இந்த வார செய்தி:
ஷ்வேதா – வெகு விரைவில்
கனவு நகரமாம் நியூயார்கில் உள்ள BARD COLLEGE-ல் சென்று மேற்படிப்பு படிக்க
இருக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் மும்பை நகரிலிருந்து செல்லும் இவர்
ஒரு NGO ஏற்பாடு செய்த Scholarship மூலம்
தான் மேற்படிப்பு படிக்க இருக்கிறார். அட
வருஷம் பூரா, இப்படி நிறைய பேர் யு.எஸ்.-ல படிக்க போறாங்க, இதுல என்ன புதுசா
இருக்கு?
ஷ்வேதா வளர்ந்த
சூழலைக் கொஞ்சம் பார்க்கலாம். பாசமுள்ள தாய். தந்தை சிறுவயதிலேயே இறந்து விட, தாய்
மறுமணம் புரிந்து கொள்கிறார். அவரோ குடிகாரர். ஷ்வேதாவினை துன்புறுத்த, அவரைத்
தனது தந்தையாக ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. தாய் பக்கத்தில் உள்ள அலங்கார
விளக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு வரும் பணம்
கொஞ்சமானாலும் அதிலும் தனது குழந்தைகளுக்குக் கல்வி தரும் உன்னதமானவள். இந்த
குடும்ப சூழலை விட கொடுமையானது அவள் இருக்கும் இடம்!
மும்பை பற்றி
தெரிந்திருக்கிறதோ இல்லையோ, மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியான காமத்திப்புரா பற்றி
பலருக்கும் தெரியும். அப்படிப்பட்ட காமத்திப்புராவில் தான் இருக்கிறது ஷ்வேதாவின்
வீடு. அந்த பெரிய வீட்டின் மற்றபகுதிகளில் வெறிபிடித்த மனிதர்களின் காம இச்சைகள்
தீர்க்கப்பட, பள்ளிக்குச் செல்லும்போது இவரையும் தொந்தரவு செய்த நாட்கள் ஏராளம்.
அதுவும் மாலை
வேளைகளில் படிக்க உட்காரும்போது, அந்த கட்டிடத்தின் சில பகுதிகளிலிருந்து வரும்
சத்தங்களும், வெறிபிடித்தவர்களின் கூச்சல்களும் இருக்க அந்த சூழ்நிலையில் படிக்க
நினைத்த ஷ்வேதா, தற்போது க்ராந்தி எனும் NGO உதவியோடு 10+2
வரை முடித்து விட்டார். அடுத்தது கல்லூரி படிப்பு தான். அதுவும் அமெரிக்க
கல்லூரியில் படிப்பது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டுமென நினைக்கிறார்
ஷ்வேதா.
அமெரிக்க
கல்லூரியில் மனம் பற்றிய உளவியல் துறையில் பட்டம் பெற்று, தான் வளர்ந்த பகுதியான
காமத்திப்புராவில் இருக்கும் மக்களுக்குக்காக வேலை செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு
அமெரிக்கா செல்ல இருக்கும் ஷ்வேதாவினை எல்லா வித வெற்றியும் பெற வாழ்த்தி வழி
அனுப்புவோம்....
இந்த வார முகப்புத்தக இற்றை:
கடைசி மரமும் வெட்டுண்டு,
கடைசி நதியும் விஷமேறி,
கடைசி மீனும் பிடிபட,
அப்பொழுது தான் உறைக்கும்.....
..
..
..
பணத்தை சாப்பிடமுடியாதென!
இந்த வார குறுஞ்செய்தி:
IT’S HARD TO
BE A WOMAN – YOU MUST THINK LIKE A MAN; ACT LIKE A LADY; LOOK LIKE A YOUNG
GIRL; AND WORK LIKE A HORSE!
ரசித்த காணொளி:
சாதாரணமாக தில்லியில் பள்ளிகள் வெகு சீக்கிரத்தில் திறந்துவிடுவார்கள். 06.45 - 07.15 மணிக்குள் பள்ளிக்கு அழைத்துச் செல்ல பள்ளியின் பேருந்து வந்துவிட, குழந்தையை அவர்களது பாதி தூக்கத்தில் எழுப்பி விடுகிறோம். இப்படி பாதி தூக்கத்தில் எழுந்து சென்ற குழந்தை பள்ளியில் எப்படி படிக்கும்? சுறுசுறுப்பாய் இருக்கும்? தூங்கி வழியத்தான் செய்யும் இந்த ”மானசி” யைப் போல! நீங்களும் பாருங்களேன்! [நன்றி அனன்யா.... முகப்புத்தகத்தில் பகிர்ந்ததற்கு!]
ரசித்த
புகைப்படம்:
இயற்கையிலேயே இவருக்கு ஒய்யாரக் கொண்டையாம்! என்ன அழகு.
கொக்கு வகையைச் சார்ந்த இவரைப் பார்க்கும்போதே பிடிச்சுருக்கு இல்லையா!
