எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, September 25, 2013

இரவில் ஒரு இலக்கண வகுப்பு[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 3]முந்தைய பகுதிகள் படிக்க, சுட்டிகள் கீழே:
[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 2]
[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 1]இப்படி மதுரையின் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது காலியாக இருந்த எனது பக்கத்து இருக்கையில் ஒரு பெரியவர் வந்து உட்கார்ந்தார். அவரைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லிப் போவது அவ்வளவு நன்றாக இருக்காது. அதனால் அவர் பற்றி அடுத்த பகிர்வில் விரிவாகப் பார்க்கலாம்!உங்கள் நினைவுக்காக: [என் நினைவுக்காகவும் தான்!] – ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைபயணத் தொடரின் முந்தைய பகுதியை இப்படித்தான் முடித்திருந்தேன்.

பக்கத்து இருக்கையில் அமர்ந்த பெரியவர் என்னைப் பார்த்து சிநேகத்துடன் சிரித்தார். நானும் பதிலுக்கு உதட்டுக்கு அதிகம் வேலை கொடுக்காது ஒரு புன்முறுவலைச் சிந்தினேன். என்னைப் பார்த்தால் இரவு நேரத்தில் அவருக்கு எப்படி தோன்றியதோ தெரியவில்லை. அதனால் கேள்வி கேட்கத் தொடங்கினார். அவரது பேட்டி தொடங்கிற்று.பெரியவர்: “சாருக்கு நாகர்கோவிலா?

நான்: தலையை இடதும் வலதும் ஆட்டியபடி “இல்லைங்கஎன்றேன்.

பெரியவர்: “திருவனந்தபுரமோ?, தான் மலையாளியோ?

நான்: வேகமாக தலையை மீண்டும் இடது வலதாக ஆட்டியபடி இல்ல, இல்லநான் தமிழன் தான். ஊரு தில்லி எனச் சொன்னேன்.

பெரியவர்: ஓஓஓஓஓ.....  தலைநகரம்னு சொல்லுங்க!


இப்படித் தான் ஆரம்பித்தது எங்கள் உரையாடல். இந்த உரையாடல் நடந்தது இரவு 12.30 மணிக்கு என்று மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். அதா அங்க நிக்கில்ல ஒரு பஸ்ஸு, அதுல தான் உட்கார்ந்தேன் – பக்கத்து சீட்டுல இருந்த பையன் சொன்னான் – பஸ்ஸுல ஒரே மூட்டைன்னு அதான் இந்த பஸ்ஸுல வந்துட்டேன் – புதுசா இருக்குல்லா!என்றார்.  ஓ அப்படியா? என்று கேட்டு அவர் விட்டதாய்ச் சொன்ன பழைய பேருந்தினைப் பார்த்தேன். அதிலிருந்து ஒரு முகம் என்னைப் பார்த்து சிரித்தது.தொடர்ந்து அந்த பெரியவர் பேசவே, ஓரிரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லி, தூங்க ஆரம்பித்தேன். பேருந்து முழுவதும் இருந்த பயணிகள் உறங்கிக் கொண்டிருக்க, இவரும் வேறு வழியில்லாது அமர்ந்திருந்தார். ஒன்றிரண்டு மணி நேரங்கள் பயணித்திருக்கலாம். பேருந்து மீண்டும் ஹோட்டல் ஆரியாஸில் நின்றது. “வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும், டீ, காபி குடிக்கறவங்க, பாத்ரூம் போறவங்க எல்லாம் போயிடுங்கஎன்று ஹோட்டல் ஆரியாஸிலிருந்து ஒரு பெரியவர் வந்து சொல்லிவிட்டுப் போனார். குறைந்தது எழுவது வயதிருக்கலாம் – இந்த இரவு நேரத்திலும் உழைக்கும் அவரை நினைத்து மலைப்பாய் இருந்தது.இயற்கை உபாதைகளை முடித்துக் கொண்டு பேருந்திற்குள் வந்தால், பக்கத்து இருக்கை பெரியவரைக் காணோம். என்னடா இன்னும் வரலையேன்னு பார்த்தால், அந்தப் பக்கத்து இரண்டு இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்திருந்தார். கூடவே அவரது நண்பர் ஒருவர் பின்னாடிப் பக்கத்திலிருந்து இங்கே அமர்ந்திருந்தார் – பேருந்து நின்ற நேரத்தில் பேசி இடம் மாற்றிக் கொண்டார் போல..... அங்கே ஆரம்பித்தது அவரது இடைவிடாத பேச்சு.பேருந்தில் ஓட்டுனர், நடத்துனர், நான், பெரியவர், அவரது இள வயது நண்பர் – இந்த ஐவரைத் தவிர அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, பெரியவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் துவங்கினார். தான் சந்தித்த விஷயங்கள், மனிதர்கள் என பலவகையான செய்திகள். பாதி உறக்கத்தில் கேட்டதால் மனதில் ஒட்டாத விஷயங்கள் – திடீரென அவரது பேச்சு இலக்கணத்திற்கு – அதுவும் தமிழ் இலக்கணத்தினை நோக்கித் தாவியது. அடடா, இதேதடா வம்பாப் போச்சு!என அந்த நண்பரும் நினைத்திருக்கலாம், நானும் நினைத்தேன். இரவு மூன்று – மூன்றரை மணிக்கு இலக்கண வகுப்பு!!!!!  தேவை தான்!“அவன், அவள், அது....  இதுல அவன்னா ஒருத்தன், அவள்னா ஒருத்தி, அப்ப அது என்னது?“உனக்கு சங்க இலக்கியம் தெரியுமா?, அதில இல்லாத விஷயமே இல்லை – காதல், ஈர்ப்பு, காமம், வீரம், விவேகம் – எது இல்லை நம்ம சங்க இலக்கியத்துல!ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என யாப்பிலக்கணம் – நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா, நிரை நிரை கருவிளம், நேர் நிரை கூவிளம் – என எவ்வளவு அழகா சொல்லி வச்சிருக்கு......

