தில்லியில் இருக்கும்
“தில்லி முத்தமிழ் பேரவை” எனும் அமைப்பு இந்த
காந்தி ஜெயந்தி அன்று பிரபல திரைப்படப் பாடகர் மனோ மற்றும் லக்ஷ்மண் ஸ்ருதி
குழுவினரின் ஒரு இசை மாலைக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். வீட்டின் அருகிலேயே
இருக்கும் தால்கடோரா உள் விளையாட்டு அரங்கத்தில் இந்த இசை மாலை என்பதால் நானும்,
நண்பர் பத்மநாபனும் செல்ல முதல் நாளே முடிவு செய்திருந்தோம்.
மாலை நான்கு மணிக்கு விழா ஆரம்பமாகும் எனச் சொன்னதால் மூன்றரை மணிக்கே
அரங்கிற்குச் சென்றுவிட, அப்போதே அரங்கம் நிறைந்திருந்தது. உள் விளையாட்டு
அரங்கில் மேடை அமைத்து அதன் எதிரே சில நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மற்ற அனைவருக்கும் அரங்கில் இருக்கும்
பிளாஸ்டிக் நாற்காலிகள் தான். காமன்வெல்த் போட்டிகள் போது புதிதாக மாற்றம்
செய்யபட்ட அரங்குகளில் இதுவும் ஒன்று.
இந்த இருக்கைகளில் தொடர்ந்து நான்கு ஐந்து மணி நேரம் இருந்தால் முதுகுவலிக்கு
உத்திரவாதம் – என்னைப் போன்ற எண்பது கிலோ தாஜ்மஹாலுக்கே போதாத இந்த இருக்கைகளில்
நூறு கிலோவுக்கு மேலானவர்கள் உட்கார்ந்தால் எப்படி இருந்திருக்கும் என பல
இருக்கைகள் உடைந்திருந்ததைப் பார்த்து தெரிந்து கொள்ள முடிந்தது. கொஞ்சம் பெரிதாக
இருந்திருக்கலாம் – ஓ இதிலும் கொள்ளை!
வரவேற்புரை போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகளுக்குப் பிறகு லக்ஷ்மண் ஸ்ருதி
குழுவினரின் இசை நிகழ்ச்சி ஆரம்பித்தது. நிகழ்ச்சியின் முதல் திரைப்பாடலாக ஒலித்தது
இந்த பாடல் தான்..... நீங்களும் கேட்டு ரசிக்க.....
கோவில் புறா படத்திலிருந்து இளையராஜாவின் இசையில் புதுமை பித்தன் எழுதிய “அமுதே தமிழே அழகிய” பாடல்.
கோவில் புறா படத்திலிருந்து இளையராஜாவின் இசையில் புதுமை பித்தன் எழுதிய “அமுதே தமிழே அழகிய” பாடல்.
அடுத்த பாடல் சந்திரோதயம் படத்திலிருந்து கவிஞர் வாலி எழுதிய “புத்தன் ஏசு
காந்தி பிறந்தது” எனும் பாடல். இந்த பாடல்
முடியவும் மனதோடு மட்டும் மனோ அரங்கிற்கு அவருடைய ட்ரேட்மார்க் ஜிங்குச்சான் கலர்
கோட் போட்டு வந்துவிட, அவருக்கு வரவேற்பு, மரியாதை செய்யப்பட்டு அவர் பாடத்
தொடங்கினார். முதல் பாடலே அருமையான
பாடலாகிய “ஓம் கார நாதாணு” எனும் சங்கராபரணம் பாடல்.
அடுத்ததாக சாய் பாபா மீது ஒரு பாடல். அதற்கடுத்து நம்ம ”பச்சை சட்டை சிகப்பு பேண்ட்” ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்திலிருந்து ”செண்பகமே செண்பகமே” பாடலும், “மதுரை மரிக்கொழுந்து வாசம்” பாடலும் பாடினார். தொடர்ந்து நான்கு பாடல்கள் பாடியதால் கொஞ்சம் ஓய்வு தேவை. மற்ற பாடகர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டுமே!
அடுத்ததாக சாய் பாபா மீது ஒரு பாடல். அதற்கடுத்து நம்ம ”பச்சை சட்டை சிகப்பு பேண்ட்” ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்திலிருந்து ”செண்பகமே செண்பகமே” பாடலும், “மதுரை மரிக்கொழுந்து வாசம்” பாடலும் பாடினார். தொடர்ந்து நான்கு பாடல்கள் பாடியதால் கொஞ்சம் ஓய்வு தேவை. மற்ற பாடகர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டுமே!
