Haryana லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Haryana லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 டிசம்பர், 2017

மீண்டும் குழந்தைகளாவோம் – பிரதாப்கட்[ர்], ஹர்யானா…





மீண்டும் குழந்தைகளாவோம்....


மீண்டும் குழந்தைகளாவோம்....

தலைநகர் வாழ்க்கை கொஞ்சம் சவாலான விஷயம். பெரும்பாலான நேரம் போக்குவரத்தில் மாட்டிக்கொண்டு வீட்டிலிருந்து அலுவலகம் சென்று சேரவும், அலுவலகத்திலிருந்து வீடு சேரவும் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகும். எனக்கு அந்தப் பிரச்சனை இல்லை என்றாலும் – அலுவலகம் மூன்று கிலோமீட்டர் தூரம் தான் – நேரடி பேருந்து இல்லை! பெரும்பாலான நாட்களில், நடை, பேருந்து, நடை என இருக்குமென்பதால் 15 நிமிடம் முதல் 25 நிமிடம் வரை ஆகிவிடுகிறது. வீடு, சமையல், அலுவலகம், வீடு திரும்பி மீண்டும் சமையல், மற்ற வேலைகள், தூக்கம் என Routine and Boring Schedule இந்த தலைநகர வாழ்க்கை.

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

கண்கவர் ஓவியங்கள் – கிராமியக் காட்சிகள் - ஹரியானாவிலிருந்து…


சமீபத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் Outing வகையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜஜ்ஜர் மாவட்டத்தில் ஓரிடத்திற்குச் சென்றிருந்தோம். ஹரியானா கிராமிய வாழ்க்கையையும், அங்கே மக்கள் வாழும் வாழ்க்கையையும், சூழலையும் நாமும் வாழ ஒரு வழி. விதம் விதமான விளையாட்டுகள், உணவு, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என மிகவும் ரசித்த ஒரு நாள் அது. அப்படிச் சென்ற போது அங்கே கிராமிய வீடுகள் – மண் சுவர் கொண்ட வீடுகளின் உள்ளே வரைந்திருந்த ஓவியங்களை மட்டும் தனித்தனியே படம் பிடித்துக் கொண்டேன்.  அந்த ஓவியங்கள் மட்டும் இந்த ஞாயிறில் புகைப்பட உலாவாக….

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

கத்புத்லி – ஹேமமாலினி நடனம் – புகைப்படங்களும் காணொளியும்



சென்ற ஞாயிற்றுக்கிழமை திடீர் பயணம் – ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜர் எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு! அங்கே சென்ற போது பார்த்த கத்புத்லி என்று இங்கே அழைக்கப்படும் பொம்மலாட்டம் பார்க்க முடிந்தது. அப்போது நான் எடுத்த புகைப்படங்களும், குழுவில் இருந்த நண்பரின் மகள் எடுத்த காணொளியும் இந்த ஞாயிறில் உங்கள் பார்வைக்கு.


ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ABCD - Any body can dance - ஒரு காணொளி

வடக்கே ஒரு பழக்கம். பெரும்பாலான திருமணங்களில், விழாக்களில் டோல் எனப்படும் மேளம் முழுங்குவதுண்டு. ஒரே மாதிரியான இசை, ஒரே மாதிரியான நடனம் – கைகளை மேலே தூக்கியபடி நடனம் ஆடுவது வழக்கம்.  திருமணங்களில் மாப்பிள்ளையானவர் குதிரை மேல் அமர்ந்து வர, அவருக்கு முன்னே மேளதாளங்கள் முழங்க, திருமணத்திற்கு வந்திருக்கும் ஆண்களும் பெண்களும் ஆடியபடியே வருவார்கள். இது திருமணம் தவிர, எங்கே மேளம் முழங்கினாலும் களத்தில் குதித்து நடனமாடும் ஆண்களும் பெண்களும் பார்க்க முடியும்….. 

சூரஜ்குண்ட் மேளா சென்ற போது ஹரியானாவின் பாரம்பரிய இசை மற்றும் மேளத்துடன் வாசித்துக் கொண்டிருக்க, அங்கே களத்தில் சிலர் குதிக்க, அதை காணொளியாக எடுத்த பலரில் நானும் ஒருவன்.  அந்த காணொளி இந்த ஞாயிறில் உங்களுக்காக….


நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

ஞாயிறு, 12 மார்ச், 2017

சூரஜ்குண்ட் மேளாவில் பிள்ளையாரும் கிருஷ்ணரும்!


