எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, October 31, 2013

மன்னா டே…..மே 1, 1919 அன்று பிறந்த பிரபோத் சந்த்ர டேபின்னாளில் திரையுலகில் பின்னணிப் பாடகராக கொடிகட்டி பறந்த போது வைத்துக் கொண்ட பெயர் மன்னா டே….. சென்ற வாரத்தில் 93 வயதில் காலமானார்பிறப்பினால் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர் என்றாலும், ஹிந்தி முதற்கொண்டு 16 இந்திய மொழிகளில் சினிமா பாடல்கள் பாடியவர்ஏன் மலையாளத்தில் கூட இரண்டு பாடல்கள் பாடியிருப்பதாகசெம்மீன் மற்றும் நெல்லு எனும் இரண்டு படங்களில் தலா ஒரு பாடல் பாடி இருக்கிறார்

ஹிந்தியில் எண்ணற்ற பல பாடல்களைப் பாடி இருக்கும் இவரது பாடல்களில் ஒரு சில பாடல்கள் நான் விரும்பிக் கேட்ட பாடல்கள்ரசித்த பாடல்கள். பாடல்கள் பாடுவது மட்டுமல்லாது சிறு வயதிலேயே குத்துச் சண்டையிலும் சிறந்து விளங்கினாராம் மன்னா டே!

தனது திறமைக்கு அடையாளமாய் பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற பல விருதுகளைப் பெற்ற மன்னா டேயின் மனைவி சுலோசனா குமரன் – கேரளத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இரண்டு குழந்தைகள். தனது இசைப்பயணத்தை 1943-ஆம் ஆண்டு வெளிவந்த “தமன்னாபடத்தின் மூலம் தொடங்கிய மன்னா டே பல சிறப்பான பாடல்களை பாடி இருக்கிறார்.  சினிமா பாடல்கள் மட்டுமல்லாது ஹிந்துஸ்தானி பாடல்களும் பாடுவது இவருக்கு பிடித்தமான ஒன்று. 

சமீபத்தில் இவர் காலமானாலும் இவரது பாடல்கள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவரது பாடல்களில் – நான் ரசித்த பாடல்கள் சில உங்களின் ரசனைக்கும் இங்கே......

தில் தோ ஹே....  படத்திலிருந்து “லாகா சுன்ரி மே தாக்
ஆனந்த் படத்திலிருந்து “ஜிந்தகி கைசி ஹே பெஹ்லி


ஸ்ரீ 420 படத்திலிருந்து “தில் கா ஹால் சுனே தில்வாலா...அதே படத்தில் மன்னா டே, ஆஷா போன்ஸ்லே அவர்களுடன் இணைந்து பாடிய பாடல் – “முட் முட் கே நா தேக் முட்முடுக்கே!சல்தி கா நாம் காடி படத்தில் சம காலத்திய பாடகரான கிஷோர் குமார் அவர்களுடன் இணைந்து மன்னா டே பாடிய சம்ஜோ இஷாரே.... ஹாரன் புக்காரே....து ப்யார் கா சாஹர் ஹே..பாடல் சீமா படத்திலிருந்துஎன்ன நண்பர்களே, பாடல்களை ரசித்தீர்களா?

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

28 comments:

 1. யப்பா உங்க அளவுக்கு ஹிந்திப் பாட்டுல நான் ஒஸ்தி இல்லை அண்ணே செமையா ரசிச்சிருக்கீங்களே ?

  ReplyDelete
  Replies
  1. அப்படி ஒன்றும் இல்லை மனோ...... :) இத்தனை வருடங்கள் தில்லியில் இருந்ததால் வந்த ரசனை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.

   Delete
 2. ஜிந்தகி கைசி ஹே பெஹ்லி, தில் கா ஹால் சுனே தில்வாலா கேட்டதுண்டு... மற்றவைகளுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. அந்தக் காந்தக் குரல்! மன்னாடே ஓர் அற்புதமான பாடகர். நீங்கள் குறிப்பிட்ட 'செம்மீனி'ல் வரும் மானச மயிலே வரு பாடலை யார் மறக்க முடியும்? முக்கியமான மற்றும் இரு பாடலை ஞாபகப் படுத்தலாமா? 'தலாஷ்' படத்தில் எஸ் டி பரமன் இசையில் வரும் "தேரே நயனா தலாஷ் கர் ஜிஸ் வோ ஹை..." அப்புறம் ரவி இசையில் 'வக்த்' படப்பாடல் "யெஹ் மேரே ஜோஹ்ர ஜபீன் துஜே மாலும் நஹீ..."

  ReplyDelete
  Replies
  1. மானச மயிலே பாடல் அற்புதமான பாடல். மீண்டும் கேட்க வேண்டும்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 4. ரசித்தோம் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 5. அருமையான ஒரு பாடகரைப் பற்றிய பதிவு..
  உங்களுடன் சேர்ந்து நானும் பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 6. அருமையான இசைப்பகிர்வுகள்..!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. தமிழில் வரும் 'கனவு காணும் வாழ்க்கை யாவும்' பாடல் ராகத்தில் வரும் 'கஸ்மே வாதே..' பாடல் இவர் பாடியதுதான். அப்புறம் 'பேகராரு தருதி ஹமே' பாடல். ஷோலேயில் கிஷோர் குமாருடன் 'யே...தோஸ் தீ ..'

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. ஆஹா, ரஸித்தேன். இனிய இசைப்பகிர்வு. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 9. அவர் பாடிய செம்மீன் படப் பாடல் “ மானச மயினே வரூ” இப்போதும் காதுகளில் ரீங்கரிக்கிறது. தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 10. அருமையான குரல்.பால்ராஜ் சஹானிக்கும் இவருக்கும் நன்கு ஒத்துப் போகும். அத்வும் து பியார் கா சாகர் பாடல் கேட்கும்போதெல்லாம் கண்ணில் தன்னீர் பொங்கும். வக்த் சினிமாவின் யே மேரே zohar sabi,''பாடல், பிரானுடன் பாடிய யாரி ஹை ஈமானு மேரா யார்''பாடல்.
  அருமையன பதிவுக்கும் பாடல்க்ளுக்கும் மிக நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 11. மன்னாடே மறைவு குறித்து செய்தி தாள்களில் அறிந்தேன்! அவரைப்பற்றி சிறப்பாக தகவல் தந்ததோடு பாடல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 12. இந்தி பாடல்கள் கேட்பேன்.
  ஆனால் யார் பாடியது என்றெல்லாம் அறிந்ததில்லை.
  நான் ரசித்த பாடல்களைப் படியவர்களில்
  இவரும் ஒருவர் என்பதை இன்று தான் அறிந்தேன்.

  வருந்துகிறேன்.
  இருந்தாலும்...
  காலனால் அவரின் உடலை மட்டும் தான் கொண்டு செல்ல முடியும்.
  கலைஞர்கள் காலனையும் தொற்கடித்து விடுகிறார்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 13. பால்ராஜ் சஹானிக்கு சீமாவில் பாடிய பாடல் மிகவும் பிடிக்கும் எனக்கு.
  பாடல் பகிர்வு மிக அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 14. puthiya thakaval nantri anne...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....