ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

தஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் – பகுதி மூன்று


சென்ற இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் தஞ்சை பெரிய கோவிலில் கடந்த மே மாதம் எடுத்த படங்களை பகிர்ந்து கொண்டேன். முதல் இரண்டு பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே.

இப்போது இதோ மூன்றாம் பகுதியில் மேலும் இருபது படங்கள் உங்கள் பார்வைக்கு.  


படம்-1 -  சுற்றுச் சுவர் சிற்பம் ஒன்று...
தஞ்சை பெரிய கோவில்


படம்-2 - தஞ்சை பெரிய கோவில்


படம்-3 - தஞ்சை பெரிய கோவில்


படம்-4 -  நால்வர் சிலைகள்....
தஞ்சை பெரிய கோவில்


படம்-5 - சரக்கொன்றை மரம் - கோவில் வளாகத்தில்...
தஞ்சை பெரிய கோவில்


படம்-6 - தஞ்சை பெரிய கோவில்


படம்-7 - தஞ்சை பெரிய கோவில்


படம்-8 - தஞ்சை பெரிய கோவில்


படம்-9 - முதல் நந்தி அருகே ஆசிரியரும் முனைவரும்....
தஞ்சை பெரிய கோவில்


படம்-10 - தஞ்சை பெரிய கோவில்


படம்-11 - தஞ்சை பெரிய கோவில்


படம்-12 - தஞ்சை பெரிய கோவில்


படம்-13 - தஞ்சை பெரிய கோவில்


படம்-14 - தஞ்சை பெரிய கோவில்


படம்-15 - தஞ்சை பெரிய கோவில்


படம்-16 - தஞ்சை பெரிய கோவில்


படம்-17 - யானை உடலில் இருக்கும் கயிறு கூட அழகாய் செதுக்கி இருப்பதைக் கவனித்தீர்களா.... 
தஞ்சை பெரிய கோவில்


படம்-18 - தஞ்சை பெரிய கோவில்


படம்-19 - அம்பாள் சன்னதியில்....
தஞ்சை பெரிய கோவில்


படம்-20 - அம்பாள் சன்னதியில் மேற்கூரை ஓவியங்கள்....
தஞ்சை பெரிய கோவில்

நான் வருவதாகத் தகவல் தெரிவித்திருந்ததால் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களும் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களும் கோவிலுக்கு வந்தார்கள். சில மணித்துளிகள் பேசிக்கொண்டிருந்தோம். முனைவர் ஐயாவும், ஆசிரியர் ஐயாவும் தகவல்கள் நிறையவே சொன்னார்கள். தஞ்சை பெரிய கோவிலுக்குள் பிற்கால சேர்க்கைகளாக மூன்று இடங்களில் புத்தர் சிலைகள் உண்டு என்று சொல்லி அந்த சிலைகளைக் கொண்டு காண்பித்தார் முனைவர் ஐயா. அந்த சிலைகளின் படங்கள் இந்தப் பதிவில் வரிசையாக பகிர்ந்து இருக்கிறேன் [படம்-10, 11 மற்றும் 12]. பின்புறத்தில் இருக்கும் ஒரு நுண்ணியமான விஷயமும் சொன்னார். ஒரு சிறு ஈர்க்குச்சி போகும் அளவு துளைகள் உண்டு என்று ஒரு இடத்தினைக் காண்பித்தார் – சிலர் அங்கே ஈர்க்குச்சி கொண்டு துளைகளின் உள்ளே நுழைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள [படம்-13]. இப்படி பல தகவல்கள் அங்கே சொன்ன முனைவர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

என்ன நண்பர்களே, நான் எடுத்த படங்கள் உங்களுக்குப் பிடித்ததா என பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

34 கருத்துகள்:

 1. படங்கள் அருமை ஜி.
  முனைவர் அவர்களையும், கரந்தையார் அவர்களையும் கண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 2. குட்மார்னிங் வெங்கட். இன்னமும் தஞ்சாவூரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   அடடா.... தஞ்சை படங்கள் அலுத்துவிட்டதா.... :) தஞ்சை படங்கள் இன்றே கடைசி. அடுத்த வாரம் வேறு படங்கள் பகிர்ந்து கொள்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. அலுப்பா? இங்கேயா? அதெல்லாம் ஒன்றுமில்லை வெங்கட்...

