எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, September 9, 2013

SETC பேருந்தும் சில கசப்பான அனுபவங்களும்கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைபகுதி 1


கேரளாஒவ்வொரு முறை கேரளம் செல்லும்போதும் சபரிமலை செல்ல வேண்டும் என்ற ஒரு ஆசை மனதுக்குள் வந்து போகும். ஆனாலும் இந்த 42 வருட வாழ்க்கையில் ஒரு முறையும் அங்கே செல்ல வாய்ப்பு அமையவில்லைஏற்படுத்திக்கொள்ளவில்லை என்று சொல்வது தான் பொருந்தும். நேற்று வெளியிட்ட எங்கே செல்லும் இந்தப் பாதை? பகிர்வில் நான் பகிர்ந்திருந்த புகைப்படங்கள் சபரிமலை செல்லும்போது எடுத்தவை.


சமீபத்திய ஜம்மு-காஷ்மீர் பயணத்தின் போது உடன் வந்திருந்த கேரள நண்பர்சாரே, நீங்கள் கேரளா வரணும், பின்னே சபரிமலைக்குச் செல்லணும்என அன்போடு அழைக்க, சரி சென்றுவிடுவோம் என முடிவு எடுத்தேன். சென்னையில் மனைவியின் உறவினர் வீட்டு திருமணம் இருக்க, கூடவே பதிவர் சந்திப்பும் சென்னையில் இருக்க, இதே பயணத்தில் சபரிமலைக்கும் சென்று வந்துவிடுவோம் என முடிவு செய்து அதற்கேற்ப, தில்லியிலிருக்கும் போதே பேருந்தில் முன்பதிவு செய்து விட்டேன்.

அம்மாவின் தொகுதி [எதுக்கு இந்த அரசியல்!] திருவரங்கம் என்றான பின், திருவரங்கத்திலிருந்தே, தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், திருவனந்தபுரம், பெங்களூரூ போன்ற இடங்களுக்கும் பேருந்துகள் இயக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு நாளும் திருவரங்கத்திலிருந்து இரவு 08.30 மணிக்கு திருவனந்தபுரத்திற்குச் செல்லும் பேருந்து இருக்கிறது. அதில் முன்பதிவு செய்து வைத்தேன். பயணம் செய்ய வேண்டிய நாள் வரவும் இரவு 08.00 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றேன்காலியாக இருந்த புதிய SETC பேருந்து என்னை வரவேற்றது.

SETC ஊழியர் ஒருவரிடம்எத்தனை மணிக்கு வண்டி புறப்படும்?” எனக் கேட்க, ”08.30க்கு டைம் சார், ஒரு பத்து நிமிஷம் பார்த்துட்டு எடுத்துடுவோம்என்று பவ்யமாய் பதிலளித்தார். சொன்னது போலவே இரவு 08.40 மணிக்கு திருவரங்கத்திலிருந்து இரண்டே இரண்டு பயணிகளோடு பேருந்து புறப்பட்டது. ”இரண்டு பேருக்கு ஒரு வாகனமா?” என்ற எண்ணத்தோடே பயணித்தேன். இரவு 09.10 மணிக்கு திருச்சியின் மத்திய பேருந்து நிலையத்தினை அடைந்தது பேருந்து.

அங்கு சென்றபிறகுமதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம்என்று கூப்பாடு போட ஆரம்பித்தார் பேருந்தின் நடத்துனரும் இன்னுமொரு ஆளும். தமிழகத்தில் எல்லா பேருந்து நிலையத்திலும் இது போல ஒரு ஆள் ஒவ்வொரு பேருந்திற்கும் கூவிக் கூவி ஆள் பிடிப்பார். அதற்கு ஏதோ கொஞ்சம் காசு கொடுப்பார்கள் [இவருக்கு எங்களது பேருந்து நடத்துனர் இருபது ரூபாய் கொடுத்தார்]. கூவியபடியே இருக்க, பேருந்து ஓட்டுனரிடம்எத்தனை மணிக்கு சார் இங்கேயிருந்து வண்டி எடுப்பீங்க?” என்றபோது 09.30 மணிக்கு டைம் சார். இன்னும் பத்து நிமிஷத்தில கிளம்பிடுவோம் எனச் சொன்னபோது மனதில் ஒரு திருப்தி.

