செவ்வாய், 31 மார்ச், 2020

கதம்பம் – நேரம் – வாசிப்பனுபவம் – ஊரடங்கு - கிருமிநண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

நேரம் போய்க்கொண்டே தான் இருக்கும். எனவே நீ செய்யவேண்டியதை செய். அதுவும் இப்போதே செய். காத்திருக்காதே…

திங்கள், 30 மார்ச், 2020

அந்தமானின் அழகு – நீர் விளையாட்டுகள் – ஸ்னார்க்ளிங் - நார்த் பே தீவு

அந்தமானின் அழகு – பகுதி 13அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

கடல் பயணம் ஒரு சாகச பயணம். நீல வானம். நிசப்தமான இரவு. கடல் அலையின் நடுவினிலே – கற்பனை குதிரை. தரை தட்டும் வரை தொடரும் பயணம்.

ஞாயிறு, 29 மார்ச், 2020

நல்லதே நினைப்போம் - குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

என்னை யாருக்கும் பிடிக்கவில்லை என்று கவலைப்படுவதற்கு நீ சந்தையில் விற்கப்படும் பொம்மையல்ல. நீ என்பது நீயே… உன்னை உனக்குப் பிடித்திருந்தால் போதும்.

சனி, 28 மார்ச், 2020

காஃபி வித் கிட்டு – சோகம் - உடம்புக்கு ஆகாது - உடை - காஷ்மீரி - மகிழ்ச்சி


காஃபி வித் கிட்டு – பகுதி 60


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

There are so many things that can make you happy. Don’t focus too much on things that make you sad. 

தற்போதய சூழலுக்கு இந்த வாசகம் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றியது.  நமக்கு மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்களையே பேசுவோம், அதையே யோசிப்போம். நலமே விளையட்டும்.

வெள்ளி, 27 மார்ச், 2020

அந்தமானின் அழகு – நீர் விளையாட்டுகள் – கண்ணாடி படகில் பயணம் - நார்த் பே தீவு

அந்தமானின் அழகு – பகுதி 12அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

Travel is more than seeing something new, it is also about leaving behind something that’s old.  Whether that be your past, your misconceptions, your comfort level or your anxieties, the next time you head down a new path, realize that there’s no better time to be the new you!

வியாழன், 26 மார்ச், 2020

கொரோனா டைரிக் குறிப்புகள்…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

கடைசி காலத்திற்குத் தேவைப்படும் என்று ஓடி ஓடி உழைக்கிறோம் – எது கடைசி காலம் என்று தெரியாமலேயே…

புதன், 25 மார்ச், 2020

அந்தமானின் அழகு – போஸ் தீவான ராஸ்தீவுபோஸ் தீவான ராஸ் தீவில் கடற்கரை...

அந்தமானின் அழகு – பகுதி 11


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

நாம், நமது வாழ்க்கைப் பயணத்தில் மொழிகள் பல கற்றாலும் இறுதி வரை சிந்திப்பது என்னவோ நம் தாய் மொழியில் மட்டுமே…

செவ்வாய், 24 மார்ச், 2020

கதம்பம் – காலச்சக்கரம் – வெங்கி மாமா – மாவடு – கொரோனா - கஷ்ணம்நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

மழை பெய்வதை தடுக்க முடியாது, ஆனால் குடை இருந்தால் உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளலாம். அதே போல பிரச்சனைகளைத் தடுக்க முடியாது, ஆனால் தன்னம்பிக்கை இருந்தால் பிரச்சனைகளை வென்று வாழ்வில் வெற்றி காணலாம்.

