ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

சாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்புகடந்த வியாழன் அன்று தில்லியில் நடந்த சுற்றுலா பருவம் நிகழ்ச்சி பற்றி எழுதும்போது, அங்கே பார்த்த விஷயங்கள், எடுத்த படங்கள் ஆகியவற்றை ஞாயிறில் வெளியிடுகிறேன் என்று சொல்லி இருந்தேன். இன்றைக்கு அந்தப் பதிவு அல்ல என்றாலும், இன்றைக்கு இங்கே விதம் விதமாய் இனிப்பு தான் தரப் போகிறேன் – இதில் சில இனிப்பு வகைகளை நீங்கள் கேட்டிருக்க/ சுவைத்திருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் எனக்குள் இருந்ததால் தான் இப்படி. எதற்காக இத்தனை வகை இனிப்பு என்ற கேள்வி பிறந்தால் உங்களுக்கு ஒரு சபாஷ்! காரணம் இருக்கிறது – கடைசியில் சொல்கிறேன்! முதல் இனிப்பாக உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து ஒரு இனிப்பு!


சிங்கோரி...

புதன், 26 செப்டம்பர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – வெஜிடபிள் பேட்டீஸ் - ஷிம்லா ஒப்பந்தம் இங்கே தான்…


ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 4

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


திங்கள், 24 செப்டம்பர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – க்ராண்ட் ஹோட்டல் – ஷிம்லா நகர் வலம் ஆரம்பம்…ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 3

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ஷிம்லா நகரில் சூரியோதயம்... 
தங்கிய அறையிலிருந்து எடுத்த காட்சி...
ஷிம்லா ஸ்பெஷல்....

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

திருப்பதி பிரஹ்மோத்ஸவம் – ஒரு உலா


நேற்றைய காஃபி வித் கிட்டு பதிவில் சொன்னது போல தலைநகரில் இருக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் கோவில் ஊழியர் ஒருவர் தினம் தினம், திருப்பதியில் நடக்கும் பிரஹ்மோஸவத்தின் படங்களை அலைபேசி மூலம் பகிர்ந்து கொள்கிறார். அந்தப் படங்கள் இன்றைய ஞாயிறில் ஒரு உலாவாக.  இருந்த இடத்திலிருந்தே திருப்பதி நிகழ்வுகளைப் பார்க்க ஒரு வசதி – நல்ல விஷயம் தானே… எனக்கு வந்த படங்களை, காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  இதோ பிரஹ்மோத்ஸவம் படங்கள் – உங்கள் பார்வைக்கு.


என்ன நண்பர்களே, நிழற்படங்களைப் பார்த்து ரசித்தீர்களா? இன்னும் படங்கள் அவரிடமிருந்து வந்தால், அவற்றையும் தொகுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பூதேவி, ஸ்ரீதேவி சமேத வேங்கடேசப் பெருமானின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்….

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

சனி, 22 செப்டம்பர், 2018

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

தஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் – பகுதி மூன்று


சென்ற இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் தஞ்சை பெரிய கோவிலில் கடந்த மே மாதம் எடுத்த படங்களை பகிர்ந்து கொண்டேன். முதல் இரண்டு பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே.

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

வியாழன், 13 செப்டம்பர், 2018

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

சனி, 8 செப்டம்பர், 2018

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் –– மதிய உணவு – தில்லி நோக்கி – பயணத்தின் முடிவு


ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 28

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


பயணத்தின் கடைசி நாள் - மறையும் சூரியன்...
உதய்பூர் - ஜோத்பூர் பயணத்தில்...

வியாழன், 6 செப்டம்பர், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் கோட்டை – உமைத் பவன் அரண்மனை அருங்காட்சியகம்ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 27

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...

புதன், 5 செப்டம்பர், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் கோட்டை – வானத்தில் பறக்கலாம்ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 26

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

சாப்பிட வாங்க – ராஜஸ்தானின் அப்பள சப்ஜி

ஒவ்வொரு ஊருக்கும், மாநிலத்திற்கும் என்றே தனித்துவமான சில சமையல் – உணவு வகை உண்டு. ஆந்திரப் பிரதேச மக்கள் போலவே ராஜஸ்தானியர்களும் காரசாரமாக சாப்பிடுபவர்கள் – வெறும் சிகப்பு மிளகாயை மைய அரைத்து, அதனுடன் சப்பாத்தி சாப்பிடும் ராஜஸ்தான் மாநில நண்பர்கள் சிலரை நான் பார்த்ததுண்டு. அவர்கள் சாப்பிடுவதைப் பார்க்கும்போதே நமக்கு கண்களில் நீர் வழியும் – நவதுவாரங்களும் எரிவது போல உணர்வு வரும்! ஆனால் அந்த ராஜஸ்தான் மாநிலத்திற்கென்றே சில சிறப்பு உணவு வகைகள் உண்டு – ஏற்கனவே சில உணவு வகைகள் பற்றி எனது பக்கத்தில் பகிர்ந்தது உண்டு.  இன்றைக்கு பார்க்கப்போகும் உணவு ராஜஸ்தானியர்கள் அடிக்கடி செய்யும் ஒரு சப்ஜி – சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உகந்தது. என்ன எப்பப் பார்த்தாலும் தால் தானா என்று போரடிக்கும்போது செய்யலாம்.