அடுத்து ஒலித்தது கும்கி படத்திலிருந்து ‘அய்யய்யோ ஆனந்தமே” பாடல். அடுத்ததாய் சூர்யாவின்
நடிப்பில் [?] வெளியான ஏழாம் அறிவு படத்திலிருந்து “ஓ ரிங்கா ரிங்கா” பாடல். மீண்டும் மனோ ‘நாயகன்’ படத்திலிருந்து ”நீ ஒரு காதல் சங்கீதம்” பாடலும் ‘சின்ன தம்பி’ படத்திலிருந்து ”தூளியிலே ஆட வந்த வானத்து” பாடலும் “சொல்லிட்டாளே அவ காதல” போன்ற பாடல்களும்
ஒலித்தது.
இப்படி பாடல்கள் பாடிக் கொண்டிருக்கும்போதே தில்லியின் முதலமைச்சர்
அரங்கத்திற்கு வர இசையில் ஒரு சிறு தடை. குத்து விளக்கு ஏற்றுதல், மாலை மரியாதை என
அமர்க்களப்பட்டது. தில்லியில் தேர்தல் வரப் போகிறதே – இந்த மாதிரி விழாக்கள்
எதற்கு அழைத்தாலும் முதல்வர் வந்து விடுவார்.....
ஓட்டு வாங்கணுமே :)
முதல்வருக்கு தமிழ் புரியாது என்பதால் அவருக்காகவே இரண்டு ஹிந்தி பாடல்கள் –
“மேரே சப்னோ கி ராணி” மற்றும் “மெஹபூபா மெஹபூபா” – அடுத்து லக்ஷ்மண் ஸ்ருதி
குழுவில் ட்ரம்ஸ் வாசிக்கும் நபரின் சிறப்பான தனி ஆவர்த்தனம் அமர்க்களப்பட்டது.
பிறகு முதல்வர் தமிழ் பாடல் ஒன்றும் கேட்க ஆசைப்படுகிறார் எனச் சொல்லி, காதல்
ஓவியம் படத்திலிருந்து ”சங்கீத ஜாதி முல்லை” பாடல். முதல்வர் மட்டும் தானா
கேட்க வேண்டும் – நீங்களும் கேட்க....
அடுத்ததாய் ‘செந்தமிழ் தேன் மொழியாள்’ [நேற்றைய ஃப்ரூட் சாலட் பதிவில் பகிர்ந்த அதே தேன் மொழியாள்
தான்!] – ஆரம்பத்திலேயே உச்சஸ்தாயிக்கு போய்விட திண்டாடி ஒரு
மாதிரி பாடி முடித்தார். அதன் பின்னர் ”ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்”, ”முக்காலா, முக்காப்லா”, ஓஹோஹோ கிக்கு ஏறுதே” போன்ற பாடல்கள் பாடினார்கள். அடுத்ததாக ”கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” பாடல் ஒருவர் பாட, திடீரென மேடையில் எம்.ஜி.ஆர்.
தோன்றினார்.
அவரைப் பார்த்தவுடன் கூட்டத்தில் இருந்த ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு, எழுந்து
நின்று, கையும் காலையும் இருந்த இடத்திலேயே நீட்டி, ஆட்டி பரவச நிலையடைந்தார்!
மனோ மட்டும் தான் பல பாடல்களை பாடினார்.
ஆண் பாடகர்களில் இன்னும் இரு நல்ல பாடகர்கள் இருக்க, பெண் பாடகர்களில்
பிரபலங்கள் இல்லை. அதனால் இருக்கும் நான்கு பெண் பாடகர்களும் மாற்றி மாற்றி
பாடினார்கள். அதில் ஒரு பெண் மேடையை விட்டு கீழே வந்து பல பெண்களை எழுப்பி ஆட
வைத்தார்.
தானாகவே சில பெண்கள் ஃபாஸ்ட் பீட் பாடல்களுக்கு ஆடினார்கள். அப்படி ஆடிய
பாடல்களை கேட்டால் அசந்துடுவீங்க! “ஏ வாடா வாடா பையா” மற்றும் “டாடி மம்மி வீட்டிலில்ல” – டாடி மம்மி பாட்டிற்கு பல தில்லி மம்மிக்கள் ஆட்டம்
போட்டனர்!
முன்பே சொன்னது போல இருக்கைகளின் பிரச்சனையால் நீண்ட நேரம் அமர்ந்து இசையை
ரசிக்க முடியவில்லை. நடுவே காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ரசிகர்களின் கோரிக்கைக்கு
இணங்கி “மச்சி, ஓப்பன் த பாட்டில்” போன்ற மிகச்சிறந்த
பாடல்களும் பாடப்பட்டன!