சூரஜ்குண்ட் மேளாவில் பிள்ளையாரும் கிருஷ்ணரும் வந்தார்களா? என்று கேள்வி கேட்கக் கூடாது… அவர்கள் நேரில் வந்தார்களா, எந்த உருவத்தில் வந்தார்கள் என்று கேள்வி கேட்டு நேரத்தை எதற்கு வீணாக்குவது! மிகவும் சுலபமாக, எந்த வடிவத்திலும், எப்பொருளிலும் கலைஞர்கள் செய்யக் கூடிய ஒரு விஷயம் பிள்ளையார் பொம்மை. பிள்ளையாரை கார் ஓட்டச் செய்யலாம், கிரிக்கெட் விளையாட வைக்கலாம், எப்படிச் செய்தாலும் அவர் ஒன்றும் கோபிக்கப் போவதில்லை! 

ஞாயிறு, 5 மார்ச், 2017

சூரஜ்குண்ட் மேளா – 2017 – ஒரு காமிரா பார்வை….



தில்லியை அடுத்த சூரஜ்குண்ட் [ஹரியானா] பகுதியில் வருடா வருடம் 15 நாட்களுக்கு மேளா நடக்கும் – பெரும்பாலும் 1 ஃபிப்ரவரி முதல் 15 ஃபிப்ரவரி வரை நடக்கும் இந்த மேளாவிற்கு நான் நண்பர்களோடு சென்று வருவது வழக்கமாக இருக்கிறது. இந்த வருடம் சென்றபோது எடுத்த சில புகைப்படங்களை அவ்வப்போது எனது பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறேன்.  இன்றைக்கு இன்னும் சில புகைப்படங்கள்……


ஆம் கா பன்னா என ஒரு பானம் – மாங்காய் கொண்டு தயாரிக்கப்படுவது – அதை விற்பவர் அணிந்திருந்த தொப்பி…. தொப்பி எதைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று புரிந்தால் சொல்லுங்களேன்….


சுவர் அலங்காரத்திற்கு பொம்மைகள்….  டெரகோட்டா பொம்மைகள்!


வாயிற்காப்போன்….  ராஜஸ்தானிய பொம்மைகள்….


பிள்ளையார் – ஜார்க்கண்ட் மாநில மண் பொம்மை.


தேவி - ஜார்க்கண்ட் மாநில மண் பொம்மை.


சிவன் - ஜார்க்கண்ட் மாநில மண் பொம்மை.


சிங்கமும் தேவியும் - ஜார்க்கண்ட் மாநில மண் பொம்மைகள்.


யோசனையில் புத்தர்….


ஜார்கண்ட் மாநில Dhokra Craft....


ஜார்கண்ட் மாநில Dhokra Craft....



ஜார்கண்ட் மாநில Dhokra Craft....


ஜார்கண்ட் மாநில Dhokra Craft....


ஜார்கண்ட் மாநில Dhokra Craft....


ஒரு ஓவியம்.....


விதம் விதமாய் கதவுக்கான கைப்பிடிகள்...


அழகிய சிற்பமொன்று.... யானைச் சிற்பத்திலும் சிறு சிற்பங்கள்.... 


கம்பிகளில் விளக்கு...  Lamp Shade!


மற்றுமொரு ஓவியம்... 


மற்றுமொரு ஜார்கண்ட் மாநில Dhokra Craft....


நான்கடி உயர சக்கரத்தில் பிள்ளையார் சிலைகள்....


கொட்டட்டும் முரசு....

கீதோபதேச காட்சிகள்....

என்ன நண்பர்களே, படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்….

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

புதன், 22 பிப்ரவரி, 2017

ராகினி…



ராகினி – என்னவொரு இனிமையான பெயர்.  ராகத்திலிருந்து பிறந்தது ராகினி….. ஹிந்தி மொழி பேசும் பகுதிகளில் பல பெண்களுக்கு ராகினி என்ற பெயர் வைப்பதுண்டு.  ராகினி என்ற பெயருக்கு அன்பானவள் என்ற அர்த்தமும் உண்டு. நாம் இன்று பார்க்கப் போகும் ராகினி ஒரு பெண் அல்ல! சில மாதங்களுக்கு முன்னர் ஹிந்தி மொழியில் வந்த ராகினி எம்.எம்.எஸ். படம் பற்றிய பதிவும் அல்ல!  இது வேறு விஷயம். 