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.”  - இது குறுந்தொகைப் பாட்டு.... எவ்வளவு அழகா நிலத்தை விட பெரியது, வானை விட உயர்ந்ததுநீரை விட ஆழமானது மலைச்சரிவில்  கரிய தண்டையுடைய குறிஞ்சி மலரில்  நிறையத் தேனை உற்பத்தி செய்யும் நாடனின் நட்புந்னு சொல்லி இருக்கான் பாரு தமிழ் இலக்கியத்துல!இப்படியாக நள்ளிரவில் எனக்கு ஒரு இலக்கண வகுப்பு. கூடவே முழித்திருந்த, பெரியவரின் நண்பருக்கும், பேருந்தின் ஓட்டுனர், நடத்துனருக்கும்!  ஆஹா பேரின்பம் தான் :) என்ன தான் தமிழ் மேல் பற்று உண்டென்றாலும் உறக்கம் அழுத்தும் அந்த பின்னிரவில் ருசிக்க வில்லை.  ருசிக்காத போதே இவ்வளவு நினைவு இருந்தால் ருசித்திருந்தால் எவ்வளவு நினைவு இருக்கும்! [அப்பாடா நாங்க தப்பிச்சோம்! என நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கவில்லை!]ஆரம்பிக்கும்போது பக்கத்து பேருந்திலிருந்து ஒரு முகம் என்னைப் பார்த்து சிரித்தது எனச் சொன்னேன் – “ஆஹா மாட்டிண்டா ஒருத்தன்....என நினைத்து சிரித்ததோஎன தோன்றியது. மூட்டை [மூட்டைப்பூச்சி] என்று பையன் சொல்லியது நிஜமா என்றும் நினைத்தேன்.இப்படியாக, எங்கள் நால்வருக்கும் இலக்கண வகுப்பு எடுத்து முடிக்க, காலை ஐந்தரை மணியாகியிருந்தது. ஆறுமணிக்கு நாகர்கோவில் வந்து பெரியவரையும் இன்னும் சில மக்களையும் இறக்கிவிட்டு பேருந்துப் பயணம் இனிதே தொடங்கியது. 07.30 மணிக்கு திருவனந்தபுரத்தின் ரயில் நிலையத்திற்கு வெளியே என்னை இறக்கி விட்டார்கள் – எதிரே இருக்கும் பேருந்து நிலையத்தினை புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருப்பதால் வழியிலேயே இறக்கி விட்டு விடுகிறார்கள்.எனது கேரள நண்பர் இன்னும் வராததால், அவருக்கு அலைபேசியில் அழைத்து மலையாளத்தில் சம்சாரித்து வந்து சேர்ந்த விஷயத்தினைச் சொன்னேன். அவர் வரும் வரை அக்கம்பக்கத்தில் நடக்கும் விஷயங்களைப் பார்த்தபடி பொழுது போனது. பார்த்த விஷயங்களும், சபரி நோக்கிய பயணமும் அடுத்த பகுதிகளில்.....அடுத்த பதிவில் சந்திக்கும் வரை......நட்புடன்வெங்கட்.

புது தில்லி.


