எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, October 28, 2013

ஏற்றி விடப்பா... தூக்கி விடப்பா.....


[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 6]

முந்தைய பகுதிகள் படிக்க, சுட்டிகள் கீழே:

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 5]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 4]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 3]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 2]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 1]

பம்பையில் தண்ணீர் ஆக்ரோஷமாக ஓடிக்கொண்டு எங்களை வரவேற்றது. மாலை நேரமாக இருந்தாலும், பயணத்தின் அலுப்பு தீரவும், சபரிமலை ஏற்றத்திற்கு முன் அங்கே நீராடுவது வழக்கம் என்பதாலும் அங்கே நீராடினோம்.

அலுப்பு தீர நீராடிவிட்டு மலையேற்றத்திற்கு தயாரானோம். நான் தயார் ஆகும் வரை நீங்களும் உங்களது வேலைகளை முடித்து வாருங்களேன்…..


உங்கள் நினைவுக்காக: [என் நினைவுக்காகவும் தான்!] – ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைபயணத் தொடரின் முந்தைய பகுதியை இப்படித்தான் முடித்திருந்தேன்.

நீங்களும் அடுத்த பகுதியைப் படிக்க தயாராக வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நீர்நிலைகளில் நீராடுவதில் இருக்கும் சுகம் நமது வீடுகளில் பைப் அடியில் பக்கெட் வைத்து சிறிய குவளைகளில் மொண்டு குளிப்பதில் இருப்பதில்லை. பம்பையில் தண்ணீர் நிறையவே ஓடுவதால் அங்கே குளிப்பதில் இருந்த ஆனந்தம் என்னையும் நண்பரின் நண்பரையும் பம்பையிலிருந்து வெளியே வர விடவில்லை. தொடர்ந்து நீராடிக்கொண்டிருக்க நினைத்தாலும் இரவுக்குள் மலையேறிவிட்டால் இரவிலேயே சபரிமலை ஐயப்பனை தரிசித்து விடலாம் என்பதால் மனதில் இஷ்டமில்லாது பம்பையிலிருந்து வெளியெறினேன்....

 பட உதவி: கூகிள்.....
 
மலையேறும்போது சற்றே வியர்க்கும் என்பதால், மேல் சட்டையில்லாது ஏறுவோம் என நண்பர் சொல்ல, மூவரும், ஒற்றை வேட்டியும் மேல் துண்டுமாக ஒரு சிறிய பையில் மாற்றுத் துணியும் எப்போதும் கூடவே இருக்கும் கேமரா பையோடும் [அதில்லாது பயணங்கள் போவதில்லை!] கிளம்பினோம்.  பம்பைக் கரையோரம் நடந்து சென்றால் சில மீட்டர் தொலைவு சென்றாலே படிக்கட்டுகள்....  மலையடிவாரத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் வந்துவிடும்.

பிள்ளையார் கோவில் வாசலில் மலையேற்றம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்பதற்காக ஆனைமுகனை வேண்டிக்கொண்டு சூரைத் தேங்காய் உடைக்கிறார்கள். நம் ஊர் கோவில் போல சிறு தொட்டிகள் கிடையாது. பெரிய பள்ளம். சுவர் முழுக்க பாறைகள். பாறைகளில் தேங்காயை அடித்து உடைத்து விட்டு, சிலர் அங்கேயே மாலை போட்டுக் கொள்கிறார்கள். நாற்பத்தி எட்டு நாள் கடுமையான விரதம் இருப்பது என்பதெல்லாம் இப்போதைய கால கட்டத்தில் நிறைய பேரால் முடிவதில்லை என்பதால் மாற்றிக் கொண்டு விடுகிறார்கள்.

