செவ்வாய், 27 செப்டம்பர், 2011

கண் கவர் காதலி


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி-11]


ராஜா மான்சிங் தனது காலத்தில் தான்மன் மந்திர்கட்டினார் என்பதை முன்பே எழுதியிருந்தேன்.  இவர் பெரிய ஆளாக இருப்பார் போல.  எல்லா ராஜாக்களையும்  போல இவருக்கும் ஒரு மனைவி மட்டுமே இல்லை


ஒரு முறை வேட்டையாடச் செல்லும் போது வழியில் கிராமத்தில் பார்த்த ஒரு பெண் அவ்வளவு அழகு.  பார்த்துக் கொண்டே இருக்கும் அளவுக்கு இருந்ததாம் அவளது அழகு.  ராஜா அந்தப் பெண்ணிடம்உன் பெயர் என்ன?” என்று கேட்க, மிகவும் தைரியமாய்நன்னி [Nanhi]” என்று தனது பெயரைச் சொன்னாளாம்

அழகில் மயங்கிய ராஜா அந்தப் பெண்ணிடம் தன்னைக்கல்யாணம் செய்து கொள்கிறாயா?” எனக் கேட்கிறார். இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், ராஜா மான்சிங் அவர்களுக்கு ஏற்கனவே எட்டு மனைவிகள்பின்னே ராஜாவாச்சே, சும்மாவா?

அந்தப் கிராமத்துப் பெண் அதற்கு போட்ட கட்டளைகள் என்ன தெரியுமா?  குவாலியர் கோட்டையின் அருகே தனக்கென தனியாக ஒரு மாளிகை கட்ட வேண்டும்.  அப்படி கட்டப்படும் மாளிகைக்கு தன்னுடைய ஊரில் ஓடும் ராய் நதியிலிருந்து தனியாக ஒரு கால்வாய் வெட்டப்பட்டு அதிலிருந்து எப்போதும் தண்ணீர் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற இரண்டு கட்டளைகள் போட,  ராஜாவாச்சே, இது கூடவா அவருக்கு முடியாது.  உடனேயாரங்கே!” தான்.


உடனே அந்த பெண்ணிற்கு பெயர் மாற்றமும் செய்தார் ராஜா.  ஏனோ நன்னி பிடிக்கவில்லை அவருக்கு.  “மிருக்நயினிஎன்ற பெயர் வைத்து தன்னுடைய ஒன்பதாவது ராணியாக்கிக் கொண்டார்.  மிருக்நயனி என்றால் மான் போன்ற கண்களை உடையவள் என்று அர்த்தம்.  கலாரசிகனாய் இருந்திருப்பார் போல ராஜா மான்சிங்

இந்த ராணிக்கு வாக்குக் கொடுத்தபடி அவருக்காக கட்டிய மாளிகை தான் குஜரி மஹால்.  இப்போது அங்கே ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது.  பல நூற்றாண்டுகள் பழமையான பொருட்கள் இங்கே காட்சியாக வைக்கப்பட்டு இருக்கிறதாம்.  காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தான் திறந்திருக்கும்.  நாங்கள் சென்றது அதன் பிறகு என்பதால் பார்க்க முடியவில்லை.  அடுத்த முறை வாய்ப்பு கிடைக்குமா என்பதும் தெரியவில்லை.

மீண்டும் கோட்டைக்கே வருவோம்.  இந்தக் கோட்டை ஔரங்கசீப் காலத்தில் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.  இங்கே சிறைபட்ட எவரும் உயிருடன் வெளியே போனதில்லையாம்.  அதற்கு விதிவிலக்காய் வெளியே வந்தவர் சீக்கிய குருவில் ஒருவரான குரு ஹர்கோவிந் சிங்.  இந்தக் காட்சிகளும் ஒலி-ஒளி காட்சியின் போது சொல்லிக் கொண்டு வந்தார் கோபாசல்

பல நூற்றாண்டு கால கதையை 45 நிமிடங்களில் அடக்கிச் சொல்வது என்பது கடினம்தான்.  இருப்பினும் அவ்வளவு அழகாய் அதைச் சொல்லிக் கொண்டு அந்த நூற்றாண்டுகளில் நிகழ்ந்தவற்றை நம் முன் ஒரு காட்சியாகக் காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