உணவகங்களிலும், நண்பர்கள் வீட்டிலும் சாப்பிட்டதுண்டு என்றாலும், சில நாட்கள் முன்னர் தான் முதன் முறையாகச் செய்து பார்த்தேன். நன்றாகவே வந்தது. எப்படிச் செய்வது, என்ன பொருட்கள் தேவை என்பதைப் பார்க்கலாம். படங்கள் தனித்தனியாக எடுக்கவில்லை – Final Product மட்டுமே எடுத்தேன். அது மேலே – பதிவின் ஆரம்பத்தில். சரி இந்த சப்ஜி செய்ய என்ன தேவை?

தேவையான பொருட்கள்:

அப்பளம் – 2 [மசாலா அப்பளம் கிடைத்தால் ஓகே. இல்லை என்றால் நம் ஊர் உளுந்து/அரிசி அப்பளமும் ஓகே.]

வெங்காயம் – 1, தக்காளி – 2, சிகப்பு மிளகாய் – 2, கடுகு – ஒரு ஸ்பூன், ஜீரகம் – அரை ஸ்பூன், தேஜ் பத்தா என ஹிந்தியில் அழைக்கப்படும் பிரியாணி இலை – 1, மஞ்சள் பொடி – 1 ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், தயிர் – இரண்டு ஸ்பூன், தனியா பொடி – 1 ஸ்பூன், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, கரம் மசாலா – 1 ஸ்பூன், பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, மிளகாய் பொடி – 1 ஸ்பூன் [காஷ்மீரி மிர்ச்-ஆக இருந்தால் நலம் – நல்ல கலர் வரும்! – காரம் அதிகம் வேண்டுமென்றால் இரண்டு ஸ்பூன் போட்டுக் கொள்ளலாம்], தேவையான அளவு உப்பு - அம்புட்டுதேன்!

எப்படிச் செய்யணும் மாமு?  

வெங்காயம் நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைச்சு வைச்சுக்கோங்க. அதே மாதிரி தக்காளியையும் நறுக்கி அரைச்சு வைச்சுக்கோங்க.  அப்பளம் சுட்டு வைச்சுக்கணும் – பச்சையா சிலர் போடுவாங்கன்னாலும், அத்தனை நல்லா இருக்காது. சுட்ட அப்பளம் தான் நல்லா இருக்கும் இந்த சப்ஜிக்கு.

வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும், கடுகு போட்டு வெடிச்சதும், ஜீரா போடுங்க, தேஜ் பத்தா, சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள் எல்லாம் வரிசையா போட்டு வதக்குங்க….

அப்புறம் அரைத்த வெங்காய விழுதை போட்டு நல்லா வதக்கணும் – கலர் மாறினதும் அரைத்த தக்காளி விழுதையும் போட்டு வதக்குங்க. நல்ல வதங்கின பிறகு மஞ்சள் பொடி, தனியா பொடி, கரம் மசாலா, தேவையான அளவு உப்பு போட்டு நல்ல வதக்கிட்டே இருக்கணும். நல்ல சுருண்டு வந்த பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு, சிம்மில் வைச்சுடுங்க. தயிர் சேர்த்து கலக்குங்க. அப்பளத்தினை கொஞ்சம் துண்டுகளாக்கி அப்படியே தூவுங்க. பிறகு ஒரு கலக்கு! அடுப்பை அணைச்சிட்டு, வாணலியில் இருப்பதை Serving Bowl-க்கு மாத்திக்கோங்க! அப்படியே கொத்தமல்லி தழைகளை தூவி அலங்கரிங்க. அவ்வளவு தான் ராஜஸ்தானி அப்பள சப்ஜி தயார்! சப்பாத்தி கூட நல்லாவே இருக்கும்.

நான் இந்த செய்முறையை Youtube-ல பார்த்து தான் செய்தேன். ஹிந்தி தெரிஞ்சவங்க, கீழே காணொளியாகவும் பார்க்கலாம்!நம்ம ஊர்ல வெத்தக் குழம்பில் கூட இப்படி அப்பளம் போட்டு செய்வதுண்டு. இங்கே குழம்பு கிடையாதே அதான் சப்ஜில போட்டு செய்யறாங்க போல! என்ன உங்க வீட்டுலயும் ராஜஸ்தானி அப்பள சப்ஜி ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்றீங்களா?  

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.