வெள்ளி, 28 செப்டம்பர், 2018

காஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்


காஃபி வித் கிட்டு – பகுதி – 8

சாப்பிடலாம் வாங்க – அரிசா பித்தா:
தலைநகரில் கடந்த சில நாட்களாக [16-27, செப்டம்பர் 2018] நடந்த ”பர்யாடன் பர்வ்” நிகழ்வில் இந்தியாவின் பல மாநில உணவுகளும் கிடைத்தன. அப்படிக் கிடைத்த உணவுகளில் சிலவற்றைச் சுவைத்தோம். அப்படி ஒடிஷா மாநில ஸ்டாலில் சுவைத்த ஒரு இனிப்பு – அரிசா பித்தா! இனிப்பு என்றவுடன் சாப்பிடத் தோன்றியது. ஒரு பீஸ் 20 ரூபாய்! சரி என வாங்கிச் சுவைத்தோம் – அட நம்ம அதிரசம் தான் ஒடிஷாவின் அரிசா பித்தா! ஒரிசா செய்முறை எப்படி எனத் தெரிந்து கொள்ள நினைத்தால் கீழே உள்ள சுட்டியில் பார்த்துக் கொள்ளலாம்!


நடனம் நல்லது:

நடனம் நல்லதொரு உடற்பயிற்சியும் கூட. மனது சோர்ந்து கிடக்கும் சமயங்களில் மெல்லிய இசையை பின்னணியில் ஓடவிட்டு நடனம் ஆடுவது புத்துணர்வு தரும் விஷயம். நாம் நடனம் ஆடினால் பார்க்க நன்றாகவா இருக்கும் என்ற தயக்கம் வேண்டாம் – தனியாக இருக்கும்போது ஆட என்ன கவலை! சில சமயங்களில் ஆடுவதாக நினைத்துக் கொண்டு குதிப்பதுண்டு! J என்ன கீழ் வீட்டுக்காரர் தான் ”மேலே என்ன நடக்குது என்று குழம்பியிருப்பார்!”. இந்த நடனம் பாருங்களேன்!


இந்த வாரத்தின் ரசித்த பாடல் - பஞ்சாபி:

ஒரேடியா தெலுங்கு பாடலா பார்க்கறீங்க போலன்னு ஸ்ரீராம் இரண்டு வாரம் முன்னாடி சொன்னாரே. இதோ ஒரு பஞ்சாபி பாடல் – ஜூத்தி கசூரி என்று ஆரம்பிக்கும் பாடல்! பாருங்களேன்….


இந்த வாரத்தின் முகம்:ஜோக்கர் வேஷம் போடும் மனிதர்களைப் பார்க்கும் போது ஒரு விஷயம் எப்போதும் தோன்றும் – அடுத்தவர்களைச் சிரிக்க வைக்கும் இவர்கள் வாழ்வில் எத்தனை சோகமோ? இந்த ஜோக்கர் வேடமணிந்த முகம் படம் “பர்யடன் பர்வ்” நிகழ்வில் எடுத்தது. ஒரு ஓரமாக அமர்ந்திருந்தவரை படம் எடுத்தேன் – ஒரு வித சோகம் தெரிகிறது அவர் முகத்தில். இந்த வேஷம் போடுவது காசுக்குத்தானே… காசுக்கு படும் அவஸ்தை தானே….

இந்த வாரத்தின் ரசித்த வரிகள்:

வாழ்வில் பணம் வந்து போகும். நேரமும் முடிந்து போகும். உழைப்பதற்காக வாழாதீர்கள். வாழ்வதற்காக உழையுங்கள். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். முடியவில்லை எனின் உங்கள் மீது அன்பு வைத்தவர்கள் மீதாவது அன்பை அள்ளி வழங்குங்கள்.

