சனி, 8 செப்டம்பர், 2018

காஃபி வித் கிட்டு – புதுகை நண்பர்களுடன் சந்திப்பு – என்ன பண்ண முடியும் – குருவும் சிஷ்யனும் - முகம்

காஃபி வித் கிட்டு – பகுதி – 5

புதுகை நண்பர்களோடு சந்திப்புவிளக்கொளியில் குடியரசுத் தலைவர் மாளிகை....சென்ற வாரத்தில் முகநூல் வழியே புதுகை சிவா அவர்களிடமிருந்து தகவல். நண்பர்களோடு தில்லி வருவதாகச் சொல்லி, சில விவரங்கள் கேட்டிருந்தார். எனக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்லி முடிந்தால் சந்திக்கலாம் என்று சொல்லி இருந்தேன்.  திங்களன்று குடியரசுத் தலைவர் மாளிகை அருகே சந்தித்தோம். சில நிமிடங்கள் சிவா மற்றும் அவரது நண்பர்களுடன் சந்திப்பு – மகிழ்ச்சியான சில நிமிடங்கள்.  அவரைச் சந்திக்கச் சென்றபோது மாலை நேரம் என்பதால் அந்தப் பகுதி முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சூழலில் புகைப்படம் எடுக்க முடிந்தது. இப்போதெல்லாம் தினம் தினம் இப்படி அலங்காரம் தான் – முன்பு போல குடியரசு தினம், சுதந்திர தினம் சமயத்தில் செய்யும் அலங்காரம் இல்லை – நிரந்தரமாக LED விளக்குகள் மூலம் பல வண்ணங்கள் மாறி மாறி வருகின்றன. கூடவே JBL Speakers வழியே தேசபக்தி பாடல்களின் மெட்டும் கேட்கும். அன்றைய மாலைப் பொழுது இனியதொரு மாலைப் பொழுதாக அமைந்தது. புதுகை சிவா மற்றும் அவரது நண்பர்களுக்கு நன்றி! 


இந்த வாரத்தின் WhatsApp தகவல்:

🎅 பெரிய குரு இருந்தார். 🚫 முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். 📢 அவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க. 🔣 பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. 🏇 அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. 🔇 கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க. 🎅 குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. 🎤 பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். 👳 இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. ‘என்னப்பா பண்ண லாம்?’ னு கேட்டார்.

🙏 ‘அய்யா! நான் குதிரைக் காரன் 🏇 ❗எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க 😒 👌 ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க. 🐎 நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். 🌾 புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க ❗ 👮 நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’ னான். 👋 பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு. 🏇 அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு,
அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். 🔣 தத்துவம்,
🔠 மந்திரம், 🚫 பாவம், புண்ணியம், 🌁 சொர்க்கம், 🔥 நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு. 🎤 பிரசங்கம் முடிஞ்சுது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.

🙏 ‘அய்யா… நான் குதிரைக்காரன். 😳 எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. 👌 ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க…  🌾 நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு 🐎 குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். 🔢 முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான் 😨 😱 அவ்ளோதான்❗ 😰 குரு தெறிச்சிட்டார்!

© நீதி: மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும் ✅ 👼 புரியாத,
😇 தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் 😂😂😂

இந்த வாரத்தின் ரசித்த காணொளி:

ஒரு யானையும் பறவையும்…. –பறவையைத் துரத்த யானை எப்படியெல்லாம் முயற்சி செய்கிறது பாருங்களேன்…. யானையைப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது! அனுப்பி வைத்த நண்பர் குமாருக்கு நன்றி!ராஜா காது கழுதை காது:

சென்ற சனிக்கிழமை அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. காலையிலிருந்தே நல்ல மழை. மழை விடும் வரை காத்திருந்து பிறகு தான் புறப்பட்டேன். பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அங்கே மூன்று பேர் ஏற்கனவே காத்திருந்தார்கள். ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் அல்ல! அங்கே தான் சந்திக்கிறார்கள். சிலருக்கு பேசுவது – அதுவும் தெரியாதவர்களுடன் கூட பேசுவது சுலபமாக வருகின்ற ஒரு விஷயம். தெரியாதவர்களுடன் பேச எனக்கென்னமோ பிடிப்பதில்லை! அதுவும் முன்பின் தெரியாதவரிடம் அரசியலும் குடும்ப விஷயமும் பேசுவது என்னால் இயலாத காரியம். அங்கே இருந்த ஒருவர் வரிசையாக எல்லா அரசியல்வாதிகளையும் திட்டிக் கொண்டிருந்தார் – Opposing Everyone and everything, just for the sake of Opposing! பேருந்து வந்து கொண்டிருந்தது – கடைசியாக சொன்ன விஷயம் தான் ஹைலைட் – “Bio-metric attendance வச்சா, நாங்க பயந்துடுவோமா…. காலையில பஞ்ச் பண்ணிட்டு வெளியே போயிடுவோம், சாயங்காலம் வந்து திரும்பவும் பஞ்ச் பண்ணிட்டு வீட்டுக்கு வருவோம்! உன்னால என்ன பண்ண முடியும்! எனக்கு வரும் சம்பளத்துக்கு வேலையெல்லாம் பண்ண முடியாது! சம்பளம் குடுக்கறதுக்கு நான் செய்யக்கூடிய ஒரே வேலை இந்த attendance போடறது மட்டும் தான்”

இந்த வாரத்தின் முகம் – அப்பள வியாபாரி:சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் எடுத்த படம் – இவர் ஒரு அப்பள வியாபாரி – பிரம்புக் கூடை நிறைய அப்பளங்கள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தவரை சற்றே தொலைவிலிருந்து Zoom செய்து எடுத்த படம் – வயதுக்கு மீறிய முதிர்ச்சி அவர் முகத்தில் இருக்கிறதோ…. படம் உங்களுக்குள் ஏற்படுத்திய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே!

செப்டம்பர்-8, 2011 – இதே நாளில் எழுதிய பதிவு – நற நற:நெய்வேலி நினைவுகளை எனது பதிவுகளில் அவ்வப்போது எழுதியதுண்டு. இதே நாளில், பதிவு எழுத ஆரம்பித்த இரண்டாம் வருடம் எழுதிய பதிவு ஒன்று – நற… நற… சிறு வயதில் பார்த்த ஒரு மனிதரின் கதை. அப்போதெல்லாம் அவரைப் பார்த்தால் கொஞ்சம் பயமாகவும், சில சமயங்களில் சிரிப்பாகவும் இருக்கும். ஆனால் அவருக்கு இருந்த பிரச்சனை தெரிந்த பிறகு பரிதாப உணர்வு தான் வந்தது. இதே நாளில் எழுதிய பதிவினை படிக்காதவர்கள் படிக்கலாமே! ஸ்ரீராம் இந்தப் பதிவினை படிக்க வில்லை எனத் தெரிகிறது – அவரது கருத்துரை இந்தப் பதிவில் இல்லை!

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

26 கருத்துகள்:

 1. குரு கதை ஸூப்பர் ஜி

  காணொளி ரசிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 2. காபி வித் கிட்டு ரசிக்க வைத்தது நாகராஜன் சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் பெயர் வெங்கட். நாகராஜன் எனது தந்தை பெயர். உங்கள் பெயரையும் சொல்லலாமே.... குத்தூசி எனச் சொல்வதற்கு தயக்கமாக இருக்கிறதே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குத்தூசி....

   நீக்கு
 3. விளக்கொளியில் குடியரசுத் தலைவர் மாளிகை அழகு.
  குரு கதை சிந்திக்க வைக்கிறது.
  காணொளி அருமை.
  குட்டி யானைக்கும் பற்வைக்கும் விளையாட்டு சண்டையோ என்று முதலில் நினைத்தேன், நிஜமாகவே சண்டையிடுகிறது இரண்டும்.
  அப்பளவியாபாரியை நம்பி குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ!
  கவலை ரேகைகள் நெற்றியில் தெரியுது.
  நற நற மனிதர் படித்தேன். வேதனை அளிக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 4. உங்கள் பயண அனுபவங்கள் ஒரு ரகம் என்றால் இது தனி ரகம். படித்தேன், சுவைத்தேன். அருமையாக இருக்கிறது.

  உங்கள் பதிவு எங்கள் தளத்தில்....

  https://sigaram6.blogspot.com/2018/09/coffee-with-kittu-5.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் பதிவினை உங்கள் தளத்திலும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

   நீக்கு
 5. காணொளி ரசிக்க வைத்தது நற நற நானும்படித்த நினைவில்லை பணியில் இருந்தபோது பஞ்ச சீலம் என்று கூறப்படுவது பன்ச் இன் காஃபி லன்ச் டீ பன்ச் அவுட் என்னும் ஐந்து சீலங்கள் அவசியம் தேவை என்போர் உண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 6. இந்த வார வாட்சப் தகவல்-பிரசங்கம் அருமை. காணொளி மிகப் பழசு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி ஒரு வருடம் முன்னர் வந்தது! :) பழசு தான் என்றாலும் நான் இப்போது தான் பார்க்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 7. நண்பர்களை சந்தித்தது குறித்து மகிழ்ச்சி. காமாட்சி அம்மா தனது அலைபேசி எண்ணைக் கொடுத்து உங்களைத் தொடர்பு கொள்ளச் சொல்லியிருந்தாரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவருடன் பேசி விட்டேன் ஸ்ரீராம். வீட்டுக்குச் சென்று பார்க்க வேண்டும் - அழைத்திருக்கிறார். சந்தித்த பிறகு சொல்லலாம் என இருந்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. பிரசங்கியின் கதையும் படித்திருக்கிறேன். அந்த வாட்ஸாப் வீடியோவும் பார்த்திருக்கிறேன். பாவம் யானை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாவம் தான் அந்த யானை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. அவர் வயது என்னவென்று ஊகிக்க முடியவில்லை.

  அவர் முகத்தில்
  தெரிவது
  வாழ்க்கை வலிகளா?
  வயதின் வரிகளா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க்கை வலி தந்த வரிகளோ - ஐம்பதுகளில் இருக்கலாம் அவர் வயது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 10. நறநற நான் படித்ததில்லையா? இதோ போய்ப்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்தீர்களா? அங்கே உங்கள் கருத்து இப்போது வந்திருக்கிறதா எனப் பார்க்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 11. பயமாய்த்தான் இருக்கும். ஆனால் நறநறவென்று கோபம் வரும்போது என் அப்பா பல்கலைக் கட்டிப்பார். தொடர்ந்து எங்களுக்கு அடி விழும்... எனவே அவர் பல்லைக் கடிக்கத் தொடங்கும்போதே காணாமல் போய்விடுவோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பா அடிக்கும் முன் பற்களைக் கடித்ததில்லை. ஆனால் அடி நிறையவே வாங்கி இருக்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  இந்த வாரமும் சுவையான நிகழ்ச்சிகள். புதுவை நண்பர்களோடு சந்தித்து மகிழ்ந்தது குறித்து சந்தோஸம். நண்பர்களை கண்டு அளவளாவுவது தனி இன்பந்தானே..

  குரு கதையை மிகவும் ரசித்தேன்.

  காணொளி நன்றாகவிருந்தது. யானையைக் கண்டு சற்றும் பயமில்லாமல் போராடுகிறதே பறவை. ஆனால் யானைக்கும் பறவையிடத்தில் பயம் போலிருக்கிறது. அதை விரட்டி விட்டுத்தான் மறு வேலை என்கிறது.

  அப்பள வியாபாரியின் மனக்கவலை முகத்தையே மாற்றி விட்டது போலும்..

  "நறநற" அங்கே போய் படித்து வந்தேன். பாவம்.. இது போல் சிலருக்கு என்ன வியாதி என்றே தெரியாமல் இருந்து வதைத்து விடுகிறது. மனித பிறவி.. கஸ்டந்தான் எனத் தோன்றுகிறது.
  பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குரு கதை நண்பர் அனுப்பி வைத்தது. நல்ல கதை.

   அப்பள வியாபாரி - அவருக்குள் எத்தனை கவலையோ....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....