எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, July 14, 2013

கண்ணைக்கவர்ந்த சிற்பங்கள்

நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கும் பழம் பெரும் கோவில்களில் இறைவனை தரிசிக்கச் செல்லும் சமயங்களில் இறைவனையும், இறைவியையும் தவிர ஆங்காங்கே கற்களில் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களை கூர்ந்து நோக்கியதுண்டா நீங்கள்? அப்படி என்றால் உங்களுக்கு இந்தப் புகைப்படங்கள் நிச்சயம் பிடிக்கும்.

அட எங்கங்க, சாமியைப் பார்த்து முடிக்கறதுக்கே நேரமாயிடுது, அடுத்த இடத்துக்கு ஓட வேண்டியிருக்கு! இதுல எங்க சிற்பங்களை பார்க்க!என்று ஆதங்கமா உங்களுக்கு? அப்படி இருந்தாலும் இந்தப் பகிர்வில் இருக்கும் புகைப்படங்கள் உங்களுக்காகவே தான்!

சமீபத்தில் ஒரு பயணத்தின் போது திருச்சியின் திருவரங்கம் கோவிலில் உள்ள சிற்பங்களை புகைப்படங்களாக எடுத்து சேமித்தேன். அதிலிருந்து சில சிற்பங்களின் படங்கள் இந்த ஞாயிறில் புகைப்படப் பகிர்வாய். உங்களுக்கும் பிடிக்குமென நினைக்கிறேன்!


கையை கூப்பியபடி ஒரு பெண்


நம் முன்னோர்கள் தான்!


இது ஆணா? இல்லை பெண்ணா?


கையில் பார்த்தீர்களா? அந்தக் காலத்து Handbag? அதாங்க கூடை!


இப்பெண்ணின் உடையைப் பாருங்க!
Frill கூட கல்லிலே செய்திருக்கிறார் சிற்பி!


இது என்ன வித நர்த்தனம்?


சேஷராயர் மண்டப சிற்பங்கள்எதற்காக இவர்களுக்குள் சண்டை?


வாலாலேயே எனக்கு இருக்க இடம் செய்து கொள்வேன்!எதற்காக இந்த ஒற்றைக்கால் தவம்?


முதலை வயிற்றுக்குள் ஹனுமான்?


இவள் கையை ஒடித்த கொடியவன் எவனோ?

என்ன நண்பர்களே, இந்த வார புகைப்படங்களை ரசித்தீர்களா? அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

52 comments:

 1. ரசிக்க வைக்கும் படங்கள்... சில படங்கள் வியப்பு...! நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணத்தில் இணைத்து முதலாம் வாக்களித்தமைக்கு நன்றி தனபாலன்.

   Delete
 3. ரசிக்க வைத்த புகைப்படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. நீங்கள் சொல்வதுபோல சிற்பங்களை ரசிக்க நேரம் எங்கே?
  ஆனால் ஸ்ரீரங்கம் எங்க ஊரு. அதனால சேஷராயர் மண்டபம் அதன் சிற்பங்கள் எல்லாவற்றையும் பல தடவை பார்த்து ரசித்திருக்கிறேன். மறுபடியும் உங்கள் தயவில் காலங்கார்த்தால ஸ்ரீரங்கம் போய் வந்தாச்சு!

  புகைப்படங்களும் சிற்பங்களும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்மா உங்க ஊராச்சே..... நிச்சயம் உங்களுக்குப் பிடித்திருக்கும்... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..

   Delete
 5. எனக்கும் சிற்பங்களை ரசிக்கப் பிடிக்கும். அனைத்தும் அழகான சிற்பங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 7. கோயில்களில் உள்ள சிற்பங்கள் எல்லாமே மிகவும் பொறுமையாகவும், அருமையாகவும், அந்தக்கால சிற்பிகளால், கலை நுணுக்கத்த்டன் படைக்கப்பட்டவைகள். பாதுகாக்க வேண்டிய பொக்கிஷ்ங்கள். பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. சிற்பக்கலை தற்போது அழிந்து வருகிறது என நினைக்கும்போது மனதில் வருத்தம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 8. ///கையில் பார்த்தீர்களா? அந்தக் காலத்து Handbag? அதாங்க கூடை!/// அருகிலேயே குழந்தையும் நிற்கிறது ...தாய் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறாள் போலிருக்கிறது....

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கூடல் பாலா.

   Delete
 9. அருமையான சிற்பங்களை அழகாக படம்பிடித்து இருக்கிறீர்கள்...
  கடைசிப் படத்தில் கை இருந்தால் அந்தப் பெண் இன்னும் அழகாக இருந்திருப்பாள்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். பல ஆண்டுகாலம் அழகாயிருந்திருப்பாள். ஆனால் பாவம்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 10. அற்புத
  சிற்பப்பகிர்வுகள்..
  பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 11. சேஷராயர் மண்டப சிற்பங்கள்.. கால் தூக்கி நிற்கும் குதிரையைத் தாங்கிப் பிடிக்கிறார்களோ மனிதர்கள்?

