எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, April 25, 2017

தேரடி வீதியில்... - திருவரங்கம் சித்திரைத் தேர் 2017


வாங்க வாங்க...  தேர் பார்க்க வந்தீங்களா?
நானும் தேர் பார்க்கதான் வந்தேன்... என்ன மொட்டை அடிச்சுட்டாங்க!


திருவரங்கம் நகரில் இன்று திருத்தேர்! சித்திரைத் தேர்.  வருடத்திற்கு இங்கே மூன்று முறை தேர் இழுக்கும் வைபவம். சித்திரைத் தேர் கொஞ்சம் ஸ்பெஷல்! சுற்றுப்பக்க கிராமத்தினர் அனைவரும் முதல் நாளே வண்டி கட்டிக்கொண்டு வந்து திருவரங்கத்து வீதிகளில் தங்கி, காவிரி/கொள்ளிடத்தில் குளித்து [அவ்வளவு தண்ணீர் இருக்கா என்ன?] தேரோட்டத்தில் பங்குபெற்று, மகிழ்ச்சியோடு இருக்கும் நாள். தேரோட்டம் என்றாலே அனைவருக்குமே சந்தோஷம் தானே.

வேட்டு, குதிரை, யானை, மாட்டின் மேல் வைத்து கட்டப்பட்ட மேளம், குழந்தைகளை மகிழ்விக்க பல்வேறு பொம்மைகளின் விற்பனை, கடவுளர்களின் வேடங்கள் தரித்து வரும் ஆட்கள், தின்பண்டங்கள் விற்பவர், கழுத்துச் செயினை தலைப்பால மூடும்மா என்று அறிவிக்கும் காவல்துறையினர் என தேரடி வீதியே கலகலவென்று இருக்கும்! சித்திரை மாதத்துத் தேர், திருவரங்கத்தின் சித்திரை வீதிகளில் தான்! தைத் தேர் என அழைக்கப்படும் சிறிய தேர் தை மாதத்தில் கோவிலின் உத்திர வீதிகளில் ஓடும். இந்தச் சித்திரைத் தேர் தைத் தேரை விட பெரியது. ஆகவே, கொண்டாட்டங்களும் அதிகம்!

நேற்று தான் தலைநகரிலிருந்து திருவரங்கம் வந்து சேர்ந்தேன். தேர் சமயத்தில் இங்கே இருந்தால், வேறு என்ன வேலை – கையில் கேமராவுடன் காலையிலேயே சித்திரை வீதிக்குச் சென்று சில புகைப்படங்கள் எடுத்தாயிற்று! அனைத்து படங்களையும் இங்கே பகிர்ந்து கொள்வது முடியாதது! கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் என்பதால் இங்கே தேர்ந்தெடுத்த சில படங்கள் மட்டும். 

திருவரங்கத்தின் சித்திரைத் தேர், தேரடி வீதியில்.... அங்கே எடுத்த காட்சிகள் இதோ உங்களுக்காக!



பீப்பீ....  ஊதலாமா?



அப்பு என் கண்ண மறைக்குதே....


ஸ்ஸ்... அப்பாடா என்னா வெய்யில்....
சொம்பில் நீர் மோர் குடிக்கும் ஆண்டாள்!


தேரோடும் வீதியில் பக்தர்கள் கூட்டம்....
கோலாட்டமும் உண்டு! 


இதெல்லாம் இன்னிக்கு வித்துடுமா?
வியர்வையைத் துடைக்கும் உழைப்பாளி!


கோவிந்தா கோவிந்தா...  என்று வேண்டிக்கொள்ளும் பெண்மணி...
இந்த பொம்மை எல்லாம் வித்துட்டா....  யோசனையில் உழைப்பாளி...


பக்தியில் திளைக்கும் முதியவர்....


வாங்க... வாங்க... இங்கே விதம்விதமா விளையாட்டுப் பொருள் இருக்கே...




இப்படித்தான் இதை ஊதணும்!




யப்பா....  சத்தமே வரலப்பா!


தேரடி வீதியில் தேவதை வந்தா, திருவிழான்னு தெரிஞ்சுக்கோ....


எல்லோருக்கும் எல்லாமும் உண்டு!



இது வேற பாட்டு!


அவனவன் வித்தியாசமா பலூன்ல என்னென்னமோ செய்யறானே.... 
நம்ம கிட்ட இருக்கற வித்தை வேலைக்கு உதவுமா.....


கற்பூரம் விற்கும் பெரியவர்....
நடு ரோட்டுல வைக்காதீங்கன்னு சொன்னா எனக்கு வியாபாரம் எப்படி நடக்கும்! 


தேரடி வீதியில் மக்கள் கூட்டம்!


கோவில் யானை ஆண்டாள் வரதுக்கு முன்னாடி நாம போயிடணும்!
கொஞ்சம் காசு சம்பாதிக்கணும்!


நீங்க தேரைப் பாருங்க!  எனக்கு முக்கியமான வேலை இருக்கு!



பலூனு, பீப்பீ, ஊதல் எல்லாம் வேணுமே....
அம்மா வாங்கித்தருமா, தராதா?


ஆ.. தள்ளு தள்ளு தள்ளு.....



காயமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா!
பலூன் பொம்மைகள்....



வேஷப் பொருத்தம் சரியா இருக்கா?


தேர் வருது தேர் வருது..... 
தண்டோரா போட்டபடிச் செல்லும் மாடும் மனிதரும்!


தேரைப் பார்க்கலாம்னா, தூங்குதே இந்தப் பாப்பா....


