திங்கள், 5 செப்டம்பர், 2011

வண்ணமயமான கோட்டை


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறதுபகுதி 7]

ஜெய்விலாஸ் அரண்மணையில் இருந்த பல்வேறு பொருட்கள், அதன் பிரம்மாண்டம் போன்றவற்றின் தாக்கத்திலிருந்து வெளி வராமலேயே அடுத்து  நாங்கள் சென்ற இடம் குவாலியர்   கோட்டை

சுமார் 3 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இக்கோட்டை அமைந்துள்ளது.  நான்காம் நூற்றாண்டிற்கு முன்னரே கட்டப்பட்டு ஒவ்வொரு மன்னர்களின் ஆட்சியிலும் பல மாற்றங்களைக் கண்ட இது  பல வரலாற்று நிகழ்வுகளின் சின்னமாய் இன்றும் நின்று கொண்டிருக்கிறது.  மன் மந்திர், கரன் பேலஸ், ஜஹாங்கீர் மஹால், ஷாஜஹான் மஹால், குஜ்ரி மஹால் என்ற பெயர்களில் பல்வேறு அரசர்களால் கட்டப்பட்ட மாளிகைகள் இக்கோட்டையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இருக்கிறது

வட இந்தியாவில் இருக்கும் பல கோட்டைகளில் முக்கியமான ஒரு கோட்டையாக குவாலியர்   கோட்டை  இருந்திருக்கிறது.  கடந்த ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் பல ஏற்ற இறக்கங்களை கண்ட இந்த கோட்டையில்  இருந்து தோமர்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், சிந்தியா மன்னர்கள் என்று பலர் ஆட்சி புரிந்து இருக்கிறார்கள். ராணிகளில் ஒருவரான ஜான்சி ராணி கூட இந்த குவாலியர் கோட்டையினைக் கைப்பற்றியிருக்கிறார்கோட்டையின் வெளிப்புற சுவர்களில் நீல நிற வண்ணத்தில் இருக்கும் யானை, கிளி, மற்றும் பல விலங்குகளின் சிற்பங்களை இன்றைக்கும் காண முடிகிறது.  பல்வேறு படையெடுப்புகளில் அழிந்து விட்ட சிற்பக்கலையின் சிறப்பு பற்றி இங்கே மீதியிருக்கும் சில சிற்பங்கள்  பறைசாற்றிக்கொண்டு இருக்கின்றன எனச் சொன்னால் மிகையாகாது


பல்வேறு காலகட்டங்களில் இந்தக் கோட்டையினைச் சுற்றி பல மாளிகைகள் கட்டப்பட்டு இருக்கிறது.  அவற்றில் முக்கியமான ஒன்றானமன் மந்திர்” 1486 முதல் 1517 வரை உள்ள வருடங்களில் ராஜா மான்சிங் அவர்களால் கட்டப்பட்டுள்ளது. இங்கே வெளிச்சுவற்றில் பதிக்கப்பட்ட ஓடுகள் காலத்தின் பலதரப்பட்ட தாக்குதல்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  எஞ்சியிருக்கும் சில, இவற்றின் அழகை வெளிப்படுத்தி, முழுவதும் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்த மாளிகைக்குள்ளே இருக்கும் பெரிய அறைகளில் பெரிய பெரிய இசை மேதைகளிடமிருந்து இசையைக் கற்றுக்கொள்வார்களாம் பெண்கள்.  அப்படிக் கற்றுக்கொள்ளும்போது ஆசிரியர் ஒரு புறம் இருக்க, மறைவிற்குப் பின்புறம் இருப்பார்களாம் பெண்கள்.    அவர்களுக்கு திரைச்சீலைகளாக அமைக்கப்பட்டது எதனால் என்று தெரிந்ததும் அவ்வளவு ஆச்சரியம் எங்களுக்கு.  அத்திரைச் சீலைகள் எல்லாமுமே கற்களால் ஆனவை.  அவ்வளவு மெலிதாகச் செதுக்கப்பட்டு ஆங்காங்கே சிறிய துளைகள் இடப்பட்டு இருந்தன


முகலாயர்கள் காலத்தில் இக் கோட்டை கடுமையான சிறைத் தண்டனை அளிக்கப்பட்டவர்கள் அடைக்கப்பட்ட ஒரு சிறைச்சாலையாக இருந்திருக்கிறதுமுகலாய மன்னர் ஔரங்கசீப் தனது தம்பி முரத் என்பவரை இங்கே தான் சிறை வைத்திருக்கிறார். கடைசியில் அவரது தம்பி கொல்லப்பட்டதும் இங்கேதான்

இன்னும் பலப் பல வரலாற்று நிகழ்வுகளை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் இக் கோட்டையின் முழு வரலாறு பற்றித் தெரிந்து கொள்ள நமக்கு நேரமும் பிடிப்பும் இருக்க வேண்டும்

இங்கே தினமும் மாலை வேளைகளில் “Light and Sound Show” நடக்கிறது.  இரவு 07.30 மணி முதல் 08.15 வரை ஹிந்தி மொழியிலும் 08.30 மணி முதல் 09.15 வரை ஆங்கில மொழியிலும் இக்கோட்டையின் வரலாற்றினை நம் கண் முன்னே ஒலி, ஒளி கொண்டு நமக்குக் காண்பிக்கிறார்கள்


அட இருங்க மணி இன்னும் 07.30 ஆகலையே அதுக்குள்ளே என்னா அவசரம்?.  அதற்குள் நாம் இன்னும் சில இடங்களைப் பார்த்துட்டு வந்துடலாம்,சரியா.  எங்கேன்னு கேட்கறீங்களா?  மாமியார்-மருமகள் கோவிலுக்குத் தான்.

மீண்டும் சந்திப்போம்..

வெங்கட்.

51 கருத்துகள்:

 1. அருமையான படங்கள். அழகழகான விளக்கங்கள்.

  //அத்திரைச் சீலைகள் எல்லாமுமே கற்களால் ஆனவை. அவ்வளவு மெலிதாகச் செதுக்கப்பட்டு ஆங்காங்கே சிறிய துளைகள் இடப்பட்டு இருந்தன. //

  ஆஹா! எவ்வளவு ஒரு மிகச்சிறந்த கைவேலைப்பாடுகள்! பிரமிக்க வைக்கின்றனவே!

  பதிவுக்கும், பகிர்வுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள் .... வெங்கட்.

  1 to 2 in Indli & 1/1 to 2/2 in Tamilmanam - vgk

  பதிலளிநீக்கு
 2. @ வை. கோபாலகிருஷ்ணன்: மிக அழகான வேலைப் பாடுகள் இந்த கோட்டை முழுவது கொட்டிக் கிடக்கின்றன. பார்த்து நாங்களும் பிரமித்து தான் போனோம்....

  தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 3. வெங்கட்ஜீ! இதில் ஏதோ ஒரு அரண்மனையில், டைனிங் டேபிளில் வெள்ளித்தண்டவாளத்தில், குடிபானங்களைக் கொண்டு போக வெள்ளியிலான ரயில் இருப்பதாக கேள்விப்படுகிறோமே? அது உண்மையா? எந்த அரண்மனையில் என்று சொல்ல முடியுமா?

  புகைப்படங்களும் பகிர்வும் பிரமாதம் வெங்கட்ஜீ! :-)

  பதிலளிநீக்கு
 4. @ சேட்டைக்காரன்: என்னுடைய முந்தைய பதிவுகளைப் படிக்க வில்லை என நினைக்கிறேன் சேட்டை...

  அது பற்றி முன் ஒரு பதிவில் எழுதி இருக்கிறேன்...

  ”வெள்ளி ரயிலில் வரும் பானங்கள்” என்ற தலைப்பில்... http://venkatnagaraj.blogspot.com/2011/08/blog-post_26.html

  படித்துப் பாருங்கள்.... உண்மைதான்...

  தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேட்டை...

  பதிலளிநீக்கு
 5. படங்களும் செய்திகளும் போட்டி போட்டு பதிவை சிறப்பாக்குகிறது .... கல்லில் சிலை வடிப்பதை கண்டோம் ..சீலை நெய்திருப்பதை அறிகிறோம் ..கலை நுட்பமான மனிதர்கள் ..

  பதிலளிநீக்கு
 6. படங்களும் செய்திகளும் ரொம்ப நல்லா இருக்கு.
  கல்லிலே கலை வண்ணம் கண்டான்.

  பதிலளிநீக்கு
 7. இங்கே தினமும் மாலை வேளைகளில் “Light and Sound Show” நடக்கிறது. //

  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 8. //@ சேட்டைக்காரன்: என்னுடைய முந்தைய பதிவுகளைப் படிக்க வில்லை என நினைக்கிறேன் சேட்டை...

  அது பற்றி முன் ஒரு பதிவில் எழுதி இருக்கிறேன்.//

  வெங்கட்ஜீ! அனேகமாக அந்தப் பதிவில் வாசித்த ஞாபகத்தில் தான் கேட்டிருப்பேன் என்று தோன்றுகிறது. சமயங்களில் நான் எழுதிய இடுகைகளே கூட ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.

  :-)))))

  நன்றி வெங்கட்ஜீ!

  பதிலளிநீக்கு
 9. 'மன்மந்திர்’ - மனக்கோவில், மனமே கோவில், மனமெனும் கோவில் என்று எடுத்துக் கொள்ளலாமா?

  இசை முதலான கலைகள் மூலம் மனதைக் கோவிலாக்க ஏற்படுத்திய மாளிகை பின்னாளில் சகோதரனையே அடைத்து வைக்கப்பயன்பட்ட சிறைச்சாலையாகவும் கொலைக்களமாகவும் மாறியது காலத்தின் கோலமே.

  (இந்த தொடர் முடியும் போது எங்களுக்கு ஒரு நல்ல வரலாற்று வாத்தியார் கிடைத்திருப்பார். வாங்கய்யா வாத்தியாரய்யா!)

  பதிலளிநீக்கு
 10. கல்லில் திரைச்சீலையா.. அரண்மனையை ஒரு சுற்று சுற்றி வந்தது போல இருந்தது பதிவு . நன்றீகள் வெங்கட்.:)

  பதிலளிநீக்கு
 11. @ பத்மநாபன்: //கல்லிலே சீலை நெய்திருக்கிறார்கள்.../ உங்கள் வார்த்தைகள் அருமை.... நிச்சயமாக அவர்களுக்கு இருக்கும் கலைத்திறன் மெச்சத்தக்கது பத்துஜி!

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 12. # லக்ஷ்மி: //கல்லிலே கலை வண்ணம் கண்டான்// அட இந்த பாடல் வரிகள் எனக்கேனோ தோன்ற வில்லை இந்த பதிவினை எழுதும்போது...

  தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

  பதிலளிநீக்கு
 13. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 14. # சேட்டைக்காரன்: // சமயங்களில் நான் எழுதிய இடுகைகளே கூட ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.

  :-)))))//

  We are sailing in the same boat சேட்டை... :))

  தங்களது இரண்டாவது வருகைக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 15. @ ஈஸ்வரன்:

  //மனக்கோவில், மனமே கோவில், மனமெனும் கோவில் //

  //வாங்கய்யா வாத்தியாரய்யா!//

  அட எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க அண்ணாச்சி!

  தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.

  பதிலளிநீக்கு
 16. # தேனம்மை லக்ஷ்மணன்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது பக்கத்தில் உங்கள் கருத்து. மிக்க மகிழ்ச்சி. ஆமாம் கல்லில் திரைச்சீலை.... நிச்சயம் நுணுக்கமான வேலைப்பாடு தான்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 17. //ராணிகளில் ஒருவரான ஜான்சி ராணி கூட இந்த குவாலியர் கோட்டையினைக் கைப்பற்றியிருக்கிறார். //

  பதிலளிநீக்கு
 18. //ராணிகளில் ஒருவரான ஜான்சி ராணி கூட இந்த குவாலியர் கோட்டையினைக் கைப்பற்றியிருக்கிறார். //
  இது எனக்கு புதிய தகவல்.நன்றி.

  அழகான படங்கள்.கோட்டை மனதை கொள்ளை கொண்டது.மாமியார் மருமகள் கோவிலை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. நல்ல கருத்து.. பகிர்விற்கு நன்றி..

  4th from the left.. that's you.. ?

  MPkku oru flight ticket parcel.. -- enakkuththaan..

  பதிலளிநீக்கு
 20. அழகான படங்கள் அருமையான விவரிப்பு
  மொத்தத்தில் அசத்தலான பதிவு
  நானும் ஜெய்ப்பூர் அரண்மனைகளில்
  இது போல் கல் திரைகளைப் பார்த்தேன்
  அதிக மனைவிமார்கள் இருந்ததால்
  ராஜாவுக்கு தன்மீது நம்பிக்கையில்லாது போனதால்
  மனைவிமார்களைக் காப்பாற்றுவதற்காக
  இப்படியெல்லாம் செய்திருப்பார்களோ எனத் தோன்றியது
  ராணிமார்களுக்கு உதவியாளர்கள் கூட
  திரு நங்கைகளைத்தான் வைத்திருந்தார்கள் எனக் கேள்விப்பட
  ராஜாக்கள்மேல் பரிதாபம்தான் வந்தது
  அந்தப் போட்டாவில் நாங்கள் இல்லாதது ஒன்றுதான் குறை
  மற்றபடி உங்களுடன் சேர்ந்து சுற்றுவதைப் போலத்தான்
  உணர்கிறோம்.தரமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 21. அருமையான பதிவு.
  அழகான படங்கள்.
  பிரம்மாண்டமான அரண்மனை.
  வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

  பதிலளிநீக்கு
 22. கல்லால் ஆன திரைச்சீலையா!! அந்த காலத் திறமைகள் அசத்தல்.

  இப்பல்லாம் வீடு கட்டினா, ரெண்டே வருசத்துல கீறல் விட்டுடுது.

  பதிலளிநீக்கு
 23. அத்திரைச் சீலைகள் எல்லாமுமே கற்களால் ஆனவை. அவ்வளவு மெலிதாகச் செதுக்கப்பட்டு ஆங்காங்கே சிறிய துளைகள் இடப்பட்டு இருந்தன.

  இதே போல ஹைதராபாத்தில் மியூசியத்தில் ஒரு பெண் சிலையைப் பார்த்து பிரமித்துப் போனேன்.

  கட்டிடக்கலையும் அழகுணர்ச்சியும் அந்த நாட்களில் அதிகமாகவே இருந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 24. கண்டிப்பாக ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது உங்கள் பதிவு. மைக்ரோசாப்டின் ஒரு ஸ்க்ரீன் சேவர் தீமில் இந்த கோட்டையின் புகைப்படத்தை பார்த்து எந்த கோட்டை என்று தேடிக்கொண்டிருந்தேன்.. உங்களால் கிடைத்தது விடை!

  பதிலளிநீக்கு
 25. படம் + செய்தி... ரொம்ப நல்லா இருக்கு..வாழ்த்துக்கள்..

  ரெவெரி

  பதிலளிநீக்கு
 26. மிகச் சிறப்பான ஒரு வரலாற்றுச் சான்றினை அழகிய படங்களுடன் அளித்து ஆர்வத்தினைத் தூண்டிவிட்டீர்கள். நேரில் பார்க்கவும் மேலும் விவரங்களை அறியவும் ஆவல் உண்டாகிறது. சிறப்பான செய்திகள்.வாழ்த்துக்கள்.

  --

  பதிலளிநீக்கு
 27. தலைவரே! என்ன படங்கள்... என்ன பதிவு.. கூடவே வந்ததுபோல் ஒரு பிரமை.. உங்கள் ரசனை பதிவில் அலையடிக்கிறது.. அற்புதம் வெங்கட்.. இன்னைக்கு ஒரு கதை போட்டிருக்கிறேன்.. பாருங்க..

  பதிலளிநீக்கு
 28. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டேன்!சுற்றிக் காட்டியதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 29. கல்லானாலும் கணவனென்று இருப்பவர்களுக்கு கல்திரைச்சீலை நல்லா வச்சிருந்தாங்க..போங்க..

  பதிலளிநீக்கு
 30. நீல நிற வண்ணத்தில் குவாலியூர் கோட்டையின் வெளிச்சுவர் சூப்பர்.

  மாமியார் மருமகள் :) கோயிலையும் பார்த்திடுவோம்.

  பதிலளிநீக்கு
 31. @ ராம்வி: ஆமாம் ராம்வி... சிறிது காலம் இக்கோட்டை ஜான்சிராணி வசம் இருந்தது....

  தங்களது இனிய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்ரி.

  பதிலளிநீக்கு
 32. # மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: அடாடா என்ன திறமை... சரியா கண்டுபிடிச்சுட்டீங்களே என்னை :)

  டிக்கட் பார்சல் பண்ணியிருக்கேன்.... வந்துடும்.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 33. @ ரமணி: சந்தேகம் என்பது எல்லாக் காலத்திலும் மன்னர்கள் மனதில் குடிகொண்டு இருந்திருக்கிறது போலும்... அதனால் தான் இந்தத் திரைச்சீலை, மறைப்பு எல்லாம்.... அரசர்களை நிந்தித்தாலும், நாம் பாராட்டவேண்டியது அந்த சீலையை அமைத்தவர்களின் திறமையை மட்டுமே...

  தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும், வாக்குகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 34. # “என் ராஜபாட்டை” ராஜா: தங்களது முதல் வருகையோ? தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 35. @ நாஞ்சில் மனோ: படங்களைப் பார்த்து பாராட்டியதற்கு ஒரு ஓ போட்டுடுவோம்.... :)

  ஏதோ நம்மால முடிந்த விஷயம் - உங்களையும் சுத்திக் காட்டிடுவோம்....

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மக்கா!

  பதிலளிநீக்கு
 36. # ரத்னவேல்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

  பதிலளிநீக்கு
 37. @ அமைதிச்சாரல்: தில்லி வீடுகள் இரண்டு வருடம் கூட தாங்குவதில்லை... சில வீடுகள் ஆறே மாத்த்தில்... பல்லை இளிக்கிறது :(

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்....

  பதிலளிநீக்கு
 38. # ரிஷபன்: நிறைய திறமைகள் நம் நாட்டில் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது... என்பது இதுபோன்ற இடங்களில் தெரிகிறது....

  நுணுக்கமான வேலைப்பாடுகள் எவ்வளவு இடங்களில்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 39. @ பந்து: எனது பக்கத்தில் தங்களது முதல் வருகையோ? நல்ல விஷயம்...

  எனது பதிவின் மூலம் உங்களுக்கு ஒரு விஷயம் புலப்பட்டு இருக்கிறது என நினைக்கும் போது சந்தோஷம் மனதில்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்...

  பதிலளிநீக்கு
 40. # ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி....

  பதிலளிநீக்கு
 41. @ ருக்மணி சேஷசாயி: வணக்கம் அம்மா.. உங்கள் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

  பதிலளிநீக்கு
 42. # மோகன்ஜி: இத்தனை நாள் உங்களைக் காணாமல் இந்த வலைப்பூவே சோகமாய் இருந்தது ஜி!

  தங்களது இனிய கருத்திற்கும் பாராட்டுதலுக்கும் நன்றி. உங்கள் பக்கமும் வந்து கருத்திட்டேன்... ஜானு நெஞ்சை விட்டு நீங்க மறுக்கிறாள்.....

  பதிலளிநீக்கு
 43. கோட்டைகள் ஒவ்வொன்னும் பிரமிக்க வைக்கும் அழகுடன் மனசை அப்படியே கொள்ளை கொண்டுல்லே போகுது!!!!

  உங்க அழகான விவரிப்பு இதுக்கு இன்னும் கம்பீரத்தையும் அழகையும் சேர்க்குது வெங்கட்.

  நீலக்கலர் இன்னும் எப்படி பளிச்ன்னு இருக்கு பாருங்க!!!!!

  ஆனால்..... கோட்டை கொத்தளங்கள் எல்லாம் எவ்ளோ ரத்தம் பார்த்த இடம் என்று நினைச்சால் தாங்கலை:( அழகும் ஆபத்தும் ஒன்னாவே இருக்குல்லே!

  பதிலளிநீக்கு
 44. @ சென்னை பித்தன்: “லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா” வரதுதானே நல்லது.... :)

  தங்களது இனிய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 45. # முத்துலெட்சுமி: கலை, இலக்கியம் என்றெல்லாம் நிறைய நல்ல விஷயங்கள் இருந்தாலும் ராஜாக்கள் இப்படியெல்லாமும் சந்தேகத்துடன் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது வருத்தம் தான் சகோ....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 46. @ மாதேவி: அடுத்தது மாமியார் - மருமகள் கோவில் தான்... திங்களன்று.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 47. # துளசி கோபால்: சொந்த தம்பியைக் கூட கொலை செய்து போட்டு இருக்கிறார் இக்கோட்டையில்....

  ஒவ்வொரு கோட்டையிலும் சிந்திய ரத்தத்தினை நினைத்தால் கஷ்டம் தான் டீச்சர்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....