  அற்புதமான சிற்பங்கள். அழகான வர்ணனை. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 12. குதிரை மேலிருந்து சண்டை போடுகிறார் ஒருவர், கீழே இருப்பவர்களும், கத்தி, வேல்கம்பு, கேடயம் போன்றவற்றோடு இருக்கிறார்கள்.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 13. தேன் தேன் ரசித்தேன்!!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 14. ரச்த்தேன் - நீண்ட நேரம் பார்க்கத்தூண்டிய புகைப்படங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி!

   Delete
 15. சிற்பங்கள் அற்புதம்! வசதிகளும் உபகரணங்களும் இல்லாத காலத்தில் எத்தனை உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொடுத்திருப்பார்கள் இவற்றை உருவாக்க என்ற பிரமிப்பு...

  ReplyDelete
  Replies
  1. அயராத உழைப்பு - பிரமிக்க வைப்பது நிஜம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 16. நன்றாக இருக்கிறது நண்பரே!

  த.ம. வாக்கு 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும், தமிழ்மணத்தில் ஏழாம் வாக்கிற்கும் மிக்க நன்றி கவிப்ரியன்....

   தங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.

   Delete
  2. நல்ல பகிர்வு ,பார்த்தேன் ரசித்தேன்,ஸ்ரீரங்கம் சேசராயர் மண்டப குதிரை சிற்பங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.மேலோட்டமாக பார்க்க ஒரே மாதிரியாக தெரியும் இந்த குதிரை சிற்பங்கள் .,ஆனால் ஒவ்வொரு சிற்பத்திலும் ஒரு தனித்தன்மை இருக்கும்.இவ்வளவு தத்ரூபமாக செதுக்கிய சிற்பியை இந்த சிலைகளை காணும் போதெல்லாம் வியக்கிறேன்.

   Delete
  3. மேலோட்டமாக பார்க்க ஒரே மாதிரி இருக்கும் இச்சிற்பங்கள் ஒவ்வொன்றிலும் சில வித்தியாசங்கள் இருப்பது நிஜம். தனித்தனியாகவும் சில படங்கள் எடுத்தேன். அத்தனையும் இங்கே பகிர முடியாது என்பதால் போடவில்லை. விரைவில் எனது ஃப்ளிக்கர் பக்கத்தில் சேர்க்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன்.

   Delete
 17. கை கூப்பிய பெண் அழகாய் இருக்கிறாள். :))

  அட முன்னோர்கள் ஜோடியாய் வந்திருக்காங்க

  இவர் குபேரன் வெங்கட், கையில் சங்கு வைத்துக் கொண்டு ஊதுகிறார்.

  ஹிஹிஹி, இந்த மாதிரி ஒரு ஹான்ட்பாக் என்னிடம் இருக்கே! :))))

  கீழே உள்ள ஃப்ரில் மாதிரி முந்தானையும் தலையைச் சுத்தி வந்திருக்கு பாருங்க. :)

  இவர் நம்ம ஆஞ்சநேயர் தான். வாலைச் சுத்தி நடுவிலே இருக்கார். பாயும் தோற்றம் அல்லது பறக்கும் தோற்றம். பறக்கிறார்னு தான் தோணுது.

  இது ஶ்ரீரங்கத்தின் அடையாளமாக எல்லாருமே காட்டறாஙகளே! :))))

  ம்ம்ம்ம்?? பெண்கள் சண்டைபோட்டுக்கறாங்க?? கையிலே கேடயம் ஒரு பக்கம் இருக்கிறவங்க மட்டும் வைச்சிருக்காங்க. :))) முழுச் சிற்பங்களையும் பார்த்தால் தான் கதை புரியும்.

  வாயு புத்திரர், வானர வீரர்

  ம்ம்ம்ம்ம்?? இந்த ரிஷியின் பெயர் மனசிலே இருக்கு. வெளியே வரலை. மூன்று முகம் இருப்பதால் தத்தாத்ரேயரோ?

  ஆமாம், முதலை வயிற்றில் தான். இலங்கையைத் தாண்டுகையில் கடலில் நடக்கும் ஒரு நிகழ்வுனு நினைக்கிறேன்.

  அடடா? கையை ஒடிச்சு வைச்சிருக்காங்களே! :(((((( ஆனாலும் இவள் என்ன எழில்!

  ReplyDelete
  Replies
  1. விரிவான கருத்துரைக்கு நன்றி கீதாம்மா... முதலை வயிற்றில் ஹனுமான் - நீங்கள் சொன்னது தான்....

   படங்கள் எடுக்கும்போது அதற்கான கதைகளை யாராவது சொல்ல மாட்டார்களா எனத் தேடினேன்.... ம்ம்ம்ம்ம் :(

   Delete
 18. முதலை வயித்துக்குள்ளே அனுமன்...கதை நான் முந்தி சொன்னேனே......

  http://thulasidhalam.blogspot.co.nz/2013/04/blog-post_5.html

  ReplyDelete
  Replies
  1. முன்னாடியே படிச்சு/பார்த்து கமெண்ட் கூட போட்டுருக்கேன் டீச்சர்.

   தங்களது இரண்டாம் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 19. அத்தனை சிற்பங்களையும் சின்ன வயசில் ஸ்ரீரங்கம் கோயில் வழியே பள்ளிக்கும் தெற்குவாசலுக்கும் போய் வருகையில் பார்த்து வியந்திருக்கிறேன்... யாருடைய கைவண்ணமோ! சிற்பிகள் தங்கள் பெயர்களை செதுக்கிக்கொள்வதே இல்லை!

  ReplyDelete
  Replies
  1. சிறிய வயதிலேயே பார்த்து அனுபவித்த சிற்பங்கள்... எனது பதிவின் மூலம் மீண்டும் கண்டு கருத்திட்டமைக்கு நன்றி. ஓவியர்கள் போல சிற்பிகள் ஏனோ தனது பெயரை சிற்பங்களில் பதிப்பதில்லை! ஆனாலும் தனக்கான ஒரு முத்திரையை அவர் பதித்திருக்கக் கூடும். நமக்கு தான் புரியவில்லையோ...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா.

   Delete
 20. Beautiful! Love the pics!!! The sculptures in our temples are always mind blowing!!! :)
  Indian Fashion n Travel Blogger! - Bhusha's INDIA TRAVELOGUE

  ReplyDelete
 21. நாம் எங்கே ரசிக்கிறோம் இந்த சிற்பங்களை!. எப்பொழுதும் ஒரு அவசரம் தான் கூட்டமும் கூடவே
  இருக்கும். நன்றி இத சிற்பங்கள் பற்றிய பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 22. என்னங்க.. அதிசயமா இருக்குது !!

  எங்க ஊட்டுக்காரி இரண்டு நாள் முன்னாடி வால்மார்ட், காட்ச்கோ , அப்படின்னு ஜெர்சிலேயும், பாச்டன்லேயும் தேடி தேடி பார்த்துட்டு,
  ஒரு அஞ்சு ஹாண்டு பாக் ஒன்னு 20 டாலர் வீதம் வாங்கிண்டு வந்தப்புறமும், என்னகுபுடிச்சது கிடைக்கலையே அப்படின்னு

  சொல்லிட்டு இருந்தவ, உங்க தளத்திலே இரண்டாவது சிலையைப்
  பார்த்துட்டு, நான் கேட்ட ஹாண்ட் பாக் இதுதான் எடுத்துட்டு வாங்க
  அப்படின்னு அடம் புடிக்குது.

  என்ன விலை இருக்கும்? இல்ல.. சும்மாவே கிளப்பிட்டு வந்திட முடியுமா ?

  எதுக்கும் இந்தியா வந்தப்புறம் உங்களை நான் காண்டாக்ட் பண்றேன்.

  சுப்பு தாத்தா
  new jersey
  www.subbuthatha72.blogspot.com
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. அடடா... இந்த ஹாண்ட் பாக் தான் புடிச்சு இருக்கா.... படத்தோட எடுத்துக்க வேண்டியது தானே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....

   Delete
 23. அத்தனையும் அருமையான படங்கள். வேலுநாச்சியார், குயிலி, ஈழத்தில் பனங்காமத்து வன்னிச்சி நாச்சியார் போன்ற பெண்வீரர்களின் வரலாறு தமிழர்களிடம் இருந்தாலும் விடுதலைப் புலிகள் தான் தமிழ்ப்பெண்களை நேரடிப்போரில் இறக்கியவர்கள், பெண்களைக் கொண்ட தனிப்படை வைத்த்திருந்தவர்கள் என்று நினைத்தேன், அதற்கு முன்பே தமிழ்நாட்டில் பெண்களைக் கொண்ட படை இருந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது வாளும் கேடயமும் கொண்டு போரிடம் பெண்களின் சிற்பங்கள். நான் அந்தக் குதிரை வீரர்களின் அழகை போகும் போதெல்லாம் படம் எடுக்காமல் விடுவதில்லை. தமிழ்நாட்டின் சிற்பங்கள் தமிழர்களின் சொத்துக்கள் அவை அனைத்தையும் அழிவிலிருந்து, மத வேறுபாடின்றி பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களின் கடமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வியாசன்.

   Delete
 24. கொடியிடையாளின் கையை முறித்தவன் கையை உடைக்கவேண்டும்.

  நல்லநல்ல படங்கள்...!

  ReplyDelete
  Replies
  1. நீங்க அருவாள கையில் எடுத்து வந்து கையை முறித்தவன் கையை பதம் பார்க்க வேண்டும் மனோ!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ!

   Delete
 25. அருமையான படங்கள்அய்யா. நன்றி. தாங்கள் சொல்வது உண்மைதான் கோயிலுக்குப் போனால் சாமியை மட்டும்தான் தரிசிக்கின்றோம். கோயிலைக் கவனிப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....