வியாழன், 19 செப்டம்பர், 2013

பதிவர்கள் சந்திப்பு – தேவையா?

[புகைப்படங்கள் தொகுப்பு – 7]

கடந்த ஒன்றாம் தேதி அன்று தமிழகத் தலைநகராம் “சிங்காரச் சென்னையின் வடபழனி பகுதியிலுள்ள இசைக் கலைஞர்களின் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற பதிவர் சந்திப்பு பற்றி தமிழ் வலையுலகத்தில் உள்ள பதிவர்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

சென்ற வருடம் நடந்த முதலாம் பதிவர் சந்திப்பில் நான் கலந்து கொள்ளவில்லை என்றாலும், இந்த பதிவர் சந்திப்பில் எனது குடும்பத்துடன் கலந்து கொள்ள முடிந்தது.

இந்த சந்திப்பு நடந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் முடிந்து விட்ட நிலையில், சந்திப்பின் போது நான் எடுத்த புகைப்படங்களில் 72 படங்களை, பதிவுக்கு பன்னிரெண்டு படங்களாக, ஆறு பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன். அதன் சுட்டிகள் கீழே.


இனி, இந்த பதிவில் இன்னும் சில புகைப்படங்களை பார்க்கலாமா? நீங்க ரெடியா?

இந்த பதிவில் வெளியிட்ட படங்களையும் சேர்த்து இதுவரை 84 படங்கள் வெளியிட்டு இருக்கிறேன்.  இன்னும் சில படங்கள் வெளியிடாமல் எனது சேமிப்பில் இருக்கின்றன.  அவற்றை வெளியிட வேண்டுமா? அது தேவையா? என்று சொன்னால் வெளியிடுகிறேன்.

அட சந்திப்பில் எடுத்த புகைப்படங்கள் வெளியிடத் தேவையா? என்பதைத் தான் கேட்டேன் தலைப்பில்? வேற எதுவும் தப்பா புரிஞ்சுக்கிட்டா கம்பெனி பொறுப்பல்ல! என்பதை இங்கே தெளிவு படுத்துகிறேன்.

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


52 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   நீக்கு
 2. நான் மேடை ஏறியதே ஒரு முறை தான் பரிசு பெற, அந்த புகைப்படம் இருந்தால் எனக்கு அனுப்புங்கள், நன்றி, senthilkkum@gmail.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த நண்பரைப்போல நானும் எனது புகைப்படத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். இருந்தால் பகிருங்கள்.

   நீக்கு
  2. அன்பின் ஆரூர், நீங்கள் மேடையில் நண்பர்கள் அனைவருடன் இருந்த சில படங்கள் இருக்கிறது. நினைவு பரிசு பெற்ற போது எடுத்த படம் இருக்கிறதா என்று பார்த்து, இருந்தால் அனுப்புகிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆரூர் மூனா செந்தில்.

   நீக்கு
  3. நீங்கள் நினைவு பரிசு பெறும்போது எடுத்த படம் இருந்தால் நிச்சயம் அனுப்புகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா....

   நீக்கு
 3. பாமரன் தெரிகிறது. புலவர் ஐயா முகம் பழகியதால் தெரிந்தது.
  சென்னைப்பித்தன் ஐயா,மின்னல் கணேஷ்.
  நிறைய முகங்கள் நினைவுக்கு வருகிறது. பெயர்தான் தெரியவில்லை.:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி.

   நீக்கு
 5. கரும்பு தின்ன கூலியா ! தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா....

   நீக்கு
 6. திருவாளர்கள் பாமரன், சென்னைப்பித்தன், புலவர் ஐயா, கண்மணி குலசேகரன், (அவருடன் இருப்பவர் பட்டிக்காட்டான் என்று நினைக்கிறேன்) இவர்களைத் தவிர வேறு யாரையும் தெரியவில்லை. மின்னல் வரிகளுடன் நிற்பவர்கள் ஸ்கூல்பையன், ரமணி ஸார், கடைசியில் பிலாசபி பிரபாகரன் முன்னால் நிற்பவர் பெயர் தெரியவில்லை.
  ஒவ்வொருமுறை இந்தப் படங்களைப் பார்க்கும்போதும் இனிய நினைவுகள்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பட்டிக்காட்டன் ஜெய் தான்.....

