ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ABCD - Any body can dance - ஒரு காணொளி

வடக்கே ஒரு பழக்கம். பெரும்பாலான திருமணங்களில், விழாக்களில் டோல் எனப்படும் மேளம் முழுங்குவதுண்டு. ஒரே மாதிரியான இசை, ஒரே மாதிரியான நடனம் – கைகளை மேலே தூக்கியபடி நடனம் ஆடுவது வழக்கம்.  திருமணங்களில் மாப்பிள்ளையானவர் குதிரை மேல் அமர்ந்து வர, அவருக்கு முன்னே மேளதாளங்கள் முழங்க, திருமணத்திற்கு வந்திருக்கும் ஆண்களும் பெண்களும் ஆடியபடியே வருவார்கள். இது திருமணம் தவிர, எங்கே மேளம் முழங்கினாலும் களத்தில் குதித்து நடனமாடும் ஆண்களும் பெண்களும் பார்க்க முடியும்….. 

சூரஜ்குண்ட் மேளா சென்ற போது ஹரியானாவின் பாரம்பரிய இசை மற்றும் மேளத்துடன் வாசித்துக் கொண்டிருக்க, அங்கே களத்தில் சிலர் குதிக்க, அதை காணொளியாக எடுத்த பலரில் நானும் ஒருவன்.  அந்த காணொளி இந்த ஞாயிறில் உங்களுக்காக….


நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

38 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அங்கே மட்டுமல்ல, இங்கேயும் [வலைப்பூவிலும்] பார்வையாளர்கள் குறைவு தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. ஹலோ நீங்கள் டான்ஸ் ஆடினதை எடிட் பண்ணி போட்டு இருக்கிங்கதானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையா.... சரியா கண்டுபிடிச்சுட்டீங்க! நான் வீடியோ எடுத்தபடியே டான்ஸ் ஆடினதுனால, நான் எடுத்த வீடியோல வரல! வேற யாராவது எடுத்த வீடியோவில் வந்துருப்பேன்! :) Just for fun! நான் ஆடுனா, எல்லாரும் தலைதெறிக்க ஓடி இருப்பாங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
  2. அடடே... அதைச் சொல்லவே இல்லையே... நீங்க ஆடும் டான்ஸ் யாராவது எடுத்திருந்தால் அதை ஒரு பதிவில் போடுங்கள். ரசிப்போம்.

   நீக்கு
  3. நான் ஆடுனா எல்லாரும் தலைதெறிக்க ஓடி இருப்பாங்கன்னு சொல்லி இருக்கேனே ஸ்ரீராம்! :)

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  4. .....வெங்கட்ஜி சே மிஸ் ஆகிப் போச்சே}......நங்கல்லாம்..இங்க வரவங்க ஓட மாட்டோம் ஜி...ஹாஹா

   நீக்கு
  5. வெங்க்ட்ஜீ நீங்க ஆடுனதை பார்த்து தலை தெறிக்க பலர் ஒடிய பின் நீங்கள் எடுத்தது இந்த வீடியோவாக இருக்கும் அதனாலதான் கூட்டம் குறைவோ

   நீக்கு
  6. நான் பொதுவெளியில் ஆடுவது எல்லாம் கிடையாது எங்க வூட்ட்டம்மா கையில் ஜதிக்கட்டையை (பூரிக்கட்டையை) கையில் எடுத்தால் என் உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் தன்னாலே ஆடும் என்ன தைய தக்கா என்று சொல்லுவதற்கு பதிலாக அய்யோ அம்மா என்று சொல்லி ஆடுவேன்

   நீக்கு
  7. ஆஹா நான் ஆடறத பார்க்க எல்லோரும் ரொம்ப ஆவலா இருக்கீங்களே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
  8. கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க மதுரைத் தமிழன்!

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
  9. உங்க தையா தக்கா ஆட்டம் பார்க்க ஆசை தான்! உங்க ஊருக்கு ஒரு டிக்கெட் அனுப்புங்க.... இதோ வந்துடறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 3. தாண்டியா நடனம் இல்லாத கல்யாணம் ஏது?ஒரு முறை குஜராத் சென்று ஒரு கல்யாணத்தில் கலந்து கொண்டபோது .... வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் ஆடுவதை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது !என்னையும் ஆட அழைத்தபோது ,ஆடும் தைரியம் வரவில்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆடும் தைரியம் வரவில்லை! அதே தான் இங்கேயும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 4. வடநாட்டுக் கல்யாணங்களில் நடனங்களைப் பார்க்கவே கொடுத்துவைத்திருக்கவேண்டும். கிடத்தட்ட அரை யானை சைஸ் இருக்கும் பெண்களும் துள்ளிக்கொண்டு ஆடுவதுதான் விசேஷம். கூச்சநாச்சமில்லாமல் ஆடுவார்கள். ..

