எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, July 17, 2013

ஷேக் சஹேலியின் கல்லறை – ரத்த பூமி பகுதி 7தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே.....


ரத்தபூமி பயணத் தொடரின் சென்ற பகுதியில் கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம் பற்றி பார்த்தோம். முந்தைய பகுதிகள் படிக்கவில்லையெனில் மேலே சுட்டலாமே :) [விளம்பரம் அல்ல!அப்படின்னு நான் சொன்னா நம்பவா போறீங்க!]
ஷேக் சஹேலி கல்லறை
இனி இந்த வாரம் எங்கே? முகலாயர்களின் காலத்தில் கட்டப்பட்ட ஒரு கல்லறைக்குத் தான் இந்த வாரம் உங்களை அழைத்துச் செல்லப் போகிறேன். முகலாய பேரரசர் ஷாஜஹான் பற்றி உங்களுக்குத் தெரியுமே. அவர் செய்த ஆட்சி பற்றி தெரியுமோ இல்லையோ அவர் தனது மனைவி மும்தாஜ் நினைவாக ஆக்ராவில் யமுனைக் கரையோரம் எழுப்பிய தாஜ்மஹால் மூலமாக எல்லோரும் அவரைத் தெரிந்து வைத்திருக்கிறோம்!
வெளிப்புறத் தோற்றம் - 1
ஷாஜஹானின் புதல்வரான ஔரங்கசீப் பற்றியும் வரலாற்றில் படித்திருக்கிறோம். இவர் தவிர ஷாஜஹானுக்கு கல்வியில் சிறந்து விளங்கியவரான [D]தாரா ஷிகோ என்ற பெயர் கொண்ட புதல்வரும் உண்டு.  [D]தாரா ஷிகோவின் ஆன்மீக குரு எனச் சொல்லப்படும் சூஃபி துறவியான அப்துல் கரிம் எனும் இயற்பெயரைக் கொண்ட ஷேக் சஹேலி நினைவாக குருக்ஷேத்திராவில் கட்டப்பட்டிருக்கும் கல்லறை தான் இன்று பார்க்கப் போகும் கல்லறை. 
கூரை...
பொலிவான மணற்கல் கொண்டு கட்டப்பட்ட இந்த கல்லறை அழகிய கூரை கொண்டது. முகலாயர் காலத்திய கட்டடம் என்பதால் அவர்கள் காலத்திய கலை நுணுக்கங்களை கட்டிடத்தில் கண்டு ரசிக்க முடிந்தது. சஹேலியின் கல்லறை என்று சொல்லப்பட்டாலும், அங்கே மொத்தம் ஆறு கல்லறைகள் – ஒன்று சஹேலியின் மனைவியின் கல்லறை மற்றவை யாருடையது என்ற தகவல்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை.
வெளிப்புறத் தோற்றம்-2பெரிய கோட்டைச் சுவர்களைக் கடந்து உள்ளே சென்றால் அழகிய சதுர வடிவில் ஒரு பூங்கா. தற்போதும் மிக அருமையாக பராமரிக்கப்பட்டு வரும் பூங்கா. சாதாரணமாக Archeological Survey of India பராமரிக்கும் தளங்கள் அவ்வளவு சரியாக இருக்காது. ஆனால் இங்கிருக்கும் பூங்கா நன்றாக பராமரிக்கப்பட்டு இருப்பது கண்டு மனதில் மகிழ்ச்சி. பூங்காவினுள் இருக்கும் கல்லறையைக் காணும்போது எங்கே குருக்ஷேத்திராவில் தாஜ் வந்தது என்று தோன்றினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.பூங்கா என்றாலே காதலர்கள் இல்லாமலா! இங்கேயும் நிறைய காதல் ஜோடிகள். வெளியேவும் நிறைய பேரை ஜோடி-ஜோடியாகப் பார்க்க முடிந்தது!இதன் உள்ளேயே பிரார்த்தனை/தொழுகை செய்ய தர்கா ஒன்றும் Archeological Survey of India கட்டுப்பாட்டில் இருக்கும் அருங்காட்சியகமும் இருக்கின்றது. பொதுவாகவே இந்தியா முழுக்க இருக்கும் அருங்காட்சியகங்கள் திங்கள் அன்று விடுமுறை. அதே போல இங்கேயும் செவ்வாய் முதல் ஞாயிறு வரை, காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை திறந்திருக்கிறது இந்த இடம்.இந்த ஷேக் சஹேலி தான் தாரா ஷிகோ அவர்களின் ஆன்மீக குரு என்ற எண்ணமும் தவறென்று சில வரலாற்று குறிப்புகளும் இருக்கின்றன. லாகூரைச் சேர்ந்த ஹஸ்ரத் ஷேக் மியான் மீர்சாஹிப் தான் இவருடைய முதன்மையான ஆன்மீக குரு எனவும், ஷேக் சஹேலி பின்னாளில் வந்த குருவாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கிறார் குருக்ஷேத்திரா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர்.யாராக இருந்தாலும் அழகிய ஒரு முகலாயர் காலத்திய சின்னத்தினைக் காணும் ஆர்வம் உங்களுக்கிருந்தால் இங்கே நீங்கள் சென்று அங்கிருக்கும் கட்டடக் கலையையும் ரசித்து, விருப்பப் பட்டவர்கள் தொழுகையும் செய்து வரலாம்.அக்பர் இரண்டாம் பானிபத் [எல்லோரும் தமிழில் எழுதுவது போல இந்த இடம் பானிபட் அல்ல! ஹிந்தியில் எழுதும்போது பானிபத் என்று தான் எழுதுகிறார்கள்!] போரில் வெற்றி கிடைக்குமா எனத் தெரிந்து கொள்ள சூஃபி ஷேக் சஹேலி அவர்களிடம் தான் கருத்து கேட்டார் எனவும் சில கதைகள் உண்டு.

