எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, July 29, 2013

பார்த்த முதல் நாளே....... - தொடர்பதிவு

[முதல் கணினி அனுபவம்]
1986 – ஜூன் மாதம். பத்தாவது முடித்து பதினொன்றாம் வகுப்பு – நமக்கு பயாலஜி, ஜூவாலஜின்னா ஒரு அலர்ஜி......  கணக்குன்னா ஓகே அப்படின்னு நினைச்சு சயன்ஸ் க்ரூப் வேண்டாம், MPC [Maths, Physics, Chemistry] எடுக்கலாம்னா நாலாவது பயாலஜி தான் இருக்கும் – பேசாம காமர்ஸ் எடுத்துடலாமான்னு எனக்கு பலவித யோசனைகள். எங்கப்பா என்னடான்னா, எப்படியாவது நம்ம புள்ளைய ஒரு எஞ்சினீயர் ஆக்கிடணும்னு ஆசைப்பட்டு நீ முதல் க்ரூப்தான் எடுக்கணும்னு ஒத்தைக்கால்ல நிக்க, சரி பாக்க பாவமா இருக்கு, முதல் க்ருப்பே எடுத்துடுவோம்னு முடிவு பண்ணேன். ஆனா விதி வேறமாதிரி இருந்தது! நான் இஞ்சீனியர் ஆகல! சுக்குனீயர் தான் ஆனேன்.....

எனக்கு பயாலஜி மேல இருந்த அலர்ஜி NLC நிர்வாகத்துக்கு யார் சொன்னாங்களோ தெரியல, அந்த வருஷத்துல இருந்து முதல் க்ரூப்ல பயலாஜிக்கு பதில் Computer Science பாடம் தான்னு சொல்லிட்டாங்க! ஆஹா தப்பிச்சுட்டேடா கோவாலு!ன்னு சந்தோஷப்பட்டா அந்த சந்தோஷம் கொஞ்சம் நாளைக்குதான் நிலைச்சுது!

கம்ப்யூட்டர் சயன்ஸ் அந்த வருஷம் தான் முதல்ல ஆரம்பிக்கறாங்க ஸ்கூல்ல, புதுசா டீச்சர் வேலைக்கு வைக்கணும், அதுக்குண்டான எல்லா விஷயங்களும் முடிய கொஞ்சம் மாதங்கள் ஆகும், அதுனால ஒரு ஷார்ட்கட் கண்டுபிடிச்சாங்க! என்ன ஷார்ட்கட்....  ஸ்கூல்ல வேலை செய்யற டீச்சர்கள கூப்பிட்டு யாருக்காவது இந்த கம்ப்யூட்டர் பத்தி ஏதாவது தெரியுமா? ஏதாவது ஷார்ட் டெர்ம் கோர்ஸ் யாராவது முடிச்சு இருக்கீங்களா?ன்னு கேட்க, ஒரெ ஒரு கை தான் உசந்துச்சு! அது யாரு கைன்னு கேட்கறீங்களா?

இதுவரைக்கும் பயாலஜி சொல்லிக்கொடுத்த டீச்சர் கை தான்! அவர் ஒரு வருஷம் டிப்ளமா படிச்சு இருக்கேன்னு தம்பட்டம் அடிக்க, அவரையே எங்களுக்கு கம்பூட்டர் டீச்சரா நியமிச்சாங்க! அவர் என்னடான்னா, இத்தனை நாள் வரைக்கும், இலைகள் எப்படி பச்சை நிறமா இருக்கு?, மரங்கள் ஏன் ஆக்சிஜன் உறிஞ்சாம, கார்பன் டை ஆக்சைட் உறிஞ்சுது, ஒரு செடியின் படம் வரைந்து பாகங்கள் குறிக்கவும்அப்படின்னு பயாலஜி எடுத்த நினைவிலேயே எங்களுக்கு கம்ப்யூட்டரையும் பயாலஜி மாதிரியே சொல்லிக் கொடுத்தார்!

