வெள்ளி, 20 செப்டம்பர், 2013

ஃப்ரூட் சாலட் – 61 – உதவி – மகிழ்ச்சி - மோடிஇந்த வார செய்தி:

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வித்துறை மந்திரியின் ஓட்டுனர், பாதுகாவலர் மற்றும் அவருடைய உதவியாளர் ஆகிய மூவரும் ஆற்றில் விழுந்த ஒரு குடும்பத்தினைக் காப்பாற்றியிருக்கும் செய்தி படித்தேன். சாதாரணமாகவே சாலையில் யாராவது அடிபட்டுக் கிடந்தால் கண்டுகொள்ளாது பலரும் செல்லும் இந்த நாளில், இப்படி நடந்து கொண்டிருப்பது நல்ல விஷயம் தான்.

தனது மனைவி, தாயார், மற்றும் குழந்தைகளோடு உறவினரின் குழந்தைகள் என மொத்தம் எட்டு பேர் ஒரு காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஓட்டிய குடும்பத் தலைவர், கட்டுப்பாட்டினை இழந்து சாலையோரத்தில் இருந்த ஒரு நீர்நிலையில் வண்டியை விட ஐந்து அடிக்கு மேல் தண்ணீரில் கார் மூழ்கி இருக்கிறது. 

பதினைந்து நிமிடங்களுக்கு முன்னரே அமைச்சரின் வாகனங்களை வேகமாக கடந்து சென்றதாக கூறப்படும் இந்த கார் தத்தளிப்பதைப் பார்த்த அமைச்சரின் நீச்சல் தெரிந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளர்கள் உடனேயே தண்ணீருக்குள் குதித்து மூழ்கிட இருந்த குடும்பத்தினரை கரையேற்றினார்களாம்.  மாவட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் தொலைபேசி மூலம் செய்தி தெரிவித்து வேண்டிய உதவிகளும் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார். 

சில பத்திரிகைகளில் அமைச்சரே தண்ணீருக்குள் குதித்து விட்டதாகவும் எழுதியிருப்பது உண்மையா என்பது அமைச்சருக்கே வெளிச்சம்!

தமிழகத்தில் சாலையில் வெட்டுண்டு கிடந்த ஒரு காவல்துறை அலுவலரின் மரணம் – அந்த வழியாக அமைச்சர்கள் சென்றபோதும் ஏனோ மனதிற்குள் நுழைந்து மனதைக் கஷ்டப்படுத்துகிறது.

உதவி மனப்பான்மை எங்கேனும் ஒரு இடத்தில் துளிர் விட்டுக் கொண்டு தான் இருக்கிறது என்று அறிந்து மகிழ்ச்சி.  
  
இந்த வார முகப்புத்தக இற்றை:

முதல் முயற்சியில் கிடைக்கும் வெற்றியின் சிரிப்பை விட..... ஆயிரம் தடவை முயற்சி செய்து நான் வென்றுவிட்டேன் என்று..... சொல்ல வாய் வராமல் அழுது நிற்கும் கண்ணீருக்கு மகிழ்ச்சி அதிகம்.

இந்த வார குறுஞ்செய்தி

FRIENDSHIP MEANS – TO HELP WITHOUT HESITATION, TO GIVE WITHOUT EXPECTATION, TO SHARE WITHOUT LIMITATION AND TO REMEMBER EVEN WITHOUT COMMUNICATION.

ரசித்த காணொளி: 

எப்போதாவது சோகமாக இருந்தால், அப்போது குழந்தைகளின் சிரிப்பொலி கேட்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆங்கிலத்தில் Stress Buster எனச் சொல்வது போல நிச்சயம் நல்ல ஆறுதல் கிடைக்கும். அப்படி சில குழந்தைகள் சிரிப்பொலியை தொகுத்து வைத்திருக்கிறார்கள் இந்த காணொளியில்....  பார்த்து நீங்களும் கவலைகளை மறந்து சிரிங்களேன்! ரசித்த பாடல்:

பார்த்தாலே பரவசம் படத்திலிருந்து “அன்பே சுகமாபாடல் இந்த வார ரசித்த பாடலாக....  இதோ உங்களுக்காக.இந்த நாளின் அறிமுகம்:

இந்த வாரம் ஒரு நகைச்சுவை நடிகரைப் பற்றி பார்க்கலாம். இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ்-ல் 1970-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி பிறந்த இவர் தனது ஏழாவது வயதில் இஸ்ரேலை விட்டு நியூயார்க் நகருக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். அங்கேயே படித்த இவர் ஒரு Stand up Comedian. ஒரு சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.  இவர் பெயர் மோடி – மோடி ரோசன்ஃபெல்ட்..... 

