செவ்வாய், 25 செப்டம்பர், 2018

கதம்பம் – வெல்லப் புட்டு – நாகபஞ்சமி – அன்பு சூழ் உலகு – அப்பாவியுடன் சந்திப்புவெல்லப் புட்டு – 22 செப்டம்பர் 2018:


 
சென்ற வருடம் இதே தேதியில் கொலு ஆரம்பிச்சு மூன்று நாள் ஆச்சு போல. நவராத்திரி வெள்ளிக்கிழமையில் புட்டு செய்திருக்கேன். மார்க் தம்பி மெமரீஸ்ல நினைவூட்டறாரு! சுவையான அந்தப்புட்டை முதல்முறையாக மிகவும் மெனக்கெட்டு செய்தேன். அன்று நிறைய பேர் வந்ததால் சுவை பார்க்க மட்டுமே கிடைத்தது!

படித்ததில் பிடித்தது – 20 செப்டம்பர் 2018:

நாகபஞ்சமி - இந்திரா செளந்தர்ராஜன்சவத்தூர் என்ற ஊரில் சாலையோரத்தில் இருக்கும் ஒரு புளியமரமும், அதில் வசிக்கும் பாணாமுனியும் 12 அடி நீளமுள்ள நாகமும் தான் முக்கிய கதாபாத்திரங்கள்.

அதே மரத்தடியில் அமரும் முத்துப்பேச்சிக்கு ஒருநாள் நாகத்தால் அதிசயம் நிகழ்கிறது. முத்துப்பேச்சியின் காதலன் ராஜமாணிக்கம். அதன் பின் திருமணம் செய்து கொள்ள சற்றே தடுமாறுகிறான்.

மாயவரத்தில் வசிக்கும் 35 வயதாகியும் திருமணம் தடைப்படும் ஜானகி அவளின் தம்பி வாசு. வாசுவின் காதலி பானு. இவர்களுக்கும் முத்துப்பேச்சிக்கும் தொடர்பு உண்டாவது நாடி ஜோதிடத்தால். இவர்கள் அனைவரின் வாழ்க்கைக்கும் இனியதொரு விடை கிடைக்கிறது சவத்தூரில். எப்படி?

இந்தப் புத்தகத்தில் சர்ப்பங்களைப் பற்றியும், சர்ப்ப தோஷம் எதனால் ஏற்படுகிறது. இதற்கான பரிகாரம் என்ன? நாகபஞ்சமியின் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை ஆங்காங்கே விளக்கியுள்ளார் நூலாசிரியர்.

தோழி தந்த புத்தகத்தில் இதுவும் ஒன்று. ஞாயிறன்று மதியம் வாசிக்கத் துவங்கினேன். பாதி முடித்து வைத்த பின்னர் வேலை மும்முரங்களால் தொடர முடியவில்லை. பின்னர் வாசித்து முடித்தேன்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத புத்தகம். வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் வாசியுங்கள்.

பதிவர் சந்திப்பு – 21 செப்டம்பர் 2018:


சஹானாவுடன் மகள்....


புவனாவும் புவனாவும்....


புவனாவின்  அன்புப்பரிசு....


மகளுக்குக் கிடைத்த அன்புப்பரிசு....

நேற்றைக்கு இரவு தோழியை அவங்க குடும்பத்துடன் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. வலைப்பூ மூலமாக பழக்கம் இருந்தாலும் நேரில் சந்தித்தது 2012ல் நாங்க திருவனந்தபுரம் செல்ல கோவை வழியாக தேர்ந்தெடுத்த பயணத்தில் தான்.

அதன் பிறகு 2013ல் அவங்க தம்பதியாய் திருச்சி வந்த போது பார்த்துக் கொண்டோம். அந்தத் தோழி தன் எழுத்தால் அழகான கதைகள் பல தந்து நம்மைக் கவர்ந்தவர். கலாட்டாவான எழுத்துக்குச் சொந்தக்காரர். ஆனா பெயர் மட்டும் அதற்கு எதிர்ப்பதம். அப்பாவியாம்...:) இட்லி என்றாலும் இவர் நினைவுக்கு வருவார்..:) சரி. சரி. பாவம் விட்டுடுவோம்...:)

இருவருமே வலைப்பூவிலிருந்து முகப்புத்தகத்திற்கு குதித்தவர்கள்.