பேசிக், ஃபோர்ட்ரான் IV, ஃபோர்ட்ரான் 77, ஃப்ளோ சார்ட், அப்படின்னு அவர் எல்லாத்தையும் படம் வரைஞ்சு பாகம் குறிச்சு தான் எங்களுக்கு பாடம் எடுத்தார். ஃபோர்ட்ரான் அப்படின்னு முதல்ல சொல்லும்போது எனக்கு “ஓட்டுறான்னு சொன்ன மாதிரி கேட்டுது [நம்ம இருக்கற உயரத்துக்கு எப்பவும் கடைசி பென்ச் தான் – புரியாத வார்த்தை சொன்னா, புரிஞ்ச வார்த்தையா கேட்டுது!] – நானும் அப்பாவியா எதை சார் ஓட்டணும்னு கேட்டேன்!

இப்படி கொஞ்ச நாள் வெறும் தியரியா சொல்லிக்கொடுத்துட்டு இருந்தார் அந்த வாத்யார். சார் என்னிக்காவது கம்ப்யூட்டர்னு சொல்றீங்களே அதைக் காமிப்பீங்களா?அப்படின்னு கேட்கவே கேட்டுட்டேன். கம்ப்யூட்டருக்கான தனி அறை தயாராகிடுச்சு. அடுத்த வாரம் உங்களுக்கு ப்ராக்டிகல் க்ளாஸ் அப்படின்னு சொல்லி எங்களுக்கு உற்சாகம் தந்தார்.

அடுத்த வாரமும் வந்தது. சரி நம்ம கிளாஸ்ல இருந்து கம்ப்யூட்டர் ரூமுக்கு கூட்டிட்டு போவாருன்னு பார்த்தா, போகலை. அங்க போறதுக்கு முன்னாடி சில நியதிகள் இங்கேயே சொல்றேன்னுட்டு ஒரேடியா பயமுறுத்துனார்.கம்பூட்டருக்கு தூசின்னா கொஞ்சம் அலர்ஜி. அதுனால யாரும் செருப்பு போட்டுட்டு உள்ள வரக்கூடாது. நமக்கு தூசி அலர்ஜி இருந்தா தும்மல் வரும் – அது மாதிரி கம்ப்யூட்டருக்கு உடம்புக்கு வந்துடும் – கடகடபுடபுடன்னு சத்தம் போடும்.கம்ப்யூட்டர் கடவுள் மாதிரி – அதுக்கு தெரியாத, அதால முடியாத விஷயமே கிடையாது – அதுனால, அது இருக்கற ரூம் கோவில் கர்ப்பக்கிரகம் மாதிரி – பேச்சு மூச்சு இருக்கக்கூடாது. மரியாதையா இருக்கணும். கோவில்ல எப்படி பவ்யமா நடந்துப்போமோ அதே மாதிரி இருக்கணும்.கம்யூட்டர் கீ போர்ட் பொண்ணுங்க மாதிரி ரொம்ப மிருதுவானது. அதனால தாறுமாறா உபயோகிக்கக் கூடாது. 
இந்த மாதிரி நிறைய உபதேசங்கள். இதை வைச்சே அந்த வாரம் முச்சூடும் ஓட்டிட்டாரு. அடுத்த வாரம் தான் கம்ப்யூட்டர் கண்ணால பார்த்தேன். “பார்த்த முதல் நாளே பாட்டு அப்ப வரலையா, அதுனால கணினியைப் பார்த்து இந்த பாட்டு பாடல! அவரு கணினி முன்னால உட்கார்ந்து, ஒவ்வொரு பாகமா படம் வரைந்து பாகங்களைக் குறிஸ்டைல்ல சொல்லிட்டு இருந்தார். நாங்க கேட்டுட்டு இருந்தோம்.  அப்படி இப்படின்னு எல்லாம் முடிஞ்சு கணினி முன்னாடி நாங்க அமர்ந்தது கிட்டத்தட்ட அந்த வருட பரீட்சை அப்பதான்!

கணினி முன்னாடி முதன் முதலா உட்கார்ந்தப்போ “எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல...... மனசு தான் மாரத்தான் ரேஞ்ல தலைதெறிக்க ஓடிச்சு....  அடங்குடா டேய்னு ஒரு குரல். அப்புறமா மனதை திடப்படுத்திக்கிட்டு  ஃபோர்ட்ரான் – ல பாடப்புத்தகத்தில் இருக்க ப்ரோக்ராம அப்படியே கணினில தட்டச்சு செஞ்சு அது சொன்ன வேலையை செஞ்சு முடிச்சப்ப, என்னமோ சாதனை செஞ்சா மாதிரி, ஆகாயத்துல மிதக்கற மாதிரி ஒரு ஃபீலிங்!இது தான் முதல் அனுபவம்! அதுக்கப்புறம் கல்லூரியில், பிறகு அலுவலகத்தில் என நிறைய கணினி அனுபவங்கள்.....  அதெல்லாம் சொன்னா ஒரு பத்து பதிவு தேறும்! ஆனா உங்களை எல்லாம் சொல்லி கஷ்டப்படுத்த விரும்பல! ஒரே விஷயம் மட்டும் சொல்றேன்!

