எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, September 8, 2013

எங்கே செல்லும் இந்தப் பாதை? 
சமீபத்திய பயணத்தில் எடுத்த புகைப்படங்கள் சில இன்றைய ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவை அனைத்தும் ஒரு சாலையில் செல்லும் போது எடுக்கப்பட்டவை.

சாலையின் இருமருங்கிலும் எத்தனை எத்தனை மரங்கள், மலைகள், மலைகளினூடே தவழ்ந்து செல்லும் மேகங்கள் என ஒரு சுகானுபவம். அந்த சாலையிலேயே ஒரு மலையில் ஒரு சிறுவீடு அமைத்து தங்கிவிடலாமோ எனக் கூடத் தோன்றியது!

இதோ உங்கள் ரசனைக்கு…..


வாழ்க்கை வளைவுகள் நிறைந்தது என்று சொல்லாமல் சொல்கிறதோ இந்தப் பாதை…..


வளைவுகள் மட்டுமல்ல, பல சமயங்களில் நேர்க்கோடு போல சென்றுவிடவும் வாய்ப்புண்டு……


சாலையின் இருமருங்கிலும் மரங்களால் ஒரு மறைப்பு – என்னதான் காரில் ஏ.சி. இருந்தாலும் இந்த இயற்கையின் குளிர்ச்சிக்கு ஈடாகுமா?


மேகம் தழுவி இந்த மரங்களையும் மலையையும் கிச்சு கிச்சு மூட்டுகிறதோ?


மேகம் கருக்குது மழை வரப் பாக்குது வீசி அடிக்குது காத்து… காத்து… மழைக்காத்து!


இது போன்ற சாலையும் இந்த காரும் இருந்துவிட்டால், சென்று கொண்டே இருக்கலாம்!


மலைகளினூடே மேகக் குவியல்.


முக்கோணத்தின் வழியாக மலைகளும் மேகங்களும்.

என்ன நண்பர்களே படங்களை ரசித்தீர்களா? இந்த இடத்திற்குச் சமீபத்தில் சென்று வந்தேன். சென்ற இடம் என்ன? அதைப் பற்றிய பயணக் கட்டுரைகள் உண்டா? என்ற கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும் – ஒரு பயணத் தொடர் பதிவுகளாக!

மீண்டும் உங்களனைவரையும் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

44 comments:

 1. அருமையான இயற்கைக் காட்சிகள். ரஸித்தேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 2. அழகிய படங்களும் அதற்கேற்ப கருத்துக்களும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபலான்.

   Delete
 3. மனதிற்கு இதமான காட்சிகள்...எந்த இடம் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 4. உங்களின் புகைப்பட திறமை அலாதியானது.அத்தனையும் அருமை .இந்த படங்கள் யாவும் கேரள வனப்பகுதியாக இருக்கும் என நினைக்கிறன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 5. அழகைக் கண்டு இரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் இரா. குணசீலன்.

   Delete
 6. பாதை எங்கே போனால் என்ன
  பாதை நூறு ஆனால் என்ன ...[எப்பூடி என் எதிர்ப்பாட்டு ?]
  படங்கள் எல்லாமே அருமை !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 7. வளையும் பாதையில் பயணிப்போருக்கு மரங்களும் வளைந்து நின்று நிழல் தருகின்றன. பாதைகள் வளைந்திருந்தாலும் பயணங்கள் இலக்கு மாறுவதில்லை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. கண்ணுக்கு விருந்து அழகிய புகைப் படங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 9. பாதை வளைந்தாலும் உன்
  பயணம் நேராகக் கொள்ளெனக்
  கீதைபோல் கூறும் பரந்த
  சாலைகள் சொல்லும் கதை!

  மேலே மரக்குடை விரித்து
  மென்தென்றல் தரும் குளிர்மை!
  மலையான் மணவாளனை
  மங்கைமஞ்சு கொஞ்சும் காட்சி!

  எத்தனை முறை நீங்கள்
  எப்படியெல்லாம் பார்க்கின்றீர்!
  வெட்கம் கொள்கிறதே அவை
  வந்திடுங்கள் விலகி விரைந்து!

  சகோ! உங்கள் அருமையான படங்களையும் காட்சிகளையும் பார்க்க
  எனக்குள் தோன்றிய சிறு மகிழ்ச்சிப் பிரதிபலிப்பு!

  படத்தின் சிறப்பை மழுங்கடித்துவிடுமென இதைக் கருதினால்
  வெளிவிடவேண்டாம். கவலையில்லை!

  பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

  தொடர்ந்தும் இத்தகைய உங்கள் கைவண்ணங்களைக் காண ஆவலுடையேன்...

  ReplyDelete
  Replies
  1. படத்தினைப் பார்த்து நீங்கள் எழுதியுள்ள கவிதை மிக நன்று. மிக்க மகிழ்ச்சி இளமதி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 10. படங்கள் அழகு.கட்டுரைக்காகக் காத்திருக்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 11. எங்கே செல்லும் இந்தப் பாதை?

  சாலை அங்கேயேதான் இருக்கும் .. பயணம் செய்ய உதவியாக..

  அழகான பயணம்.. பாராட்டுக்கள்>>!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 12. படங்கள்லாம் செமயா இருக்கு!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 13. அருமையான இயற்கைக் காட்சிகள்
  அற்புதமாக படமெடுத்து பதிவாக்கி
  அனைவரையும் அலைச்சலின்றி
  ரசிக்கத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 14. Replies
  1. தமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 15. என்ன நண்பரே இப்படி இடம் எது எனச் சொல்லாமல் சிறு இடைவேளையா?புகைப்படங்கள் அருமை! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 16. அதானே படங்களோட நிறுதிடுவீங்களோன்னு.. கட்டுரை சீக்கிரம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 17. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

   Delete
 18. படங்கள் அருமை வெங்கட்..பயணக் கட்டுரைகளை வாசிக்க ஆவலாக இருக்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 19. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 20. பாதைகள் வளைந்தாலும் படங்கள் மிக அருமை. வாழ்த்துக்கள்.

  விஜய் டெல்லி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 21. அருமையான இயற்கைக் காட்சிகள்! எங்கே என அறிய ஆவல்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 22. காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கிறது.

  சாலை இருபுறமும் மரங்களால் மறைப்பு நன்றாகவுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....