ராகினி என்பது ஹரியானா மாநிலத்தின் பாரம்பரியமான இசை.  முன்பெல்லாம் ராகினி என்றழைக்கப்படும் பாடல்கள் மூலம் பாரம்பரியக் கதைகள், புராணங்கள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வழியாக வைத்திருந்தார்கள்.  நமது ஊரில் நடக்கும் கதாகாலட்சேபம் மாதிரி, கதையும், நடுநடுவே பாடல்களும் என அருமையான வழியாக வைத்திருந்தார்கள். 

சமீபத்தில் அப்படி ஒரு காணொளி காண நேர்ந்தது.  பள்ளி மாணவிகள் சேர்ந்து பாடிய ஒரு ராகினி அது – கிருஷ்ண பகவான் சுதாமாவிடம், ”நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்திருக்கிறாயே எப்படி இருக்கிறாய்?” என்று கேள்வி கேட்பது போல ஒரு பாடல்.  நீங்களும் கேளுங்களேன்…. ஹரியான்வி மொழியில் இருந்தாலும், உங்களுக்குப் புரியவில்லை என்றாலும் கேட்பதற்கு நன்றாகவே இருக்கும்.


ஆனால் சில காலமாக நமது தமிழகத்தில் அழிந்து வரும் நாட்டுப் புறக் கலைகளைப் போலவே ராகினியும் அழிந்து போனது – அதன் பாரம்பரியத்திலிருந்து வேறு பாதைக்கு மாறி விட்டது.  இப்போது ராகினி வேறு வடிவம் கொண்டுவிட்டது! இப்போது பாடப்படும் ராகினி பெரும்பாலும் ஆபாசத்தினை நோக்கி நகர்ந்து விட்டது.  ராகினி என்ற பெயரில் பாடலுடன் ஆடலும் சேர்ந்து கொண்டுவிட, ஆபாச அசைவுகளே அதிகமாக இருக்கும்படி செய்துவிட்டார்கள். 

அலுவலகத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் இப்படி ராகினி பாடி ஆடும் ஒரு பெண்ணின் நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார். சமீபத்தில் அப்படி ஒரு நிகழ்வில் பார்த்த ஒரு விஷயத்தினை ரொம்பவும் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தார் – இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும் ராகினி பாடல்/ஆடல் நிகழ்ச்சி நடத்தும் பெண் சப்னா – அவருடைய நிகழ்ச்சிக்கு சென்றபோது ஒருவர் அந்தப் பெண்ணிடம் ”நான் உன்னை விரும்புகிறேன், ஆனால் வேறு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டது…. நான் உன்னை விரும்பியதற்காக, இதோ ஒரு லட்சம் உனக்குத் தருகிறேன்…..” என்று ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாராம். கூட்டத்தில் ஆரவாரம்…. அடுத்த நிமிடம், இன்னுமொரு ரூபாய் கட்டு எடுத்து, இப்போதும் உன்னை விரும்புகிறேன், இந்தா இன்னுமொரு லட்சம்!” என்று கொடுத்திருக்கிறார்!

பொதுவாகவே வட இந்தியாவில் நடனமாடும்போது, ரூபாய் நோட்டுகளை நடனமாடுபவர் மீது அபிஷேகம் செய்வது பரவலான ஒன்று. அதுவும் பெண் ஆடினால் போதும் ரூபாய் நோட்டுகளை அள்ளி விடுவார்கள் – அதற்காகவே புதிய ரூபாய் நோட்டுகள் வங்கியிலிருந்து மாற்றுபவர்கள் உண்டு. திருமண ஊர்வலமான bபராத் சமயத்தில் சாலையில் நடனமாடுபவர்கள் மீது இப்படி வீசும் நோட்டுகளை எடுத்துக் கொள்ள பெரும் போட்டியே நடக்கும்! திருமண நிகழ்விலேயே இப்படி என்றால் விரச/ஆபாச நடனமென்றால் சும்மா இருப்பார்களா?

மேலே சொன்ன அலுவலக நண்பர், நடனமாடிய சப்னா மீது ஆறாயிரம் ரூபாய் அள்ளி வீசிவிட்டு வந்ததை ரொம்பவும் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்கான நுழைவுக் கட்டணம் தனி! இத்தனைக்கும் அவருக்குத் திருமணம் ஆகி மூன்று குழந்தைகளும் உண்டு. அதில் இரண்டு பெண்கள்!

இணையத்திலும் ஹர்யான்வி ராகினி எனத் தேடினாலே சப்னாவின் காணொளிகள் தான் வருகிறது.  பாரம்பரிய கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது சோகம் தான்…… அது தமிழகக் கலைகளாக இருந்தாலும் சரி, இந்தியாவின் எந்தப் பகுதி கலையாக இருந்தாலும் சரி….  இதை எல்லாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்…..

