செவ்வாய், 4 ஏப்ரல், 2017

மகளின் – ஓவியங்கள் – கைவேலைகள் – ஒரு தொகுப்பாக – இந்த இனிய நாளில்!மகளின் ஓவியங்கள் மற்றும் கைவேலைகளை அவ்வப்போது முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருந்தாலும், சமீபத்தில் வலைப்பூவில் பகிரவில்லை. முகப்புத்தகத்தில் பகிர்வது சில சமயம் திரும்பி எடுப்பதில் பிரச்சனைகள் உண்டு. இங்கேயும் ஒரு சேமிப்பாக, மற்றும் அங்கே பார்க்காதவர்கள் வசதிக்காகவும்…..


முதலில் பென்சில் ஓவியங்கள், பிறகு க்ரேயான்ஸ் கொண்டு வண்ணம் தீட்டிக்கொண்டிருந்த மகள் இப்போதெல்லாம் வாட்டர் கலர் கொண்டு வரைந்து கொண்டிருக்கிறாள். சமீபத்தில் வரைந்த இரண்டு வாட்டர் கலர் ஓவியங்கள் கீழே…


பாரத் மாதா


ராதா கிருஷ்ணர்

சமீபத்தில் தனக்குச் செய்து கொண்ட சில்க் த்ரெட் வளையல்கள், பேப்பர் க்வில்லிங்க் மோதிரங்கள்…


சில்க் த்ரெட் வளையல்கள்


பேப்பர் க்வில்லிங்க் மோதிரங்கள்

மேலும் ஒரு ஓவியம் கீழே….


இன்றைக்கு மகளின் கைவண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்வதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. இதே நாளில் தான் எங்கள் செல்ல மகள் எங்கள் வாழ்வில் அர்த்தம் தர வந்த நாள். ஆம் இன்று எங்கள் மகளின் பிறந்த நாள்.  இந்த நாள் இனிய நாள்.  எங்கள் வாழ்வில் வசந்தம் வந்த நாள் இன்று தான். அந்த நாள் இன்றும் இனிமையாய் மனதில்.  திருவரங்கத்தின் பங்கஜம் நர்சிங் ஹோம் – கொசுக்கடி கூடிய ஒரு இரவில் – அவள் பிறக்க, இரவு முழுவதும், வாசலில் காத்திருந்து பூங்குவியலாய் மகளைக் கையில் ஏந்திய நாள் இன்று தான். இதற்கு முன்னரும் நட்பு வட்டத்தின், உறவினர்களின் குழந்தைகளை  எனது கைகளில் ஏந்தியிருந்தாலும், எங்கள் குழந்தையை கைகளில் வாங்கியபோது ஏற்பட்ட உணர்வு, வார்த்தைகளில் மட்டும் சொல்லிவிட முடியாதது.

”மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக்கூடாது என்று தான் அனைத்து அப்பாக்களும் ஆசைப்படுகிறார்கள்”. வயிற்றில் சுமக்காவிட்டாலும், பெரும்பாலான அப்பாக்கள் தங்கள் குழந்தைகளை நெஞ்சில் சுமக்கிறார்கள்.  அப்பாக்களுக்கு தங்கள் பாசத்தினை வெளிக்காட்டத் தெரிவதில்லை என்றாலும், எப்போது தன் குழந்தையை – எத்தனை வயதானாலும், குழந்தை தான் – பார்த்தாலும் ஒரு வித மயக்கத்தோடு, பாசத்தோடு தான் பார்க்கிறார்கள்.  சமீபத்தில் கூட எனது மகள் பற்றி பதிவொன்றில் சிலாகித்திருந்தேன்.

இன்று பிறந்த நாள் காணும் எங்கள் செல்லமகளுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். உன் வாழ்வில் என்றும் இன்பமே நிறைந்திருக்கட்டும்….

Happy Birthday Chellam!


வெங்கட்
புது தில்லி.

42 கருத்துகள்:

 1. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ரோஷினிக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 2. முதலில் செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு நலமுடன் வளமுடன்.

  சித்திரமும் கைப்பழக்கம் என்பது இங்கு மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. ஓவியமும் கைவினைகளும் சிறப்பு.பாராட்டுகளும் வாழ்த்துகளும் செல்லம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்.

   நீக்கு
 3. ரோஷ்ணியின் திறமைக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. ரோஷினி! வாழ்க பல்லாண்டு .
  ஓவியங்களும் கைத்திறனும் அபாரம்.படிப்பை மட்டுமே வலியுறுத்தாமல் மற்ற திறமைகளையும் ஊக்குவிக்கும் பெற்றோர் அமைந்தது ரோஷினியின் அதிர்ஷ்டம்தான். சாதனைகள் படைக்க வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 5. இனிய வாழ்த்தும் ஆசியும் ரோஷ்ணிக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
 6. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாப்பா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஹரி ராஜ்.

   தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி.

   நீக்கு
  2. ஆம் வெங்கட், நீண்ட நாள் வாசகர்

   நீக்கு
  3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹரி ராஜ்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 8. மகளுக்கு வாழ்த்துகள். மகளை ஊக்குவிக்கும் பெற்றோருக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 9. எல்லா நலன்களையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்க..
  அன்பின் ரோஷிணிக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 10. ரோஷ்ணி செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. அழகான வியக்கவைக்கும் கைத்திறமை கொண்டவள்... ரோஷணியின் ஓவியங்களில் ஒரு அபாரமான ஈர்ப்பு இருக்கிறது.. அவளுக்கென்று ஒரு பாணி உருவாகிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஊக்கமளித்தால் ஓவிய உலகில் அவளுக்கென்று ஒரு இடம் உருவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 11. ரோஷ்ணி குட்டியின் ஓவியங்கள் வெகு அழகு மட்டுமல்ல க்வில்லிங்க் சில்க் த்ரெட் வளையல்கள் எல்லாம் ஹப்பா ரொம்ப அழகு...நல்ல திறமை இருக்கிறது!! தனித்திறமையில் மிளிர்கிறாள் குழந்தை!!! தொடர்ந்து முயற்சி செய்து ஓவியம் ப்ரொஃப்ஷணலாகக் கற்றுக் கொண்டால் நிச்சயமாகத் தனக்கென்று ஓரிடம் பிடித்துக் கொள்வாள்!! அதற்கும் வாழ்த்துகள்! மேன்மேலும் ரோஷ்ணிக் குட்டிக்கு எல்லா செல்வங்களும் கிடைத்து மகிழ்வோடு நீடூழி வாழ்ந்திட எங்கள் இருவரின் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்! குழந்தைக்கு ஆதரவாகவும், உற்சாகப் படுத்தி ஊக்குவித்து அவள் திறமைகளை வளர்க்கும் உங்களுக்கும் உங்கள் சகோதரி ஆதிக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 12. ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் ரோஷினி செல்லத்துக்கு ..நான் பதிவுலகம் வந்த நாள் முதல் ஆதி மற்றும் ரோஷினி வலைப்பூக்களை தொடர்ந்து வாசிப்பேன் ..ஓவியம் குவில்லிங் என மிக அழகா அனைத்தையும் செய்கிறாள் ..மனமார்ந்த வாழ்த்துக்கள் அவளை ஊக்குவிக்கும் உங்களுக்கும் ஆதிக்கும் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.

   நீக்கு
 14. இன்று பிறந்த நாள் காணும் ரோஷினிக்கு வாழ்த்துகளும் ஆசிகளும்! அவரது கைவண்ணத்தில் வந்துள்ள படங்களும், தயாரித்துள்ள சில்க் த்ரெட் வளையல்கள், மற்றும் பேப்பர் க்வில்லிங்க் மோதிரங்களும்… அருமை! பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 15. மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கைவண்ணத்தில் கலை வண்ணம் கண்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   நீக்கு
 16. ரோஷிணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கைவேலைகள் மிக அருமை.
  குழந்தை எல்லா நலங்களும், வளங்களும் பெற்று வாழ இறைவன் அருள்புரிவார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 17. தங்கள் அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 18. புலிக்கு பிறந்தது பூனையாகுமா ?நண்பர்களிடம் உங்கள் மகளின் பெயர் மிகவும் பிரபலம் என்பதால் ,பதிவில் எங்கேயும் குறிப்பிடவில்லையோ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 19. பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஷிணி.

  கைவண்ணங்கள் அழகோ அழகு.மனமார்ந்த பாராட்டுகள் ரோஷினிக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   நீக்கு
 20. மகளின் ஓவியங்கள் மிக அருமை, கண்களை எவ்வளவு தத்ரூபமாக பெயிண்ட் பண்ணியிருக்கிறா, வாழ்த்துக்கள்.

  குயிலிங் மிக அழகாக செய்திருக்கிறா, இதுவரை நான் குயிலிங் நகைகள் செய்ததில்லை, கார்ட் தான் செய்துள்ளேன், மகள் மிக அருமையாகச் செய்திருக்கிறா. ஊக்கம் கொடுத்து இன்னும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி, நிறையச் செய்ய வையுங்கோ.

  மகளுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....