நிகழ்ச்சி முழுவதுமே இளைஞர்களும் குழந்தைகளும் நடனமாடி அசத்திக்
கொண்டிருந்தார்கள் – சில அதீதமான ஆர்வக் கோளாறு கொண்டவர்களையும் பார்க்க முடிந்தது
– “ஓஹோஹோ கிக் ஏறுதே பாடலுக்கு ஒரு ஜோடி ஆடியது – அந்த பெண் விலகி விலகிப் போக,
அந்தப் பெண்ணின் கணவன்[?] இழுத்து இழுத்து ஆடவைத்தார். எல்லோருடைய கண்களும் அந்தப்
பெண்ணின் மேல் இருக்க, ரொம்பவே சங்கடப்பட்டார் அந்தப் பெண்.
இப்படியாக மனோவுடன் ஒரு மாலைப் பொழுது போயிற்று. எனக்கு வீடு அருகிலே
இருந்தாலும், நண்பருக்கு வீட்டுக்குப் போக நேரமாகிவிடும் என்பதாலும், பல பாடல்கள்
கேட்டு விட்ட படியாலும் 08.45 மணிக்கு அரங்கிலிருந்து வெளியே வந்து ஆளுக்கொரு காபி
குடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.
தில்லியில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடப்பது அரிது என்பதால் அரங்கம் முழுவதும்
நிரம்பிவிட்டது. குறைகள் சில இருந்தாலும், இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு
செய்வதற்கு எத்தனை எத்தனை உழைப்பு தேவைப்படும் என்பதைப் நினைக்கும்போது
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தில்லி முத்தமிழ் பேரவையைச் சேர்ந்த நிர்வாகிகள்
பாராட்டுக்குரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
எங்களுக்கு கிடைத்த பாடல் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, உங்களையும்
சில பாடல்களை கேட்க வைத்ததில் மகிழ்ச்சி.
மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மனோவுடன் ஒரு மாலைப்பொழுதா?? நல்லா இருக்கு. :))))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குஜாலியாகப் பொழுது போயிற்று என்று சொல்லுங்கள். இருக்கைகளைப் பார்த்தால் எப்படி உட்கார்ந்தீர்கள் என்று தோன்றுகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ரசிகர்களின் நேயர் விருப்பம் புன்னகைக்க வைத்தது!
பதிலளிநீக்கு
நீக்குஉட்காருவது மிகவும் கடினம் தான். உட்கார்ந்தும் நின்றும் பார்த்த உணர்வு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்கி “மச்சி, ஓப்பன் த பாட்டில்” போன்ற மிகச்சிறந்த பாடல்களும் பாடப்பட்டன!
பதிலளிநீக்கு“ஏ வாடா வாடா பையா” மற்றும் “டாடி மம்மி வீட்டிலில்ல” – டாடி மம்மி பாட்டிற்கு பல தில்லி மம்மிக்கள் ஆட்டம் போட்டனர்!
//நாங்களும் உங்களுடன் அமர்ந்து இரசித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது! பகிர்விற்கு நன்றி நண்பரே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்கு//எங்களுக்கு கிடைத்த பாடல் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, உங்களையும் சில பாடல்களை கேட்க வைத்ததில் மகிழ்ச்சி. // எங்களுக்கும் மகிழ்ச்சி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குமகிழ்ச்சியாக மாலை பொழுதை கழித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குபகிர்ந்த பாடல்களும், நிகழ்ச்சியை நீங்கள் தொகுத்து வழங்கியிருக்கும் விதமும் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு# பல இருக்கைகள் உடைந்திருந்ததைப் பார்த்து தெரிந்து கொள்ள முடிந்தது. கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாம் – ஓ இதிலும் கொள்ளை!#
பதிலளிநீக்குபெரிய அளவில் ஊழல் நடந்ததால் இதுவாவது தேறி இருக்கேன்னு சந்தோசப் பட வேண்டியது தான் !
t.m.2
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஒரு இனிமையான இசை மாலைப் பொழுது உங்களுக்கு !
பதிலளிநீக்குஅதைப் படித்து மகிழும் பொன் காலைப் பொழுது எங்களுக்கு !
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி
நீக்குகாந்தி ஜெயந்தி இசை நிகழ்ச்சி ரசிக்கவைத்தது..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குDear Kittu,
பதிலளிநீக்குIdu voru ponn malai pozhudhu. .... Yen draw padal dhan ninaivirku varugindradhu.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குராமலக்ஷ்மிOctober 5, 2013 at 7:59 AM
பதிலளிநீக்குபகிர்ந்த பாடல்களும், நிகழ்ச்சியை நீங்கள் தொகுத்து வழங்கியிருக்கும் விதமும் அருமை.//
வழிமொழிகிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டிபிஆர்.ஜோசப் ஜி!
நீக்குரஸிக்க வைக்கும் இசைப் பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குமனோவுடன் ஒரு மாலைப் பொழுதைக் கழித்து இருக்கிறீர்கள்...