பஞ்சு மிட்டாய்! பஞ்சு மிட்டாய்!
ஒரு விஷய்ம் கவனிச்சீங்களா? விற்பனை செய்பவரில் பலர் பீஹாரிகள்!



பொம்மை வாங்கிக் கொடுக்கலாம்ல! இவங்க ஓடறாங்களே!



நாங்கல்லாமும் தேர் பார்க்க தான் வந்தோம்!



பஜனை செய்தபடி செல்லும் பக்தர்கள்!


அதெல்லாம் சரி, தேரோட்டம்னு சொன்னீங்க, தேர் படம் ஒண்ணு கூட போடலையே.... என்று கேட்கப்போகும் நண்பர்களுக்காக....


தேரோட்டம்....


தேரோட்டம்....



தேரடி வீதியில் தேரோட்டம் பார்க்க வந்த எல்லோருக்கும் நன்றி!....

என்ன நண்பர்களே, சித்திரைத் தேரோட்டத்தினை ரசித்தீர்களா? உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்


வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....

28 comments:

 1. அனைத்து புகைப்படங்களும் ஸூப்பர்

  தேரடி வீதியில் தேவதையை புகைப்படம் எடுத்தது தேவதைக்கு தெரியுமா ஜி ?

  ReplyDelete
  Replies
  1. தேரடி வீதியில் தேவதை! :) எல்லாமே சின்னச் சின்ன தேவதைகள் தான்! அவங்களுக்கும் காண்பித்தேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 2. அடாடா ...அருமையான படங்கள் ...நேரில் பார்த்தைவிட அழகாகவே இருக்கு ..


  நீங்கள் கேமராவோடு சென்றதையும் பார்த்தேன் ...ஆனால் அழைத்து , அறிமுகம் படுத்தி கொள்வதற்கு இயலவில்லை ....

  உங்கள் பதிவில் தேரோட்ட படங்கள் வந்தால் கூறவேண்டும் என நினைத்தேன் ...

  ReplyDelete
  Replies
  1. அடடா, அழைத்திருக்கலாமே! நீங்களும் திருவரங்கத்திலா? இன்னும் சில நாட்கள் இங்கே தான் வாசம்! முடிந்தால் சந்திக்கலாம்! தொடர்பு விவரங்கள் எனது மின்னஞ்சலுக்கு [venkatnagaraj@gmail.com] அனுப்புங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 3. ரங்கா.. ரங்கா.. எல்லாரையும் காப்பாத்த வேணும் ரங்கா!..

  ReplyDelete
  Replies
  1. அனைவரையும் காப்பாற்றட்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. அருமையான தேரோட்ட படங்கள்.
  நேரில் தேரோட்டம் பார்த்த அனுபவம் தந்தது.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 5. அனைத்து புகைப்படங்களும் அருமை

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமாஷங்கர் ஜி!

   Delete
 6. அழகிய படங்கள். வண்ணங்களும், உணர்வுகளும் சங்கமம்!

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாண்டியன் சுப்ரமணியன் ஜி!

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 8. திரு விழாக் கூட்டத்தில் இருந்தது போல
  இருக்கிறது
  படங்கள் மிக மிக அற்புதம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

   Delete
 9. படங்கள் கொஞ்சம் தான்னு சொல்லிட்டுக் கடைசியில் படங்களின் மூலமே தேரோட்டத்தைக் காட்டி விட்டீர்கள். அருமை! மற்றப் பதிவுகளுக்குப் பின்னர் வரணும்! :)

  ReplyDelete
  Replies
  1. எடுத்தது இன்னும் அதிகம். பகிர்ந்தவை கொஞ்சமே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 10. எங்கள் கிராமத் தேருக்கு அழைப்பு வந்தாகி விட்டது மூன்று ஆண்டுகளுக்குமுன் சென்று பார்த்தது எத்தனை எத்தனை மனிதர்கள் படங்களில் ரசனை தெரிகிறது

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஊர் தேர் சென்று வாருங்கள். அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 11. ஜி படங்களும் விவரணமும் அருமை....அடா நானும் நிறைய படங்கள் எடுத்து தள்ளிடுவேன்...அதுவும் சில சமயங்களில்.
  உங்களுக்கு ஹிடும்ப. கோயிலில் பேட்டரி தீர்ந்தது போல் முக்கியமா எடுக்கும் போது... சார்ஜ் தீரும்...அழகா இருக்கு எல்லா படமும். கோவிலின் முன் ஆடும் ஒரு பாட்டு....தேரடி வீதி........திருவிழானு தெரிஞ்சுக்கோ.....நினைவுக்கு வருது

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலும் பயணத்தில், நாள் முழுவதும் புகைப்படம் எடுக்க வேண்டிய சமயத்தில், இரண்டாவது பேட்டரி வைத்துக் கொள்வது நல்லது! நிறைய சமயம் தேவையாக இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   Delete
 12. சித்திரை தேரோட்டத்தை நேரில் சென்று பார்த்தது போல் உணரவைத்துவிட்டீர்கள் அருமையான படங்கள் மூலம். பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 13. அத்தனை படங்களும், பகிர்வும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 14. அன்றைக்கே பார்த்து விட்டேன். மீண்டும் ஒருமுறை படங்களை ரசித்தேன். மாணவப் பருவத்தில் ஸ்ரீரங்கம் தேர்த்திருவிழா காண வந்து இருக்கிறேன். அன்றைக்கு ஒவ்வொரு வீதியிலும் நிழலடர்ந்த மரங்கள். இன்றைக்கு எல்லாமே வெட்ட வெளியில். - வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நிழலடர்ந்த மரங்கள்... இப்போது வெட்டவெளி... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....