   மின்னல் வரிகள் கணேஷ் படத்தில் இருப்பது மதுரை சரவணன்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   நீக்கு
 7. அனைவருடன் சகஜமாகப் பேசிக்கொண்டே
  எப்படி இத்தனைப் படங்கள் எடுத்தீர்கள் என
  ஆச்சரியமாக இருக்கிறது
  தொடர்ந்து வெளியிடுங்கள்
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருந்தவரை, முடிந்த வரைக்கும் சில படங்களை எடுத்தேன் ரமணி ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பெண் பதிவர்கள் படங்கள் இருப்பின் எனது மெயிலுக்கு அனுப்ப இயலுமாங்க ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேடையில் பரிசு பெறும் படம் மட்டும் இருந்தால் இருக்கலாம்....

   இருந்தால் அனுப்புகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 9. புகைப்படங்கள் எல்லாமே அருமை.

  அட, அந்த மீதிப்படங்களையும் வெளியிட்டால் மேலும் சில பதிவுகள் தேறுமே ! இதில் என்ன காசா பணமா செலவு ? ;)

  தினம் ஒன்று வீதம் வெளியிட்டால் பதிவுகளின் எண்ணிக்கை கூடுமே!! ;)

  உங்கள் செளகர்யப்படி செய்யுங்கோ, ஜி.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தினம் ஒன்று வீதம் வெளியிட்டால் பதிவுகளின் எண்ணிக்கை கூடுமே!! :)))//

   அது சரி.... //காசா பணமா// அதானே....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.

   நீக்கு
 10. இத்தனை புகைப்படங்களை எடுத்து குவித்த பதிவர் நீங்கள் மட்டுந்தான் என்று நினைக்கிறேன். உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //படங்கள் எடுத்து குவித்த பதிவர்.... // :) தெரியல... இன்னும் ஒரு நண்பரும் தனது Tablet-ல் நிறைய படங்கள் எடுத்தார்......

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   நீக்கு
 11. அருமையான புகைப்படங்கள்.. வேணான்னு சொல்லுவோமா? ஆவி& கோ மேடையில் பாடிய போது நீங்க புகைப்படம் எடுத்திருந்தா தயவாய் என் மின்னஞ்சல் anandsva@gmail.com முகவரிக்கு அனுப்பவும்.. நன்றிகள் பல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூன்றாவது புத்தகம் வெளியிட்ட பிறகு நான் அரங்கிலிருந்து திரும்பி விட்டேன் கோவை ஆவி.

   உங்கள் பாடல் பாடிய போது நான் அங்கே இல்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. சரி சரி கண்ணைத் தொடைங்க! இதுக்கல்லாமா அழுவாங்க! :)

   இன்னுமொரு தடவை பாடும் போது எடுத்திடலாம்.....

   நீக்கு
 12. தாங்கள் வெளியிட்ட புகைப்படங்களுக்கு நன்றி சார் கோவை ஆவி பாடிய பதிவர் பாடல் போட்டோ இருக்கிறதா இருந்தால் வெளியிடவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குடந்தையூர் சரவணன்.

   கோவை ஆவி பாடல் பாடிய போது நான் அரங்கத்தில் இல்லை..... முன்பே திரும்பிவிட்டேன்.

   நீக்கு

 13. ஒவ்வொருவர் படத்தின் கீழும் பெயரைக் கொடுத்திருந்தால் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி GMB சார்.

   சிலர் பெயர்கள் தெரியும். சேர்த்துவிடுகிறேன்.....

   நீக்கு
 14. நிறையப் பெயர்கள் சொல்லி விட்டார்கள். ஜ்யோவரம் சுந்தர் பெயர் யாரும் சொல்லவில்லையே? அவர்தானே அது? நான்காவது படம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 15. நிச்சயம் பகிரலாம் சார் .. எத்தனை பேருக்கு அவர்களின் படம் கிடைக்காதா என்று ஏக்கம் இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரசன்.

   நீக்கு
 16. வெளியிட்ட படங்கள் அனைத்தும் அருமை! நன்றி! தலைப்பு மட்டும் சற்றே குழப்பியது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி. படங்கள் இன்னும் தேவையா என்பதை தான் தலைப்பில் குறிப்ப்பிட்டேன்.

   நீக்கு
 17. படங்கள் அருமை... யார் யார் என்று குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   நீக்கு
 18. மீதி இருக்கும் படங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் வெங்கட்.
  படங்கள் எல்லாம் அழகாய் எடுத்து இருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 19. இந்தப் படத்தொகுப்பில் நானும் இருக்கிறேனே? எனது முதல் பதிவர் சந்திப்பு இது! தங்கள் தொகுப்பில் என்னையும் பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேது? (உம்..நாம அப்பலே இருந்து வலைப்பக்க நண்பர்களோடுதான் சுத்திக்கிட்டு இருந்திருக்கோம் இல்ல..?) நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அச்சந்திப்பில் பலருடன் பேச முடியவில்லை.... உங்களையும் சேர்த்து....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....