ஞாயிறு, 1 மார்ச், 2020

ஹுனர் ஹாட் – வித்தியாச பிள்ளையார்கள் மற்றும் சில…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

நாளைய மழை அறியும் எறும்பாக இரு… நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாய் இருக்காதே!
 
ஹுனர் ஹாட் – தலைநகர் தில்லியில் வருடா வருடம் ஹுனர் ஹாட் எனும் நிகழ்வினை Ministry of Minority Affairs நடத்துகிறது.  சென்ற வருடங்களில் நடந்த இந்த ஹுனர் ஹாட் சென்று வந்த போது எடுத்த படங்களை என் வலைப்பூவில் முன்னரே கூட பகிர்ந்திருக்கிறேன்.  அப்படி பகிர்ந்த இரண்டு பதிவுகளின் சுட்டிகள் கீழே மாதிரிக்காக!





 வெயிட்டான பிள்ளையார்...
விலை அதிகமில்லை ஜெண்டில்மேன் - 
ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் மட்டுமே! 

சென்ற வருடங்களின் தலைநகரில் என் வீட்டின் அருகே இருக்கும் ஷிவாஜி ஸ்டேடியம் பகுதியில் நடந்த இந்த ஹுனர் ஹாட் நிகழ்வுகள், இந்த வருடம் இந்தியா கேட் அருகே இருக்கும் புல்வெளியில் நடந்தது. பத்து நாட்களுக்கு மேலே நிகழ்வு இருந்தாலும், நின்று நிதானித்து அங்கே சென்று வர நேரம் கிடைக்கவில்லை. அலுவலகத்திற்கு அருகே தான் இந்தப் பகுதி என்பதால் அலுவலக நேரம் முடிந்த ஒரு மாலை நேரத்தில் நானும் நண்பர் பத்மநாபனும் அங்கே சென்று வந்தோம். அலுவலகத்திலிருந்து நேரே அங்கே சென்றதால் கேமரா எடுத்துச் செல்லவில்லை. என்னுடைய அலைபேசியில் தான் சில படங்களை எடுக்க முடிந்தது.  அப்படி எடுத்த சில படங்கள் இதோ இந்த ஞாயிறில் நிழற்பட உலாவாக…


அதே மாதிரி பிள்ளையார்... 
மார்பிள் துகள்களால் உருவானவர்
விலை ஐநூறு மட்டும்! 



வாத்தியம் வாசிக்கும் பிள்ளையார்...
இவரும் மார்பிள் துகள்களால் செய்யப்பட்டவரே...


 வித்தியாச வடிவங்களில் பிள்ளையார்...
மார்பிள் கற்களைப் பொடித்து கோந்து சேர்த்து மோல்டில் ஊற்றி உருவான பொம்மைகள்... 

மாலை நேரத்தில் தினம் தினம் கலை நிகழ்ச்சிகளும் உண்டு. நாங்கள் சென்ற அன்றும் சில கலைநிகழ்ச்சிகள் ஆகியவை இருந்தன – ஆனாலும் அத்தனை ஸ்வாரஸ்யம் இல்லை! ஒன்றிரண்டு நிமிடங்கள் நின்று பார்த்துவிட்டு நகர்ந்து விட்டோம். அங்கே நிகழ்ச்சியை நடத்துபவர் இளம் பெண்களுக்கு ஒரு போட்டியை வைத்தார்.  போட்டி இது தான் – ஒன்றிலிருந்து பத்து வரை தடங்கல் இல்லாமல் சொல்ல வேண்டும் – அட இவ்வளவு தானா? இது ஒண்ணும் பெரிய விஷயமில்லையே என்று சொல்பவர்கள் சற்றே கவனிக்க! சொல்ல வேண்டிய வரிசை ஒண்ணு, ரெண்டு மூன்று என அல்ல! ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் கலந்து – அதாவது – ஏக், Two, தீன், Four, பாஞ்ச், Six, சாத், Eight, நோ,Ten என மாற்றி மாற்றி சொல்ல வேண்டும். அதுவும் தடங்கலில்லாமல் சொல்ல வேண்டும்! பல இளைஞிகள் தடுமாற பார்வையாளர்கள் மட்டுமல்லாது அரங்கத்திலும் கொல்லென்று சிரிப்பு! தடங்கலில்லாமல் மாற்றி மாற்றிச் சொல்வது சற்றே கடினம் தான் – அதுவும் சட்டென்று அழைத்துச் சொல்லச் சொன்னால் சொல்ல முடியாது.


வித்தியாசத் தட்டு...
சுத்தம் செய்வது கடினம் எனத் தோன்றியது...


இந்த ஊர் வழக்கப்படி பெரிய காதணிகள்...



காதோரம் லோலாக்கு... 
கதை சொல்லுமோ?

