திங்கள், 30 செப்டம்பர், 2013

ஐந்து ஐந்து ஐந்து......பிரபஞ்சத்தில் உள்ள சகல வஸ்துக்களையும் அநுபவிப்பதற்காக மனிதனுக்குக் கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் ஆகிய ஐந்து இந்த்ரியங்கள் இருக்கின்றன. பஞ்சேந்த்ரியங்கள் என்று இவற்றைச் சொல்வார்கள். ரூபத்தினை கிரகிப்பது கண்; சப்தத்தைக் கிரகிப்பது காது; ரஸத்தை [சுவை] கிரகிப்பது நாக்கு; கந்தத்தை [மணம்]  கிரகிப்பது மூக்கு; ஸ்பரிஸத்தைக் கிரகிப்பது சருமம்.

-          நன்றி: தெய்வத்தின் குரல்.5S என்பது ஜப்பானியர்களால் உருவாக்கபட்டுப் பயன்படுத்தபட்டு வரும் ஒரு வழிமுறையாகும். ஜப்பானியப் பொருள்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பதற்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று. அது என்ன 5SSort, Stabilize, Shine, Standardize and Sustain.

  நன்றி: விக்கிபீடியா.....ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்என்று சொல்வார்கள். உண்மையில் இது ஐந்து விஷயங்களைப் பற்றியது என்றாலும், ஐந்து பெண்களை பெற்றவன் ஆண்டி ஆவான் என்று கொள்வது வழக்கமாக இருக்கிறது. ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள் – ஆடம்பரமாய் வாழும் தாய்; பொறுப்பில்லாமல் வாழும் தந்தை; ஒழுக்கமற்ற மனைவி; ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர்; சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும். இந்த ஐந்து விஷயங்களையும் கொண்டிருப்பவன் அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்ற அர்த்தத்திலேயே ஆண்டி என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும்.  
  

சங்ககாலத் தமிழர், மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும், வறட்சியான வரண்ட பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர். தொல்காப்பியம் காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கணத்தில் இவை ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை நிலத்திணைகள் எனப்படுகின்றன.

 1. மலையும் மலை சார்ந்த நிலமும் - குறிஞ்சி
 2. காடும் காடுசார்ந்த நிலமும் - முல்லை
 3. வயலும் வயல் சார்ந்த நிலமும் - மருதம்
 4. கடலும் கடல் சார்ந்த நிலமும் - நெய்தல்
 5. மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் - பாலை


ஐந்திலே ஒன்று பெற்றான்ஐந்திலே ஒன்றை தாவி
ஐந்திலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
ஐந்திலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலார் ஊரில்
ஐந்திலே ஒன்றை வைத்தான்அவன் எம்மை அளித்து காப்பான்


பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். இக்கம்ப ராமாயண பாடலின் மூலம் அனுமானின் பெருமையும், தமிழின் பெருமையும் அறியலாம். இது சுந்தரகாண்டத்தில் அனுமன் இலங்கைக்கு தீ வைத்து திரும்பும் பொழுது எழுந்த பாடல். கம்ப ராமாயணத்தில் 5-வது காண்டம் இது. பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று (வாயு பகவான்) பெற்ற மகன், பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரை (கடல்) தாவி, இராமருடன், லக்ஷ்மண், பரதன், சத்ருக்ன், சீதாவுடன் சேர்ந்து அறுவரான அனுமன், இராமருக்காக பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்தில் பறந்து சென்று, பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமியில் பிறந்த சீதாவை காக்க, பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பை இலங்கையில் வைத்தான், அவன் நம்மை எல்லா சுகங்களையும் அளித்து காப்பான்.

என்ன நண்பர்களே, ஐந்து ஐந்து ஐந்து என்ற தலைப்பினைப் பார்த்து சமீபத்தில் வந்த திரைப்படம் பற்றிய ஏதோ பதிவு என நினைத்து வந்தீர்களா? அடாடா?


அது வேறொன்றுமில்லை.... மகிழ்ச்சியான விஷயம் தான் – 2009-ஆம் வருடம் இதே நாள் தான் எனது வலைப்பூவினை ஆரம்பித்து எனது முதல் பதிவினை வெளியிட்டேன். நேற்றோடு நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது எனது இந்த வலைப்பூ. 

இத்தனை நாட்களும் என்னுடைய பதிவுகளைப் படித்து நீங்கள் எல்லோரும் கொடுத்து வந்த ஆதரவு மேலும் தொடர்ந்து கிடைக்குமென நம்புகிறேன்.

நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாம் ஆண்டு தொடங்கும் இந்த நாளில், ஒரு விஷயம் – எனது எழுத்து ஏதோ மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்ற நம்பிக்கையிலும் சந்தோஷத்திலும் தான் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். :)

மேலும் தொடர்ந்து இந்த வலைப்பக்கத்தில் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

54 கருத்துகள்:

 1. ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பதன் அர்த்தம் நிறைய பேருக்கு தெரியவில்லை, ஒரு மலையாளிகிட்டே சொல்லிட்டு நான் மாட்டிகிட்டதும் உண்டு, கேரளாவில் ஐந்து பெற்றால் [[பெண் குழந்தை]] அவன் கால்மீது கால்போட்டு உக்கார்ந்து சாப்பிடலாம் என்று சொன்னான்.

  பயனுள்ள பதிவு....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.....

   நீக்கு
 2. அழகான ஐந்து விஷயங்களை ஐந்தாம் ஆண்டு தொடக்க நாளில் தந்து அசத்திட்டீங்க. என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் நண்பா! ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்ற பழமொழியின் சரியான விளக்கம் இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கணேஷ்......

   நீக்கு
 3. என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.5 ஆண்டுகளானாலும் சரி 50 ஆண்டானாலும் சரி நாங்கள் உங்களைத் தொடருவோம்...

  உங்களின் வெங்கட் நாகராஜ் வலைத்தளம் வெங்கட் நாகராஜ் தாத்தாவின் வலைத்தளமாக வளர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட் நாகராஜ் தாத்தா - அவர் எப்பவோ மேலே போயிட்டாரு....

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 4. அருமையான ஐந்து விஷயங்களைச சொல்லியிருக்கிறீர்களே என்று பார்த்தால், அப்படியா விஷயம்? வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 6. ஐந்து வருடங்களுக்கான வாழ்த்துகள் வெங்கட். முத்து முத்தான கருத்துகளை ஐந்தாகப் பிரித்துக் கொடுத்திருப்பது மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   நீக்கு
 7. ஐந்து தகவல்களும் அருமை... இந்த ஆண்டு மேலும் சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 8. ஐந்தாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் அழகான வலைப்பூவுக்கு
  சந்தோஷமான வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 9. ஐந்து, ஐந்தாய் இருக்கவுமே ஏதோ விஷயம்னு புரிஞ்சது. வாழ்த்துகள். இது போல் மேலும் பல ஐந்துகளைக் காணவும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 10. //ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள் – ஆடம்பரமாய் வாழும் தாய்; பொறுப்பில்லாமல் வாழும் தந்தை; ஒழுக்கமற்ற மனைவி; ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர்; சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்.//

  பலமுறை இதைக் குறித்துச் சொல்ல நினைச்சுச் சொல்லாமல் விட்ட விஷயம் இது. நீங்க பகிர்ந்ததிலே சந்தோஷம். இதே போல் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்பதும், பதினாறு குழந்தைகள்னு அர்த்தத்திலே எடுத்துக்கறாங்க. இந்த கல்யாணப் பதிவுகளிலாவது அது குறித்த விளக்கத்தைத் தரணும்னு நினைச்சிருக்கேன். முடிஞ்சா நீங்களும் சொல்லிடுங்க.:))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   நீக்கு
 11. பட பற்றிய விமர்சனமாக இருந்தால் என்ன இது நீங்களுமா இப்படி மாறிட்டிங்க என்று திட்ட வந்தேன்.. நல்ல செய்திகளை வழக்கம் போல பகிர்ந்திருக்கிங்க.. அதனால மகிழ்ச்சியோட ஐந்தாம் வருட பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்றேன்.. ஸ்வீட் இல்லையாங்க ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சசிகலா.....

   நீக்கு
 12. ஜி+ இலே ரெண்டு தரம் பகிர்ந்து கொண்டிருக்கீங்க போல. இது வேறே பதிவுனு நினைச்சா, அதே பதிவு. ஹிஹிஹி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு தடவை தானே + காட்டுது இங்கே! :)

   சில சமயங்களில் இந்த + ஒரே - ஆ இருக்கு!