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

Clicks and Colours – Theme 132 – மூன்று – புகைப்படங்கள்….


ஃபேஸ்புக் – எத்தனை எத்தனை குழுக்கள் இங்கே உண்டு என்பதற்கு ஒரு கணக்கே இல்லை.  புகைப்படங்களுக்காகவே நிறைய குழுக்கள் இயங்குகின்றன. எல்லாவற்றிலும் உறுப்பினராக இருந்தால் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் ஃபேஸ்புக்கில் மூழ்கி இருந்தால் கூட பார்த்து முடிக்க முடியாத அளவிற்கு இற்றைகள் வந்த வண்ணமே இருக்கும்…  நானும் ஒன்றிரண்டு குழுக்களில் இருக்கிறேன்.  அப்படி ஒரு குழு Clicks and Colours! நமது வலையுலக நண்பர்கள் சிலரும் அக்குழுவில் உண்டு. வாராவாரம், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு Theme அறிவித்து உறுப்பினர்களை அதற்குத் தகுந்த புகைப்படங்கள் வெளியிட அழைப்பு விடுவது வழக்கம்.

இந்த வார இறுதியின் மையக்கரு – மூன்று! Clicks and Colours குழுவில் குறிப்பிட்டு இருப்பதை அப்படியே இங்கே தருகிறேன்.

Concept 132
C & C Welcomes..
Weekend Concept : Three
வாரயிறுதி மையக்கரு : மூன்று
மூன்று என்னும் எண்ணிக்கையில் உள்ள பொருட்களின் புகைப்படங்கள், மூன்று என்பதை சொல்லும் வித்தியாசமான புகைப்படங்கள் இதற்குள் அடங்கும்.
ஐந்து புகைப்பட வரைமுறை உண்டு.
அதிகம் போட விரும்பினால்,
For Desktop :
நமது C & C குழுவின் Photos பிரிவில், Albums என்பதில்,
Concept 132 – மூன்று / Three என்பதில் சேமிக்கலாம்
For Mobile :
நமது C & C குழுவின் Info Tab யில் Photos பிரிவில், View All கொடுத்தால் Albums இருக்கும். அதில் இருக்கும் Concept 132 – மூன்று / Three என்பதில் சேமிக்கலாம்
Happy Posting..
Admin
Ahila Puhal
Admin Desk
Geetha Mathi
Ezhil Arul
Krishna Ranjani

நேற்று தில்லியை அடுத்த சூரஜ்குண்ட்-ல் நடக்கும் வருடாந்திர மேளா சென்றிருந்த போது இந்த வார மையக்கரு நினைவுக்கு வர, இதற்குத் தகுந்த புகைப்படங்கள் எடுக்கலாமே என்று நிறைய படங்கள் எடுத்தேன்.  அவற்றில் சில இந்த ஞாயிறின் புகைப்படங்களாக…. 


படம்-1: ஹரியானாவில் வீடுகளின் மண் சுவர்களில் இப்படி ஓவியங்கள் வரைவதுண்டு...... 


படம்-2: எலிஃபண்டா குகைகளில் இருக்கும் சிலையின் ஒரு பிரதிமை - மேளாவிலும்.....



படம்-3: சத்தீஸ்கர் மாநிலத்தில் தயாராகும் டோக்ரா கலைவடிவங்கள்.... 



படம்-4: டெரக்கோட்டாவில் மூன்று பிள்ளையார்கள்... 



படம்-5: டெரக்கோட்டா விளக்குகள்.... 



படம்-6: குட்டி குட்டி பொம்மைகளோடு கீ செயின்....



படம்-7: ஆனை ஆனை அழகர் ஆனை.....



படம்-8: மூணு வண்டி ரெடியா இருக்கு...  எதுல வேணும்னாலும் போலாம்.....



படம்-9: சிலைகள்...  



படம்-10: ஹரியானா பாரம்பரிய உடையில் மூன்று ஆண்கள்....



படம்-11: மண் பானைகளின் மூன்று வரிசை!



படம்-12: அகாடா என அழைக்கப்படும் குஸ்தி பயிற்சிக்கள மாடல் முன் குஸ்தி செய்யும் மூன்று இளஞ்சிட்டுகள்....


என்ன நண்பர்களே இந்த வார புகைப்படங்களை ரசித்தீர்களா? புகைப்படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்….

மீண்டும் ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.