எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, February 26, 2017

குட்டி சுட்டீஸ்…..

நாளைய பாரதம் – 10

பல்வேறு இடங்களுக்குச் செல்லும் போது பார்க்கும் இளஞ்சிறார்களை புகைப்படம் எடுப்பது வழக்கம். அப்படி எடுத்த புகைப்படங்களை நாளைய பாரதம் என்ற தலைப்பில் எனது பக்கத்தில் வெளியிடுவதுண்டு. 

சமீபத்தில் அப்படி நான் எடுத்த இளஞ்சிட்டுகளின் புகைப்படங்கள் இந்த ஞாயிறில் நாளைய பாரதம் புகைப்படப் பதிவாக……

இதோ புகைப்படங்கள்….


பிள்ளையார் என் ஃப்ரெண்ட்….
திருவரங்கம் – விநாயகச் சதுர்த்தி சமயத்தில் பிள்ளையார் பொம்மை அருகே அமர்ந்திருந்த இவரை படம் பிடித்தேன்!


ஒட்டகம் மிரண்டா என்ன பண்ணறது என்று மிரண்டு நிற்கும் சிறுவன்!
குஜராத் – அம்மா-அப்பா, இவரை ஒட்டகத்தின் அருகே நிற்க வைத்து படம் எடுக்க, நானும் எடுத்தேன்!


அப்பாவின் தோள்களில் பயமின்றி அமர்ந்திருக்கும் சிட்டு….
சூரஜ்குண்ட் மேளா-2017 சென்ற போது எடுத்த படம். இப்போது மாதிரியே அப்பா தரும் தைரியம் நிலைக்க வேண்டும்.


எங்க ரெண்டு பேருக்கும் சண்டையில்லை… 
ஏம்மா, நீயும் எடுக்கற, அந்த அங்கிளும் ஃபோட்டோ எடுக்கிறாரே… நான் எந்தப் பக்கம் பார்க்கறது!
சூரஜ்குண்ட் மேளா-2017 சென்ற போது எடுத்த படம்.


என்ன வேணும் கண்ணு….  இங்கே இருக்கற எல்லாம் வேணும்!
சூரஜ்குண்ட் மேளா-2017 சென்ற போது எடுத்த படம்.


நீ பயப்படாத, நான் உன்னை பத்திரமா கூட்டிட்டு போறேன்….
சூரஜ்குண்ட் மேளா-2017 சென்ற போது எடுத்த படம்.


இந்த சிரிப்பு போதுமா…  இன்னும் கொஞ்சம் புன்னகை புரியவா! கிராமிய இசைக்கு நடனமாடிய குழந்தை…..
சூரஜ்குண்ட் மேளா-2017 சென்ற போது எடுத்த படம்.


நான் நல்லா ஆடுவேன்… பொய்க்கால் குதிரை நடனமாடும் இளஞ்சிட்டு… ஓய்வாக அமர்ந்திருந்தபோது….
சூரஜ்குண்ட் மேளா-2017 சென்ற போது எடுத்த படம்.


இதுவும் ஒரு வகை யோகா!
எங்கள் பகுதியில் நடந்த சமீபத்திய விழா ஒன்றின் போது எடுத்தது….


இந்தத் தொப்பில நான் எப்படி இருக்கேன்!
எங்கள் பகுதியில் நடந்த சமீபத்திய விழா ஒன்றின் போது எடுத்தது….


சின்னக்குட்டிம்மா….  கண்களில் ஒரு தீர்க்கம்….
எங்கள் பகுதியில் நடந்த சமீபத்திய விழா ஒன்றின் போது எடுத்தது….என் ஜிகுஜிகு ட்ரெஸ் நல்லா இருக்கா?
எங்கள் பகுதியில் நடந்த சமீபத்திய விழா ஒன்றின் போது எடுத்தது….அந்த அங்கிள் என்னை புகைப்படம் எடுக்கறார்பா…..
எங்கள் பகுதியில் நடந்த சமீபத்திய விழா ஒன்றின் போது எடுத்தது….திருவரங்கத்தில் ஒரு குட்டிச் செல்லம்…..

என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட நாளைய பாரதம் புகைப்படங்களை ரசித்தீர்களா?  உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

22 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. அருமை
  புகைப்படங்களைப் பார்க்கப் பார்க்க மனதில் மகிழ்ச்சி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.....

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.....

   Delete
 4. ஒவ்வொரு போட்டோவும் ஒரு கவிதையாக!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன் ஜி.....

   Delete
 5. Puppuva poothirukku poomiyile aayiram poo

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்வாமி ஜி.

   Delete
 6. குழந்தைகள் எல்லோரும் கவிதைகள். சிறப்பாகப் படமெடுத்து இருக்கிறீர்கள் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.....

   Delete
 7. இன்றைய மலர்கள்... நாளைய மன்னர்கள்.. அழகோ அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

   Delete
 8. அருமையான பதிவுகளை பகிர்ந்து மனதை கொள்ளை கொள்கிறீர்கள் என்றால் அழகிய படங்களையும் பகிர்ந்து உள்ளத்தை கொள்ளை கொள்கின்றீர்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 9. வணக்கம்
  ஐயா
  ஒவ்வொரு படங்களும் சிறப்பு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 10. ஒவ்வொரு குழந்தையும் அழகு! புகைப்படங்களுக்கு உங்க குறிப்பும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 11. படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு!! குழந்தைகள் அழகுதான் எப்போதுமே!!!அதற்கு உங்கள் கமென்டும் சூப்பர்! ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....