எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, February 12, 2017

இலை அடை – லிட்டி சோக்கா – ஹுனர் ஹாட்!ஹிந்தியில் हुनर என்ற வார்த்தை ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் இதற்கு ஈடாக Art, Skill, Talent, Merit என்று பல வார்த்தைகள் உண்டு.  கலை, திறமை என தமிழிலும் அர்த்தம் சொல்லலாம்… நேற்றிலிருந்து தலைநகர் தில்லியில் हुनर हाट என்ற பெயரில் சில நாட்களுக்கு உணவு மற்றும் கலைப்பொருட்களின் திருவிழா! हाट என்ற ஹிந்தி சொல்லுக்கு Mart/அங்காடி என்ற அர்த்தம்.  மத்திய அரசின் Ministry of Minority Affairs முன்னின்று உணவு மற்றும் கலைத்திறமைகளை பரவச் செய்ய இந்த மாதிரி அங்காடிகளை தலைநகரில் சில நாட்களுக்கு நடத்துகிறார்கள்.

நேற்று தான் துவங்கியது என்றாலும், அலுவலக நாட்களில் அங்கே செல்வது முடியாத விஷயம் என்பதால் நேற்றே நானும், நண்பர் பத்மநாபனும் சென்று அங்கே இருக்கும் அங்காடிகள் அனைத்தையும் பார்த்து வந்தோம்.  நிறைய உணவு வகைகள், விதம் விதமான கலைப் பொருட்கள், என இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் திறமைசாலிகள் வந்திருந்து இங்கே கடை வைத்திருக்கிறார்கள்.  பெரும்பாலான உணவு வகைகள் அசைவ உணவு தான் என்றாலும், சைவ உணவுகள் சிலவும் இருந்தன.  அப்படிச் சாப்பிட்ட இரண்டு உணவு வகை – பீஹார் மாநிலத்தின் லிட்டி சோக்காவும், கேரளத்தின் இலை அடையும்! 

அலிகர் நகரத்தின் புகழ்மிகு பூட்டுகள் – வித்தியாசமான வடிவங்களில், ராஜஸ்தானின் மீனாகரி மாலைகள், ராஜஸ்தானின் லாக் வேலைப்பாடுகள், உத்திரப் பிரதேசத்தின் பித்தளை வேலைப்பாடுகள், கண்ணாடி பொம்மைகள் என பலவும் இங்கே காணக் கிடைத்தது. ஒவ்வொன்றிலும் கலை நுணுக்கமும், வேலைப்பாடும் காணும்போது நமது தேசத்தின் எண்ணிலடங்கா திறமைகளை நினைத்து பூரிப்படைந்தாலும், அவற்றில் பல அழிந்து வரும் கலைகள் என்பதை நினைக்கும் போது வருத்தம் தான் மிஞ்சுகிறது. புகைப்படங்களாகவது இருக்கட்டுமே என அங்கே எடுத்த புகைப்படங்களை சேமித்து வைத்திருக்கிறேன்.

ஹுனர் ஹாட் சென்ற போது அலைபேசியில் எடுத்த சில புகைப்படங்கள் மற்றும் ஒரு காணொளி இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி…..


வித்தியாசமான பூந்தொட்டிகள் மற்றும் கலைப்பொருட்கள் பார்வைக்கு....


தண்ணீர் எடுத்து வரும் பாவை.... 


வித்தியாசமான பூட்டுகள்....


சிங்கம் மற்றும் ஆமை வடிவ பூட்டுகள்.....


ஒட்டக வடிவிலும் ஒரு பூட்டு...


கண்ணாடி பார்க்கும் பாவை - ஆனால் கண் மட்டும் மேல்நோக்கி இருப்பது சற்றே இடிக்கிறது.....


Lamp Shades and Domes...


கண்ணாடியில் உருவங்கள்.....


மீனாகரி என அழைக்கப்படும் கைவேலைப்பாடுகள்....


மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்.....


துணியில் ஓவியம்.....


குஜராத்திலிருந்து தாமிர மணிகள்....


ராஜஸ்தானின் துணி பொம்மைகள்.....


தயாராகும் லிட்டி.....


லிட்டி சோக்கா - சுடச் சுட, கார சாரமாய்! எடுத்துக்கோங்க!


கோலாட்டம் - துணி ஓவியமாக!


லாக் வேலைப்பாடு செய்த ஒரு பொருள்.....  இது என்ன என பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...  நாளை மாலை விடை சொல்லுகிறேன்!


இரும்பு வாணலியைத் திருப்பிப் போட்டு அதில் செய்யப்படும் ரொட்டி!