ஒரு திங்கள் கிழமை – ஒரு வார விடுமுறைக்குப் பிறகு அலுவலகம் சென்ற போது – நீ வந்தவுடனே உன்னை மேடம் [என்னோட பாஸ்] ரூமுக்கு வரச் சொன்னாங்கஅப்படின்னு சொல்லவே அவங்க ரூமுக்கு போனேன். அவங்க ஒரே கோபமா இருந்தாங்க! என்ன விஷயம்னு பார்த்தா, அவங்க கணினியோட திரை இப்படி இருந்தது!

என்ன மேடம் என்ன ஆச்சுந்னு கேட்டா, தெரியல வெங்கட், இரண்டு நாளா இப்படி தான் இருக்கு. யாருக்கும் என்ன பண்ணறதுன்னு தெரியல! தலையை ஒரு பக்கமா திருப்பி படிச்சு படிச்சு தலை சுளுக்கிக்கிச்சு! அதனால மானிட்டரையே திருப்பி வைச்சுட்டேன்.  எதாவது பண்ணுப்பான்னு தலையை சாய்ச்சுக்கிட்டே சொல்ல, “எனக்கு சுளுக்கு எல்லாம் எடுக்கத் தெரியாதேன்னு நான் சொல்ல.....  ஒரே ரகளை.அப்புறம் கணினில அவங்க Display-ல போய், சரி பண்ணிக் கொடுத்தேன்! விண்டோஸ் சில வெர்சன்களில் Destop Properties - Diplay Rotate னு ஒரு Option கொடுத்து அதுல 90, 180, 270, 360 அப்படின்னு இருக்கும். அதை எப்படியோ க்ளிக் பண்ணி இப்படி ஆக்கிட்டாங்க! இந்த Rotate Option எதுக்கு வைச்சான் விண்டோஸ் காரன்? இன்னிக்கு வரைக்கும் புரியாத விஷயம்.

கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 12 மணி நேரத்திற்கு மேல் கணினியுடனே காலம் செல்கிறது என்பதால் இது போல நிறைய அனுபவங்கள் இன்னும் உண்டு! இருந்தாலும் இந்த தொடர்பதிவு பெரிய தொடர் பதிவா என்னோட பக்கத்துலேயே வந்தா நல்லா இருக்காது. அதுனால இதைத் தொடர்ந்து எழுத கீழ்க்கண்ட வலைப்பதிவாளர்களை அழைக்கிறேன்......  
என்னை இத்தொடர் பதிவு எழுத அழைத்த ஸ்ரீராம் அவர்களுக்கும் தமிழ் இளங்கோ அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.  அவங்க இந்த தொடர் பதிவு எழுத அழைத்து கொஞ்ச நாளாயிடுச்சு..... அதுக்குள்ள நிறைய பேர் தொடர் பதிவு எழுதிட்டாங்க! அதனால யாரு எழுதலைன்னு தெரியல! அதுனால ஒரு சிம்பிள் வழி கண்டுபிடிச்சுட்டேன்!     ஹலோ யாருங்க..... எச்சூஸ்மி! யாரெல்லாம் இந்த தொடர் பதிவ இன்னும் எழுதலையோ அவங்க எல்லோருக்கும் பொதுவா சொல்லிடறேன். நீங்களும் எழுதலாமே!.....மீண்டும் சந்திப்போம்!நட்புடன்வெங்கட்.

புது தில்லி.

72 comments:

 1. கம்யூட்டர் கீ போர்ட் பொண்ணுங்க மாதிரி ரொம்ப மிருதுவானது.///\\

  அது யாருங்க உங்களுக்கு பொண்ணுங்க ரொம்ப மிருதுவானது என்று தப்பு தப்பா சொல்லிக் கொடுத்தது
  . பூரிக்கட்டையை அடிக்கடி பிடிக்கும் கைகள் மிருதுவா இருக்காதுங்க

  ReplyDelete
  Replies
  1. சொல்லிக்கொடுத்தவருக்கு கல்யாணம் ஆகலை அப்ப! அதுனால அவருக்கு பூரிக்கட்டை ட்ரீட்மெண்ட் கிடைக்கலை போல!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 2. நன்றாக நகைச்சுவையாக சொல்லியிருக்கீங்க...இஞ்சினியர், சுக்குனியர், ஃபோர்ட்ரான், ஓட்ரான், கணினி ஒரு கடவுள் மாதிரி போன்ற பல இடங்களில் வாய்விட்டுச் சிரித்தேன். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  நம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குதான் இதுபோன்ற சுவாரசியமான அனுபவங்கள் கணினியுடன் இருக்கும். இப்போது இருக்கும் பிள்ளைகளிடம் முதல் கணினி அனுபவத்தைக் கேட்டால் சொல்லத்தெரியாது. ஏனென்றால் அவர்கள்தான் நினைவு தெரிவதற்கு முன்னாலேயே கணினியை இயக்கக் கற்றுக்கொண்டுவிடுகிறார்களே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி....

   Delete
 3. சுவாரஸ்யமான அனுபவம்... உபதேசங்கள் சூப்பர்...

  நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன்... விரைவில் முடிக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. விரைவில் எழுதி வெளியிடுங்கள்..... உங்கள் எழுத்தில் படித்து விடுகிறேன்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. //“எனக்கு சுளுக்கு எல்லாம் எடுக்கத் தெரியாதே”ன்னு நான் சொல்ல..... ஒரே ரகளை.//

  ஹா ஹா... இப்படி கிண்டல் அடிச்சதனால உங்களுக்கு பிரமோஷன் ஒரு வருஷம் தள்ளி வைச்சதா கேள்விப்பட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. ஹா..... ஹா..... :) இப்படி ரகசியமெல்லாம் வெளில சொல்லக்கூடாது ஸ்.பை!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 5. கம்ப்யூட்டர் கடவுள் மாதிரி – அதுக்கு தெரியாத, அதால முடியாத விஷயமே கிடையாது – அதுனால, அது இருக்கற ரூம் கோவில் கர்ப்பக்கிரகம் மாதிரி – பேச்சு மூச்சு இருக்கக்கூடாது. மரியாதையா இருக்கணும். கோவில்ல எப்படி பவ்யமா நடந்துப்போமோ அதே மாதிரி இருக்கணும்.

  நல்லாதான் பில்ட் அப் கொடுத்து ஆவலை அதிகரித்திருக்கிறார்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. இந்த Rotate Option எதுக்கு வைச்சான் விண்டோஸ் காரன்?

  சுற்றிச்சுற்றி வந்து வேடிக்கை காட்ட இருக்குமோ???!!!

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம்.... இதையே ஒரு விளையாட்டா விளையாடிருப்பாங்களோ சிலர்!

   தங்களது இரண்டாம் கருத்துரைக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. ஒ.கே..... கம்ப்யுட்டரோட பையாலஜி எல்லாம் படித்ததைப் பற்றி எழுதிவிட்டீர்கள். நான் இப்ப தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். என்றைக்கு முடிப்பேனோ தெரியவில்லை.

  நல்ல நகைச்சுவைப் பதிவு உங்களுடையது.....

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் முடிந்தபோது எழுதிடுங்கள்.......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 8. //இப்படி கொஞ்ச நாள் வெறும் தியரியா சொல்லிக்கொடுத்துட்டு இருந்தார் அந்த வாத்யார். ”சார் என்னிக்காவது கம்ப்யூட்டர்னு சொல்றீங்களே அதைக் காமிப்பீங்களா?” அப்படின்னு கேட்கவே கேட்டுட்டேன். //

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சூப்பரான கேள்வி தான்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 9. //கம்பூட்டருக்கு தூசின்னா கொஞ்சம் அலர்ஜி. அதுனால யாரும் செருப்பு போட்டுட்டு உள்ள வரக்கூடாது. நமக்கு தூசி அலர்ஜி இருந்தா தும்மல் வரும் – அது மாதிரி கம்ப்யூட்டருக்கு உடம்புக்கு வந்துடும் – கடகடபுடபுடன்னு சத்தம் போடும்.//

  //கம்யூட்டர் கீ போர்ட் பொண்ணுங்க மாதிரி ரொம்ப மிருதுவானது. அதனால தாறுமாறா உபயோகிக்கக் கூடாது. //

  சூப்பர் ஜி. பாராட்டுக்கள்.

