எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, February 1, 2017

புகைப்படக் கவிதைகள் – கவிதை எழுத அழைப்பு - மின்னூலாக்க முயற்சி…..நான் எடுத்த புகைப்படங்களை/பிடித்த ஓவியங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு அதற்கேற்ற கவிதைகளை எழுதுமாறு நண்பர்களிடம் கேட்டு எனது பக்கத்தில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்படி சில கவிதைகள் எனது வலைப்பூவில் வெளியிட்டது உங்கள் நினைவில் இருக்கலாம். அப்படி வெளியிடும் பொழுது, படங்களுக்கு வரும் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு மின்னூலாக வெளியிடும் எண்ணம் உண்டு என்று எழுதி இருந்தேன். மின்னூலாக்க முயற்சியில் தற்போது ஈடுபட்டு இருக்கிறேன்.  அவற்றை தொகுக்கும் இந்த சமயத்தில் இன்னும் சில படங்களை இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   

இந்தப் பதிவில் உள்ள படங்களில் ஏதாவது ஒன்றிற்கு அல்லது எனது வலைப்பூவில் நான் வெளியிட்ட எந்தப் புகைப்படத்திற்கு வேண்டுமானாலும் நீங்கள் கவிதை எழுதி அனுப்பலாம். நீங்கள் அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி – venkatnagaraj@gmail.com உங்கள் கவிதைகளை எனது மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டிய கடைசி தேதி 28-02-2017.  அதாவது இந்த மாதம் முழுவதும் அனுப்பலாம்… மார்ச் மாதம் எல்லாவற்றையும் தொகுத்து மின்னூலாக தொகுத்து வெளியிடலாம். 

இதோ சில படங்கள்…..


படம்-1:   படம் எடுத்த இடம், குஜராத், கட்ச் பகுதி.


படம்-2:   படம் எடுத்த இடம், ஆந்திரப் பிரதேசம்.


படம்-3:   படம் எடுத்த இடம், அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப்பிரதேசம்.


படம்-4:   படம் எடுத்த இடம், அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப்பிரதேசம்.


படம்-5:   ஆதிவாசிகள் நடனம்....  படம் எடுத்த இடம், அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப்பிரதேசம்.


படம்-6:   படம் எடுத்த இடம்,  ஆந்திரப்பிரதேசம்.


படம்-7:   படம் எடுத்த இடம், ஒரு கோவில் அருகே, ஆந்திரப்பிரதேசம்.


படம்-8:   படம் எடுத்த இடம், அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப்பிரதேசம்.


படம்-9:   படம் எடுத்த இடம்,  ஆந்திரப்பிரதேசம்.

படம்-10:   படம் எடுத்த இடம், புவனேஷ்வர். 

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரவும், அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்கவும் இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

44 comments:

 1. நல்ல முயற்சி ஜி நானும் தங்களை வைத்து கவிதை எழுத முயல்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் எழுதி எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 2. Replies
  1. தங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி....


   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.

   Delete
 3. அழகான காட்சிகளுக்கு அருமையான கவிதை வரிகள் வரவிருக்கின்றன..

  தங்கள் பணி தொடரட்டும்.. நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. கவிதைகள் வரட்டும்.... கவிதைகள் மகிழ்ச்சி தரட்டும் அனைவருக்கும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. மேலுள்ளவற்றில் நான்காவது படத்திற்கான கவிதை!..

  இன்னுமா
  தளிர்க்கொடியின்
  தலைமேல்
  தண்ணீர்க் குடங்கள்?..

  அரசின் மனம் என்ன
  அரக்கா?..
  உருக்கா?..
  மனம் என்ற ஒன்றுதான்
  இருக்கா?..

  ReplyDelete
  Replies
  1. நல்ல கவிதை. சேமித்துக் கொண்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 5. தோழரே படம் 4 க்கான கவிதை எழுதியுள்ளேன். தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிரேன். முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அனுப்பி வையுங்கள் நண்பரே.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமேஷ்.

   Delete
 6. மேலுள்ளவற்றில் எட்டாவது படத்திற்கான கவிதை..

  இளம் பூவின்
  வெட்கம் கண்டு
  பூஞ்சாரலின்
  பொன்சிரிப்பு!..