09.30 மணி இருக்கும், SETC அலுவலகத்திலிருந்து கையில் ஒரு சீட்டோடு ஒருவர் ஓடி வந்து நடத்துனரிடம் கொடுத்து ரகசியமாக ஏதோ சொல்லிச் சென்றார். “என்ன சீட்டு அது?” என்று எட்டிப் பார்க்க, 10.30 மணி திருவனந்தபுரம் பேருந்திற்கு முன்பதிவு செய்திருந்த நான்கு பயணிகளின் பெயர் பட்டியல். ரகசியமாய்ச் சொன்னது – “10.30 க்கு செல்ல வேண்டிய பேருந்து வராதுஅதுனால, நீங்களே காத்திருந்து அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள்!”

08.30 மணிக்கு திருவரங்கத்திலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட ஒரு மணி 20 நிமிடம் வரை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உட்கார்ந்திருப்பத்தில் என்ன பலன்? இந்த நேரத்தில் நிச்சயம் கிட்டத்தட்ட 60 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்திருக்கலாம். இது போன்று செய்வது சரியில்லையே என பேருந்து நடத்துனரிடம் கேட்க, “எங்க கிட்ட கேட்டு என்ன சார் பண்ண முடியும்?, அவங்க சொல்றதை தான் நாங்க கேட்க முடியும், இன்னிக்கு நீங்க சொல்லிட்டு போயிடுவீங்க, நாங்க இங்கேயே தானே வேலை செய்யணும்?” என்று சற்றே எரிந்து விழுந்தார்.

நேரக் காப்பாளர் அறையில் சென்று நேரக் காப்பாளரைக் கேளுங்க சார், எங்களைக் கேட்காதீங்கஎன்று ஓட்டுனரும் சொல்ல, நேராகச் சென்று நேரக் காப்பாளரிடம் கேட்க, அவரும் திமிராக, “அப்படித் தான் சார். 10.30 மணி பஸ் வரலைன்னா இப்படித்தான் செய்வோம். உங்களுக்கு வேணாம்னா நீங்க வேற பஸ்ல போய்க்கோங்க, நீங்க ஆன்லைன்ல முன்பதிவு செய்ததால, காசும் திரும்பி தரமுடியாது!” என்று அலட்சியமாக பதில் சொல்கிறார். தனியார் பேருந்துகளில் தான் இப்படி அடாவடியாக பேருந்து நிரம்பும் வரை கிளம்ப மாட்டார்கள் என SETC பேருந்தில் முன்பதிவு செய்தால் இவர்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது!

இன்னும் சில பயணிகளும் சேர்ந்து சத்தம் போட, கொஞ்சம் சுதாரித்துநீங்க போய் உட்காருங்க சார், தோ கிளம்பிடலாம்என கொஞ்சம் இறங்கினார். இதற்கே பத்து மணி ஆகிவிட, அதற்குள் முன்பதிவு செய்திருந்த நான்கு பயணிகள் சற்று முன்பாகவே வர அவர்களுடன் தான் பேருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்து அதன் பின்னர் தான் பேருந்து இயக்கப்பட்டது.

திருவரங்கத்திலிருந்து மொத்த இருக்கைகளும் நிரம்பாது என்பதால், மத்திய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்தும் பயணிகளை ஏற்றிக்கொள்வது என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம் தான் என்றாலும், இப்படியா ஒரு மணி நேரம் அங்கே நிறுத்தி வைப்பது? முன்பதிவு செய்யும்போதே சொல்லிவிடலாமே அல்லது ரயில்களுக்குக் கொடுக்கும் பயண அட்டவணை போல, பேருந்திற்கும் எங்கே எவ்வளவு நேரம் நிற்கும் என்பதையும் குறிப்பிட்டுவிடலாமே? அது குறிப்பிட்டு விட்டால் விரைவாகச் செல்ல நினைப்பவர்கள் நேரடியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாமே?

இப்படி சில அனுபவங்களுக்குப் பிறகு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் SETC பேருந்து பயணிகளைச் சுமந்தபடி தனது பயணத்தினைத் தொடங்கியது.  பேருந்தில் எனக்குக் கிடைத்த மற்ற அனுபவங்களையும் சபரிமலை பயணம் பற்றியும் இந்த “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைபயணத் தொடரில் பார்க்கலாம்.