என்ன நண்பர்களே புகைப்படங்கள்/காணொளியை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

42 comments:

 1. எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. இந்தியாவிலேயே காணவேண்டியது பல இருக்கின்றன என்பதைச் சொல்லும் பதிவு. பூட்டும், கலம்காரி டைப் ஓவியங்களும், கண்ணாடி பிள்ளையார்களும் அருமை. ஆமா இலை அடை சாப்பிட்டீங்களா இல்லையா? என்ன என்ன சாப்பிட்டீங்கன்னு விளக்கமா எழுதுவீங்கன்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இலை அடை மற்றும் லிட்டி சோக்கா மட்டும் சாப்பிட்டேன்... லிட்டி சோக்கா செம காரம்! :) இலை அடையில் அரிசி மாவு பகுதி பயங்கர திக் - அதிக மாவு சேர்த்து விட்டார்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   Delete
 2. அட! எங்க ஊர் டிஷ் இலை அடை! படங்கள் அனைத்தும் அழகு ஜி! லிட்டி சோக்கா சாப்பிட்டதில்லை. பொதுவாக வட இந்திய உணவுகள் வீட்டில் செய்வதில்லை.

  கீதா: ஆஹா! அழகு படங்கள்!!! ஜி அதுவும் பூட்டு வாவ்! மீனாகாரி பொருட்கள் நல்லாருக்கும் ஆனா நம்ம பட்ஜெட்டுக்கு வராது!!!

  இலை அடை வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு. கேரளத்தின் பாரம்பரிய ரெசிப்பி அதிலும் வெரைட்டி உண்டு. அரிசிமாவில் ஸ்டஃபிங்க் தேங்காய் வெல்லம், அல்லது சக்கை வரட்டி, அலல்து பழம் வெல்லம் வரட்டியது என்று. இலை மணத்துடன் நன்றாக இருக்கும். வாழை இலை இல்லை என்றால் எங்கள் வீட்டில் புரசு இலையிலும் செய்வார்கள்.

  லிட்டி சோக்கா மகனுடன் படித்த பிஹாரி நண்பரிடம் இருந்து அறிந்து கற்றுக் கொண்டு வீட்டிலும் செய்தேன். பொரித்தும் செய்வார்களாம், இங்கு நீங்கள் படத்தில் உள்ளது போல் கிரில்லிலும்...நான் அவனில் பேக்/க்ரில் செய்தேன் நன்றாக இருந்தது. வித்தியாசமான மசாலா சுவையுடன்.

  அந்த வீடியோ ருமாலி ரொட்டி இல்லையா??!!!

  ReplyDelete
  Replies
  1. ருமாலி ரொட்டி இன்னமும் மெலிதாக இருக்கும் - கைக்குட்டை போலவே! இது கொஞ்சம் திக் வெர்ஷன்! :)

   மீனாகரி பொருட்கள் - விலை அதிகம் தான்! அதுவும் இந்த மாதிரி இடங்களுக்கு வரும்போது இன்னும் அதிகம் வைக்க வேண்டியிருக்கிறது - கொண்டு வரும் செலவு, ஸ்டால்களுக்கு தரவேண்டிய வாடகை என விலையை அதிகரிக்க வைக்கிறது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 3. அந்த லாக் வேலைப்பாடு தொப்பிதானே ஜி! அப்படித்தான் தெரிகிறது. தலையில் வைத்துக்கொள்வது போல்தான் இருக்கு

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தொப்பி அல்ல! வேறு.... இன்னமும் யோசிக்க வேண்டும்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 4. துணி ஓவியங்கள் கலம்காரி இல்லையா அழகு!! கண்னாடி, தாமிர மணிகள் எல்லாமெ அழகு...பார்க்கவே ப்ளசன்டாக இருக்கு ஜி!!! கலர்ஃபுல்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 5. கண்காட்சி சுற்றி வந்த திருப்தி
  அற்புதமாகப் பதிவு செய்துள்ளீர்கள்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி நண்டு @ நொரண்டு....

   Delete
 7. செலவில்லாமல் எங்களுக்கு சுற்றி காண்பித்ததற்கு நன்றி! பூட்டுகள் பிரமாதம்! வாய்ப்பூட்டு உண்டா? புகைப்படங்கள் அருமை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   Delete
 8. அழய கலைவேலைகளின் சங்கமம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்....

   Delete
 9. பூட்டு அழகாக இருக்கின்றதே...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஜி. வெகு அழகு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. Is that a pill box ? Or pin holder ..that lac work box. .

  ReplyDelete
  Replies
  1. No. It is not a pill box or a pin holder... Wait till today evening! I will say what it is....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்....

   Delete
  2. To keep the dentures 😃😁

   Delete
  3. இல்லை ஏஞ்சலின்.... இது வேறு! என்ன என்பதை கடைசியில் சொல்லி இருக்கிறேன் இப்போது!

   Delete
 11. அந்தப்பாவை கண்ணாடி பார்ப்பது போல அங்கு யாரையோப் பார்க்கிறாள்!

  லிட்டி சோக்கா படம் போட்டீங்க, இலை அடை படம் எங்கே?

  ரசித்தேன் அனைத்தையும்.

  ReplyDelete
  Replies
  1. இலை அடை படம் எடுக்கவே இலை! :)

   மேல் நோக்கி பார்ப்பது யாரை என்று கண்டுபிடிக்க வேண்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 13. மோதிரம், மூக்குத்தி, காதணி வைக்கிற பெட்டி மாதிரி எனக்குத் தோன்றியது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   Delete
 15. குழந்தையைக் கொசுவிலிருந்து காக்கும் கூடை.//!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 16. குல்லாவாக இருக்க வேண்டும் அல்லது இப்போது தட்டில் உணவு , பழங்கள் வைத்து விழாவில் மூடி கொடுக்கிறார்கள் அதுவாக இருக்கும். கோவில் பிரசாத தட்டுகளை மூடும் மூடியாக இருக்கலாம்.

  கோலாட்டம் - துணி ஓவியமாக!//
  இது ஆளுக்கு ஒரு குச்சி தான் உள்ளது. உரல் படம் தானியம் உள்ளது போல் இருக்கிறது, பாடிக் கொண்டே உரலில் மாற்றி மாற்றி இடிப்பார்கள் கிராமங்க்களில் , இடிக்கும் இரண்டு பெண்ணுக்கு நடுவில் ஒரு பெண் முக்காடு மட்டும் தெரிகிறது அவள் உரலில் உள்ள இடித்த தானியத்தை முறத்தால் புடைப்பாள் என்று நினைக்கிறேன்.

  படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்ன எதுவுமே இல்லை..... இது வேறு! கீழே விடை தருகிறேன்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 17. இந்தப் பதிவில் கடைசியாகக் கொடுத்த படத்தில் இருப்பது என்ன என்ற கேள்விக்கு விதம் விதமான பதில்கள் வந்திருந்தாலும், அனைத்து யூகங்களும் தவறாகவே இருக்கிறது. அதற்குக் காரணம் இப்படி ஒன்றை செய்வார்கள் என்பது நமக்குத் தெரியாது! இது என்ன என்பதை அடுத்த கருத்தில் சொல்கிறேன்! :)

  ReplyDelete
  Replies
  1. இது நாரியல் என ஹிந்தியில் அழைக்கப்படும் தேங்காய்! கொப்பரைத் தேங்காய் மீது லாக் என அழைக்கப்படும் வேலை செய்திருக்கிறார்கள். இதனை பூஜைகளிலும் திருவிழாக்களிலும் பயன்படுத்துகிறார்கள். கெட்டுப் போகாது என்கிறார் விற்பனைக்கு வைத்திருந்தவர்!

   Delete
 18. ஆஹா !! தேங்காயா ?? ஒரே ஒரு பார்ட் நான் இங்கே canal ஓரம் பார்த்தேன் இங்குள்ள குஜராத்திஸ் தேங்காய்களை நீரில் எதோ வேண்டிக்கிட்டு உள்ளே சில பொருட்களை நிரப்பி நீரில் விடுவாங்க ..ஒருவேளை இந்த lac work செஞ்ச தேங்காயும் போட்ருப்பாங்க :)
  நான் எதோ அழகான பெட்டியை உடைச்சி போட்டதா நினைச்சேன் ,,இப்போ இது இங்கேயும் வந்திடுச்சு ;போல :)

  ReplyDelete
  Replies
  1. தேங்காய் தான்!

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.

   Delete
 19. எப்படியோ பூஜை பொருள் தான் நான் சொன்னது போல்.
  சிவப்பு துணி சுற்றி சில வடநாட்டில் தேங்காயை கோவிலில் கொடுப்பதை
  பார்த்து இருக்கிறேன். கொப்பரை தேங்காய் மேல் வேலைபாடு என்பதை தெரிந்து கொண்டேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 20. விடை தெரிந்து விட்டது. தாமதமாக வந்ததில் இது ஒரு சௌகரியம். நல்ல பகிர்வு. இலை அடைக்கு மாவை நன்றாகக் கரைத்துக் கொண்டு இலையில் எண்ணெய் தடவிவிட்டு மெல்லிசாகத் தடவ வேண்டும். அப்புறம் பூரணத்தை வைத்து அப்படியே மூடி வேக வைத்தால் மாவு மெல்லிசாக வரும். :) நம்ம கொழுக்கட்டைக்குச் செய்யும் சொப்புப் போல் செய்து பூரணத்தை வைத்தால் மாவு தடிமனாக இருக்கும். எப்படிச் செய்தார்களோ! :)

  ReplyDelete
  Replies
  1. திருவிழாவின் முதல் நாள் என்பதால் கொஞ்சம் பிரச்சனைகள் இருந்திருக்கலாம்! அவசர அவசரமாக செய்ய வேண்டியிருந்தது என்று சொன்னார் அந்த ஸ்டாலில் இருந்த பெண்மணி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....