  ReplyDelete
  Replies
  1. நல்ல கவிதை. சேமித்துக் கொண்டேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 7. மிகவும் நல்ல முயற்சி ஜி.பாராட்டுகள்.கவிதை எழுத முயற்சி செய்கிறோம்....

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கவிதையையும் அனுப்பி வையுங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   Delete
 9. உங்கள் படங்களே கவிதை. அதற்குத் தனியாக ஒரு வேறு கவிதை தேவையா?!

  ReplyDelete
  Replies
  1. படங்களே கவிதை! :) பாராட்டியமைக்கு நன்றி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 10. நல்ல முயற்சி வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கும்மாச்சி.

   Delete
 11. மின்னூலை "புஸ்தகா"-வில் இணையுங்கள்... நன்றி....

  ReplyDelete
  Replies
  1. புஸ்தகா அல்லது freetamilebooks.com தளம் மூலம் வெளிவரும். அதை பிறகு முடிவு செய்து கொள்ளலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 12. கவிதை எழுதச் சொன்னால் முடியுமா தெரியவில்லை கவிதை தானாகத் தோன்றி எழுதுவது முயற்சிக்குப் பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. முடிந்தால் எழுதி அனுப்புங்கள் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 13. நல்ல முயற்சி. முயற்சிக்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. முயன்றால் முடியாததில்லை... எழுதி அனுப்புங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 14. நல்ல முயற்சி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.

   Delete
 15. கவித்துவம் மிக்கத் தங்களின் படங்களுக்கு வரும் கவிதைகளைக் காண காத்திருக்கிறேன் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 16. படம்1

  வண்ண வண்ணப் பூக்களும்
  சிரிக்குது வெள்ளையா
  வெள்ளி மணி ஓசையிலும்
  இந்த இசை இல்லை(ஐ)யா

  சின்னஞ்சிறு குடிசைக்குள்
  இவ்வளவு செல்வமா?
  ஏழையின் வளர்ப்பினில்- பெண்கள்
  எப்பொழுதும் செல்லமா?

  காணுகின்ற கண்களுக்கு இவர்
  முன்பனியின் காலமா?
  நாணுகின்ற பெண்களுக்கு இது
  முன்-பணியின் காலமா?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கவிதையைச் சேமித்துக் கொண்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாலா சிவசங்கரன் ஜி!

   Delete
 17. படம்2

  எருது ரெண்டும் எங்கயோ எளப்பாறப் போயிருக்க
  கரையோரம் காத்தாறும் கட்டவண்டி
  நெனச்சுக்கிச்சாம்:
  தண்ணி எறைக்க ட்க்கரா மோட்டாரு போட்டுப்புட்டான்
  ஏருக்கும் இல்லாம கலப்பையெல்லாம் இத்துப்போச்சு
  ஊருக்குள் எத்தினியோ ட்ராக்டரு வண்டி வந்திடுச்சி
  எருது ரெண்டும் கெழடானா
  என்ன ஒடச்சி எந்த அடுப்புல சொருவுவானோ?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கவிதையைச் சேமித்துக் கொண்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாலா சிவசங்கரன் ஜி!

   Delete
 18. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 19. படங்கள் அனைத்துமே கவிதை சொல்கின்றன.
  9 ஆவது படத்திற்கு எனது கருத்து: ‘நல்லதை’த்தான் காதில் போட்டுக்கொள்வேன் என்கிறாரோ இந்த சிறுமி?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 20. இரயில் நகரத் தொடங்கி விட்டாலும் அடித்து பிடித்து நாங்களும் ஏற விருப்பம் தருகிறது தங்கள் படங்கள்!

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதக் கடைசி வரை நேரம் இருக்கிறது. நீங்களும் எழுதி அனுப்புங்கள் நிலாமகள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 21. தும்பிக்கை தொங்குவது அழகு ,தும்பிக்கையானே தொங்குவது அழகிலும் அழகு :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 22. ஆஹா... நல்ல முயற்சி அண்ணா...
  கலந்துக்க முயற்சிக்கிறேன்...
  என் தளத்தில் பகிர்கிறேன்...
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் எழுதி அனுப்புங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....