  >>>>>>

  ReplyDelete
  Replies
  1. ரசித்து இரண்டாம் கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 10. //எதாவது பண்ணுப்பா”ன்னு தலையை சாய்ச்சுக்கிட்டே சொல்ல, “எனக்கு சுளுக்கு எல்லாம் எடுக்கத் தெரியாதே”ன்னு நான் சொல்ல..... ஒரே ரகளை.//

  நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். ரஸித்தேன். பாராட்டுக்கள், வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து மூன்றாம் கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 11. ரசிச்சு வாசிச்சேன். என்னதான் புதுசா வந்த, அறியாத பொருள்ன்னாலும் கம்யூட்டரை அப்படியா திருப்பி வெச்சுப்பாங்க அந்த ஹெட்!! :-)))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்......

   இரண்டு நாள் தலையை சாய்ச்சு வைச்சு முடியாம தான் மானிட்டரை திருப்பி வைச்சு அதுக்கு புத்தகங்களை முட்டுக் கொடுத்து நிறுத்தி வைத்திருந்தார்கள்! :)))))

   Delete
 12. வரிக்கு வரி நகைச்சுவை மிளிர்கிறது.
  கடைசில கணியைப் பொண்ணாக்கிட்டாரா உங்க வாத்தியார்;)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

   Delete
 13. சுவாரசியமான அனுபவங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
  2. //கம்ப்யூட்டர் கடவுள் மாதிரி – அதுக்கு தெரியாத, அதால முடியாத விஷயமே கிடையாது – அதுனால, அது இருக்கற ரூம் கோவில் கர்ப்பக்கிரகம் மாதிரி – பேச்சு மூச்சு இருக்கக்கூடாது. மரியாதையா இருக்கணும். கோவில்ல எப்படி பவ்யமா நடந்துப்போமோ அதே மாதிரி இருக்கணும்.//

   ஆமாம் இல்ல, அதோடயா! கணினியைச் சொந்தமா வைச்சுக்க எல்லாம் முடியாது. வீட்டிலே ஏசி இருக்கணும். ஏசி இல்லாமல் கணினி வைச்சுக்கறதை நினைச்சுக் கூடப் பார்க்க முடியாதுனு எல்லாம் சொல்லுவாங்களே, அதை விட்டுட்டீங்களே! :)))))))))

   Delete
  3. நானா இருந்தா, அந்த ரொடேட் ஆப்ஷனிலே போய் ரொடேட் பண்ணி விளையாடியே ஒரு நாள் பொழுதைக் கழிச்சிருப்பேன். உங்களுக்கும், உங்க மேடத்துக்கும் விளையாடத் தெரியலை! நல்ல விளையாட்டா இருந்திருக்கும். :)))))))

   Delete
  4. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   அப்பத்திக்கு அந்த வாத்தியார் க்ளாஸ்ல சொன்ன கணினி வேதம் இது..... அதற்கப்புறம் நிறைய அட்டாச்மெண்ட் உண்டு! :)

   Delete
  5. அவங்க சாதாரணமாவே இப்படி நிறைய விளையாடுவாங்க! :) கொஞ்ச நாள்ல அலுத்துடும்.... வேற புதுசா எதாவது செய்துட்டு முழிப்பாங்க! :)

   உங்களை மாதிரி விளையாட முடியுமா!

   இரண்டாவது கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 14. நல்ல சுவாரசியமான அனுபவம்.. அப்பா தமிழ்நாட்டுலையே நீங்க தான் மொத பேட்ச்சா சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 15. சூப்பர் நியதிகள்!
  தூள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா....