அட எதோ நரேந்திர மோடி பத்தி எழுதியிருக்கேன்னு நினைச்சீங்களா? நமக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.............

படித்ததில் பிடித்தது!:

இன்றைய படித்ததில் பிடித்தது – ஆங்கிலத்தில் – கீழே இருக்கிறது. நீங்களும் படித்தால் உங்களுக்கும் பிடிக்கலாம்!


என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

48 கருத்துகள்:

 1. உதவி மனப்பான்மை கொண்ட அந்த ஓட்டுனருக்கு வாழ்த்துக்கள்...

  குழந்தைகளின் சிரிப்பொலி மனதை கவர்ந்தது... என்னே அழகு...!

  இனிமையான பாடலுடன் ஃப்ரூட் சாலட் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. உதவி மனப்பான்மை கொண்ட அந்த ஓட்டுனருக்கு வாழ்த்துக்கள்...

  குழந்தைகளின் சிரிப்பொலி மனதை கவர்ந்தது... என்னே அழகு...!

  இனிமையான பாடலுடன் ஃப்ரூட் சாலட் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட இரட்டை கருத்துரை! :) காணொளியில் இருந்த சில குழந்தைகள் போல இரட்டை.

   மிக்க மகிழ்ச்சி தனபால்ன்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரை தமிழன்.

   நீக்கு
 4. முதல் முயற்சியில் கிடைக்கும் வெற்றியின் சிரிப்பை விட..... ஆயிரம் தடவை முயற்சி செய்து நான் வென்றுவிட்டேன் என்று..... சொல்ல வாய் வராமல் அழுது நிற்கும் கண்ணீருக்கு மகிழ்ச்சி அதிகம்.

  nice..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 5. குழந்தைகளின் சிரிப்பொலி அருமையோ அருமை.

  என் பேரன் அநிருத் இதுபோல தொடர்ந்து சிரிக்க, அதை அப்படியே ஆடியோ + வீடியோவாகப் பதிவுசெய்து வைத்திருக்கிறோம்.

  அடிக்கடி அவனுக்கே போட்டுக் காட்டுவதும் உண்டு. நாங்களும் பார்த்து மகிழ்வது உண்டு.

  பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 6. Death is not the greatest loss in Life.

  LOSS is when Life dies inside You when You are alive.

  SUPERB ! EXCELLENT !!

  THANKS FOR SHARING !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 7. //முதல் முயற்சியில் கிடைக்கும் வெற்றியின் சிரிப்பை விட..... ஆயிரம் தடவை முயற்சி செய்து நான் வென்றுவிட்டேன் என்று..... சொல்ல வாய் வராமல் அழுது நிற்கும் கண்ணீருக்கு மகிழ்ச்சி அதிகம்.//

  நல்ல பொன் மொழி!

  குறுஞ்செய்தியில்... To share without limitation?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்....

   ஷ்-னு யாரோ காக்கா ஓட்டினதில் SH காணாமல் போனதோ! :)

   நீக்கு
 8. படித்ததில் பிடித்தது எனக்கும் பிடிச்சது,அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீக்கு
 9. நாங்களும் குழந்தைகளுடன் சேர்ந்து விழுந்து விழுந்து சிரித்து
  குதூகலித்தோம். அனைத்தும் அருமை. பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   நீக்கு
 10. வழக்கம் போல சாலட் சிறப்பான தகவல்களை தாங்கி வந்துள்ளதுங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா..

   நீக்கு
 11. // உதவி மனப்பான்மை எங்கேனும் ஒரு இடத்தில் துளிர் விட்டுக் கொண்டு தான் இருக்கிறது என்று அறிந்து மகிழ்ச்சி//
  காப்பாற்றியவர், கர்நாடகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கிம்மானி ரத்னாகர். நீங்கள் பெரும்பாலும் முக்கியமான இடங்களில் பெயரை மறந்து விடுகிறீர்கள். அந்த அமைச்சரை எல்லோரும் பாராட்டுவோம்.

  படித்ததில் பிடித்தது! - நல்ல தத்துவம்.
  இந்த ஃப்ரூட் சாலட்டும் சுவைதான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!....

   மறதி இல்லை - அமைச்சர் என்று சொன்னால் போதும் என விட்டுவிட்டேன்....

   நீக்கு
 12. கர்நாடக அமைச்சர் (அவரின் டிரைவர்) உதவிய செய்தியை நானும் படித்தேன். அதுபோன்றதொரு உதவியை நம் வைகோ கூட முன்னர் செய்திருக்கிறார். ('எங்கள்' பாஸிட்டிவ் செய்தித் தொகுப்பிலும் பகிர்ந்திருந்தோம்). இதில் இன்னொன்று பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர்கள் யாருக்கும் நீச்சல் தெரியாதாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.....