தொடரின் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 comments:

 1. முன்பதிவு செய்யும்போதே சொல்லிவிடலாமே அல்லது ரயில்களுக்குக் கொடுக்கும் பயண அட்டவணை போல, பேருந்திற்கும் எங்கே எவ்வளவு நேரம் நிற்கும் என்பதையும் குறிப்பிட்டுவிடலாமே?

  சிறப்பான யோசனைதான் ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. திருச்சி அரசு பேருந்து நிலையத்தில் நடக்கும் தில்லுமுல்லுகள் ஏராளம்.

  - நடத்துனர்கள் முன்பதிவில்லா பயணத்திற்கு கூடுதல் பணம் கேட்பது.
  - டோக்கன்களை கள்ளதனமாக இடைத்தரகர்களை கொண்டு Rs 50 to 100 விற்பது.
  - உழியர்களின் சொந்தங்களுக்கு நம் இருக்கையை புடிங்கி கொள்வது.
  - பஸ் முதலாளி போல் நம்மிடம் எரிந்தது விழுவது.
  - நல்ல சாலையிலும் வண்டியை உருட்டு உருட்டுன்னு உருட்டுவது.

  இதனாலேயே நான் SETC பேருந்தை பயன்படுத்துவதில்லை

  அது சரி உங்களை சபரிமலைக்கு அழைத்த மலையாள நண்பரை நீங்கள் நம்மூர் புண்ணிய தளங்களுக்கு வர சொன்னீர்களா.
  (இப்படி தான் நம்மை அவங்க ஊரு கோவில்கள் சிறப்புவாய்ந்தது போல் காட்டி, இன்று லட்சோபலட்சம் தமிழர்கள் நம்மூர் கோவில்களை விடுத்து சபரிமலை சென்று வருகின்றனர்)

  ReplyDelete
  Replies
  1. //அது சரி உங்களை சபரிமலைக்கு அழைத்த மலையாள நண்பரை நீங்கள் நம்மூர் புண்ணிய தளங்களுக்கு வர சொன்னீர்களா.//

   நல்ல கேள்வி. அவர் பலமுறை தமிழகத்திற்கும் தமிழக கோவில்களுக்கும் வந்து செல்பவர் தான்.... :) அடுத்ததாய் தமிழகத்தில் உள்ள நவக்கிரஹ கோவில்களுக்குச் செல்ல வேண்டும் என கேட்டிருக்கிறார்.

   தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜு சரவணன்.

   Delete
 3. நல்லதொரு பயணத்தை தொடர்கிறேன்...

  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. அப்ப...போகப்போகத் தெரியுமோ?

  மலைக்குக் கூடவே வர்றோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 5. அடுத்தப் பதிவும் படங்களும் நிச்சயம் நன்றாகவே இருக்கும் .வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 6. இதுக்கு State Expressனு சொல்றதுக்கு பதிலா State Passengerனு (பயணிகள் அல்ல ஸ்லோ வண்டி )சொல்லிறலாம். ரெண்டே ரெண்டு பேர் மட்டுமே திரவரங்கத்துல ஏறுவாங்கன்னா அப்புறம் எதுக்கு அங்கருந்து புறப்படறது? பேசாம திருச்சி மெய்ன் பஸ் ஸ்டானுட்லருந்தே புறப்பட வேண்டியதுதான? எதுலதான் அரசியல்னு ஒரு விவஸ்தையே இல்லாம போயிருச்சி.

  உங்களுடைய நடையின் பாணி எங்களையும் உங்களோடு சேர்ந்து இந்த துன்பத்தை அனுபவிக்க வைத்தது. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   எல்லாவற்றிலும் அரசியல் தான்.....

   Delete
 7. மிகவும் கொடுமையான விஷயம். அரசுப் பேருந்துகளில் இது போன்ற கசப்பான அனுபவங்கள் ஏராளம். சென்னை மாநகரப் பேருந்துகளிளே ஆயிரம் கதைகள் சொல்லலாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

   Delete
 8. சாமியேய்ய்! சரணம் ஐயப்பா! கன்னிமூலை கணபதி பகவானே! சரணம் ஐயப்பா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 9. //முன்பதிவு செய்யும்போதே சொல்லிவிடலாமே அல்லது ரயில்களுக்குக் கொடுக்கும் பயண அட்டவணை போல, பேருந்திற்கும் எங்கே எவ்வளவு நேரம் நிற்கும் என்பதையும் குறிப்பிட்டுவிடலாமே? அது குறிப்பிட்டு விட்டால் விரைவாகச் செல்ல நினைப்பவர்கள் நேரடியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாமே?//

  நடைமுறையில் இது சாத்தியமில்லை அண்ணா... பேருந்து ஓரிடத்தில் பஞ்சர் ஆனால் கூட அரைமணி நேரம் தாமதப்படும்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை. சரவணன்.

   Delete
 10. நானும் சபரி மலை போனதில்லை.. தங்களது பதிவின் மூலம் செல்லலாம் என்றிருக்கிறேன்.... தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 11. என்ன தலைவரே சௌக்யமா ? SETC அனுபவம் சூப்பர்ப்பா. தமிழ்நாடு வாழ்க! தமிழ் மக்கள் வாழ்க ! SETC வாழ்க!
  Vijay / Delhi

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 12. இந்தக் கஷ்டங்கள் எல்லா ஊரிலும் உண்டு. கஷ்டத்துடன் ஆரம்பிக்கும் ஒரு இனிய பயண அனுபவத்தை இஷ்டத்துடன் தொடர்கிறேன்! ஹிஹிஹி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. கல்லும் முள்ளும்
  சரியான தலைப்புத்தான்
  அடுத்த பயணத் பதிவை
  ஆவலுடன் எதிர்பார்த்து....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 14. Replies
  1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 15. பயனுள்ள பயணக்கட்டுரை. இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 16. வெறுமனே பெயருக்காக புதிய தடங்களை தொடங்கி இது போல் நடத்துவது கெட்ட பெயரையே ஏற்படுத்தும் என்பதை யார் உணர வைப்பார்கள்?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 17. பொருத்தமான தலைப்பு.
  தனியார் பேருந்தில்
  கூட்டம் நிரம்பி வழிகிறது
  அரசுப் பேருந்தில்
  ஏறுவதற்கு ஆளில்லை.
  தொடருங்கள் ஐயா
  தோடருகின்றேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 18. அருமையான பயண அனுபவங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிப்ரியன் ஆர்க்காடு....

   தங்களது முதல் வருகையோ?

   Delete
 19. உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணிக்க ஆரம்பித்துவிட்டோம் அண்ணா...
  தொடருங்கள்.... தொடர்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 20. பயண அனுபவம் சிலநேரங்களில் இப்படி கசப்பானது தான்.

  அடுத்த பதிவு படிக்க ஆவல்,தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 21. எத்தனையோ ஊழல்களில் இதுவும் ஒன்று.
  பயண்ம் இனிதே அமைந்து ஐயப்பன் அருள் கிட்ட வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 22. குழந்தைகளோடு சென்ற ஒரு பயணத்தில், 1/2 டிக்கெட் இரண்டு வாங்கியதால் ஒரு சீட்டுதான் தருவேன் என்று அடம் பிடிக்க நான் போட்ட சண்டை நினைவுக்கு வருகிறது. எட்டு வயது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு வா என கட்டளை.

  இப்படியும் மனிதர்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அ. வேல்முருகன்.

   Delete
 23. இப்போத் தான் போனீங்களா? அதான் மோசமான அநுபவம் போல! :))) அது சரி SETC முழுமையாக என்ன?? நல்லவேளையா நாங்க பெண்களூர் போனப்போ KSRTC Volvo A/C பேருந்தில் போனோமோ பிழைத்தோமோ! :))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா......

   Delete
 24. எல்லா அரசு வண்டிகளிலும் இப்படித்தான் கிளம்பும் நேரம், ஊர் போய்ச்சேரும் நேரம் இரண்டுமே சொல்லமாட்டார்கள். சபரிமலை பயணம் சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறது. தொடருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete

 25. முன்பு ஸ்ரீரங்கம், - மதுரை பஸ் விட்டார்கள். அதுவும் இப்படித்தான். ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அதிக நேரம் நிறுத்தம் செய்துவிடுவார்கள் உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு வழிகாட்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 26. ஒருமணிநேரக் காத்திருப்பு ரொம்பக் கொடுமை! தொடர்கிறேன்! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....