வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

ஃப்ரூட் சாலட் 194 – பூந்தளிர் - வாவ் புகைப்படம் - பொதுத் தேர்வு

இந்த வார பாடல்:

1979-ஆம் வருடம் வெளி வந்த பூந்தளிர் எனும் படத்திலிருந்து ஒரு பாடல் இந்த வார ரசித்த பாடலாக….


இந்த வார குறுஞ்செய்தி:

”அவர்கள் மோசமானவர்கள் இல்லை, சற்று வித்தியாசமானவர்கள்” என்று நீங்கள் நினைக்க ஆரம்பித்து விட்டால் பல சொந்தங்கள் நம்மை விட்டுப் பிரிவதிலிருந்து தடுக்க முடியும்…..

இந்த வார முகப்புத்தக இற்றை:

வாவ் புகைப்படம்!


இந்த வார காணொளி:

பொதுத் தேர்வு வரப் போகிறது. இச்சமயத்தில் குழந்தைகள் படும் கஷ்டம், அவர்கள் மனதுக்குள் ஓடுகின்ற எண்ண ஓட்டம் என்ன என்பதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. நிறைய வீடுகளில் அடுத்த குழந்தைகளுடன் ஒப்பீடு செய்து தங்களது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தைத் தருவதுண்டு.  அவர்கள் எண்ணம் என்னவாக இருக்கும்…. இந்த காணொளியைப் பாருங்களேன்…. உங்களுக்கும் பயன்படலாம்!


இந்த வார படமும் கவிதையும்:

நான் எடுத்த புகைப்படத்திற்கான கவிதை ஒன்று – எழுதியது யாதவன் நம்பி புதுவை வேலு…..

படம்: 


படத்திற்கான கவிதை:

இலைகள் இணைந்து நடத்தும்
இயற்கையின்....
இன்பக் கலைக்கூடம் கண்டு!-
துன்பம் பாசிகள் எல்லாம்
துவண்டு!
தூர தேசம் செல்லத் துடிக்கிறதோ?

புதுவை வேலு


இந்த வார புகைப்படம்:

சூரஜ்குண்ட் மேளா-2017 சென்றபோது நிறைய சிறுவர்/சிறுமியரின் புகைப்படங்கள் எடுத்திருந்தேன்.  அவற்றில் இந்த புகைப்படம் பிடித்தது. இரண்டு பேருக்கும் அப்படி ஒரு ஒற்றுமை! அப்பா-அம்மா மொபைலில் எடுக்கும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த போது நான் எடுத்த க்ளிக்!

நான் எடுத்த புகைப்படங்களுக்கு கவிதை எழுத அழைப்பு விடுத்தது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?

இதோ இந்த வார புகைப்படம்!


படித்ததில் பிடித்தது:

யாரோ உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய்

யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது.

சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா?

இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.

உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்...

உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன்.

அது மனதின் வேலை.

உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.

எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.

சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.

சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.

கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.

வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது.

அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்.

பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்.

உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.

இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.

சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.

தியானம் செய். இயற்கையை நேசி. வலிகள் மறையும்

பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில்
நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார். இது இயல்பே என எண்ணு.

வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை.

அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. அது போல் இயல்பாய் கடமையைச் செய்.....

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்...

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

16 கருத்துகள்:

 1. இந்த வார பழக்கலவையில் ’பூந்தளிர்’ திரைப்படத்தில் உள்ள ‘ஞான் ஞான் பாடனும்’ என்ற அருமையான பாடலை இரசிக்க உதவியமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 2. படத்திற்கேற்ப கவிதை வரிகள் உட்பட அனைத்தும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. பரிவை சே.குமார் has left a new comment on your post "ஃப்ரூட் சாலட் 194 – பூந்தளிர் - வாவ் புகைப்படம் - ...":

  ப்ரூட் சாலட்....
  சுவையாய்...
  அருமையாய்...
  வீடியோஸ்...
  புகைப்படம்...
  அதற்கான கவிதை...
  படித்ததில் பிடித்தது....
  என எல்லாரும் சுவை கூடுதலாய்...

  Publish
  Delete
  Mark as spam

  என் தவறினால் அழிந்து போன பரிவை சே. குமார் அவர்களின் பின்னூட்டம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 4. #சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா?
  #
  மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா ...பாடல் வரிகள் நினைவுக்கு வருதே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. அனைத்தையும் ரசித்தேன். நண்பர் புதுவை வேலுவின் கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. பாடல் எப்போதோ கேட்டது. மீண்டும் கேட்டோம்.

  காணொளி, இற்றை எல்லாமே அருமை...

  நண்பர் புதுவை வேலு அவர்களின் கவிதை அருமை!

  படித்ததில் பிடித்தது வெகு அருமை!!!

  அனைத்தும் ரசித்தோம் ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....