நாய்கடி பற்றிய ஒரு நகைச்சுவையும் சொன்னார் – ”ஓர் இரவு நிகழ்விலிருந்து வீடு திரும்பும்போது இரவு இரண்டு மணி. ஒரு நாயின் அழுகுரல்… எங்கேயிருந்து வருகிறது என பார்த்தால் ஒரு பள்ளத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. பாவம் அந்த நாய் கீழே விழுந்து விட்டது போலும் என அதனை கஷ்டப்பட்டு வெளியே எடுத்தேன்.  நன்றி சொல்லும் விதமாக என் காலைக் கடித்துச் சென்றது அந்த நாய்! அடுத்த நாள் காலையில் தான் மருத்துவமனைக்குச் செல்ல முடிந்தது. மருத்துவமனையில் பார்த்தால் சுமார் இருபது பேர் இருந்தார்கள் – எல்லோரும் நான் இருக்கும் பகுதியில் இருப்பவர்கள் - அத்தனை பேரையும் நாய் கடித்திருக்கிறது – என்னைக் கடித்த அதே நாய் தான் போலும்!  அதில் ஒருவர் சொன்னார் – “நம் பகுதியில் இருந்த நாய்க்கு ஏதோ பிரச்சனை – குரைப்பது மட்டுமல்லாது நிறைய பேரை கடிக்க வரவே அதனை சமாளித்தோம் – நாய் ஓடும்போது ஒரு குழியில் விழுந்து விட, நல்லதாகப் போயிற்று என நாங்களும் விட்டுவிட்டோம் – ஆனால் ஏதோ ஒரு கிறுக்கன், நல்லது செய்வதாக நினைத்து அந்த நாயை வெளியே எடுத்துவிட, நிறைய பேரை கடித்து விட்டது!” என்று சொன்னார். நல்ல வேளை அவருக்கு அந்தக் கிறுக்கன் நான் தான் எனத் தெரியாது!


சொகுசாக அமர்ந்திருக்கும் பிள்ளையார்...
பித்தளைக்குப் பெயர் போன மொராதாபாத் நகரிலிருந்து... 


கல்ர்ஃபுல் பிள்ளையார்...
இவரும் மொராதாபாத் நகரிலிருந்து...


இடுப்பில் சொருகிக் கொள்ளலாம்... 
கழுத்திலும் மாட்டிக் கொள்ளலாம்!
மொபைல் கவர்...


ஹுனர் ஹாட் பகுதியில் நிறைய உணவகங்களும் உண்டு. அன்றைக்கு பத்மநாபன் அவர்களுக்கு எதுவும் சாப்பிட முடியாது என்று தோன்றியதால், நிகழ்வில் உலா வந்ததோடு சரி. நிழற்படங்களும் அதிக அளவில் எடுக்கவில்லை – அலைபேசி வழி எடுப்பதில் எனக்கு அத்தனை திருப்தி இல்லை.  எடுத்த சில படங்கள் இன்றைய பதிவில்!

நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி 

32 கருத்துகள்:

  1. ரகம் ரகமாய் பிள்ளையார் ஸூப்பர் ஜி
    ஒன்று இரண்டு சொல்லிப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் க...ஸ்...ட...ம்.

    நாய்கடி ஸூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்று, இரண்டு - மாற்றி மாற்றிச் சொல்வது கடினம் தான் கில்லர்ஜி. பழக வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    முதல் வாசகம் அருமையாக இருந்தது. பிள்ளையார் சிலைகள் அனைத்தும் நன்றாக உள்ளன. அதிலும் முதல் பிள்ளையார் பாம்பு மாதிரி தோற்றத்துடன்படைத்திருப்பது ரசிக்கும்படி இருந்தது. விலை அதிகந்தான்.

    கடைசி இரண்டு கலர் பிள்ளையார்களும் மிக அழகு. பிள்ளையார் எந்த வடிவத்தில் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடிக்கும். என் இஷ்ட தெய்வமே அவர்தான்...

    நாய்க்கடி நகைச்சுவையை ரசித்தேன். மொபைல் கவரும் அழகாக உள்ளது. ஆனால் கழுத்தில் செயினுக்கு பதிலாக இதை மாட்டிக் கொண்டாலும் "செயின் பறிப்பு திருடர்களுக்கு" கொண்டாட்டந்தான்.. ஹா. ஹா. ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், பிள்ளையார் சிலைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. எனக்கும் பிடித்தவர்.

      நாய்க்கடி - நகைச்சுவை ரசித்ததில் மகிழ்ச்சி.

      செயினுக்கு பதிலாக மாட்டிக் கொண்டால் - ஹாஹா அப்படியும் நடக்கலாம். இடுப்பில் சொருகிக் கொள்ளும் வசதியும் இருக்கிறது கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அழகான பிள்ளையார்கள்... அருமை...

    1, 2, விளையாட்டு சுவாரஸ்யம்...

    // நன்றி சொல்லும் விதமாக // எதிர்பார்த்து... நன்றிக்கு பேர் போனதே இப்படி செய்து விட்டதே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளையாட்டு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நன்றிக்கு பேர் போனதே இப்படி செய்து விட்டதே - பாவம் அது பதட்டத்தில் இருந்திருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. >>> நாளைய மழை அறியும் எறும்பாக இரு… நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாய் இருக்காதே!..<<<

    அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பேழை வயிறு... என்பது பிள்ளையாரின் சிறப்புகளில் ஒன்று..