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்

விளம்பரங்கள் எனக்கும் பிடிப்பதில்லை – சில விளம்பரங்கள் கண்டால் எரிச்சல் தான் வருகிறது. ஆனாலும் சில விளம்பரங்கள் மிகவும் கவித்துவமாக எடுக்கிறார்கள் – அதற்காகவே இணையத்தில் தேடித்தேடி சில விளம்பரங்கள் பார்ப்பதுண்டு. அப்படிப் பார்த்ததில் பிடித்த ஒரு விளம்பரம்…. பார்த்து நீங்களும் ரசிக்கலாமே… ஹிந்தி மொழியில் இருக்கும் இந்த விளம்பரம் தமிழில் இருக்கிறதா எனத் தெரியவில்லை. மொழி தெரியவில்லை என்றாலும் புரியும் விதத்தில் தான் இருக்கிறது.பின்னோக்கிப் பார்க்கிறேன் – இல்லத்தரசியின் வலைப்பூவில்…மூன்று தலைமுறை கடந்து வந்த வெண்கல உருளியில் செய்த அரிசி தேங்காய் பாயசம் – செய்வது எப்படி என்ற குறிப்பு இதே நாளில் 7 வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்திருக்கிறார் இல்லத்தரசி! பாருங்களேன்….


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

42 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட். படத்தைப் பார்க்கும்போதே அதிரசம் என்று புரிந்தது!​ குட்மார்னிங் கீதா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குட்மார்னிங்க் ஸ்ரீராம்...இங்க ஸ்வீட் எல்லாம் சாப்பிட்டுவிட்டு எபி க்குக் குதிக்கணும்!!!

   கீதா

   நீக்கு
  2. காலை வணக்கம் ஸ்ரீராம். நம்ம அதிரசம், பல மாநிலங்களிலும் - பீஹாரிலும் கூட உண்டு - பெயர் மட்டுமே வேறு வேறு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. காலை வணக்கம் கீதா ஜி!

   இப்படி குதிச்சுட்டே இருக்க வேண்டியதாக இருக்கே! :)))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 2. என் கையில காஃபியோட காஃபி வித் கிட்டு வந்தாச்சு...ஆஹா. இங்க ஸ்வீட் ஆரம்பமும் முடிவும்...!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா காஃபியுடன் காஃபி! நல்லது...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. நடனத்தின் வேகமான அசைவுகளை ரசித்தேன். அப்பாடி... உடம்பை வில்லாக வளைக்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடம்பை வில்லாக வளைக்கிறார்கள்... ஆமாம். என்ன ஒரு வேகம்! நளினம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. பஞ்சாபி பாடல் ஓகே. மெலடி வகையறா போலும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலும் பஞ்சாபி பாடல் என்றாலே ஃபாஸ்ட் பீட் என்று தானே பலரும் நினைக்கிறார்கள். இப்படி மெலடி வகையும் உண்டு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. நடனம் படல் அருமை அவர்கள் ஏதோ ப்ராக்டீஸ் போலும்....ரொம்ப அழகாக ஆடுகின்றார்கள் மிக மிக ரசித்தேன்...பாடலையும் நடனத்தையும்....ஒரு குண்டு பெண் கூட மிக அழகாக ஆடுகிறார்!! வாவ்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மெயின் டான்ஸரின் சில நடனங்கள் இணையத்தில் உண்டு. இந்த ப்ராக்டீஸே மிக அருமை எனும்போது நடன நிகழ்வில் எப்படி இருந்திருக்கும் என கற்பனை மட்டும் செய்ய முடிந்தது.

   குண்டு பெண் கூட - ஆமாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 6. இந்த வார முகம் மேரா நாம் ஜோக்கர் நினைவுக்கு வருகிறது. ரா ர து வும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேரா நாம் ஜோக்கர்.... நல்ல படம்.

   ரா ர து - அபுரி! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. பஞ்சாபி பாடல் நன்றாக இருக்கு ஸ்லோ டெம்போ இல்லியா...

  இந்த வாரத்தில் ரசித்த வரிகளை மிகவும் ரசித்தேன் ஜி. அதை ஒட்டி ஒரு சிறு கதை எழுதியிருக்கேன். எபிக்கு அனுப்பணும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பஞ்சாபி மொழியில் இப்படி ஸ்லோ டெம்போ பாடல்களும் இருப்பது பலருக்கும் தெரியவில்லை!

