எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, April 16, 2017

சபேரா - பீன் [பாம்பாட்டியும் மகுடியும்] – ஒரு காணொளி


பீன் வாசிக்கும் சபேரா


சபேரா – இந்த வார்த்தைக்கு தமிழில் ஈடான வார்த்தை பாம்பாட்டி! அவர்கள் வாசிக்கும் மகுடிக்கு ஹிந்தியில் Bபீன் என்ற பெயர். வட இந்தியாவில் இருக்கும் இந்த சபேராக்கள், பெரும்பாலும் பஞ்சாபி மொழி கலந்த ஹிந்தியில் தான் பேசுகிறார்கள். மகுடி தவிர கூடவே வித்தியாசமான வாத்தியங்கள் உடன் வாசிக்கிறார்கள். கூடவே டோல் எனப்படும் மத்தளமும் உண்டு.  நமது ஊர் பாம்பாட்டிகள் போல அல்லாமல் நான் பார்த்தவரை பெரும்பாலான சபேராக்கள் காவி உடையே அணிகிறார்கள்.

தலைநகர் தில்லி, ஹரியானா பகுதிகளில் எந்த திருவிழா, மேளா என்றாலும் இந்த காவி உடை அணிந்த சபேராக்களையும் அவர்களது மகுடி இசையையும் கேட்க முடியும்.  இந்த சபேராக்கள் இசையை ஒவ்வொரு திருவிழாவிலும் சில நிமிடங்கள் நின்று, கேட்டு ரசித்திருக்கிறேன். பெரும்பாலான ஹிந்தி சினிமாக்களில் இந்த சபேராவின் இசைக்குத் தகுந்த மாதிரி நடனம் ஆடுவது உண்டு – அந்த நாட்டியத்திற்குப் பெயரும் சபேரா நடனம்! பாம்பு மாதிரியே ஆடுவார்கள்!

ராஜஸ்தான் பகுதிகளில் இந்த நாடோடிகளை கல்பேலியா என்று அழைக்கிறார்கள். பெரும்பாலான கல்பேலியாக்கள் தற்காலிக வசிப்பிடங்களில் வசிப்பவர்கள் தான். ஊர் ஊராகச் சென்று பாம்பாட்டி வித்தைகள் செய்தும், பெண்கள் சபேரா/கல்பேலியா நடனம் ஆடியும் ஊர் மக்களிடம் காசு/உணவு வாங்கிக் கொள்கிறார்கள். தலைநகர் தில்லியிலும் இந்த மக்கள் போன்றவர்களுக்காகவே ஒரு காலனி உண்டு – அதன் பெயர் கத்புத்லி காலனி! கத்புத்லி என்றால் பொம்மலாட்டம்! பொம்மலாட்டக் கலைஞர்கள், சபேரா என பலரும் சேர்ந்து இத கத்புத்லி காலனியில் வசிக்கிறார்கள்.  நண்பர் ஒருவருடன் சேர்ந்து இங்கே செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  பார்க்கலாம்! அப்படிச் சென்றால் அங்கே கிடைக்கும் அனுபவங்களை பிறிதோர் சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த ஞாயிறில் சமீபத்தில் ரசித்த இரண்டு சபேரா இசையின் காணொளிகள் உங்கள் ரசனைக்காக…..இரண்டாவது காணொளியில், ஒரு சினிமா பாட்டு இருக்கிறது - ஹிந்தி சினிமா பாட்டை தனது மகுடியில் வாசித்திருக்கிறார்.....  

என்ன நண்பர்களே, சபேராவின் இசையை ரசித்தீர்களா? இசைக்குத் தகுந்த மாதிரி ஆடும் சிறு பெண்ணின் நடனத்தையும் ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

32 comments:

 1. சிறுமியின் நடனம் இசை சிறப்பாகஉள்ளது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே.....

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   Delete
 3. காலம் செல்லச் செல்ல மக்களின் ரசனை மாறுபடுகிறது. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்'னு ஆகிவிடுகிறது. பழைய கலைகளைப் பயின்று அதனை ஜீவனோபாயமாகக் கொண்டவர்கள் ரசனை மாறுபடும்போது கலையும் அழிந்து, வாழ்வாதாரமும் போய் கஷ்டப்படுகிறார்கள். எஸ்.ரா, பொம்மலாட்டக் கலைஞர்களைப் பற்றியும், கோவில்பட்டி அருகே அவர்களைச் சந்தித்ததைப் பற்றியும் உணர்வுபூர்வமாக எழுதியிருப்பார்.