புவனாவை புவனா சந்தித்துக் கொண்ட தருணம். சஹானா குட்டியை பார்ப்பது முதல் முறையாக இருந்தாலும் குழந்தையிடம் வேற்று முகமே இல்லை. பல வருடங்கள் பழகியது போல் கிளம்பும் வரை என்னையும் மகளையும் விட்டு விலகவில்லை. மடி மீது உட்கார்ந்து கொண்டும், ஊட்டி விடச் சொல்லியும் அன்புக் கொஞ்சல்கள்.

மகளுக்கும், எனக்கும் புவனாவின் அன்புப் பரிசுகள். புகைப்படச் சுற்று என நேரம் நல்ல முறையில் கடந்தது. அவர்கள் கிளம்பியப் பின்னரும் நாங்கள் சஹானா குட்டியை நினைத்துக் கொண்டோம்.❤️

மனம் நிறைந்தது புவனா. நம் நட்பு என்றும் தொடரட்டும்.

கொலு பொம்மைகள் - நவராத்ரிஇன்று கடைத்தெருவுக்குச் சென்ற போது கொலு பொம்மைகள் கடை போடப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு. ராமர் குகனுடன் படகில் செல்வது, வசுதேவர் கிருஷ்ணனை கூடையில் வைத்து எடுத்துச் செல்வது, அஷ்டலஷ்மி செட், சிவன் பார்வதி, மோட்டூ பத்லூ, சோட்டா பீம் என்று ஏகப்பட்ட கலெக்‌ஷன்ஸ்.

அண்ணே!! ஒரு ஃபோட்டோ எடுத்துக்கட்டுமா??? எடுத்துக்கோம்மா. சிவன் பார்வதி எவ்வளவுண்ணே?? 500 ரூவாம்மா. வீட்டுல கேட்டுட்டு வரேன். என்று சொல்லி நகர்ந்தேன்.

எனக்கும் மகளுக்கும் சிவன் பார்வதி ரொம்ப பிடித்திருந்தது. சிவன் பார்வதியை அரவணைத்து ஒரு பார்வை. தேவி வெட்கி தலைகுனிகிறாளோ!!!

குப்பையிலிருந்து உரம்:
உரமாக்குவது குறித்தும், மாடித்தோட்டம் குறித்தும் நான் பகிர்ந்து கொண்ட விஷயங்களை வாசித்த நட்புகள் சிலர் மெசெஞ்சரிலும், நேரிலும் லிங்க்குகள் தந்தனர்.

அந்த இணைப்புகளில் போய்ப் பார்த்தும் வாசித்தும் நான் தெரிந்து கொண்ட விஷயங்கள் ஏராளம்.

நம்ம பட்ஜெட்டுக்கு ஏற்றாற் போல் உரம் செய்யவும், மாடித்தோட்டம் அமைக்கவும் தேர்ந்தெடுக்கலாம். அவ்வளவு ரகம் ரகமாய் இருக்கு.

இதற்கு அரசாங்கம் சொல்லித் தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. நாமாகவும் முன் வந்து செய்யத் துவங்கலாம். நாட்டைத் தூய்மையாக்கும் பணியில் நம்முடைய சிறு பங்களிப்பை அளிக்கலாமே!!!

அன்பு சூழ் உலகு – 22 செப்டம்பர் 2018நேற்று தோழி ஒருவரின் அன்புப்பரிசு!! கடைக்குச் சென்ற போது என் நினைவு வர இந்தப் பரிசினை வாங்கி வந்தாராம்.

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் Binச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

34 கருத்துகள்:

 1. இனிய காலைவணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

  கதம்பம் சூப்பரா இருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அன்புத் தோழி சந்திப்பு எல்லாம் மகிழ்ச்சி தருபவை...பரிசுகள் நன்றாக இருக்கின்றன. ஸ்வீட் புட்டு நல்லா வந்திருப்பது தெரிகிறது. இயற்கை உரம் ஐடியா நன்றாக இருக்கு..ஆம் அரசு செய்ய வேண்டும் என்று நினைப்பதைவிட நாமே முன்னெடுத்து ஒவ்வொருவரும் பங்களித்தால் நம் சுற்றுப்புறம் தூய்மை பெரும் தான்...