   நீக்கு
 13. குழந்தைகள் சிரிப்பு பேத்திக்காகச் சேர்த்துவைத்திருக்கிறோம்.
  இப்பொழுது பெரியவள்(5) ஆனதில் அவள் சில பொழுதில் கேட்கிறாள்.:)

  தண்ணிருக்குள்ளிருந்து உயிர்களைக் காப்பாற்றியவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
  அதுவும் அமைச்சரின் கூட சென்றவர்கள் இதுபோலச் செய்திருக்கிறார்கள் என்றால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
  வாழ்க்கை&மரணம் பற்றிய செய்தி மிக உண்மை.பின்பற்றுவோம். நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

   நீக்கு
 14. உள்ளம் குளிரச் செய்த அருமையான காணொளி
  உள்ளத்திற்கு தெளிவு தரும் அருமையான பழமொழி
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 15. ஓட்டுனருக்கு வாழ்த்துக்கள், குழந்தை சூப்பர், பாடல் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

   நீக்கு
 16. //தமிழகத்தில் சாலையில் வெட்டுண்டு கிடந்த ஒரு காவல்துறை அலுவலரின் மரணம் – அந்த வழியாக அமைச்சர்கள் சென்றபோதும் ஏனோ மனதிற்குள் நுழைந்து மனதைக் கஷ்டப்படுத்துகிறது.//

  ஆமாம், எனக்கும் இதான் நினைவில் வந்தது.


  //முதல் முயற்சியில் கிடைக்கும் வெற்றியின் சிரிப்பை விட..... ஆயிரம் தடவை முயற்சி செய்து நான் வென்றுவிட்டேன் என்று..... சொல்ல வாய் வராமல் அழுது நிற்கும் கண்ணீருக்கு மகிழ்ச்சி அதிகம்.//

  அநுபவபூர்வமாகப் பலமுறை உணர்ந்திருக்கேன்.


  //FRIENDSHIP MEANS – TO HELP WITHOUT HESITATION, TO GIVE WITHOUT EXPECTATION, TO ARE WITHOUT LIMITATION AND TO REMEMBER EVEN WITHOUT COMMUNICATION.//

  +இலே பகிர்ந்துக்கறேன், உங்க பேரைப் போட்டுத் தான்! :)))

  கடைசி மெசேஜும் அருமை. ஆனால் எத்தனை பேர் உணர்ந்துக்கறோம்? :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 17. நல்ல தொகுப்பு.

  இங்குள்ள செய்தித்தாள்களில், தானும் குதித்து காப்பாற்றியதாகவே அமைச்சர் பேட்டி அளித்திருந்தார், அவர்களது வண்டி முந்திச் சென்றபோது உள்ளே குழந்தைகளைப் பார்த்தது நினைவுக்கு வர யோசிக்காமல் உடனே நீரில் குதித்ததாக. எப்படியானாலும் ஆபத்தில் இருந்தவர்களுக்கு உடனடியாக உதவி கிடைத்தது மனதுக்கு நிறைவான விஷயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 18. காணொளி அருமை . அன்பே சுகமா நானும் விரும்பும் பாடல். மொத்தத்தில் ரசிக்கும் ஃப்ரூட் சாலட்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

   நீக்கு
 19. அமைச்சருக்கும், ஓட்டுநருக்கும் பாதுகாவலருக்கும் வாழ்த்துக்கள் ஐயா. இவர்கள் அவசியம் பாராட்டப்பட வேண்டியவர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   நீக்கு
 20. குழந்தைகளின் சிரிப்புடன் ப்ரூட் சாலட்டை ரசித்தேன். கடைசி செய்தி வந்து என்னை இந்த நிஜ உலகிற்கு கொண்டு வந்தது.அருமை!
  எங்கள் ஊரிலும் அமைச்சரே குதித்துக் காப்பாற்றியதாகத்தான் செய்தி வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   நீக்கு
 21. குழந்தைகளின் சிரிப்பொலி அருமை.
  மனக்கவலை போக்கும் அருமருந்து மழலை சிரிப்பு.
  அமைச்சரின் உதவும் மனபான்மை வாழ்க!
  ப்ரூட் சாலட் அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 22. அந்த அமைச்சருக்கும் ஓட்டுனருக்கும் வாழ்த்துக்கள்.

  அருமையான கலக்கல் சாலட்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   நீக்கு
 23. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....