    அதை விடுத்து விட்டு இப்படியா நாகரிகப் பிள்ளையார் வடிவங்கள் மனதைக் கவர்வதில்லை..

    இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவார் என்பதனால் இப்படியெல்லாம் அலங்கோலப்படுத்துவதை ஒப்புக் கொள்ள மாட்டேன்...

    நாமே நம் முகத்தில் கரியைப் பூசிக் கொள்ளலாமா!...

    தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
    வித்தக விநாயகன் விரைகழல் சரணே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேழை வயிறே பிள்ளையாருக்கு சிறப்பு. உண்மை தான் துரை செல்வராஜூ ஐயா.

      புதுமை எனும் பெயரில் இப்படியும் செய்கிறார்கள் - பலரிடத்திலும் இவற்றுக்கு வரவேற்பு இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. நல்லது செய்யப் போக நாய்க்கடிக்கு ஆளானது தான் மிச்சமா!...

    பள்ளத்தில் விழுந்த நாய் படுகோபத்தில் இருக்கும் என்பதை நீங்களாவது யூகித்திருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாய் கோபத்தில் இருக்கும் - கோபத்தில் என்பதை விட பதட்டத்தில் இருந்திருக்கும் என நினைக்கிறேன் துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. உங்களுக்கு முன் மருத்துவமனையில் இருந்தவர்கள் அனைவரும் பள்ளத்தில் விழுந்த நாயைப் பார்த்துச் சிரித்திருப்பார்களோ!...

    எதற்கும் உஷாராக இருக்க வேண்டிய காலகட்டம் இது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாய் கடி பட்டது நானல்ல - நிகழ்ச்சியை நடத்தியவர் - அவர் சொன்னதாகத் தான் எழுதி இருக்கிறேன் துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. யாருக்காவது நல்லது செய்தால் அவர்கள் திருப்ப எங்களுக்கு தீமை செய்வார்கள் என்ற அறிவுரையை தான் இந்த நாய் கற்பித்து இருக்கிறது. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது செய்தால் தீமை செய்வார்கள் - பொதுவாக இப்படிச் சொல்லி விட முடியாடு கௌசி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. கற்பனைக்கு ஏற்ப வளைந்து கொடுப்பவ்ர் பிள்ளையார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள் என்பதும் ஆச்சர்யம் தான் ஜி.எம்.பி. ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. //நாளைய மழை அறியும் எறும்பாக இரு… நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாய் இருக்காதே!//

    வாசகம் அருமை.

    பிள்ளையார் சிலைகள் வித்தியாசமாக நன்றாக இருக்கிறது.

    நல்லது செய்தாலும் சில நேரம் கெடுபலன் கிடைப்பது உண்டு என்று சொல்கிறது நிகழ்ச்சி நடத்துபவர் சொன்ன நிகழ்வு.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் வித்தியாச சிலைகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. விதம் விதமான வடிவில் பிள்ளையார் சிற்பங்கள் அருமை. தகவல்களும் பகிர்வும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களும் சிற்பங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  14. சீனாவில் உள்ள குறிபிட்ட தொழில் நகரத்தின் ஒரு பகுதியில் உலகத்தில் உள்ள அனைத்து மதக் கடவுகளின் சிலைகள், ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ், மரச்சிலைகள், இது போன்ற நவீன ரகம் என்று முழுமையாக செய்து (முதல் நாள் ஆடர் கொடுத்தால் அடுத்த நாளே எத்தனை லட்சம் என்றாலும் கொடுத்து விடுவார்கள்) உலகம் முழுக்க ஏற்றுமதி செய்கின்றார்கள். சீனாவுடன் வணிகத் தொடர்பு இருக்கும் நண்பர் சொன்னார். அவர்கள் மதம் விரும்பாதவர்கள். ஆனால் மதம் வைத்து காசு பார்க்கத் தெரிந்தவர்கள். அவர்களையும் வைரஸ் பாடாய் படுத்தி எடுத்துக் கொண்டு இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிகத் தகவல்கள் சிறப்பு. இங்கே தலைநகர் தில்லியில் சதர் பஜார் பகுதியில் இப்படி சில கடைகள் உண்டு. எது வேண்டுமானாலும் செய்து தந்து விடுவார்கள். சீனப் பொருட்கள் இங்கேயும் குவிந்து கிடக்கின்றன. வைரஸ் காரணமாக மார்க்கெட் கொஞ்சம் டல் தான் ஜோதிஜி. இன்றைக்கு தலைநகரில் முதல் கொரானா வைரஸ் பாசிட்டிவ் நபரை அடையாளம் கண்டிருக்கிறார்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. எத்தனையை விதம் ஆஹா...கண்ணை பறிக்கும் அழகில் கணபதி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணபதி - கண்ணைப் பறிக்கும் அழகில். மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. விதம்விதமாக பிள்ளையார். நாய்கடி செம ....
    அய்யோ பாவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதம் விதமாய் பிள்ளையார் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நாய்க்கடி - பாவம் தான். நல்லது செய்யப் போக கிடைத்தது கெடுதல்!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....