   நீக்கு
 13. ஒரு பதிவிடுவதற்கு எவ்வளவு மெனக்கிடுகிறீர்கள். உங்களுடைய ஒவ்வொரு இடுகையிலும் இதே போன்ற உழைப்பு தென்படுவதை காண்கிறேன்... ஐந்தாம் ஆண்டு என்ன ஐம்பதாண்டுகளும் உங்களால் நிலைத்து நிற்க முடியும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   நீக்கு
 14. //தலைப்பினைப் பார்த்து சமீபத்தில் வந்த திரைப்படம் பற்றிய//

  அந்த அளவுக்கு உங்க வாசகர்கள் அப்பாவின்னு நம்புற அப்பாவியா நீங்க??!! பதிவுலகில் தலைப்பால் இழுப்பதுதானே வழக்கம்! :-)))))

  ஐந்து பெற்றால் ஆண்டி என்பதன் விளக்கம் சிறப்பு. இதன் நடுவில் ‘பெண்’ணைப் புகுத்திய புண்ணியவான் யாரோ!! ஐந்து குழந்தைகள் படமும் அழகு!! (ஆச்சியும் ஐயரும் படங்களைச் சிறப்பாகத் தேர்வு செய்கிறீர்கள்... ம்ம்... நடக்கட்டும்)

  ஐந்தாம் வருடத்திற்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா...

   வாழ்த்துகளுக்கும் தான்.....

   படங்கள் தேர்வு செய்வது - :))))

   நீக்கு
 15. ஐந்தாவது பிறந்த நாளை வித்தியாசமாய் கொண்டாடி அசத்தி விட்டீர்கள் !
  #கந்தத்தை [மணம்] கிரகிப்பது மூக்கு#
  கந்தம் என்றால் நாற்றம் ,சுகந்தம் என்றால் மணம்,இரண்டும் ஒன்றல்ல... சரியா வெங்கட் ஜி ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 16. ஏன் ஐந்தைப் பற்றி சொல்கிறார் என்றே யோசித்துக் கொண்டே வந்தேன்....

  வாழ்த்துக்கள் வெங்கட் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

   வாழ்த்திய நல்லுள்ளத்திற்கும் நன்றி.

   நீக்கு
 17. ஐந்தாம் ஆண்டின் சிறப்புப் பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   நீக்கு
 18. ஐந்தைப்பற்றிய அனைத்தும் அருமையாகச்சொல்லி விட்டீர்கள். ஐந்தாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் அழகான வலைப்பூவுக்கு சந்தோஷமான வாழ்த்துகள்..! பாராட்டுக்கள் ஜி ! ;)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 19. வாழ்த்துகள் ஐந்து. :))

  தொடரட்டும் இனிய பகிர்வுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 20. இன்றைய காலக் கட்டத்தில் ஐந்து பெண்களைப் பெற்றவன் அதிஷ்டசாலி என்பதுதான் உண்மை.தொடர்ந்து வெற்றிக்கொடி பறக்கவிட வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   நீக்கு
 21. வாழ்த்துகள் வெங்கட்!! அருமையான இடுகை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தியானா.

   நீக்கு
 22. ஐந்தாம் வருடத்திற்கு வாழ்த்துக்கள் சார்

  555 என்ற தலைப்பை பார்த்ததும் நிச்சயம் சினிமா விமர்சனம் இல்லை என்று தெரியும் அது போலவே இல்லை ஆனால் ஐந்தாம் ஆண்டு கொண்டாட்டம் என்பது பதிவின் இறுதிக்கு வந்த போது தான் தெரிந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   வாழ்த்துகளுக்கும் தான்!

   நீக்கு
 23. எங்கிருந்தோ எங்கியோ கொண்டு போயிட்டீங்க.
  ஐந்தாம் ஆண்டை எட்டியிருக்கும் உங்கள் வலைப்பூ மேலும் சிறக்க வாழ்த்துகள்
  ஷாஜஹான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

   தலைநகர் திரும்பி விட்டீர்களா?

   நீக்கு
 24. அரசனும் ஆண்டியாகும் விளக்கம் அருமை. ஐந்தில் அடியெடுத்து வைப்பதற்கு இனிய வாழ்த்துகள் சகோ... பல்கிப் பெருகட்டும்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நிலாமகள்....

   நீக்கு
 25. அட! உங்கள் வலைதளத்தின் ஐந்தாவது பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாடிவிட்டீர்கள்!
  மேலும் பல பல ஆண்டுகள் வலையுலகில் வெற்றிகரமாக வலம் வர வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   நீக்கு
 26. மிக சிறந்த தளம். ஐந்தாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் தங்களுக்கு வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேல்.

   நீக்கு
 27. ஐந்தாம் ஆண்டு அடியெடுத்த வைத்துள்ளதற்கு வாழ்த்துகள். ஐந்தின் பொருளை அழகாக விளக்கியுள்ளதற்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....