  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவரும் ஆடுகிறார்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய. செல்லப்பா ஐயா.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 6. எல்லாம் சந்தோஷம் தான்..
  கல்யாண விசேஷத்தில் மன அழுத்தம் குறைந்தாலும் அதுக்கு அப்புறம் எகிறிப் போகும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விசேஷத்தில் மன அழுத்தம் குறைந்தாலும் அதுக்கு அப்புறம் எகிறிப்போகும்! :) பல வீடுகளில் நடப்பது தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 7. ....வட நாட்டவர்கள் இங்கு இருந்தாலும்....கல்யாணம் என்றால் டான்ஸ் உண்டு...ஆனால் நான் இதுவரை வட நாட்டு கல்யாணம் நேரில் கண்டதில்லை....

  கீதா:...இங்கு சென்னையில் வட நாட்டு கல்யாணங்கள் இப்படித்தான்...ஏன் நம்மவருமே இப்போது இப்படித் கொண்டாடுகிறார்கள். மாப்பிள்ளை அழைப்பன்று....மிக மிக உற்சாகத்துடன் ஆடுவார்கள்...பெண்ணை நடுவில் உட்கார வைத்தும் ஆடுவார்கள்...நானும் என்ஜாய் செய்திருக்கிறேன்...என்னையும் அழைப்பார்கள்...காணொளியில் வந்துவிடுமே என்று தவிர்த்திடுவேன்.....என்ஜாய் செய்வது மிகவும் பிடிக்கும்...காணொளி சூப்பர்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில வட இந்திய கல்யாணங்களில் நானும் ஆடுகிறேன் என்ற பெயரில் குதிக்க, குதிரை மிரண்டு கனைத்தது உண்டு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 8. பாரம்பர்ய நடனங்கள், கொண்டாட்டங்கள் மறையக்கூடாது (PART OF CULTURE). ஆனால் இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்துவருகின்றன. மக்களின் ஆர்வம் மாறுவதுதான் காரணம்.

  இங்கும், பாரம்பர்ய நடனங்கள் பார்த்திருக்கிறேன். அவைகளை இப்போது ரசிக்க முடியாவிட்டாலும், கலாச்சாரத்தின் அங்கம் என்ற அளவில் அவைகளுக்கு மதிப்பு உண்டு. (துபாய் மியூசியத்தில், எமராத்தி பாரம்பரிய நடனத்தை காணொளிகளாக PROJECT செய்துகொண்டிருப்பார்கள். இங்கேயும் FORMULA 1 பந்தய தினங்களில், பாரம்பரிய நடனங்கள்-- கஞ்சிரா, சிறிய மத்தளம் போன்றவற்றை அடித்துக்கொண்டு நடனமாடுவதுபோல் ஆண்கள் உடலசைப்பது - உண்டு)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாரம்பரிய நடனங்கள் மறைந்து வருகிறது என்பதில் எனக்கும் ஆதங்கம் உண்டு.

   துபாய் பாரம்பரிய நடனங்கள் காணொளியாக யூவில் கிடைக்குமா பார்க்க வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 9. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.அருமை
  Tamil News

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹென்றி.

   நீக்கு
 10. காணொளியை இரசித்தேன்! நீங்கள் ஆடியதை வேறு யாரையாவதுவிட்டு ஒளிப்பதிவு செய்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 11. அனைவரும் கூச்சம் ஏதும் இல்லாமல் நடனத்தில் பங்கு பெறுகிறார்கள் நம் தென் இந்தியர்களிடம் இதுபோல் இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 13. அபுதாபியில் ஒருமுறை பாலஸ்தீனியரின் திருமணத்திற்கு சென்று இருந்தேன் அனைவரும் ஆடினர் மாமனாரும், மருமகளும் ஆடினார்கள் பாருங்கள் அதை இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா. சில விஷயங்கள் மறக்க முடிவதில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 14. பொதுவாக தமிழக மக்கள் ஆடுவதற்கு வெட்கப் படுவார்கள். ஆட மனம் நினைத்ஹளும் கட்டுப் படுத்திக் கொள்வார்கள்.ஆனால் இது போன்ற நடனங்கள் மனதுக்கு மகிச்சி தரும். நல்ல காணொளி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....