எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, September 8, 2011

நற… நற…




என் சிறு வயதில் ஒரு பெரியவர் வெள்ளை வெளேரென மடித்துக் கட்டிய வேட்டி, அரைக்கை சட்டை அணிந்து, எங்கள் தெருவில் கம்பீரமாக நடந்து செல்வார்அப்படி ஒன்றும் முரட்டு ஆசாமியும் அல்ல அவர்.  ஆனாலும் அவரைப் பார்த்தாலே நாங்கள் பயந்தோடி ஒளிந்து கொள்வோம்

அந்த பெரியவர் சாதாரணமாய் நடந்து செல்லும் போது அவருக்குள் என்ன மாற்றம் ஏற்படுமோ தெரியாது, பற்களை நரநரவென கடித்துக் கொண்டு தலையில்மடார் மடார்என கையால் அடித்துக் கொண்டு செல்வார்

வீட்டில் பெரியவர்கள் இருந்தால், குழந்தைகளுக்கு எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டும்போது தலையில் அடித்து தேய்த்து விடுவார்கள்.  அதுவே கொஞ்சம் பலமாய் அடித்தால் எப்படி இருக்கும், அதுபோல தொடர்ந்து தலையில் அடித்துக்கொண்டே நடந்து செல்வார்

சாதாரணமாய் நடந்து சென்று கொண்டிருக்கும் ஒருவர், திடீரென உங்கள் எதிரே இப்படி பற்களைக் கடித்தபடி தன்னையே அடித்துக் கொண்டால் உங்களுக்கு பயம் வரும்தானே.  சிறுவர்களாய் இருந்த நாங்களும் மிகவும் பயந்துதான் போனோம்

சிறிது காலம் வரை அவர் ஏன் அப்படி செய்து கொள்கிறார் என்று எங்களுக்குத் தெரியாது,  பெரியவர்களைக் கேட்டால் அவர்களும்  சொல்லவில்லை.  நாங்கள் சிறிது பெரியவர்களாக ஆன பிறகுதான் எங்களுக்கு தைரியம் வந்து, நாங்களாகவே அவரிடம்ஏன் தாத்தா  இப்படி அடிச்சிக்கிறீங்க, வலிக்காதா?” ன்னு கேட்டோம்.

அவர் சொன்ன பதில் அதிர்ச்சியளிக்கக் கூடியதாய் இருந்ததுஅவரின் தலைக்குள் சாரிசாரியாய் எறும்பு ஊர்வது போன்ற உணர்வு இருப்பதாகச் சொன்னார்மருத்துவர்களிடம் காண்பித்ததற்கு, தலையை முழுவதும் திறந்து பார்க்கவேண்டும் எனவும், அதற்கு நிறைய செலவு செய்யவேண்டுமெனவும் சொன்னதால் சிகிச்சையே எடுத்துக் கொள்ளவில்லை எனவும் கூறினார்

அதுபோல அடித்துக்கொண்டே சுமார் பத்து வருடங்கள் இருந்தார்.   விஷயம் தெரியாத பலர், அவர் மனநிலை சரியில்லாதவர் என எண்ணி அவரை கிண்டல் செய்து, துன்புறுத்தி அவரை மேலே அனுப்பி விட்டனர்

இப்போது கூட யாராவது பல்லைக் கடித்தால் அவர் நினைவுதான் எனக்கு வரும்.

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

வெங்கட்



56 comments:

 1. அடப்பாவமே......ஃபிஜித்தீவிலிருந்தபோது நமக்குத் தெரிஞ்ச ஒருநபர் உடம்பில் ஏதோ பூச்சி ஊறுவதுபோல் இருக்குன்னு அந்த இடங்களைத் தட்டி விட்டுக்கிட்டே இருப்பார்.

  ReplyDelete
 2. ஒரு நோய்க்கான காரணத்தையும், மருந்தையும் கண்டு பிடிக்கும் வாய்ப்பை மானுடம் தவற விட்டிருக்கிறது.

  பதிவாக்கிய உங்களுக்கு பாராட்டுக்கள் வெங்கட்.

  ReplyDelete
 3. \\அவர் மனநிலை சரியில்லாதவர் என எண்ணி அவரை கிண்டல் செய்து, துன்புறுத்தி அவரை மேலே அனுப்பி விட்டனர். //:(

  ReplyDelete
 4. அடடா, மிகவும் கஷ்டப்பட்டுள்ள அவரை நினைத்தால் மிகவும் வருத்தமாகவே உள்ளது வெங்கட்.
  voted 4 to 5 vgk

  ReplyDelete
 5. அடப்பாவமே?!இப்படியும் இரு துன்பமா?தீர்வற்று போய்விட்டாரே

  ReplyDelete
 6. இது ஓரு நல்ல விழிப்புணர்வு பதிவு ......சில நரம்பு கோளாறுகள் தான் இந்த நற நற வுக்கு காரணம் ....சுற்றியும் புரிந்தவர்கள் அமைந்துவிட்டால் படிப்படியாக பயிற்சியில் குணமடைய வைக்கலாம் ...

  ReplyDelete
 7. பாவம் அந்த வயதானவர். :((

  ReplyDelete
 8. மந்தவெளி நடராஜன்., டொரோண்டோ,September 9, 2011 at 6:28 AM

  பேச்சுத்திறனும், எழுதுதிறனும் கைவரப்பெற்ற வெங்கட் அவர்களே,

  பதிவை படித்தேன். மனம் கனததுப் போனது.. திரு பத்மநாபன் கூறியபடி, புரிந்து கொண்டு உதவும் மனமில்லாத , வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும்கூட்டம் உள்ள சமுகத்தில், மருத்துவரோ அல்லது உறவுகளோ, நோயை தீர்க்க வேண்டாம் வெறும் ஆறுதல் வார்த்தைகளை கூறுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? விழிப்புணர்வு இடுகையை படித்தவர்கள் சமூகத்தில், "நெஞ்சில் ஈரமுடையோர்" எண்ணிக்கையை பெருக செய்யட்டும். வாழ்க உம் சீரிய தொண்டு.வாழ்க இவ்வையகம்.

  மந்தவெளி நடராஜன்.,
  டொரோண்டோ,

  (குறிப்பு. ஏனோ, குறிப்புகள்,உங்கள் ப்ளாக் உள்ளே செல்லமாட்டேன் என்கிறது. நான் ஒரு ப்ளாக் தொடங்க வேண்டும் என்கிறது, அப்படியா? விடை தெரிந்தால் நான் தொடர இயலும்)

  ReplyDelete
 9. இப்போது கூட யாராவது பல்லைக் கடித்தால் அவர் நினைவுதான் எனக்கு வரும்./

  எங்கள் ஆசிரியர் ஒருவர் இப்படித்தான் பல்கடிப்பார்!

  அவருக்கு பெருக்கான் வாத்தியார் என்று பெயர் சூட்டினோமே!

  வருத்தமாக இருக்கிறது!

  ReplyDelete
 10. ஓணத்திருநாள் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 11. பாவம் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்?வருத்தமாக இருக்கிறது.

  ReplyDelete
 12. ரொம்ப பாவம்.விடை தெரியாத கேள்விகள் எத்தனை இந்த உலகத்தில்..

  ReplyDelete
 13. மனம் கனக்கச் செய்த பதிவு
  அவர் மறக்க முடியாதவாக அனிக்கடி
  நினைவில் வந்து கொண்டிருப்பார் சகோ!


  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 14. நிலாமகள்September 9, 2011 at 6:31 PM

  பதிவை படித்தேன் சகோ... ரிஷபன் சார் வலைப்பூவிலிருந்து. (எனது டாஷ் போர்டிலிருந்து தங்கள் வலைப்பக்கம் திறக்கக் கூட மாட்டேன் என்கிறது) இவ்வளவு காலம் நினைவில் பதிந்திருந்த அந்தப் பெரியவர் என்னுள்ளும் அதிர்வையும் பரிதாபத்தையும் தோன்றச் செய்து விட்டார். வறுமையின் கொடுமையல்லவா வைத்தியத்துக்கு பணம் இன்றி பைத்தியமென பெயரெடுப்பது.

  ReplyDelete
 15. @ துளசி கோபால்: ஒவ்வொரு ஊரிலும் இது போன்ற பிரச்சனைகளோடு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.... சக மனிதர்கள் தான் அவர்களை சரியாகப் புரிந்துகொள்ளாமல் தொல்லை தருகிறார்கள் என நினைக்கும்போது கஷ்டமாகத் தான் இருக்கிறது...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி மேடம்...

  ReplyDelete
 16. # சத்ரியன்: தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி சத்ரியன்... உங்கள் கருத்து மிகவும் உண்மை... மருத்துவத்தின் மூலம் அவரது பிரச்சனைக்கு தீர்வு காண தவறிவிட்டது மானுடம் என நினைக்கும்போது, உண்மை கசக்கிறது....

  தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...