   ஆஹா உங்கள் சிறுகதை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 8. அந்த விளம்பரம் நெகிழ்வு. அந்த Fan என்ன விலை இருக்கும் என்று பார்க்கவேண்டும். அதிலாவது நல்லா காத்து வருதான்னு பார்க்கணும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபேன் - Air purifier!

   நல்லா காத்து வருதான்னு பார்க்கணும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. விளம்பரம் மிக அழகு. இனிய காலை வணக்கம் வெங்கட்.
  அதே போல இனிப்பும் சூப்பர்.
  பஞ்சாபிப் பாட்டுப் புரியாமல் புரிந்தது.

  கோமாளி வேடம் போடும் அனைவரும் சோகமாக இருப்பதில்லை. சில நிஜக் கோமாளிகள்
  சந்தோஷமாகவே இருக்கிறார்கள்.
  cONTEMPORARY DANCE வெகு அருமை.
  அருமையான கதம்பம் அண்ட் காப்பி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா... பஞ்சாபி பாட்டு புரியலையாம்மா - ஹிந்தி மாதிரி தான் பல வார்த்தைகள் இரண்டிலும் ஒரே மாதிரி தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 12. ஜோக்கர்கள் பலரது வாழ்க்கை சோகமாக இருப்பது உண்மையே...ஜி

  காணொளி காண இயலவில்லை இணையம் பிரச்சனை பிறகு காண்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 14. விளம்பரம் பார்க்கலை. அதிரசம் எப்படிச் செய்வது என்பதைப் போய்ப் பார்த்துட்டு விளம்பரத்தையும் பார்க்கிறேன். நடுவில் சாப்பாடு இடைவேளை! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 15. அரிசி, தேங்காய்ப் பாயசம் சாப்பிட ஆசை வந்திருக்கு! :) பஞ்சாபி பாடல் அருமை. நல்ல மெலோடி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 16. திருமதி சந்திரலேகா ஆடுவது மாதிரி யோகா+பரதம் இணைந்ததோ? என்றாலும் நன்றாக இருக்கிறது. அவர் களரி போன்ற கலைகளைக் கூட இணைத்தார் என்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யோகா + பரதம் சேர்ந்த நடனம்! இருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 17. காஃபி வித் கிட்டு வில் காஃபியே காணோமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 18. அரிசா பித்தா என்ற அதிரசம் அறின்ந்து கொண்டேன். நடன உடற்பயிற்சி சூப்பர்.
  பாஞ்சாபி பாடல் பார்த்தேன் காற்று போன பழைய சைக்கிள் அதில் பயணம் செய்ய முடியவில்லை என தலையில் அடித்துக் கொள்ளும் பெண் அவர்கள் பயணிக்கும் வழி தூரத்தைப் பார்த்த போது அந்த பெண் நடந்து போவதே மேல் என்று தெரிகிறது.
  உணவை பகிர்ந்து உண்ணும் அழகு, மீண்டும் நடக்கும் போது வரும் வண்டி தாங்கள் போகும் பாதையில் போகுதா என்ற கேளவி அவர் வேறு பக்கம் போவாதாய் கை காட்டியதும் ஏமாற்றம் மீண்டும் நடை ஒருவழியாக போய் விட்டார்கள் ஒரு குடியிருப்புக்ககுள்.
  ஜோக்கர் முகம் கவலையை மறைத்து சிரிப்பது போல்தான் இருக்கிறது.

  ரசித்தவரியும், ரசித்த விளம்பரமும் மிக அருமை.
  ஆதியின் உருளி பாயசம் முன்பு படித்து என்னிடமும் இது மாதிரி உருளி இருப்பதாய் சொல்லி இருக்கிறேன்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பஞ்சாபி பாடல் - நல்ல புரிதல்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 19. அரிசி பித்தா சூப்பர்/

  தேங்காய் அரிசி பாயாசம் எனக்கு பிரிக்கும்

  ஜோக்கர் படம் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரிசா பித்தா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....