அங்கே மாலை போட்டுக்கொண்டு இருமுடி கட்டிக்கொண்டு மலையேற்றம் தொடங்குகிறார்கள். நானும் நண்பர்களும் விரதமோ, இருமுடியோ கட்டிக் கொள்ளாததால் சாதாரணமாக தரிசனம் மட்டுமே செய்ய நினைத்திருந்ததால் ஆனைமுகனையும் மற்ற சன்னதிகளில் இருந்த ஹனுமனையும் மற்ற தெய்வங்களையும் தரிசித்துக் கொண்டு மலையேறத் துவங்கினோம்.  பொதுவாக சபரிமலையில் இருக்கும் பதினெட்டு படிகள் வழியாக சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்ல இருமுடி கட்டிக்கொண்டு செல்ல வேண்டும் என்பது விதி. அப்படி இருமுடி கட்டிக்கொண்டு செல்லாதவர்கள் பதினெட்டு படிகள் ஏறிச் செல்ல முடியாது. வேறு வழியாக கோவிலுக்குச் செல்ல முடியும்.

நாங்கள் சென்றது மகர ஜோதி சமயத்தில் இல்லாது, பொதுவாக மாதப் பிறப்பு சமயத்தில் என்பதால் அவ்வளவு மக்கள் கூட்டம் இல்லை. இருந்தாலும் கும்பல் விரும்பாத பலர் இது போல ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்தில்  முதல் ஐந்து நாட்கள் திறக்கும் சமயத்தில் விரதம் இருந்து சபரிமலைக்கு வருகிறார்கள். சிலர் குழுவாக வருகிறார்கள் – அவர்கள் எல்லோரும் குழுவாகவே மலையேறுகிறார்கள். அப்படிச் செல்பவர்கள் பாடல்கள் பாடிக்கொண்டும் சபரிகிரிவாசனின் பெயரைச் சொல்லியபடியே வருகிறார்கள்.

பொதுவாகவே ஆந்திர மாநிலத்தினைச் சேர்ந்தவர்களும், தமிழகத்தினைச் சேர்ந்தவர்களும் தான் அதிகம் இங்கே செல்கிறார்கள். இக்கோவிலுக்குச் செல்லும் மலையாளிகளின் எண்ணிக்கை அத்தனை அதிகமில்லை என நண்பர் சொல்லிக் கொண்டு வந்தார். இப்போதெல்லாம் சில வட இந்தியர்களையும் பார்க்க முடிகிறது எனச் சொல்லிக் கொண்டு வரும்போதே கோவிலில் தரிசனம் முடித்து சில வட இந்தியர்கள் சபரியின் நாமத்தினைச் சொல்லி மலையேறும் பக்தர்களுக்கு ஊக்கம் அளித்தபடியே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

பொதுவாக எருமேலி வழியாகச் செல்லும் பாதை மிகவும் கடினமானது என்று சொல்கிறார்கள். பம்பை வரை வாகனத்தில் வந்து அங்கிருந்து மலையேற்றம் தொடங்கினாலும் சற்றுக் கடினமானதாகத் தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். வட இந்தியாவில் உள்ள மலைகளில் – ஜம்மு மாநிலத்தின் வைஷ்ணவ தேவி கோவிலுக்கும், கேதார்நாத் கோவிலுக்கும் நடந்து பழக்கம் இருந்ததால் இந்த மலையேற்றம் எனக்குக் கடினமாகத் தெரியவில்லை.

கர்நாடகத்திலிருந்து வந்திருந்த ஒரு கோஷ்டி எங்கள் முன்னே சென்று கொண்டிருந்தார்கள் – சிலர் தமிழர்கள் – ஆனாலும் கன்னடத்திலோ அல்லது ஹிந்தியிலோ தான் பேசிக்கொண்டு சென்றார்கள். குழுவிலேயே கொஞ்சம் பெருத்த சரீரம் இருந்த ஒரு நபர் தான் சபரிகிரிவாசனின் நாமத்தினைச் சொன்னபடியே வந்து கொண்டிருந்தார் – “ஏற்றிவிடப்பா, தூக்கி விடப்பா “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைஎன்று எல்லோருமாகச் சொல்லிக்கொண்டே மலையேற்றம் நடந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து மலையேறிக் கொண்டிருக்கிறோம் நாங்கள் – அட உங்களுக்கும் என்னுடன் மலை ஏறி வந்ததில் கொஞ்சமாகக் கால் வலிக்க ஆரம்பித்து இருக்குமே....  அதனால் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வோமா? வழியில் ஒரு இடத்தில் சுடுவெள்ளம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கேயே நின்று நானும் கொஞ்சம் சுடுவெள்ளம் குடித்து விட்டு மலையேற்றத்தினைத் தொடங்குகிறேன். நீங்களும் ஓய்வெடுத்துக் கொள்ளுங்களேன்!

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. பக்திப் பயணம் பரவசமூட்டுகிறது படிக்கிற எங்களுக்கு!
  உங்களுடனே பயணித்து பக்திப் பரவசம் அடைகிறோம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 2. நம்பிக்கைகள்தான் மனிதனின் வாழ்வை நகர்த்துகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 3. நன்றி! இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 4. நீலி மலை ஏற்றம் சிறிது கடினம் தான்... (அதுவரை ஏறவில்லையோ...?) தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. தொடருங்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   Delete
 6. அந்த காட்டுக்குள்ளே புலி எல்லாம் உண்டுன்னு சின்ன வயசுல சொல்லக் கேட்டு இருக்கேன் உண்மையா ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ....

   அது பற்றி அடுத்த பதிவில்.....:)

   Delete
 7. malaiyeramaleye yengalukkum unnal punniyam kidaikkapogiradhu. Aduthha padhivai avaludan yedhirparkirom.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 8. வருடத்திற்கு மூன்று முறை சுற்றுலா செல்வதை போல சென்று வரும் நண்பர்கள் இருக்கிறார்கள் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.....

   Delete
 9. உண்மையில் உங்கள் எழுத்தும் படமும்
  என்னையும் அங்கு உடனழைத்துப் போவதாய் உணர்ந்தேன்...

  நினைக்கையிலே நெஞ்சுக்குள் சில்லிடுகிறது சகோதரரே!

  இப்படியான பயணங்களைப்பற்றி வாசிக்கும்போது
  ஆண்டவன் எனக்கும் இந்தப் பேறு இப்பிறவி முடிவதற்குள்
  தருவானா என ஏங்கவேண்டி இருக்கிறது.

  அத்தனை சிறப்பாக இருக்கிறது. உங்கள் பதிவுகள்!

  பகிர்விற்கு மிக்க நன்றி சகோ!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 10. நான் இதுவரை சபரிமலை சென்றதில்லை. உங்களுடனே வருகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. அருமை. தங்களுடன் பயணிப்பது போலவே இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 12. புனிதப் பயணம் சுவையாக இருக்கிறது! தொடர்ந்து வருகிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 13. தொடருகிறேன் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 14. தொடர்ந்து எட்டு ஆண்டுகள் சபரி மலை போன அனுபவத்தை உங்கள் பதிவு நினைவூட்டி விட்டது;அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 15. புனிதமான பயணத்தை எங்களுக்கும் பகிர்ந்ததில் மகிழ்ச்சி. இறைவனின் அருள் நிச்சயம் துணை நிற்கும் தங்களுடன். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரரே..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அ. பாண்டியன்.

   Delete
 16. அய்யப்பனைத் தேடிச் செல்லும் ஆன்மீகப் பகிர்வில் நாங்கள் பயணப்பட்டதையும் நினைவில் கொள்ள வைக்கிறீர்கள்...

  மீண்டும் சபரிமலை செல்ல வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 17. “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை” என்று எல்லோருமாகச் சொல்லிக்கொண்டே மலையேற்றம் நடந்து கொண்டிருக்கிறது.//

  அருமையான பயணம், தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 18. சுவாரஸ்யமான த்கவல்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 19. அருமையான வார்த்தைகளால் பக்திமாலை சூட்டப்பட்ட பயணம். அருமை.
  வெங்கட் மிக நன்றி,.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 20. சபரிமலைப் பயணம் என்னமோ சென்றதில்லை. 2007 ஆம் ஆண்டு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. போக முடியலை. நீங்கள் மேலே செல்கையில் நானும் கூடவே வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 21. நாங்களும் மெதுவாக மலைஏறி வருகின்றோம்.:)

  உங்கள் பயணத்தில் எமக்கும் தர்சிக்க கிடைக்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 22. உங்களுடன் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்திய பதிவு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.....

   Delete
 23. Visit : http://blogintamil.blogspot.in/2014/04/blog-post_23.html

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 24. தகவலுக்கு மிக்க நன்றி தனபாலன்.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....