட்டி ஒத்துக்காது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....