   நீக்கு
  3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. நம் நண்பர்கள் இருவரையும் அங்கு கண்டதில் மகிழ்ச்சி. முனைவர் நுண்ணிய விவரங்கள் சொல்லி இருக்கிறார். அதே போல ஒரு வெளிநாட்டுக்காரர் சிற்பமும் இருக்கும். அதுவும் பிற்சேர்க்கை என்று சொல்வார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெளிநாட்டுக்காரர் சிலையும் - பார்க்கவில்லை. வேறு ஒரு கோவிலில் இப்படி வெளிநாட்டவர் சிலை பார்த்ததுண்டு. எந்த கோவில் என்பது நினைவில் இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. முதல் நந்தி முன்னர் சுவருக்குள்ளே இருக்கும். இப்போது சற்றே தலையை வெளியே நீட்டிய வண்ணமுள்ளதே....!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எடுத்த கோணத்தில் அப்படித் தெரியலாம். அதே இடத்தில் தான் இருப்பதாகத் தெரிகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. நீங்கள் அவசியம் தாராசுரமும், ஜெயங்கொண்டமும் செல்ல வேண்டும். இதைவிட அதிகமாய் ரசிப்பீர்கள். எல்லாப் படங்களும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாராசுரம் செல்ல வேண்டும். அடுத்த பயணத்தில் செல்ல நினைத்திருக்கிறேன். அடுத்த பயணம் எப்போது என்பது தான் தெரியவில்லை!

   ஜெயங்கொண்டம் - கங்கை கொண்ட சோழபுரம்? கங்கை கொண்ட சோழபுரம் செல்ல திட்டமிருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  அனைத்துப் படங்களும் தங்கள் புகைப்படம் எடுக்கும் திறனினாலும், உங்களது புகைப்பட கருவியினாலும் தெளிவாகவும், அழகாகவும் இருக்கின்றன.

  ஒவ்வொரு சிற்பத்திலும் கலைநயம் மிகுந்த நுண்ணிய வேலைப்பாடுகள் மிகவும் கவர்கிறது. வியக்க வைக்கிறது.

  தாங்கள் கூறுவது போல் யானை மேல் கட்டியிருக்கும் கயிறு கூட உண்மையான கயிறு போல தோற்றமளிக்கிறது.

  அம்பாள் சன்னிதியில் மேல் விதான சுவர் ஓவியங்கள் அனைத்தும் மிக அழகாக உள்ளது. பார்க்கப் பார்க்க திகட்டவில்லை .

  நண்பர்களை கண்டு பேசி கூடுதலாக விபரங்கள் அளித்தமைக்கும் நன்றியுடன் கூடிய மகிழ்ச்சி . பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிற்பங்களின் கலை அழகும், நேர்த்தியும் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது இல்லையா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 10. பதில்கள்
  1. ஆஹா.... எனது பதிவினை உங்கள் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

   நீக்கு
 11. படங்கள் அருமை. ஆனால் கொஞ்சம் இல்லை நிறையப் பொறாமையுடன்! :) ஏனெனில் நாங்க போனப்போக் காமிராவை வாங்கிப் படங்களை டெலீட் செய்துட்டுக் கொடுத்தாங்க! :( 2010 ஆம் வருடம்னு நினைக்கிறேன். எங்க பையரும் ஆசை ஆசையாகப் படங்கள் எடுத்துட்டுப் பின்னர் எடுக்க விடவில்லை! :( இன்னொரு முறை போனால் பார்க்கணும்! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த முறை யாருமே என்னிடம் படம் எடுப்பது பற்றி கேட்கவும் இல்லை. கேமரா கட்டணங்கள் பற்றி எதுவுமே எழுதி வைத்திருக்கவில்லை. இருந்திருந்தால் கொடுத்திருக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 12. தஞ்சைப் பெருங்கோயில் அழகு. என்ன இம்முறை கோயில் வாரமோ.. எங்கு பார்த்தாஅலும் கோயிலும் சுவாமியுமாக இருக்கு புளொக்குகள்.. நானும் ஒரு 25 பிள்ளையார் படங்கள் எடுத்துப் போடப்போறேன்ன்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... எங்கேயும் இருக்கிறார் இறைவன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞானி அதிரா.

   நீக்கு
 13. முன்பு ஒரு முறை கரந்த்சையார் தஞ்சை கோவிலில் காணப்பட்டஒரு சிலையைப் படமெடுது வெளியிட்டிருந்தார் ஒரு முதலை யானையைக் விழுங்குவதுபோல் என்னும்நினவு அதுபற்றி அவர் சொல்ல வில்லையா படம் எடுக்க வில்லையா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலை யானையை விழுங்குவது போல சிலை - பார்க்கவில்லை ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 14. படங்கள் அட்டகாசம் ஜி!! ரொம்ப ரொம்ப அழகாக இருக்கின்றன. என்ன ஒரு அருமையான கலை வண்ணம். மிகவும் ரசித்தோம் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 15. மகிழ்ச்சியான சந்திப்பு. அனைத்துப் படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது போன்ற சந்திப்புகள் ஊக்கம் தருபவை தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 16. ஒவ்வொரு படமும் மிக அழகு...அற்புத காட்சிகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....