தொலைக்காட்சி:
சோனி மிக்ஸ் தொலைக்காட்சியில் எப்போதும் பாடல்
ஓடிக்கொண்டிருக்கும். நேற்று ஒரு பாடல் பார்த்தேன். பார்த்ததும் பிடித்துவிட்டது! ”இசக் தேரா” எனும்
படத்தின் டைட்டில் சாங்... பாட்டு ஆரம்பிக்கும்போது நாயகனும் நாயகியும் செய்யும் முகக்
கோணல் சேஷ்டை! ”நன்றாக
இருக்கும் முகத்தினை இப்படியும் செய்து கொள்ள முடியுமா?” என நினைக்க வைத்தது. ஆனாலும் பாடல்
படம்பிடிக்கப்பட்ட இடங்களும் விதமும் ரசிக்க வைத்தன. நீங்களும் ரசியுங்களேன்!
படித்ததில் பிடித்தது!:
உன்னோடு பேசாமல்
என்னால் இயல்பாக
வாழ முடியவில்லை
அதனால் தான்
தினமும் எனக்கு நானே
பேசிக்கொள்கிறேன்
உன்னுடன்
பேசுவதாக நினைத்து!
-
இணையத்தில் படித்தது. [மனதில் தோன்றியது.... பார்த்துப்பா!,
தனியா பேசுனா யாராவது தப்பா நினைச்சுடப் போறாங்க!]
என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
தகவல்களும் காணொளியும்
பதிலளிநீக்குபழமொழியும் ஃப்ரூட் சாலட்டுக்கு
வழக்கம்போல் சுவையூட்டிப்போகின்றன
சுவைத்து மகிழ்ந்தோம் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குtha.ma 2
பதிலளிநீக்குதமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குஷ்வேதாவுக்கு வாழ்த்துக்கள், அப்புறம் இங்க இருக்கும் பிள்ளைகள் எழும்பவே 7.30 ஆகிடுமே!
பதிலளிநீக்குநம்ம ஊரில் பள்ளிகள் ஆரம்பிக்கறதும் கொஞ்சம் லேட்டாதானே.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
இப்போலாம் தனியா யாராவது பேசிக்கிட்டு வந்தா அவங்க காதைதான் பார்க்குறது. காரணம், இயர் ஃபோன், இல்ல ப்ளூடூத் வச்சு பேசிக்கிட்டு இருக்காங்களான்னு?! ஃப்ரூட் சாலட் நல்லா இருக்கு. இனி குறுஞ்செய்திகள் போடும்போது தமிழாக்கமும் போடுங்க சகோ! என்னை போல ஆங்கில அறிவு இல்லாதவங்களுக்கு புரியும்
பதிலளிநீக்குநீலப்பல்லால நானும் நிறைய ஏமாந்து இருக்கேன்!
நீக்குஆங்கிலத்தில் குறுஞ்செய்தி - தமிழில் நடுநடுவே போடுகிறேன். தமிழிலும் இனி வெளியிடுகிறேன்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
இயற்கையிலேயே ஒய்யாரக் கொண்டை கொண்ட கொக்கு அழகு ..!
பதிலளிநீக்குஃப்ரூட் சாலட் அருமை ..பாராட்டுக்கள்..!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குஅடடா.... பாவம் குழந்தை:(
பதிலளிநீக்குசின்ன வகுப்புக்காவது அதிகாலை வகுப்பு நேரத்தை மாற்றக்கூடாதா?
கொண்டைக்காரி அழகோ அழகு.
இப்படி ஒரு தம்பதியை பறவைகள் பூங்காவில் பார்த்தேன்:-)
அடடா கொண்டைக்காரியை நேரில் பார்த்தீங்களா? இங்கே இருக்க மாதிரி தெரியல!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
ஷ்வேதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குகாணொளி, தகவல்கள் உட்பட ஃப்ரூட் சாலட் அருமை...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஃப்ரூட் சாலட்-ஐ வழக்கம் போல ரசித்தோம் சுவைத்தோம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரை தமிழன்.
நீக்கு;))))) ரஸித்தேன். அருமை. பாராட்டுக்கள், வெங்கட்ஜி..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!
நீக்குஅருமையான படையல்... தெருவிளக்குக்கு கீழே படித்தவர்கள் பற்றி வாசித்திருக்கிறோம் ஆனால் சிவப்பு விளக்குக்கு அருகே என்றால் அதுவும் பெண்குழந்தை எனில் இன்னும் எத்தனை துயரம் .. சிவப்பு விளக்கு பகுதியில் பணிபுரிந்த ஒரு பெண்ணின் மகன் அவரது தாய் வாழ்ந்த சூழலை ஓவியங்களாய் வரைந்து கண்காட்சி வைத்த செய்தியை சில தினங்களுக்கு முன் வாசித்தது நினெஇவுக்கு வருகிறது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதிக்குமார்...
நீக்குமும்பையிலும் பள்ளிக்குழந்தைகளின் நிலை இதேதான்.
