எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, April 30, 2017

சம்பா ஓவியங்கள் – என்ன அழகு எத்தனை அழகு!CHசம்பா ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டம். பெரும்பாலான மாவட்டங்கள் மலைப் பிரதேசமாக இருக்க, இந்த மாவட்டம் ஒரு சமவெளியில் அமைந்துள்ளது. ராவி நதியின் சமவெளியில் அமைந்துள்ள இந்த மாவட்டம் ஹிமாச்சலப் பிரதேசத்தின் முக்கியமான சுற்றுலா தளம்.  பழமையான கோவில்கள், அரண்மனையும் இங்கே உண்டு. CHசம்பா மாவட்டம் மூன்று விஷயங்களுக்கு பிரபலமானது - CHசுக் எனப்படும் மிளகாய் சட்னி, CHசம்பா செருப்பு மற்றும் CHசம்பா ஓவியங்கள்.......


CHசம்பா ஓவியங்கள் பஹாடி ஓவியங்கள்” – பஹாட்[d] என்றால் மலை, பஹாடி(di) என்றால் மலைப்பிரதேசம் - CHசம்பா ஓவியங்கள் மலைப்பிரதேச ஓவியங்கள் வகையைச் சார்ந்தவை.  இயற்கை வண்ணங்கள் கொண்டு துணிகளிலும் இலைகளிலும் மற்றும் காகிதங்களிலும் வரையும் இக்கலை பல நூற்றாண்டுகளாக இந்தப் பிரதேசத்தில் இருந்து வந்திருக்கிறது.  CHசம்பாவை ஆண்ட ராஜாக்களும் இந்த ஓவியக்கலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள். ஓவியர்களுக்கு போதிய ஊக்கம் தந்து அவர்களுக்கு பொருளுதவியும் செய்து வந்ததால் தொடர்ந்து வரையப்பட்டு வந்திருக்கின்றன.

பெரும்பாலான ஓவியங்கள், CHசம்பா ராஜாக்கள், ராதா-கிருஷ்ணர், சிவன் பார்வதி, ராமாயணக் காட்சிகள், பாகவதம், புராணங்கள் ஆகியவற்றின் காட்சிகளை நம் கண் முன்னே கொண்டு வருபவை.  CHசம்பா சமவெளியின் பழக்கவழக்கங்கள், நடனங்கள் ஆகியவற்றையும் இந்த ஓவியங்களில் வரைந்திருக்கிறார்கள். Bபஷோலி என அழைக்கப்படும் இயற்கை வண்ணங்களை வைத்து இந்த ஓவியங்களை வரைகிறார்கள். ராஜாக்கள் காலத்தில் இந்த ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்றாலும் தொடர்ந்து இந்த ஓவியங்களை வரையும் கலைஞர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். இப்போது வெகு சிலரே இந்த ஓவியங்களை வரைகிறார்கள்.

CHசம்பாவில் இருக்கும் ராஜா Bபுரி அருங்காட்சியகத்தில் இந்த பழமையான ஓவியங்களை பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். அங்கேயே இப்போதைய கலைஞர்கள் CHசம்பா ஓவியங்களை கைக்குட்டைகளில் வரைவது மட்டுமன்றி நூல் கொண்டும் தைக்கிறார்கள்.  சிறிய அளவு கைக்குட்டையில் ஓவியம் வரைந்து அதை விற்பனைக்கும் வைத்திருக்கிறார்கள்.  ஒரு கைக்குட்டையின் விலை ரூபாய் 2500/- மட்டுமே! பெரிய அளவு துணியில் வரையப்பட்ட ஓவியங்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஆரம்பிக்கிறது!

பழைய CHசம்பா ஓவியங்களின் A4 அளவு பிரதிகள், மற்றும் அஞ்சலட்டை அளவு பிரதிகளும் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். அவை குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. உங்கள் வீட்டிற்கு அழகு சேர்க்க, சம்பா ஓவியங்களின் பிரதிகளை வாங்கி சட்டம் போட்டு நமது வீட்டுச் சுவற்றில் மாட்டிக் கொள்ளலாம்.

சம்பாவில் பார்த்த சில ஓவியங்கள் இங்கே புகைப்படங்களாக, இந்த ஞாயிறில், உங்கள் ரசனைக்கு....
என்ன நண்பர்களே, ஓவியங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....


பின்குறிப்பு: கட்டுரையும், ஓவியங்களில் சிலவும் ஹாலிடே நியூஸ் இதழில் வெளிவந்தது. 

32 comments:

 1. ரசிக்கும்படி இருந்தன ஓவியங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. ஓவியங்கள் பிரமிப்பூட்டுகின்றது ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 4. ஆகா மிக அருமை சகோ...கண்கவரும் ஒவியங்களுக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 5. ஓவியங்கள் மிக அழகு ஜி. மிகவும் ரசித்தோம்...

  கீதா: கொஞ்சம் ராஜ்புதானி, மதுபாணி சித்திரங்கள் போல் இருக்கிறதோ...என்று தோன்றுகிறது...அந்தfeatures....ரொம்ப அழகு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 6. படம் சொல்லும் பல கதைகள்.

  தெளிவான புகைப்படத்தில் எங்கள் கண்முன்னே ஓவியங்களைக் கொண்டு வந்தமைக்கு நன்றி.

  தம

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஜி!

   Delete
 7. ஓவியங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   Delete
 8. நுட்பமான வேலைப்பாடு அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 9. அரசர்களும் பெருந்தனக்காரர் மட்டுமே வாங்கக் கூடும் ஓவியங்கள் அவற்றின் விலையும் அந்த ஓவியங்கள் விலைபோகாமல் ஓவியர்கள் சுணங்குகிறார்கள் என்று தோன்றுகிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 10. அனைத்தையும் இரசித்தேன் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்.

   Delete
 11. ஓவியங்கள் நல்லாத்தான் இருக்கு. ஹரியும் சிவனும் சேர்ந்திருக்கும் படம், இதுவரை பார்த்திராதது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   Delete
 13. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இந்த மாதிரி ஓவியங்கள் எல்லாம் ஜுஜுபி!5 ஸ்டார் ஹோட்டல்களில் வேண்டுமானால் அழகுக்காக வாங்கி மாட்டுவார்கள் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 14. கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அழகிய ஒவியங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 15. வித்தியாசமான ஓவியங்கள்... உங்கள் விளக்கங்களும் நன்றாக இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 16. ஓவியங்களை இரசித்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....