திங்கள், 23 மார்ச், 2020

அந்தமானின் அழகு – படகுப் பயணம் – ஸ்கூபா, ஸ்னார்க்லிங் – கட்டணம் எவ்வளவு

அந்தமானின் அழகு – பகுதி 10அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

கண்களில் தென்படும் அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை. இதயத்தில் இடம் பெற்ற அனைத்தும் அருகில் இருப்பதில்லை…

ஞாயிறு, 22 மார்ச், 2020

கூட்டுக் குடித்தனம் – அர்பன் லேடர் - குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

குடும்பம் என்பது அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தலும், அன்பு, பாசம், சோகம், துயரம் இவற்றை பங்குப்போட்டுக் கொள்ளுதலும், இணக்கமாக வாழுதலும் தான்.


சனி, 21 மார்ச், 2020

காஃபி வித் கிட்டு – மனதின் குரல் – ஒற்றுமை – மா, பா - கவசம் – கனவு ராணி


காஃபி வித் கிட்டு – பகுதி 59


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

நீங்கள் என்ன பேச வேண்டும், என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை உங்களுக்குச் சொல்லும் உங்கள் மனதின் மெல்லிய குரலை நீங்கள் நம்ப வேண்டும்…   

வெள்ளி, 20 மார்ச், 2020

அந்தமானின் அழகு – கடல்வாழ் உயிரினங்கள் - காட்சியகம்


சிங்க மீன்....

அந்தமானின் அழகு – பகுதி 9
திமிங்கிலத்தின் எலும்புக்கூடு....

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பயணம் பற்றிய நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

சாலைகளில் இருக்கும் பள்ளங்களைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அச்சாலையில் பயணிப்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள் – உங்கள் பயணம் இனிமையாகும்.

வியாழன், 19 மார்ச், 2020

சாப்பிட வாங்க – (dh)தூ(dh)தி கி சப்ஜி


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

ஒவ்வொரு பறவை இனத்திற்கும் இறைவன் உணவை அளிக்கின்றார்; ஆனால், அந்த உணவை அவர் அப்பறவையின் கூட்டிற்குள் கொண்டு போய் வைப்பதில்லை – ஹாலண்ட் நாட்டின் பழமொழி.

****

புதன், 18 மார்ச், 2020

அந்தமானின் அழகு – இரண்டாம் நாள் – உண்டா இல்லையா குழப்பம்


அந்தமானின் அழகு – பகுதி 8வீர ஹனுமான் கோவில், போர்ட் Bப்ளேயர்.


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பயணம் பற்றிய நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

பயணம் உங்கள் மனதை விசாலமாக்குகிறது. குறுகிய மனப்பான்மை இல்லாமல் இருக்க உதவுகிறது. உங்கள் வாழ்க்கையில் மற்றவர்களுக்குச் சொல்லக் கூடிய அனுபவங்களையும், கதைகளையும் உருவாக்கித் தருகிறது. ஆதலினால் பயணிப்போம்!

செவ்வாய், 17 மார்ச், 2020

கங்கா மேளா – கான்பூரின் ஹோலி கொண்டாட்டங்கள்அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

அர்த்தமில்லாத சில சண்டைகளால், அர்த்தமுள்ள ஆயிரம் சந்தோஷங்கள் வாழ்வில் தொலைந்து போகின்றன.

திங்கள், 16 மார்ச், 2020

அந்தமானின் அழகு – இரவு உணவும் நகர் வலமும்

அந்தமானின் அழகு – பகுதி 7அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு பயணம் பற்றிய சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

ஒவ்வொருவரின் பயணமும் ஒவ்வொரு பாதையைத் தேடி… உனக்கான பாதையை கால்களைக் கொண்டு உருவாக்காதே… உனக்கான கொள்கைகளைக் கொண்டு உருவாக்கு.

ஞாயிறு, 15 மார்ச், 2020

ரோஜா பூந்தோட்டம் – தலைநகரிலிருந்து – நிழற்பட உலா…அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, கவிமலர் என்பவர் எழுதிய நல்லதொரு கவிதையுடன் ஆரம்பிக்கலாமா?

சனி, 14 மார்ச், 2020

காஃபி வித் கிட்டு – ஐன்ஸ்டீன் – செத்த பாம்பு – மண்ணின் குரல் – நரை - ஹோலி


காஃபி வித் கிட்டு – பகுதி 58

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம் மற்றும் பிறந்த நாள்:

நான் மாதக் கணக்கில், ஏன் சில வருடங்கள் கூட யோசிப்பேன்… தொண்ணூற்று ஒன்பது முறை நான் விடையைக் கண்டுபிடிக்க மாட்டேன். ஆனால் நூறாவது முறை நான் கண்டறிவேன் – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

வெள்ளி, 13 மார்ச், 2020

அந்தமானின் அழகு – சிறைச்சாலை – ஒலியும் ஒளியும்

அந்தமானின் அழகு – பகுதி 6அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பயணம் பற்றிய சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

விடுதலை பெற்று சிறைச்சாலையின் திறக்கப்பட்ட கதவுகள் வழி நடந்து, வெளியே வரும்போது, சிறைச்சாலை எனக்குத் தந்த கசப்பையும் வெறுப்பையும் அங்கேயே விட்டுவிட்டுச் செல்லவில்லை என்றால் எனக்குக் கிடைத்த விடுதலை விடுதலை அல்ல – சிறைச்சாலையில் இருப்பதற்குச் சமமே – நெல்சன் மண்டேலா.

வியாழன், 12 மார்ச், 2020

கதை மாந்தர்கள் – திவச சாப்பாடு…அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை இனியதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

வாழ்க்கை என்பது சூரியன் அல்ல என்றும் முழுமையாக பிரகாசிக்கஅது நிலவைப் போன்றதுஅதில் தேய்பிறை, வளர்பிறை என அனைத்தும் இருக்கும். ஒரு நாள் மறைந்தும் போகும்…!

புதன், 11 மார்ச், 2020

அந்தமானின் அழகு – கார்பின்’ஸ் கோவ் கடற்கரை – போர்ட் ப்ளேயர்

அந்தமானின் அழகு – பகுதி 5


முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4


கார்பின்’ஸ் கோவ் கடற்கரை...

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பயணம் பற்றிய சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

பயணம் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது. நண்பர்களுடனான பயணம் உற்சாக சிரிப்பினுடனோ, கிண்டல், கேலி நிகழ்வுகளோடோ கழிகிறது.  உறவினர்கள் உடனான பயணம் பாதுகாப்புடனோ அல்லது பதட்டத்துடனோ கழிகிறது. மனைவியுடனான பயணம் மத்திமம்! தனிமைப் பயணம் கொஞ்சம் கடினம் – பல சமயங்களில்! – புத்தகமும் அலைபேசியுமாகக் கடந்து செல்ல வேண்டியிருக்கும்! பயணம் வெறும் பயணமாக மட்டுமே இருப்பதில்லை.

செவ்வாய், 10 மார்ச், 2020

வீடு…நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

நாம் வாழும் வீட்டில் எத்தனை வசதி இருக்கிறது என்பது முக்கியமல்ல. எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதே முக்கியம்!

திங்கள், 9 மார்ச், 2020

அந்தமானின் அழகு – சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் - காலாபானி


அந்தமானின் அழகு – பகுதி 4


முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, சுதந்திரம் பற்றி Bபாbபுராம் ஹரி என்ற சுதந்திரப் போராட்ட வீரர் எழுதிய வரிகளுடன் ஆரம்பிக்கலாம்.

”ஓ, எனதருமைத் தாயகமே, ஏனோ நீயும் அழுகிறாய்? இதோ முடியப் போகிறது அந்நியரின் ஆட்சியுமே! தமது மூட்டை முடிச்சுகளை அவர்கள் கட்டிக்கொண்டிருக்கின்றனர். தேசிய அவமானமும் துரதிர்ஷ்டமும் நீடிக்காது வெகுநாள்வரை இதோ, விடுதலைத் தென்றலும் இனிதே வீசத் தொடங்கியுள்ளது. பெரியவர், சிறியவர், அனைவருமே ஏங்குகின்றனர் விடுதலைக்கு. பாரதத்தின் அடிமைத்தளை அகன்ற பின்னர் இந்த ‘ஹரியும் அனுபவிப்பான் தனது விடுதலையை!”

ஞாயிறு, 8 மார்ச், 2020

அம்மாவின் பாசம் – ஆயில் - குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உன்னால் பிறர் கண்ணீர் விட்டால் அது பாவம். உனக்காக பிறர் கண்ணீர் விட்டால் அது பாசம்!

சனி, 7 மார்ச், 2020

காஃபி வித் கிட்டு – கனிமொழி – பை நிறைய பட்டாணி – ப்ரேமம் - ஹோலி - சந்திப்புகாஃபி வித் கிட்டு – பகுதி 57

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

முடிவுகளைத் தயங்காமல் எடுக்கும் திறன் நம்மிடம் இருந்தால் முன்னேற்றத்திற்கான வாயிற்கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

வெள்ளி, 6 மார்ச், 2020

அந்தமானின் அழகு – போர்ட் ப்ளேயரில் எங்கே தங்குவதுஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பயணம் பற்றி படித்ததில் பிடித்த ரசனையான விஷயத்துடன் ஆரம்பிக்கலாமா?

விமானம்!
சிட்டுக் குருவி போல சின்னதாய் விமானம்
கண்களுக்குத் தோன்றிய காலம் அவை…
சைக்கிள் டயர் ஓட்டிக்கொண்டே
விமானம் விரட்டிய அந்த நாட்களில்
ஏனோ அதில் பயணிக்கும் ஆசை இருந்ததே இல்லை…
இந்த உலோகப் பறவையின்
பயணத்தின் ஜன்னல் வழியே
எத்தனை அழகு அதிசயங்கள்…

வியாழன், 5 மார்ச், 2020

கர்ண பரம்பரை – காலச்சக்கரம் நரசிம்மா - வாசிப்பனுபவம்அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

என் வயது 85 – எனக்கு எல்லாம் தெரியுமென்று நினைத்திருந்தேன். ஆனால் அதிகம் படிக்க, படிக்க எனக்குத் தெரிந்தது கொஞ்சமே என்பதை உணர்ந்து கொண்டேன் – சாக்ரடீஸ்…

புதன், 4 மார்ச், 2020

அந்தமானின் அழகு – அந்தமான் அழைக்கிறது…


அந்தமானின் அழகு - பகுதி 2

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பயணம் பற்றி படித்ததில் பிடித்த ரசனையான விஷயத்துடன் ஆரம்பிக்கலாமா?

பயணங்கள் எத்தனை அழகானது என்பதை தீர்மானிப்பது பயணப்படும் சூழ்நிலைதான். நெரிசல் இல்லா பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் இருக்கை அமைந்துவிட்டால் பயணம் கசக்கவா செய்யும்? இனிமையான தென்றல்… கருமை சூழ்ந்த வானத்தில் ஒற்றை விளக்காய் நிலவு… மெல்லிசை ஒலியின் ஊஞ்சலாய் மிதந்து போகும் பேருந்து… தூக்கம் தழுவாத விழிகள்… இரைச்சல் இல்லாத அக்கம் பக்கம்… இருளிலும் நிழலாய் எதிர்புறத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மரங்கள்… காற்றோடு கலந்த சிறுதூறல்… கைகளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு தலை பதித்து, நினைத்துப் பார்த்து சிரிக்கும்படியான சில இனிய நினைவுகள்… இவை அனைத்தையும் ரசித்துக் கிறங்கும் கவித்துவமான மனது…

செவ்வாய், 3 மார்ச், 2020

கதம்பம் – சந்திப்பு – வாழைப்பூ வடை – ஓவியம் - குக்கீஸ்


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

நட்பு என்பது வெறும் வார்த்தை அல்ல. உணர்வோடும் உறவோடும் நம் வாழ்வில் நுழையும் ஒரு பொக்கிஷம்!