  ReplyDelete
 17. @ முத்துலெட்சுமி: :( சோகம் தான் சகோ....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 18. # வை. கோபாலகிருஷ்ணன்: நிச்சயமாக சார்.. அவரை இப்போது நினைத்தாலும் வருத்தம்தான்.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 19. @ ராஜி: இரண்டு துன்பம்.... உண்மை....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 20. # பத்மநாபன்: ஆங்கிலத்தில் பற்களைக் கடித்துக் கொள்வதை Bruxism என அழைக்கிறார்கள்... அவருக்கு இருந்தது இதுவா எனத் தெரியவில்லை.... இருந்தாலும் நீங்கள் சொல்வது போல பயிற்சியில் சரியாகி இருக்கலாம்.... :(

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 21. @ மாதேவி: பாவம்தான்.... :( தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 22. # அமைதிச்சாரல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 23. @ மோகன்குமார்: வயதானவர் நிச்சயம் பாவம் தான் மோகன்... உங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மோகன்.

  ReplyDelete
 24. # மந்தவெளி நடராஜன்: உங்களது கருத்துரைக்கு மிக்க நன்றி. என் பக்கத்தில் கருத்துரை இட சில பிரச்சனைகள் இருக்கிறது என இன்னும் சிலரும் தெரிவிக்கின்றனர்... சில மாற்றங்கள் செய்து இருக்கிறேன்... பார்க்கலாம் இனி எல்லோராலும் என் பக்கத்தில் கருத்துரை இட முடிகிறதா என...

  தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 25. @ இராஜராஜேஸ்வரி: பெருக்கான் ஆசிரியர்? சிறுவயதில் நாம் செய்யும் பல விஷயங்கள், சரியா தவறா என நமக்குப் புரிவதில்லை...

  ஓணம் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோ...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 26. # ராம்வி: நிச்சயம் வருந்தத் தக்க விஷயம் தான்... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 27. @ அமுதா கிருஷ்ணா: எத்தனை எத்தனை விடை தெரியாத கேள்விகள்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 28. # புலவர் சா. ராமானுசம்: அடிக்கடி நினைவில் வந்ததால் தான் இந்த பதிவே...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

  ReplyDelete
 29. @ நிலாமகள்: இப்போது சில மாற்றங்கள் செய்திருக்கிறேன்... பார்க்கலாம் இனி தங்களால் கருத்திட முடியும் என நினைக்கிறேன்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 30. # அன்புடன் அருணா: நிச்சயம் ஒன்றும் சொல்வதிற்கில்லை இதைத் தவிர... சோகத்தினைத் தெரிவிக்க என்ன ஒரு வசதி.... :(

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 31. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: பாவமே தான்.... :( தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 32. //பிரம்மாண்டத்தின் மறுபெயர்
  posted by null at venkatnagaraj - 8 hours ago
  [மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி 4] தான்சேனின் சமாதியிலிருந்து திரும்பி நாங்கள் தங்கியிருந்த ”தான்சேன் ரெசிடென்சி”யில் மதிய உணவு உட்கொண்டோம். 14 பேர்களுக்கும் ஒரு நீண்ட மேஜையில் உணவு பரிமாறப்பட்ட...//

  இதுதான் இன்று டேஸ்போர்டில் வந்துள்ளது.பதிவின் தலைப்பிற்கு லின்க் ஆப்சன் இருக்காது.உங்கள் பெயருக்கு மட்டும் லின்க் இருக்கும்.கிளிக் செய்து உள்ளே வந்தால் “நற நற” பதிவு உள்ளது.எப்போழுதும் இப்படிட்த்தான் வருவது ஒன்ரும் பதிவு ஒன்றும்தான் டிஸ்பிளே ஆகிறது.

  ReplyDelete
 33. அட .. பாவமே..
  அந்த மனிதர் என்ன துன்பப் பட்டிருப்பார்
  என்று நினைத்தாலே காதில் எறும்பு குடையுது...

  வாழ்வின் சிற்சில மறுபக்க மனிதர்களை
  தெரிந்துகொள்ள உதவும் பதிவு.

  இன்று முதல் நான் உங்கள் வலைப்பக்கம் பயணம்....

  அன்பு நண்பரே,
  என் வலைவந்து
  அழகிய கருத்து இட்டமைக்கு
  என் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 34. # திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று புரியவில்லை... இது பற்றி தனியே உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன்....

  தங்களது இரண்டாவது வருகைக்கும் சொல்லிய தகவலுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 35. @ மகேந்திரன்: //நினைத்தாலே காதில் எறும்பு குடையுது// எனக்கு மனது முழுவதும் குடைச்சல்... யாரிடமாவது சொல்ல வேண்டும் என்பதாலேயே பகிர்ந்தேன்.

  நீங்கள் என் பக்கத்தினைத் தொடர ஆரம்பித்திருப்பது குறித்து மகிழ்ச்சி. நானும் தொடர்கிறேன்.. தொடர்ந்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்வோம்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..