பதிலளிநீக்குபொன்மாலைப் பொழுதை சந்தோஷ மாலையாக ஆக்கியிருக்கிறீர்கள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்
நீக்குபதிவோடு பாடல் காணொளிகளையும்
பதிலளிநீக்குஇணைத்து எங்களையும் பரவசப்படுத்தியமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி
நீக்குtha.ma 4
பதிலளிநீக்குதமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி
நீக்குஎன்னதான் இவர்கள் நேரில் வந்து பாடினாலும் ஒரிஜினல் பாட்டை கேட்டுப் பழகிய நம் காதுகளுக்கு அவை ரசிப்பதில்லை - கூட கூட தம் சொந்த சரக்குகளை சேர்ப்பதால். இவர்களைவிட அமெச்சூர் பாடகர்கள் பலர் இவர்கள் பாடும் பாடல்களை மிக மிக நன்றாகப் பாடுகிறார்கள். அவர்களை பாடச் சொல்லலாம்.
பதிலளிநீக்குசமீபத்தில் SPB unplugged என்று ஒரு நிகழ்ச்சியில் அவர் ஒரு பாடலைக் கூட சரியாகப் பாடவில்லை. தனது மேதாவித்தனத்தை காட்ட ஏதேதோ செய்து கொண்டிருந்தார். ரொம்பவும் ஆசையாக கேட்க உட்கார்ந்த எங்களுக்கு தலைவலிதான் மிச்சம்.
மனோவைப் பற்றித் தெரியவில்லை. ஒருவேளை உங்கள் அனுபவம் நன்றாக இருந்திருக்கலாம்.
அந்தக் காலத்தில் உமா, A V ரமணன் இருவரும் பாடும் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் நாங்கள் இருவரும் போவோம். ஒரிஜினல் பாடகர்களை விட நன்றாகப் பாடுவார்கள் இவர்கள் இருவரும். நீங்களும் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
@ ரஞ்சனியம்மா ...!
நீக்கு200 % correct...! கொலையா கொல்றாங்க ....!
பல சமயங்களில் சேஷ்டை தான்.... மனோ மட்டும் தான் அன்று பிரபலம் என்பதால் அவ்வளவு சேஷ்டை இல்லை. மற்ற பாடகர்கள் சுமார் ரகம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவன் சுப்பு.
நீக்குபடங்களும் பதிவும் அருமை நண்பரே
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.
நீக்குஎன்னதான் இவர்கள் நேரில் வந்து பாடினாலும் ஒரிஜினல் பாட்டை கேட்டுப் பழகிய நம் காதுகளுக்கு அவை ரசிப்பதில்லை - கூட கூட தம் சொந்த சரக்குகளை சேர்ப்பதால். இவர்களைவிட அமெச்சூர் பாடகர்கள் பலர் இவர்கள் பாடும் பாடல்களை மிக மிக நன்றாகப் பாடுகிறார்கள். அவர்களை பாடச் சொல்லலாம்.//
பதிலளிநீக்குஉண்மையே.
இப்பொழுது வரும் பல இளைஞர்களும் யுவதிகளும் எவ்வளவு அழகாகப் பாடுகிறர்கள்.
ஆனாலும் ஒரிஜினலைக் கொடுத்தவர் மனோதானே.
மிக நன்றி வெங்க்ட்.
நேரிலியே பார்த்த சந்தோஷம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குஅருமையாக தொகுத்து அளித்துள்ளீர்கள் வெங்கட்!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா
நீக்குமாலை பொழுது அனுபவம்இனிமையான பாடல்களுடன் அருமை.
பதிலளிநீக்குபாடல் பகிர்வுக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குமனோவுடன் மாலைப் பொழுது வெரி இண்ட்ரெஸ்டிங்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.
நீக்குஅருமையான் பாடல்களை நினைவுபடுத்தியதற்கு நன்றிகள்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்
நீக்குஅருமையான பதிவும் பகிர்வும் சகோ!
பதிலளிநீக்குஎனக்கு பிடித்த பாடகர்களில் மனோவும் உள்ளார்.
அழகிய விழாவிபரணம். அருமை! வாழ்த்துக்கள் சகோ!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
நீக்குஅட்டடடா! இந்த ரசிகர்கள் பண்ணிய அழும்பு இருக்கிறதே! அத்தப் பார்க்கிறதுக்குத்தானே இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்குப் போகிறோம்.
பதிலளிநீக்கு(காஞ்சனாவைக் கண்டுக்காம வுட்டுட்டியே நைனா!)
நிஜமான காஞ்ச்சனாக்கள் சிலரை அங்கே பார்த்ததால் வந்த பிரச்சனை அது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
இசையுடன் மாலைப்பொழுது ரசித்தோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு