வியாழன், 31 அக்டோபர், 2013

மன்னா டே…..



மே 1, 1919 அன்று பிறந்த பிரபோத் சந்த்ர டேபின்னாளில் திரையுலகில் பின்னணிப் பாடகராக கொடிகட்டி பறந்த போது வைத்துக் கொண்ட பெயர் மன்னா டே….. சென்ற வாரத்தில் 93 வயதில் காலமானார்பிறப்பினால் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர் என்றாலும், ஹிந்தி முதற்கொண்டு 16 இந்திய மொழிகளில் சினிமா பாடல்கள் பாடியவர்ஏன் மலையாளத்தில் கூட இரண்டு பாடல்கள் பாடியிருப்பதாகசெம்மீன் மற்றும் நெல்லு எனும் இரண்டு படங்களில் தலா ஒரு பாடல் பாடி இருக்கிறார்

ஹிந்தியில் எண்ணற்ற பல பாடல்களைப் பாடி இருக்கும் இவரது பாடல்களில் ஒரு சில பாடல்கள் நான் விரும்பிக் கேட்ட பாடல்கள்ரசித்த பாடல்கள். பாடல்கள் பாடுவது மட்டுமல்லாது சிறு வயதிலேயே குத்துச் சண்டையிலும் சிறந்து விளங்கினாராம் மன்னா டே!

தனது திறமைக்கு அடையாளமாய் பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற பல விருதுகளைப் பெற்ற மன்னா டேயின் மனைவி சுலோசனா குமரன் – கேரளத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இரண்டு குழந்தைகள். தனது இசைப்பயணத்தை 1943-ஆம் ஆண்டு வெளிவந்த “தமன்னாபடத்தின் மூலம் தொடங்கிய மன்னா டே பல சிறப்பான பாடல்களை பாடி இருக்கிறார்.  சினிமா பாடல்கள் மட்டுமல்லாது ஹிந்துஸ்தானி பாடல்களும் பாடுவது இவருக்கு பிடித்தமான ஒன்று. 

சமீபத்தில் இவர் காலமானாலும் இவரது பாடல்கள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவரது பாடல்களில் – நான் ரசித்த பாடல்கள் சில உங்களின் ரசனைக்கும் இங்கே......

தில் தோ ஹே....  படத்திலிருந்து “லாகா சுன்ரி மே தாக்




ஆனந்த் படத்திலிருந்து “ஜிந்தகி கைசி ஹே பெஹ்லி


ஸ்ரீ 420 படத்திலிருந்து “தில் கா ஹால் சுனே தில்வாலா...



அதே படத்தில் மன்னா டே, ஆஷா போன்ஸ்லே அவர்களுடன் இணைந்து பாடிய பாடல் – “முட் முட் கே நா தேக் முட்முடுக்கே!



சல்தி கா நாம் காடி படத்தில் சம காலத்திய பாடகரான கிஷோர் குமார் அவர்களுடன் இணைந்து மன்னா டே பாடிய சம்ஜோ இஷாரே.... ஹாரன் புக்காரே....



து ப்யார் கா சாஹர் ஹே..பாடல் சீமா படத்திலிருந்து



என்ன நண்பர்களே, பாடல்களை ரசித்தீர்களா?

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

புதன், 30 அக்டோபர், 2013

அலட்சியம்…..


சாலைக் காட்சிகள்பகுதி 3

கிச்சு கிச்சு - சாலைக் காட்சிகள் பகுதி – 2 - இங்கே

இளம் யுவதி - சாலைக்காட்சிகள் பகுதி – 1 – இங்கே.

தில்லிக் காரர்கள் அதுவும் வட இந்தியர்களுக்கு எதிலும் ஒரு அலட்சியம். எதையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்ளப் பழகிவிட்டதுகடையில் ஏதாவது வாங்கிவிட்டு அதற்கான பணத்தினைக் கூட அலட்சியமாக மேஜை மீது தூக்கி தான் போடுவார்கள். கடைக்காரரும் மீதப் பணத்தினை மேஜை மேலே தூக்கிதான் போடுவார். சிறுவர்களிடம் கூட பணம் தாராளமாகப் புழங்கும்நேற்று கூட மதர் டைரி பால் கடையில் ஆயிரம் ரூபாய் நோட்டினை அநாயாசமாக போட்டு, ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு போன ஒரு சிறுவனைக் காண முடிந்ததுமிஞ்சி மிஞ்சி போனால் எட்டு வயது இருக்கலாம்…..

காய்கறிக் கடையில், பலசரக்குக் கடையில் என எங்கே சென்றாலும், விற்பவரும், வாங்குபவரும் இப்படி பணத்தினை தூக்கி எறிவது பார்க்கும்போது சில சமயங்களில் தோன்றும் – “ஒருவேளை இந்த உலகத்திலிருந்து செல்லும்போது பணம் நம் கூட வரப்போவதில்லை என்ற எண்ணத்தினால் தான் இப்படி செய்கிறார்களோ என! ஆனாலும் பணத்தின் பின்னால் அலைந்து கொண்டே தானே இருக்கிறார்கள் என நினைக்கும்போது இதில் உண்மை இருக்காது – இதற்குக் காரணம் அலட்சியம் மட்டும் தான் என நினைத்துக் கொள்வேன்.

நேற்று காலை சாலையில் சென்று கொண்டிருந்தபோது நாராசமாக ஒரு சத்தம்தகரத்தினை மொறமொறப்பான பகுதியில் வைத்து தேய்ப்பது போல ஒரு சத்தம்ஒரு சில நொடிகள் வந்தால் பரவாயில்லை. சத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கவே சுற்று முற்றும் பார்த்தேன். பார்த்த போது மனதில் அப்படி ஒரு கோபம்.

மூன்றரை அடியில் ஒரு எவர்சில்வர் ட்ரம். குப்பைக் கூடையாக பயன்படுத்தப்படும் அதிலிருந்த குப்பைகளை கொட்டுவதற்காக அந்த எவர்சில்வர் ட்ரம்மை 22-24 வயது மதிக்கத்தக்க கட்டான இளைஞர் தார் சாலையில் தரதரவென இழுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார். கூடவே அதே அளவு பிளாஸ்டிக் ட்ரம்மை இழுத்துக் கொண்டு இன்னொரு இளைஞர். முழுதும் குப்பையால் நிறைந்திருக்கும்போது அதிக எடையிருப்பதால் அப்படி இழுத்துக் கொண்டு சென்றார்களோ என நினைத்தால், குப்பையைக் கொட்டி விட்டு காலியான பின்னரும் அந்த இளைஞர்கள் சாலையில் தரதரவென இழுத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

சத்தம் தாங்காத என்னைப் போன்ற இன்னொரு நபர்ஒரு தில்லி போலீஸ் காவலாளி - அந்த இளைஞரைப் பார்த்துஏனப்பா, இப்படி அந்தப் பாத்திரத்தினை வீணடிக்கிறாய்?” எனக் கேட்க, முறைத்துப் பார்த்துஉனக்கென்ன அக்கறை?, உன் வேலை இது இல்லை, எவனாவது திருடுவான், இல்லை குண்டு வைப்பான்அதைக் கண்டுபிடி அதை விட்டு என்னைக் கேட்க வந்துட்ட, உன் வேலையைப் பார்த்துட்டு போய்யாஎன கொஞ்சம் தகாத வார்த்தைகளையும் சொல்லி விடவே, அவரும் தனியாக இருந்தமையாலோ என்னவோ, வாயை மூடிக்கொண்டு நகர்ந்தார். அவர் திட்டு வாங்கியதைக் கேட்ட பிறகு யாருக்கும் அந்த இளைஞர்களை கேள்வி கேட்கத் தோன்றவில்லை. ”இவனிடம் திட்டு வாங்க நமக்கு என்ன தலையெழுத்தா,” என்ற எண்ணத்தோடு அங்கிருந்து நகர்ந்தோம்.

அலட்சியம்….  எல்லாவற்றிலும் ஒரு அலட்சியம்….. 

மீண்டும் வேறொரு சாலைக் காட்சி பற்றிய பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை……

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.