50 comments:

 1. பெரியவர்களுக்கு தூக்கம் வருவது கஷ்டம்
  அதனால் அருகில் இருப்பவர்களுக்கு அதிகக் கஷ்டம்தான்
  ஆனாலும் நீங்கள் சொல்வது போல இரவு
  இரண்டு மணிக்கு இலக்கணம் குறித்த பேச்சு எனில்
  பாரதியாராக இருந்தால் கூட கொஞ்சம்
  சிரமம்தான் பட்டிருப்பார்
  சுவாரஸ்யமான பகிர்வு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!.

   பெரியவர்களுக்குத் தூக்கம் வருவது கடினம் தான். அவரைத் தப்பாக நினைக்கவில்லை. நேரமும் சூழ்நிலையும் இலக்கணத்திற்கு உகந்ததாக இல்லை....

   Delete
 2. Replies
  1. தமிழ் மணம் முதலாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. உங்கள் இலக்கண வகுப்பும் படமும் சூப்பர்/ நீங்கள் " படம் பார்த்து கதை சொல் " பகுதியை விட்டு விட்டீர்களே!இந்தப் படம் அருமையாக இருக்கிறது.
  இந்தப் படத்தைப் போட்டு கவிதையோ, கதையோ, கட்டுரையோ எழுத அழைத்தால்,சிருங்கார ரசத்தில் பதிவுலகம் மூழ்கும் அபாயம் கூட உள்ளது என்று தோன்றுகிறது. யோசியுங்கள்.....

  ReplyDelete
  Replies
  1. //இந்தப் படத்தினைப் போட்டு கவிதையோ, கதையோ, கட்டுரையோ எழுத அழைத்தால்......//

   அட நல்ல ஐடியாவா இருக்கே... :) இந்தப் படத்திற்கு முன்னரே வேறொரு புகைப்படம் இருக்கிறது. அதை வைத்து கவிதை எழுத அழைக்க நி்னைத்திருந்தேன். விரைவில் அழைப்பு வெளியாகும். இந்தப் படத்திற்கான கவிதையையும் கேட்கலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 4. இலக்கண வகுப்பு ரசிக்கவைத்தது ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. Dear Kittu,

  Ner ner thema..... Ithudan niruthamal Themangani... Pulimangani.... Yen dru thodarndhu ilakkana va guppu
  Yedukkamal irundhadharku santhozhappadavendum.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா MA Tamil Lit.... நீங்களே இப்படி சொன்னா எப்படி...... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 6. அடபாவமே அர்த்த ராத்திரியில இலக்கண வகுப்பா...? அண்ணன் கீழே இறங்கி ஓடியே போயிருப்பீங்கன்னு நினைச்சுட்டேன் ஹா ஹா ஹா....

  ReplyDelete
  Replies
  1. ஓட முடியவில்லை.... முடிந்தால் ஓடியிருப்பேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 7. அந்த குறுந்தொகை பாடலை எப்படி ஞாபகம் வைத்திருந்தீர்கள் ?
  அது பாராட்டுக்குரியதே .

  ReplyDelete
  Replies
  1. குறுந்தொகை பாடல் பள்ளியில் படித்திருக்கிறேன் - கொஞ்சம் நினைவில் இருந்த பாடல்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா.

   Delete
 8. இன்பமான இலக்கணத்துடன் இரவுப் பயணம் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

   Delete
 9. வகுப்பை ரசித்தேன்... (சிரமம் தான்.. ஹிஹி)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி...... படித்து விடுகிறேன்....

   Delete
 11. விடியும் வரை பேசிக்கொண்டு வந்த பெரியவரை நினைத்தால் ,நீங்க பிறந்த ஊர் ஞாபகம் வருகிறது ...நெய்வேலியில் அள்ளஅள்ள குறையாத கரி இருக்கே !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 12. இலக்கணமா. சாமி!!பாவம் அந்த நல்ல தமிழ்ப் பெரியவர் இந்த வயதில்
  இவ்வளவு நினைவு வைத்திருந்து உங்கள் மனத்திலும் ஏற்றி இருக்கிறார்!!!