அருகிலேயே இன்னும் சில பார்க்க வேண்டிய இடங்கள் உண்டு. அவை பற்றி அடுத்த புதன் கிழமை பார்க்கலாம்!மீண்டும் சந்திக்கும் வரை....நட்புடன்வெங்கட்
புது தில்லி.

24 comments:

 1. மொகலாயர் கால கட்டிடக்கலை பற்றிய செய்திகளும், படங்களும் அருமை. பாராட்டுகள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 2. முகலாயர் கால தகவலுக்கு நன்றி... தொடர்க... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. அழகிய ஒரு முகலாயர் காலத்திய சின்னத்தினைக்
  காட்சிப்படுத்திய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. ஃபோட்டோ பிடிக்குறதுதான் உங்க தொழில்ன்னு நினைச்சேன். வரலாறும் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே!

  ReplyDelete
  Replies
  1. அட தொழிலையே மாத்திப்புட்டீங்களே! :) ஃபோட்டோ பிடிக்கறது பொழுதுபோக்கு மட்டுமே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 5. ஷேக் சஹேலி கல்லறை ,முகலாயர் கட்டிடக்கலை கண்டுகொண்டோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 6. காதலர்கள் இருந்தார்கள் என்று நீங்கள் சொல்வதை நான் நம்ப மாட்டேன். நீங்கதான் ஃபோட்டோவே போடவில்லையே!

  ReplyDelete
  Replies
  1. அடடா... அந்த ஃபோட்டோ உங்களுக்கு பார்க்கணுமா! நான் எடுக்கலை! பொண்ணுங்க ஃபோட்டோ எடுத்தா கட்டி வச்சு அடிப்பாங்க ஹரியானாவுல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. 'பானிபத்' என்பதே சரியென அறிந்துகொண்டேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 8. அழகான கட்டிடக் கலையை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..

   Delete
 9. பழமைவாய்ந்த கட்டிடக் கலையின் அழகே தனி. பகிர்வும் படங்களும் நன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 10. முகலாயர் கட்டடக் கலையை உங்கள் கைவண்ணத்தில் கண்TOM(B). களித்தோம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 11. தகவலுக்கு நன்றி வெங்கட்.. அழகாக படம் பிடித்திருக்கிறீர்கள். நான்காவது படத்தில் பறவைங்கள் கூட்டம் ஃப்ரீஸாகி அழகாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 12. அட!! கண்ணுலயே ஆப்டலையே எனக்கு:(

  கோட்டை விட்டதில் இதுவும் ஒன்னு!

  உச்சரிப்பில் கவனம் செல்வது கூடுதல் மகிழ்ச்சி.

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....