  படங்கள் எல்லாம் அழகு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. போன வருஷம் கொலுவே ஆரம்பித்து விட்டதா? இந்த வருஷம் எல்லாம் லேட்! குட்மார்னிங் மிஸஸ் அண்ட் மிஸ்டர் வெங்கட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   இந்த வருஷம் எல்லாமே லேட்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. இந்திரா சௌந்தரராஜன் கதைகள் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமிருக்காது. அப்பாவி உடனான சந்திப்புக்கு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரின் கதைகள் ஸ்வாரஸ்யம் தான். சில கதைகள் மட்டும் படித்ததுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. நானும் ஆஞ்சநேயர் கோவில் சென்றபோது அருகே கொலு பொம்மைக்கடை கண்டேன். நான் போட்டோ எடுத்ததை அங்கிருந்த பெண்மணி அவ்வளவாக ரசிக்கவில்லை. எனவே நானும் விலை கேட்டுவிட்டு நகர்ந்து விட்டேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் எடுப்பதை அனைவரும் ரசிப்பதில்லை. சில இடங்களில் நாம் எடுக்காமல் இருப்பது நலம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. முகநூலிலும் எல்லாவற்றையும் படித்தேன், ரசித்தேன், இங்கேயும். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 8. பல்சுவைப் பதிவு. பதிவர் சந்திப்பு மகிழ்வினைத் தந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 9. பல்சுவைக் கதம்பம்...
  படங்கள் எல்லாம் அழகு..

  வாழ்க!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 10. கதம்பச் செய்திகள் நன்று. புட்டு பார்க்கவே ஸ்வாத். கடைசிப் படம் மகளின் கைவண்ணமோன்னு நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 12. இனிய சந்திப்பு...

  அழகான கொலு பொம்மைகள்...

  உரம் சிறப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 13. டொலைக்காட்சி தொடராக வந்த விடாது கறுப்பு எழுதியவர்தானே இந்திரா சௌந்திர ராஜன் இம்மாதிரி கதைகள் எழுதுவதில் வல்லவர் நம் வலைப்பதிவர் ஒருவரின் உறவுக்காரர் என்றும் எங்கோ நினைவில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரது தொலைக்காட்சி தொடர்களும் பிரபலம் தான்.

   வலைப்பதிவரின் உறவுக்காரர் - அப்படியா... நான் அறிந்திருக்கவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 14. அனைத்தும் நூலில் படித்து விட்டேன்.
  பதிவர் சந்திப்பு அருமை.
  ரோஷ்ணியும் சஹானாவும் உள்பள்ம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 15. நாக பஞ்சமி நானும் படிச்சிருக்கேன்... தோழியின் பரிசு அருமை..

  தோட்டத்து வேலையில் ஆர்வம் இருக்கனும். இடமும், பணமும் அவசியமில்லை..

  சிவபார்வதி சிலை டாப் கிளாஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரி

  வெல்ல புட்டு அருமையாய் வந்திருக்கு.. செய்து சாப்பிடும் ஆசையை உண்டாக்கியது.

  "நாக பஞ்சமி" புத்தக கடையொன்றில் பார்த்தேன்.ஆனால் வாங்க வில்லை! இந்திரா செளந்தரராஜன் கதைகள் எனக்கும் பிடிக்கும். தாங்கள் சொன்னதை படிக்கும் போது சமயம் வரும். போது வாங்கி படிக்கத் தோன்றுகிறது.

  குழந்தைகள் போட்டோ, தங்கள் அன்பு தோழியுடன் எடுக்கப்பட்ட படம், பரிசுகள் படங்கள் அனைத்தும் அருமை. பதிவர்களுடன் கலந்துறவாடிய நாட்கள் இனி மையானவைதான்..
  கடை பரப்பியுள்ள கொலு பொம்மைகள் மிக அழகாக இருக்கின்றன. கதம்பம் மிக அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் ஸ்வாரஸ்யமாக இருக்கும். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 17. சிவன் பார்வதி பொம்மை மிக அழகு! வெல்லப்புட்டு நிச்சயம் மிகவும் சுவையாக இருக்கும் என்று புகைப்படம் சொல்லுகிறது! கதம்பம் மணம் வீசுகிறது!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....