  ReplyDelete
 36. ஆண்டவன்படைப்பில் இதுபோல புரிந்து கொள்ள முடியாத சோகங்கள் நிறையவே இருக்கு. வேர என்ன சொல்ல?

  ReplyDelete
 37. # லக்ஷ்மி: சரியாக சொன்னீங்கம்மா... நிறைய படைப்புகளைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

  ReplyDelete
 38. ஐயோ பாவம் அந்த தாத்தா...!!!

  ReplyDelete
 39. Lakshmi said...
  ஆண்டவன்படைப்பில் இதுபோல புரிந்து கொள்ள முடியாத சோகங்கள் நிறையவே இருக்கு. வேர என்ன சொல்ல?



  என் கருத்தும் இதேதான்....

  ReplyDelete
 40. @ MANO நாஞ்சில் மனோ: ஆண்டவன் படைப்பில் புரிந்து கொள்ள முடியாத சோகத்துடன் சக மனிதர்களால் அப்பெரியவருக்கு தரப்பட்ட சோகமும் சேர்ந்து கொண்டது தான் பெரிய சோகம்......

  தமிழ்மணம் இங்கே: http://venkatnagaraj.blogspot.com/2011/09/blog-post_08.html

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மக்கா!

  ReplyDelete
 41. பாவம் அவர்! மனம் கனக்கச் செய்து விட்டது இந்தப் பதிவு!

  ReplyDelete
 42. நோய்கள்தான் மனிதனை எப்படியெல்லாம் சித்தரித்துவிடுகின்றன..

  ReplyDelete
 43. # மனோ சாமிநாதன்: நிச்சயமாக அவர் பாவம் தான்.

  தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்..

  ReplyDelete
 44. @ ஷீ-நசி: தங்களது முதல் வருகை என்னை மகிழ்த்தியது...

  ஒவ்வொரு மனிதனுக்குள் தான் என்ன என்ன விஷயங்கள்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 45. @ ஷீ-நிசி: உங்கள் பெயரை மேலே தவறாக குறிப்பிட்டு விட்டேன்.... மன்னியுங்கள் நண்பரே...

  ReplyDelete
 46. என்னோட ப்ளூட் குரு மாமி அமாவாசை பௌர்ணமி தினங்களில் தலையை பரபரவென்று சொறிந்து கொள்வார். ஏதோ ஒரு முந்தைய நாளில் ஒரு குரங்கு அவர் எதிர்பாராத தருணத்தில் அவர் தலையைப் பிறாண்டி விட்டு போனதாம். அதிலிருந்து இது போல..
  (நாங்கள் தப்பு தப்பாக வாசிப்பதால் தான் இப்படி பிறாண்டிக் கொள்கிறார்களோ என்று முதலில் பயந்து விட்டோம்) ஹோமியோவில் மலர் மருந்து இருக்கிறதாய் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 47. மனசு கஷ்டமாக இருக்கிறது.

  ReplyDelete
 48. # ரிஷபன்: ஃப்ளூட் குரு மாமி :( பாவம் அவர்களுக்கும் ஏதோ பிரச்சனை போலிருக்கிறது. ஹோமியோவில் பல பிரச்சனைகளுக்கு மருந்து இருக்கிறது. எனினும் நாட்கள் அதிகம் எடுக்கும் என்ற காரணத்தினால் பலர் அப்பக்கம் செல்வதில்லை....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 49. @ ரத்னவேல்: கஷ்டம் தான் ஐயா.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 50. இம்மாதிரி செயல்கள் செய்வோருக்கு இப்படியும் காரணங்கள் இருக்க்லாம் என்பது ஆச்சர்யம், அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த நாளில் ஸ்கேன் வசதிகள் இல்லாமையும் அவரது இந்நிலைக்குக் காரணம் இல்லையா?

  எனக்கும் உங்க பதிவுகள் ரீடரில் முழுமையாக அப்-டேட் ஆகவில்லை. திருமதி.ஸ்ரீதர் கூறியுள்ள பிரச்னையே எனக்கும் வருகிறது. தங்கமணி-ரங்கமணி இருவரின் பதிவுகளிலும் ஒரேமாதிரி பிரச்னைகள் ஒருசேர ஒரே நேரத்தில் வருகிறதே, அவ்வளவு ஒற்றுமையா? ;-))))))))

  ReplyDelete
 51. # ஹுசைனம்மா: நிச்சயம் எங்களுக்குள்ள ரொம்ப ஒற்றுமை.... :)

  அந்த நாளில் ஸ்கேனிங்க் வசதி இல்லை... மருத்துவத் துறையும் இன்றளவு முன்னேறவில்லை.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....