குவாலிபா முனிவரில் ஆரம்பித்த கதை, அதன் போக்கில் பயணித்து சிந்தியா ராஜாக்கள் வரை வந்து முடிகிறது.  நடுநடுவே தான்சேன் பாடிய பாடல்களாய் சில பாடல்கள் பண்டிட் ஜஸ்ராஜ், பீம்சென் ஜோஷி, குமார் கந்தர்வா போன்றோர் குரல்களில் செவிக்கினிமையாய் கேட்டோம்.  குதிரைகள் ஓடும் சத்தம், போர் நடக்கும் போது கேட்கும் வீரர்களின் வீர முழக்கம், வாள்களால் தாக்கிக் கொண்டு போடும் சத்தம் எல்லாம் நமக்கு தெளிவாய் கேட்கிறது

விளக்குகள் மீண்டும் எரிய, நல்ல கதை கேட்ட திருப்தியோடு வெளியே வந்து அன்றைய இரவினை நல்ல நினைவுகளோடு கழிக்கதான்சேன் ரெசிடென்சிவந்து சேர்ந்தோம்மனசு அதிலே மூழ்கிக் கிடக்க, கடமைக்கென சாப்பிட்டு விட்டு, அடுத்த நாள் காலை சீக்கிரம் எழுந்து சூரியனார் கோவில் செல்ல வேண்டும் என்ற நினைவுடன் பஞ்சணையில் சாய்ந்தோம்.

மீண்டும் சந்திப்போம் சூரியனார் கோவில் அருகே.

வெங்கட்
34 கருத்துகள்:

 1. மீ த பஸ்ட்டு. ராஜாவுக்கு ஒன்பது மனைவியா? எப்படி தான் சமாளித்தாரோ? ஆனா அப்பாவும் ஆண்கள் பெண்கள் சொல்வதை கேட்டு நடந்திருக்காங்க என தெரிகிறது

  பதிலளிநீக்கு
 2. மே(ன்) தில்லி ஹூ(ம்) [मैं दिल्ली हूं} மற்றும் Great Marata தொலைக்காட்சி தொடரில் லேசாக தொட்டிருப்பார்கள்- இந்த ராஜா மான்சிங் (தோமர்) தான் ப்ருத்வி ராஜ் சௌஹானின் தாத்தா (தாய் வழி) என்பதால். ஆனால், இவ்வளவு விரிவாக (9 மனைவி மற்றும் அதைச் சுற்றிய கதைகள்) தெரியாது. நன்றி.

  பதிலளிநீக்கு
 3. மான் விழியை மடக்கிய மன்னருக்கு ராஜா மான் சிங் பெயர் சரியாகத்தான் இருக்கிறது .. ஓவியம் அருமை .....

  பதிலளிநீக்கு
 4. மிருகநயனி என்று தூர்தர்சனில் முன்பு ஒரு தொடர் வந்தது.
  படிக்க சுவாரஸ்யமான பதிவு,

  பதிலளிநீக்கு
 5. சின்ன வயதில் பாட்டிக்கிட்ட கதை கேட்டுக்கிட்டே தூங்குகிற நினைப்பு வந்தது. ஆனா அப்ப ராஜாவுக்கு ஒன்பது மனைவின்னதும், ம்! ம்! ன்னு ம் கொட்டிக்கிட்டு தூங்கினோம். இப்ப நானும் உங்களை மாதிரியே (!!), ம்ம்ம்ம்ம்ம்!(பெருமூச்சுத்தான்). ராஜாவாச்சே! ராஜாவாச்சே!

  (மான்கண்ணின்னு கூப்பிட்டவருக்கு கொஞ்சநாள் கழித்து அது பூனைக் கண்ணா தெரிஞ்சிருக்கும்.)

  (அப்புறம் இந்த ஒளரங்கசீப் ரொம்ப சீப்பா இருந்திருக்காரு. கோட்டையையெல்லாம் சிறைச்சாலையாக்கியிருக்காரு.)

  பதிலளிநீக்கு
 6. தமிழ்மணம் 4 to 5

  கண்கவர் காதலியின் கதையும் அந்த மான் விழியாளின் படமும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். சூடான சுவையான பகிர்வுக்கு நன்றிகள். vgk

  பதிலளிநீக்கு
 7. வடக்கத்திய ராஜாக்களின் வரலாறு என்றாலே
  அவர் பெண்களைச் சேர்த்துக் கொண்ட
  விவரங்களும் அவர்களுக்காக செய்த
  விரயங்களும் என ஆகிப்போய்விட்டது
  நல்ல வேளை நம் பக்கம் அவ்வளவு மோசமில்லை
  படங்களும் பதிவும் மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 6

  பதிலளிநீக்கு
 8. @ மோகன் குமார்: //ஆனா அப்பவும் ஆண்கள் பெண்கள் சொல்வதை கேட்டு நடந்திருக்காங்க என தெரிகிறது// எப்பவுமே இப்படித்தான் போல :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 9. # வேங்கட ஸ்ரீனிவாசன்: //இந்த ராஜா மான்சிங் (தோமர்) தான் ப்ருத்வி ராஜ் சௌஹானின் தாத்தா (தாய் வழி) // இது எனக்குப் புதிய செய்தி.

  உனது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு...

  பதிலளிநீக்கு
 10. @ பத்மநாபன்: //மான் விழியை மடக்கிய மன்னருக்கு// உங்களுக்கு வார்த்தைகள் அப்படியே மடங்கி மடங்கி விழுது பத்து ஜி!

  தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 11. # சென்னை பித்தன்: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.....

  பதிலளிநீக்கு
 12. @ ஈஸ்வரன்: அந்த ம்ம்ம்ம்.. இந்த ம்ம்ம்ம்... இரண்டுக்கும் என்னவொரு வித்தியாசம்... எப்படி அண்ணாச்சி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க!

  தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....

  பதிலளிநீக்கு
 13. # சந்திரமோகன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சந்திரமோகன்.

  பதிலளிநீக்கு
 14. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்...

  பதிலளிநீக்கு
 15. # ரமணி: //நல்ல வேளை நம் பக்கம் அவ்வளவு மோசமில்லை// நல்ல விஷயம் தான்...

  தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 16. படிக்கிரவங்களுக்கும் நல்ல கதை கேட்ட திருப்தி தரும்படி எழுதுரீங்க.

  பதிலளிநீக்கு
 17. @ லக்ஷ்மி: உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிம்மா....

  பதிலளிநீக்கு
 18. மந்தவெளி நடராஜன்., டொரோண்டோ,28 செப்டம்பர், 2011 அன்று முற்பகல் 7:57

  திரு வெங்கட் அவர்களுக்கு,

  தங்கள் "கண்கவர் காதலி" பற்றிய எனது கருத்துரைகளை தங்கள் ப்ளாக் ஏனோ ஏற்க மறுக்கிறது. ஒருவேளை, சில மாதங்களாக நான் எழுதாததில் ப்ளாக், கோபம் கொண்டது போலும்.! அந்த குறிப்பினை கீழே கொடுத்துள்ளேன். பிரசுரித்தால் நலம்.

  "தங்கள் மத்யப்ரதேச தொடரில் ராஜா மான்சிங் பற்றிய சரித்திர உண்மைகளை படித்தேன்.. படித்ததும், பாட்டி கதைபோல் தூக்கம் வரவில்லை, மாறாக, அடுத்த தொடரை எபபோது படிப்போம் என்ற அவாவை தூண்டும் வண்ணம் இருந்தது. ராஜா, கலாரசிகன் மட்டுமில்லை, அவர் சிலைபோன்ற மனைவியை தேர்ந்தெடுத்து ,தான் ஒரு சிலா ரசிகன் என்பதி நிருபித்துள்ளார்..மான் போன்ற கண் இருக்கிறதோ இல்லையோ, "இடித்து
  உரைக்கும் மதியூக மந்திரி போன்ற மனைவியின் சொல் கேட்டு நடத்தல் எங்கணும், எக்காலமும் நன்மை யுடைத்து ,"என்பர் நல்லோர்கள்.(தாங்கள், முன்பொரு சமயம், முதல் பரிசினை கோட்டை விட்டது மறக்கவில்லை என நினைக்கிறேன்.). ஒளி, ஒலி வர்ணனையை நேரில் கண்டதுபோல் இருந்தது தங்கள் நவின்ற பாங்கு.!! குஜ்ரி மகாலை கூடியசீக்கிரம் குடும்பத்துடன் சென்று ரசிக்க வாழ்த்துக்கள்.(பொதுநலத்தில் ஒரு சுயநலம்,-- அடுத்த சரித்திர. தொடர் கிடைக்குமே.!) வாழ்க, வளர்க.மற்றொரு கல்கி போன்ற எழுத்தாளரை--திருவாளர் வெங்கட்டை---,எங்களுக்கு அளித்திட்ட இறைவனுக்கு எங்கள் நன்றி உரித்தாகுக.
  மந்தவெளி நடராஜன்,
  27-09-2011.

  பதிலளிநீக்கு
 19. # மந்தவெளி நடராஜன்: தங்களது பாராட்டுதல்களுக்கு நன்றி.

  //மற்றொரு கல்கி போன்ற எழுத்தாளரை--திருவாளர் வெங்கட்டை---//

  இது ரொம்பவே அதிகம்.... அவர் எங்கே நான் எங்கே... அவர் மலை..... நானோ மலையிலிருந்து உருண்ட சிறு கல்லின் துகள்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 20. அடடா...... என்ன அழகு அந்தப் பெண்!!!!!!

  மான் சிங் மான்விழியாளைக் கண்டு மயங்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

  எட்டு ஒன்பது மனைவிகள் எல்லாம் ராஜாக்களுக்கு ஜூஜுபி.

  அறுபதினாயிரம் கணக்கு கூட இருந்துருக்கு ஒருவருக்கு!!!!!!

  பதிவு அருமையா இருக்கு. அவர் 45 நிமிஷம் சொன்னதை நீங்க ரெண்டே நிமிஷத்தில் புரியவச்சுட்டீங்களே!!!!!

  பதிலளிநீக்கு
 21. வரலாற்று கதைய அருமையா சொல்லிருகிங்க ...
  நன்றி....

  பதிலளிநீக்கு
 22. ராஜா மான்சிங். சரித்திர ஹீரோ!
  கலை ஆர்வம் மிக்க மனிதர். கலைமான்களாகப் பிடித்து அரண்மனையில் வைத்திருக்கிறாரெ.
  ம்ரிக்னயனி கடைகளுக்குப் போயிருக்கிறேன். இப்பொழுதுதான் அர்த்தம் புரிந்தது.
  வெகு அழகாகக் கதையைச் சொல்லி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 23. @ துளசி கோபால்: முதலில் ஒரு நன்றி.... பயணக்கட்டுரை எழுதுவதில் வல்லவரான உங்களது கருத்து என் பயணக் கட்டுரையில் இல்லையென்றால் ஏதோ குறை இருப்பதாய் தோன்றும்... :)

  அறுபதனாயிரம் மனைவிகள் - அவர் லெவலே வேற....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்.

  பதிலளிநீக்கு
 24. # சின்னதூரல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....

  பதிலளிநீக்கு
 25. @ கே.பி.ஜனா: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சார்...

  பதிலளிநீக்கு
 26. # வல்லிசிம்ஹன்: எனது பக்கத்தில் உங்களது முதல் வருகை... மிக்க மகிழ்ச்சி.....

  தங்களது பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி மேடம்....

  பதிலளிநீக்கு
 27. அருமையா இருக்கு வெங்கட்...

  என் டாஷ்போர்டில் உங்கள் பதிவுகள் எதுவும் வருவதில்லை நண்பரே...

  பதிலளிநீக்கு
 28. @ ரெவெரி: //என் டாஷ்போர்டில் உங்கள் பதிவுகள் எதுவும் வருவதில்லை நண்பரே...// அதுதான் கஷ்டம் நண்பரே.. எனக்குத் தெரிந்த வித்தைகளைக் கையாண்டு பார்த்து விட்டேன். ஆனால் பயனில்லை. என்னைத் தொடரும் நண்பர்களுக்கு எனது புதிய பதிவுகள் அப்டேட் ஆவதில்லை... :(

  இனிமேல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கிறேன்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 29. குதிரைகள் ஓடும் சத்தம், போர் நடக்கும் போது கேட்கும் வீரர்களின் வீர முழக்கம், வாள்களால் தாக்கிக் கொண்டு போடும் சத்தம் எல்லாம் நமக்கு தெளிவாய் கேட்கிறது.

  படிக்கும்போதே ஆசையாய் இருக்கிறது.. எப்ப சான்ஸ் கிடைக்குமோ.. நேரிலே பார்க்க.

  பதிலளிநீக்கு
 30. # ரிஷபன்: //படிக்கும்போதே ஆசையாய் இருக்கிறது.. எப்ப சான்ஸ் கிடைக்குமோ.. நேரிலே பார்க்க.//

  சீக்கிரமே வாய்ப்புக் கிடைக்க ஸ்ரீரங்கநாதன் அருள் புரியட்டும்....

  தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 31. பிளாக்கில் கமெண்ட் போட போனால் கரச்ர் கூட நகர மாட்டிங்கிது.நேரில் பார்ப்பது போல நீங்கள் பார்த்ததை பதிவிட்ருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 32. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: //பிளாக்கில் கமெண்ட் போட போனால் கரச்ர் கூட நகர மாட்டிங்கிது.நேரில் பார்ப்பது போல நீங்கள் பார்த்ததை பதிவிட்ருக்கீங்க.//

  நீங்கள் எனது முகப்பக்கத்தில் போட்டிருந்த கருத்தினை இங்கே பதிவிட்டு விட்டேன்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....