  நடனமும் இசையும் நல்லா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். இது போன்ற கலைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது வருத்தம் தருகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   Delete
 4. இரண்டாவதில் இசைப்பது ஒரு தமிழ்ப்பாட்டு போலிருக்கிறது (.... மனம் கொண்டு பாடுது.... யார் செய்தது அங்கே யார் வந்தது.. போன்று வரிகள் ஞாபகம் வருகின்றன)

  ReplyDelete
  Replies
  1. So saal pehle என்ற பாடல். இது தமிழிலும் இருக்கிறது என நினைக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   Delete
 5. இன்றைய பதிவின் தகவலும் காணொளியும் நன்றாக இருக்கின்றன..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. இந்த இசையை கேட்கும் கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம் என படுகிறது ,இங்கே ,நம்ம ஊரிலும் இம்மாதிரி இசைக் கலைஞர்களை பார்க்க முடியவில்லையே :)

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரி இசையைக் கேட்கும் கடைசி தலைமுறை .... இருக்கலாம். பல கலைகள் அழிந்து கொண்டே வருகின்றனவே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 8. பாம்பாட்டிகள், குரங்காட்டிகள், பூம்பூம் மாட்டுக்காரர்கள்னு பார்த்து எவ்வளவோ காலம் ஆச்சு. தமிழ்நாட்டில் கிட்டத்தட்டப் பல கலைகள் மறந்தும், மறைந்தும் போய்விட்டன! :(

  ReplyDelete
  Replies
  1. இம்மாதிரி ஆட்களை பார்க்கவே முடிவதில்லை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. இரண்டு காணொளிகளையும் இரசித்தேன்! அருமை.அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. முதலாவது வீடியோவில் அந்தக் குட்டி, வருங்கால ஹீரோயின் என்னமாதிரி டான்ஸ் ஆடுது... ஆனா வீடியோ எடுத்தவர் ஒழுங்கா எடுக்கவில்லை கர்ர்ர்:).

  ReplyDelete
  Replies
  1. வீடியோ எடுத்தவருக்கு, படமே ஒழுங்கா எடுக்கத் தெரியாது! இதுல வீடியோ! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 12. இதுதான் அந்தப் பாடல். கண்ணதாசன் எழுதியது. வேதா இசை. வல்லவனுக்கு வல்லவன் படம். டி.எம்.எஸ், சுசீலா பாடியது. தயாரிப்பாளர், இந்தி டியூன் போல் வேணும்னு கேட்டிருக்கலாம். 1965ல் வெளியானது.

  "மனம் என்னும் மேடை மேலே
  முகம் ஒன்று ஆடுது
  குயில் ஒன்று பாடுது
  யார் வந்தது... அங்கே யார் வந்தது

  தமிழ் காவிரி நீராடி
  இரு விழிகளில் காதல் மலர் சூடி
  வண்ணப் பூச்சரம் போலாடி
  உடலழகில் பொன்னுடன் விளையாடி (தமிழ்)
  சிலை ஒன்று நேரில் வந்து.. உயிர் கொண்டு ஆடுது
  கலைத் தென்றல் வீசுது
  யார் வந்தது... அங்கே யார் வந்தது"

  ReplyDelete
  Replies
  1. ஹிந்தி பாடல் - சோ சால் பெஹ்லே போலவே இருக்கிறது. ஹிந்தி பாடல் - படம் 1961-ஆம் ஆண்டு வந்தது. Jab Kisi Se Pyar Hota Hai படத்தில் Mohammed Rafi, Lata பாடிய பாடல் என்று இணையம் சொல்கிறது!

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 13. பாடல் தெரிகிறது. நடனம் ரசித்தேன். "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உன்னிடம் எனக்கு காதல் இன்று மட்டுமல்ல, நாளையும் அந்தக் காதல் இருக்கும்" என்கிற பாடல்!!!

  ReplyDelete
  Replies
  1. ஆயிரம் ஆண்டுகள் அல்ல! நூறு ஆண்டுகள்! சோ சால், ஹசார் சால் அல்ல! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 14. ரெண்டு ஹிந்திப் பண்டிட்டுகள் (ஸ்ரீராம் வெங்கட்). நாங்கள்லாம் ஒரிஜினல் தமிழர். தமிழைத் தவிர அரசியல்வாதிகளால் அனுமதிக்கப்படாத பிற மொழிகள் தெரியாது.

  ReplyDelete
  Replies
  1. ஹிந்தி பண்டிட்! :))

   அரசியல்வாதிகளால் அனுமதிக்கப்படாத பிற மொழிகள்! :) அவர்கள் வீட்டில் உள்ள அனைவருமே படித்து விட்டார்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 15. பாம்பாட்டி!! ஆனா நம்மூருல இப்படி வாசிக்கறாதுஇல்ல..முன்னாடி எல்லாம் நல்ல காலம் பிறக்குதுனு ஒரு ஆளு வருவாரு....மாட்டுக்கு அலங்காரம் பண்ணி ஒருவர் பீபீ ஊதிக் கொண்டே அந்த மாடு தலை ஆட்டிக் கொண்டு வரும்.....செப்படி வித்தைக்காரர், சவுக்கால் ஒரு விதமான நடனம் ஆடிக் கொண்டு ஒருவர், இப்படி நிறைய பேர் வருவார்கல் கிராமத்திலிருந்த போது பார்த்துப் பழக்கம். இவர்கள் இன்னும் வருகிறார்களா தெரியவில்லை...பார்த்து ரொம்ப நாளாயிற்று. வடக்கில் இன்னும் இது போன்றவை இருக்கத்தான் செய்கிறது...பாட்டை மிகவும் ரசித்தோம் ஜி! நல்ல நல்ல பதிவுகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 16. காணொளி அருமை. பாடலும் குழந்தையின் நடனமும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....