   Delete
 16. செம கலாட்டாவான பதிவு. வாய்விட்டே சிரித்து விட்டேன். கணினியை கண்ணாலேயே காட்டாததால்தான் இன்றைய பொழுதுகள் கணினியை முறைத்துப்பார்த்துக்கொண்டே கழிகிறது போலும். :P
  உங்களின் அனுபவம் போலவே எங்களின் அலுவலகத்திலும் நிகழ்ந்துள்ளது. புதிதாக வந்த ஒரு executive க்கு கணினி ஒன்று வழங்கப்பட்டது. அதை வைத்துக்கொண்டு அவர் செய்த கோமாளித்தனத்தை கண்டு, வாயைப்பொத்திக்கொண்டு சிரித்த நிகழ்வுகள் மனக் கண்முன் வந்துவந்து போனது வெங்கட்.
  தொட்டதிற்கெல்லாம் அலுவலகத்தில் உள்ள எங்களில் யாராவது ஒருவரை அழைப்பார். அவர் கணினியின் முன் அமர்ந்து இருப்பதைப் பார்த்துவிட்டால், அலுவலகத்திற்குள் நுழைவதற்கே தயங்குவார்கள் ஊழியர்கள். யார் எவர் என்று பார்க்கமாட்டார். இங்கே வா.. இது ஏன்? எப்படி இப்படி ஆனது? சரி செய்.. சொல்லித்தா.. என ஒரே டார்ச்சர். சொல்லிக்கொடுத்தாலும் அதே கேள்வி மீண்டும் வருவதுதான் எரிச்சல் அனைவருக்கும்.
  ஒரு முறை அவரின் கணினி மேஜையின் மீது தலைகீழாக வைக்கப்பட்டிருந்தது. ஏன் என்றால், உங்களின் மேடத்திற்கு ஏற்பட்ட அதே சந்தேகத்தைப் போக்குவதற்கு அங்கே பணிபுரிந்த சதார்ஜி செய்த அட்டகாசம் தான் அது. அன்று முழுக்க அலுவலகமே கிடுகிடுக்கச் சிரித்தோம்.
  அலுவலகச் சூழலில் மிகப்பெரிய கலாச்சார மாற்றலில் சிக்கியதருணம் அது. எங்களுக்கு நிறைய அனுபவம் இதில்.
  நீங்களும் உள்ளீர்கள் என்று நினைக்கின்ற போது..சிரிப்பை அடக்கவே முடியவில்லை...

  செம கலாட்டா. தொடருங்கள். வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அலுவலக அனுபவத்தினையும் இங்கே சொல்லியமைக்கு நன்றி ஸ்ரீவிஜி.....

   தினம் தினம் இப்படி ஒரு அனுபவம்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   Delete
 17. பார்த்தா ஆளு கம்முனு இருக்கீங்க. ஆனா நல்லா ஜோக் அடிக்கிறீங்க. நீங்கள் தந்த நகைச் சுவையான படங்கள் திரும்பத் திரும்ப என்னைப் பார்க்க வைத்தன.
  நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதுமாதிரி அனுபவங்களை தட்டி விடவும். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி.....

   முடிந்த போது எழுதுகிறேன்.....

   Delete
 18. நகையான சொல்லாடல்..
  நல்ல (தொடர்) பதிவு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்.

   Delete

 19. வணக்கம்!

  கணினி கற்ற காலத்தைக்
  கண்கள் கண்டு களித்தனவே!
  பணிமேல் உற்ற அனுபவத்தைப்
  படைத்தீா் நல்ல பயன்நல்கும்!
  இனிமேல் கணினி தொல்லைதரின்
  எடுத்து வருவேன் உன்னிடமே!
  கனிபோல் இனிக்கும் எழுத்துகளால்
  கவிஞன் நெஞ்சைக் கவா்ந்தீரே!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களே....

   Delete
 20. நான் இஞ்சீனியர் ஆகல! சுக்குனீயர் தான் ஆனேன்.....
  >>
  இந்த படிப்பு புதுசா இருக்கே! அந்த படிப்புக்கு உங்க மௌமக பிள்ளையை சேர்க்க ஏற்பாடு பண்ணுங்க சகோ!

  ReplyDelete
  Replies
  1. அது யாருங்க மௌமக பிள்ளை? :)) மருகப் பிள்ளையா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 21. அனுபவங்கள் படிக்கப்படிக்க சுவாரசியமாக இருந்தது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 22. தகவலுக்கு நன்றி.