பதிலளிநீக்குஃப்ரூட் சாலட்டின் அத்தனைப்பழங்களும் ருசியோ ருசி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குஷ்வேதா தகவல் அருமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.
நீக்குஅனைத்து பகுதிகளும் அருமை !
பதிலளிநீக்குமீண்டும் அடுத்த ப்ரூட் சாலட்- ஐ
சுவைக்க காத்திருக்கும் ------- உங்கள் அபிமானி ..!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.
நீக்குஷ்வேதா என்னும் சாதனைப் பெண் இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள் ...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.
நீக்குஅண்ணேன் இது தான் நீங்க தேடீட்டு இருந்த மானசி ...?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவன் சுப்பு.
நீக்குஅதே தான் ஜீவன். :)))))
ஷ்வேதாவுக்குப் பாராட்டுக்களும், நினைத்ததை முடிக்க மன உறுதி தர இறைவனிடம் பிரார்த்தனைகளும்.
பதிலளிநீக்கு'மான்சி' யைப் போல எனக்கும் தூங்க ஆசையாய் இருக்கிறது. குழந்தைகள் தூங்குவது ஒரு அழகுதான்! இருமல் வேறு. இருமல் மருந்து சாப்பிட்டிருக்குமோ என்னவோ அந்தக் குழந்தை.
முகத்தைக் கோணிக் கொண்டாலும் பாடல் வெகு இனிமை.
ப்ரூட் சாலட் வழக்கம்போல இனிமை. மான்சியின் தூக்கம் இனிமைக்கு சர்க்கரை சேர்த்தது!
மானசியைப்போல தூங்க எனக்கும் ஆசை! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....
அனைத்தும் சுவைபட சொல்லியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.
நீக்குப்ருட் சாலட் தித்திப்பு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.
நீக்குஉங்கள் பொது நலக் கண்ணோட்டம் வாழ்க!
பதிலளிநீக்குமுகப்புத்தக இற்றை - சுளீர்!
அந்தக் ‘கொக்கர்’ (கொக்கி?) படம் பார்த்து சொக்கிப் போனேன்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....
நீக்குரசிக்கும் செய்திகள். முகப்புத்தக இற்றை சரியான சாட்டையடி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குப்ருட் சாலட் அருமை !
பதிலளிநீக்குVetha.Elangathilakam.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் ஜி!
நீக்குநல்ல தொகுப்பு. பறவை அழகு. ஷ்வேதாவுக்கு நல்ல எதிர்காலம் அமையட்டும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குசாலட் அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோ.சி. பாலன்.
நீக்குதங்களது முதல் வருகை என நினைக்கிறேன். மிக்க மகிழ்ச்சி.
ஸ்வேதாவிற்கு வாழ்த்துக்கள். பறவை படம் அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குஅருமையான ஃப்ரூட் சாலட் தான்... பல தகவல்களைத்தருகிறீர்களே! பாராட்டுக்கள் அதற்கு..
பதிலளிநீக்கு..
IT’S HARD TO BE A WOMAN – YOU MUST THINK LIKE A MAN; ACT LIKE A LADY; LOOK LIKE A YOUNG GIRL; AND WORK LIKE A HORSE!
// இதனை சில நாள் என் மின்மடல் கையெழுத்தில் போட்டுக்கொள்கிறேன் !
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷைலஜா.
நீக்குமான்சிக்கு முதல் வோட் . பாவம் குழந்தை. ரஞ்சனி சொல்லி இருப்பதுபோல சிரப் ஏதாவது சாப்பிட்டு விட்ட்தோ என்னவோ.:)
பதிலளிநீக்குசாதனை படைத்திருக்கும் மும்பைப் பெண்ணுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். பூக்கொண்டையின் ஒய்யாரம மிக அழகு. ஆக்க் கூடி ருசிக்கும் ஃப்ரூட்சாலட். நன்றி வெங்கட்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...
நீக்குவாழ்த்துகள் ஷ்வேதா.
பதிலளிநீக்குமுகப்புத்தகம், பறவை, என சிறப்பு.
குழந்தை மான்சி பாவம் என்று இருக்கின்றது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குஷ்வேதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமுகப்புத்தக இற்றை மிகவும் ரசித்தேன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.
நீக்குசுவேதாவின் வளார்ச்கி வாழ்த்தப்பட வேண்டியது...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி எழில்.
நீக்குnalla iruuku anne..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குகுழந்தையைப் பார்க்கும்பொழுது பாவமாக இருக்கிறது. மழலையின் சிறிப்பில் மட்டுமல்ல, அதன் உறக்கத்திலும் இறைவனைக் காணலாம். செம க்யூட்.
பதிலளிநீக்குரொம்ப பாவமா இருக்குது சார், நாமும் இந்த சமுதாயமும் இதற்குக் காரணம். என்ன செய்ய இதெல்லாம் மாத்த முடியும்ன்னு தோணலை.
எழுத்துக்கள் யதார்த்தமாக இருக்கிறது, வாழ்த்துகள்!