ஞாயிறு, 22 மார்ச், 2020

கூட்டுக் குடித்தனம் – அர்பன் லேடர் - குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

குடும்பம் என்பது அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தலும், அன்பு, பாசம், சோகம், துயரம் இவற்றை பங்குப்போட்டுக் கொள்ளுதலும், இணக்கமாக வாழுதலும் தான்.பொதுவாக ஞாயிறு என்றால் இங்கே நிழற்பட உலா பதிவு தான் இருக்கும். ஆனால் இன்றைக்கு நிழற்பட உலா பதிவு அல்ல! சமீபத்தில் பார்த்த ஒரு விளம்பரம்/குறும்படம் – மனதைத் தொட்ட குறும்படம் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். படத்தினைப் பார்க்கும் முன்னர் சில வார்த்தைகள்…

இந்த ஞாயிறும் சற்றே நீளமான விளம்பரம் – 07.15 நிமிடங்கள் ஓடக்கூடிய விளம்பரம் – ஹிந்தி தெரியாதவர்கள் மன்னிக்க! – ஆனாலும் பார்த்தால் புரிந்து கொள்ளக் கூடிய அளவிலேயே தான் இருக்கிறது என்பது என் புரிதல்.  மகன், தனது மனைவி, குழந்தையுடன் நகரத்தில் வசிக்க, அவரது பெற்றோர்கள் கிராமத்தில் வசிக்கிறார்கள்.  தங்களுடன் வந்து தங்கி விடுங்கள் என்று சொன்னால் தந்தை வருவதில்லை – அவருக்கு கிராமத்து வீடும், சூழலும் பிடித்த அளவிற்கு நகரத்தின் வீடும் சூழலும் பிடிப்பதில்லை.  சின்னச் சின்ன விஷயங்கள் கூட அன்னியமாகவே படுகிறது.  தீபாவளிக்கு சில நாட்கள் முன்னதாகவே மகன் வீட்டிற்கு வருபவர், ஒன்றிரண்டு நாட்களிலேயே சூழல் பிடிக்காமல் தவிக்க, நகரின் அருகே இருக்கும்  அவரது சொந்த தம்பி வீட்டுக்குச் சென்று திரும்பி வருகிறார். அதற்குள் மகனும் மருமகளும் சேர்ந்து வீட்டில் சில மாற்றங்களைச் செய்கிறார்கள்.  தீபாவளிக்கு முன்னர் மீண்டும் மகன் வீட்டிற்கு வர மகன்/மருமகள் வீட்டில் செய்து வைத்திருக்கும் மாற்றங்கள் அவருக்கு மனதில் மகிழ்ச்சி தருகிறது.  மனதைத் தொடும் விதமாக இந்த விளம்பரத்தினை, ஒரு குறும்படம் போலவே எடுத்திருக்கிறார்கள்.  பாருங்களேன்.
நண்பர்களே, இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

40 கருத்துகள்:

 1. மிகவும் அருமையான பதிவு அன்பு வெங்கட்.
  இனிய காலை வணக்கம்.

  விளம்பரப் படம் அற்புதம். அந்த அப்பாதான் அந்தப் பையனை அணைத்துக் கொள்ளக் கூடாதோ.
  அவர் மிக அருமையாக நடித்திருக்கிறார்.
  மருமகளும் கூடத்தான்.
  மனம் நெகிழ்கிறது. மிக நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அந்த அப்பாதான் அந்தப் பையனை அணைத்துக் கொள்ளக் கூடாதோ?//

   எனக்கும் அப்படித் தோன்றியது வல்லிம்மா...

   குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
  2. அக்கா நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள்.

   இந்த அப்பா கொஞ்சம் கண்டிப்பானவர் போல, தன் உணர்ச்சிகளை வெளிகாட்டதவராக இருக்கிறார்.

   நீக்கு
  3. இந்த அப்பா கொஞ்சம் கண்டிப்பானவர் போல - உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாதவராகவும் இருக்கலாம் கோமதிம்மா...

   நீக்கு
 2. குடும்பத்தைப் பற்றிய வாசகமும் இனிமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

   நீக்கு
 3. அப்பாவின் ரசனைக்கு மகனும், மருமகளும் இசைந்து போவது அருமை. இதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் பெரியவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடுத்து வைத்த பெரியவர் தான் கில்லர்ஜி.

   தங்களுக்கும் காணொளி பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 4. வல்லிமா நினைத்ததைத் தான் நானும் நினைத்தேன். இவ்வளவு செய்யும் பிள்ளையை பாராட்டுக்கள் வேண்டாமோ?
  ம்...சிலர் இப்படித்தான். என்ன மாற்றங்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அந்த போட்டோக்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி ரஞ்சனிம்மா...