  ரசித்துப் படித்தேன். குறிப்பாக யாரையும் மாட்டி விடாமல் விட்டு விட்டீர்களே....!

  ReplyDelete
  Replies
  1. யாரைக் கூப்பிட நினைத்தாலும் முன்னாடியே எழுதியிருக்காங்க, இல்லைன்னா வேற யாராவது கூப்பிட்டு இருக்காங்க! அதான் பொதுவுல அழைப்பிதழ் வைச்சாச்சு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 23. செம சுவாரசியமாகவும், கலக்கலாகவும் இருந்தது பதிவு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 24. இங்கே நான் வந்து படிச்சது எல்லாம் வெங்கட் என்னும் என் சகோதரரின் பதிவா?...
  நம்பவே முடியலைங்க...

  முதலாவது உங்க ஃப்ரோபல் படத்துக்கும் இந்த எழுத்துக்கும் தொடர்பே எனக்குத் தெரியலை...
  அதிலே சிரிச்சாபோல கொஞ்சமும் காணலை. அப்படி சிரிக்காதவங்கக்கிட்டேருந்து இப்படி நகைசுவை.....

  அப்புறம்.. இங்கே நான் வந்து படிச்ச பதிவுகளிலே இப்படி இவ்வளவு நகைச்சுவை உங்ககிட்ட இருந்து பார்த்ததில்லை. அதனாலும் வந்த தடுமாற்றம்... :)))

  தப்பா நினைச்சுக்காதீங்க சகோ.... ச்சும்மா தமாஷுக்கு சொன்னேன்.

  செம நகைச்சுவையாக எழுதியிருக்கீங்க..
  சிரித்து சிரித்தே படித்தேன் உங்க முதல் கணினி அனுபவத்தை.

  அருமை! வாழ்த்துக்கள் சகோ!

  த ம.6

  ReplyDelete
  Replies
  1. அடாடா... அப்படி ஒரு டெரராவா இருக்கு நம்ம முகம்! :)))))

   நகைச்சுவை ததும்ப இருந்தது எனச் சொல்லி பதிவினை ரசித்த உங்களுக்கு எனது நன்றி.

   Delete
 25. உங்கள் முதல் கணணி அனுபவமும், அதற்கான படங்களும் தூள்! அதிலும் 'why did you hit escape key?' அட்டகாசம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   Delete
 26. இந்த மாதிரி விதிகளுடன் அமைந்த அனுபவங்கள் எனக்கு இல்லையே என்று பொறாமையா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

   Delete
 27. ஹலோ யாருங்க..... எச்சூஸ்மி! யாரெல்லாம் இந்த தொடர் பதிவ இன்னும் எழுதலையோ அவங்க எல்லோருக்கும் பொதுவா சொல்லிடறேன். நீங்களும் எழுதலாமே!.....
  ஆஹா உங்களுக்கு எவ்வளவு பெரிய நல்ல மனசு என்னுடைய
  நிலைமை தெரிஞ்சே போட்ட கருத்துப் போல தெரியுது .இது இன்று
  எல்லோர் மனதிலும் ஓடியிருக்குமோ :)இங்குளுடிங் மீ ....:)
  சிறப்பான படங்களுடன் ஓர் அனுபவப் பகிர்வு .வாழ்த்துக்கள் சகோ .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்.....

   Delete
 28. முதல் அனுபவத்தை ரசனையாக நகைச்சுவையாக சொல்லியிருக்கீங்க....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 29. வெங்கட் ,உங்கள் கணினி அனுபவம் நல்ல நகைச்சுவை.
  ஆதி என்னை அழைத்து இருந்தார்கள் நானும் எப்படியோ எழுதி விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 30. நல்ல அனுபவங்கள். நகைச்சுவை ததும்பச் சொல்லியுள்ளீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 31. //நமக்கு பயாலஜி, ஜூவாலஜின்னா ஒரு அலர்ஜி//
  ஆமாஜி! நிறைய பேருக்கு அப்படித்தான்ஜி!
  கார்ட்டூன்ஸ் சூப்பர்ஜி! மொத்தத்தில் கலக்கல்ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 32. அழகான அனுபவம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.

   Delete
 33. நகைச்சுவையான பகிர்வு.

  கணினியை திருப்பி வைத்ததுதான் செம சிரிப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 34. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....