  ம்ஹூம் இல,,,,என்று ஆரம்பித்தால் உடம்பெல்லாம் நடுங்குகிறது:)
  அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

   Delete
 13. இந்த மாதிரியான அனுபவம் எனக்கு நடந்துள்ளது. சிலருக்கு, அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும், பேருந்தில் உறக்கம் வரவே வராது நடு இரவிலும் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். எத்தனை நேரம்தான் அமைதியாக இருப்பது? அடுத்த சீட்டில் இருப்பவரிடம் எதையாவது பேச வேண்டுமே? அவர் ஒரு தமிழாசிரியராக இருந்து ஓய்வுபெற்றவரோ? இருக்கும். அதனால்தான் பழக்க தோஷத்தில் பாடம் எடுத்திருப்பார். உங்களுடைய பகிரும் திறன் நாங்களும் உங்களுடன் பயணித்து அவரிடம் அகப்பட்டுக்கொண்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   Delete
 14. ஹஹஹா.. வசமா மாட்டிகிட்டீங்களா??

  ReplyDelete
  Replies
  1. மாட்டிக்கிட்டாச்சு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 15. //அதிலிருந்து ஒரு முகம் என்னைப் பார்த்து சிரித்தது. //

  :-))))

  பெரியவர்களிடம் அவர்களது அனுபவங்களைக் கேட்பது சுகம்தான். நீங்களும் ரசிப்பவர்தானே. இருப்பினும் நேரம்தான் பொருத்தமாயில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா....

   Delete
 16. மலையாளத்தில் சம்சாரித்து//

  அதானே! நானும் சம்சாரிச்சா, ரேவதி வந்து பறைய வேண்டாமோனு கேட்டாரே! :)))) நல்ல ஆசிரியரா இருப்பார் போல! ராத்திரினு கூடப் பார்க்காம, அநேகமா விடியக்காலமோ? இலக்கணமெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காரே! :))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா......

   Delete
 17. பெரியவரின் தமிழ் ஆர்வம் நாம் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பது மட்டும் புரிகிறது . நடு இரவில் விளக்கம் கொடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான் அல்லது உற்சாக பானத்தின் பின்விளைவா ?

  ReplyDelete
  Replies
  1. உற்சாக பானம் இல்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   Delete
 18. ரஸிக்க வைக்கும் சுவாரஸ்யமான பகிர்வு. பாராட்டுக்கள் ஜி. நள்ளிரவில் இலக்கண வகுப்பு ;)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 19. என்னது! எங்க நாரோல்காரரைப் பத்தி இப்படிச் சொல்லிப் போட்டியோ! அவரு நல்லாத்தான சொன்னாரு. பகல்ல வாத்தியாரு இலக்கணம் சொல்லித்தந்தா நல்லா உறக்கம் வருகுல்லா!அதுமாதிரிதான் இலக்கணப் பாடம் எடுத்தா புள்ளைக எல்லாம் நல்லா உறங்குமில்லா! ஓட்டுனர் தம்பி உறங்காம இருந்தாச் சரிதான்.

  (நாஞ்சில் தமிழ் போராடிப் பெற்ற தமிழ். அதனால் கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டு இரவு பகல் மறந்திருப்பார்.)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 20. "பக்கத்து பேருந்திலிருந்து ஒரு முகம் என்னைப் பார்த்து சிரித்தது "... வசமான மாட்டல்தான் :))))

  இலக்கண வகுப்பு இப்போது பலருக்கும் :)))))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 21. உங்க கஷ்டத்தை நினைச்சா பாவமா இருக்கு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 22. பயணம் பலவற்றை கற்றுத்தரும்.பலவற்றை அறிமுகம் செய்யும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்.

   Delete
 23. பேருந்துப் பயணத்தில் சில வயதானவர்களுக்கு இரவில் தூக்கம் வராது. கூடவே கேள்விப்பட்ட, பார்த்த விபத்துக்கள் பற்றிய நினைவில் தான் செல்லும் பேருந்து சரியாகப் போக வேண்டுமே என்ற கவலையும் மனதில் அழுத்த... விளைவாக இப்படித்தான் பேசிக்கிட்டே இருப்பார்கள். ஆனாலும்... தூக்கம் சுழற்றும் பின்னிரவில் தமிழ் இலக்கணம்...! ஐய்யோ... பாஆஆஆவ்வ்வ்அம்ம்ம்ப்பா நீங்க!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கணேஷ்... மீ ரொம்ப பாவம்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 24. பாவம் நண்பரே நீங்கள்! உங்களைப் பார்த்து சிரித்த முகத்தின் அர்த்தம் புரிந்தது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 25. நல்லவேளை இலக்கணத்தோடு விட்டார். அவருக்குப் பதில் டாஸ்மாக் பிரியர் வந்து இருந்தால் உலக வரலாற்றையே சொல்லி இருப்பார்.

  ReplyDelete
  Replies
  1. டாஸ்மாக் பிரியர் வந்திருந்தால்.... நினைக்கவே பயமா இருக்கே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....