   நிழற்படங்கள் மட்டுமல்ல. அந்த அறையில் இருக்கும் Furniture எல்லாம் மாறி இருக்கிறது. ஊரில் ஊஞ்சலில் அமர்ந்து ஹிந்தி நாளிதழ் படிப்பார் என, அம்மா சொன்னதால், ஊஞ்சல் மாதிரியான அமைப்பு, ஆங்கில நாளிதழ் ஹிந்தி நாளிதழ் ஆனது என நிறைய மாற்றங்கள்.

   நீக்கு
  2. விளக்கம் உங்களும் பயன்பட்டதில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 5. ஓ மொழி புரியாததால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. விளக்கியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளக்கம் உங்களுக்கும் பயன்பட்டதில் மகிழ்ச்சி ரஞ்சனிம்மா...

   நீக்கு
 6. வாசகம் அருமை.

  மிக அருமையான காணொளி .

  சிலவயதானவர்களுக்கு பிள்ளைகள் எவ்வளவு வசதிகள் செய்து கொடுத்தாலும் அவர்கள் இடம் ஆகாது என்ற எண்ணம் மனதில் இருக்கும்.
  மகனும், மருமகளும் அவருக்கு பிடித்தது போல் வீட்டை மாற்றி அமைத்தது அவருக்கு மகிழ்ச்சி.
  இன்னும் மகிழ்ச்சியாக அந்த நிமிடத்தை மாற்றி இருக்கும் மகனை கட்டி தழுவி பாராட்டி இருந்தால் .
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   காணொளி - மனதைத் தொட்டு விட்டது அல்லவா! இப்படியான விளம்பர/குறும் படங்களைத் தேடித் தேடிப் பார்ப்பதுண்டு. அப்படிப் பார்த்தில் பிடித்ததை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

   நீக்கு
 7. அற்புதம் வெங்கட்! இந்த மாதிரி அருமையான விளம்பரத்தை பார்க்கக்கொடுத்ததற்காக அன்பு நன்றியும் கூட! என் மகனும் இதே போல பார்த்துப் பார்த்து எங்களுக்கு செய்பவர். அதனால் அவருக்கு இந்த வீடியோவை அனுப்பி வீட்டு அதன் பிறகு தான் இதை எழுத ஆரம்பிக்கிறேன்.
  அந்த அப்பா எதையும் வாய்விட்டு சொல்லத் தெரியாத காரக்டராக வருகிறார். தன் பெற்றோர் புகைப்படத்தை தடவுதிலும் அந்த சோபாவில் சாய்ந்து அதன் சுகத்தை அனுபவிப்பதிலும் அவரின் மன நெகிழ்வை நமக்குப்புரிய வைக்கிறார் இயக்குனர். அதனால் தான் பாசமான அணைப்பை விட அவர் கலங்கிய கண்களில் நெகிழ்வையும் மகிழ்வையும் அப்படியே காண்பிக்கிறார். எப்படி இருக்கிறது என்று மகன் கேட்கும்போது அப்படியே தன் வீடு மாதிரி இருக்கிறது என்று அப்பா சொல்வதும் எங்களுடனேயே இருந்து விடுங்களேன் என்று மருமகள் தவிப்புடன் கேட்கும்போது சிரிப்புடன் அதற்கு ஒத்துக்கொள்வதும் மிக அருமை வெங்கட்!
  இது ஒரு சாதாரண விளம்பரப்படமாகத்தெரியவில்லை. வீடு என்பதன் அர்த்தமே அன்பும் அக்கறையும் தான் என்பதை அத்தனை அழகாய் எடுத்திருக்கிறார் இயக்குனர்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாதாரண விளம்பரப் படமாகத் தெரியவில்லை. ஆமாம் மனோ சாமிநாதன் மா... வேற்று மொழிகளிலும் இப்படியான படங்கள் தேடித் தேடி நேரம் கிடைக்கும் போது பார்ப்பது எனது வழக்கம். அப்படிப் பார்த்தவற்றில் சிலவற்றை என் பக்கத்திலும் பகிர்ந்து கொள்கிறேன்.

   உங்களுக்கும் இப்படம் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 8. அருமை. மாற்றங்கள் ஒன்று தானே மாறாதது? ஆனால் கிராமத்து வாழ்க்கை போல எங்கும் வருவதில்லை.

  தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  தற்போது, தங்களது கூட்டுக் குடித்தனம் – அர்பன் லேடர் – குறும்படம் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

  உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாற்றம் ஒன்று தானே மாறாதது. அதே தான் சிகரம் பாரதி. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 9. அற்புதம்...சின்னச் சின்ன விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்திப் படமாக்கி உள்ளது மனம் கவர்ந்தது...பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் படம் உங்கள் மனம் கவர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சி ரமணி ஜி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. குடும்பம் ஒரு கோவில் - உண்மை தான் நாகேந்திர பாரதி. அதை கோவிலாக்குவதும் பாழ்மண்டபம் ஆக்குவதும் குடும்பதினர்களின் கையில் தான்.

   நீக்கு
 11. குடும்பத்தைப் பற்றிய வாசகமும் அருமை.  குறும்படமும் இனிமை.  என் அப்பா கூட அவ்வப்போது அவருக்காக நான் செய்யும் சில விஷயங்கள் அவருக்கு பிடித்திருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம், குறும்படம் இரண்டும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   வெளிக்காட்டிக் கொள்வது பலருக்கும் வருவதில்லை. அப்படியே இருந்து விடுகிறார்கள்...

   நீக்கு
 12. படம் அருமை. முற்றிலும் உண்மை. எத்தனை வசதிகள் செய்து கொடுத்தாலும் பெரியவர்கள் தங்கள் விரும்பும் இடங்களில் வாழவே விரும்புகின்றார்கள். வசதிகளை விரும்புவதில்லை. உண்மை. உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வசதிகளை விரும்புவதை விட, தங்களுக்குப் பழக்கப்பட்ட இடங்களையே அதிகம் விரும்புகிறார்கள் எனவும் தோன்றுகிறது.

   படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜோதிஜி.

   நீக்கு
 13. எனது தளத்தில் உங்கள் கருத்துரைக்கு மிகவும் நன்றி ஜி...

  நீங்கள் மட்டும் சுட்டிக்காட்டவில்லை என்றால், அனைவராலும் எழுதிய சிந்தனைகளை முழுவதும் வாசிக்க முடிந்திருக்காது...

  அந்த தொழினுட்பத்தை வேறொரு பதிவில் பயன்படுத்தலாம் என்று எடுத்து விட்டேன்... மிக்க நன்றி...

  வேறொரு தொழினுட்பத்தை முயன்றதில், நான்கு மணி நேரம் போனதே தெரியவில்லை... கொரோனாவை மறந்து விட்டேன்... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   விளம்பரம் தான் காரணமோ என எனக்கும் தோன்றியது. இப்போது மீண்டும் உங்கள் தளம் சென்று விடுபட்ட பகுதியைப் படித்தேன். தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள்.

   நீக்கு
 14. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஜி.

   நீக்கு
 15. வெங்கட்ஜி வாசகம் அருமை!

  இது விளம்பரமா?!! ஆஹா அழகான குறும்ப்படமாக எடுத்துருக்காங்க. என்ன அருமையான விளம்பரம்/குறும்படம்! மிக மிக நேர்மறையான படம். மனம் நெகிழ்ந்துவிட்டது. அப்பாவிற்காக மாற்றும் இப்படியான மகனும் மருமகளும் இருந்துவிட்டால் குடும்பத்தில் பிரச்சனையே இருக்காது. அட்லீஸ்ட் சிறு சிறு விஷயங்களைச் தங்கள் தகுதிக்கு ஏற்றபடி செய்தாலே போதும்.

  மிக மிக அருமையான படம். ஜி. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   விளம்பரமாக இருந்தாலும் குறும்படம் போலவே மிகச் சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். இது போன்ற விஷயங்கள் எல்லா குடும்பங்களிலும் இருந்து விட்டால் மகிழ்ச்சி தான்.

   நீக்கு
 16. பதில்கள்
  1. வாசகமும் காணொளியும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   நீக்கு
 17. வணக்கம் சகோதரரே

  இன்றைய வாசகமும், குறும்படமாய், வந்த விளம்பரமும் அருமையாக உள்ளது. அன்பான இப்படிப்பட்ட ஒரு பிணைப்பு குடும்பத்தில் இருந்து விட்டால், பிறகு வயதானவர்களுக்கு ஏது கவலை? அருமையாய் சொல்லி இருக்கிறார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மாதிரி பிணைப்பு குடும்பத்தில் இருந்துவிட்டால் எல்லாம் நலமே என்பது உண்மை தான் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகம், குறும்பட விளம்பரம் என இரண்டும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 18. அருமையான விளம்பரம். நெகிழ்வு. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளம்பரம் நெகிழ்ச்சி தான். உங்கள் வரவும் கருத்தும் கண்டு எனக்கு மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....