எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, September 14, 2013

பதிவர்கள் சந்திப்பு – தெரிந்தவர்களும் நான் அறியாதோரும் – புகைப்படத் தொகுப்பு 6

சென்ற புகைப்படத் தொகுப்பில் நான் பதிவர் சந்திப்பின் போது சந்தித்த சில பதிவர்களின் படங்களை வெளியிட்டு அவர்களின் பெயரை பின்னூட்டத்தில் தெரிவிக்கும்படி கேட்டிருந்தேன். வெளியிட்ட பன்னிரண்டு புகைப்படங்களில் ஏழு புகைப்படங்களில் இருப்பவர்கள் பெயர் மட்டுமே பின்னூட்டங்களில் சொல்லி இருக்கிறார்கள். மீதி ஐந்து பெயர் யாரென்று இன்னும் தெரியவில்லை.

இந்த நிலையில் இன்னும் சில புகைப்படங்கள் இன்று வெளியிடுகிறேன். இதில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் உள்ள சிலர் தெரிந்தவர்கள். சிலரை எனக்குத் தெரியாது. அந்த புகைப்படங்களில் இருப்பவர்களையும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். சென்ற தொகுப்பில் வெளியிட்ட படங்களில் உள்ளவர்களின் பெயர்கள் கீழே:

படம்-4:
படம்-6:
படம்-7: கோவை சதீஷ்
படம்-8: ராஜபாட்டை ராஜா
படம்-10:
படம்-11:
படம்-12:

அது சரி பரிசு என அறிவித்துவிட்டு ஒன்றுமே இதுவரை சொல்லவில்லையே எனக் கேட்பவர்களுக்கு.....  பரிசு உண்டு!  :) நம்ம டி.டி. அண்ணாச்சி வேற பரிசு என்னன்னு சொன்னா, எல்லா பேரும் சொல்றேன்னு சொல்லி இருக்காரு! சரி முதல்ல, இன்றைய தொகுப்பிலுள்ள புகைப்படங்களைப் பார்க்கலாம்.


படம்-1: ஜோதிஜி திருப்பூர்


படம்-2: சைதை அஜீஸ்


படம்-3: தருமி ஐயா


படம்-4: தமிழ் சதீஷ் செல்லதுரை


படம்-5: கோகுல்


படம்-6:


படம்-7: 


படம்-8: 


படம்-9:


படம்-10:


படம்-11:


படம்-12: தோழன் ம.பா.

இந்த பகிர்விலும், போன தொகுப்பிலும் வெளியிட்ட புகைப்படங்களில் உள்ளவர்களைச் சொல்வோர்கள் அனைவருக்கும் தங்கக்காசுகள் பரிசு. நான் ரொம்பவே தாராள மனசுக்காரன்.....  அதுனால, யாருக்கு எவ்வளவு வேணுமோ அள்ளிக்கோங்க! இருக்கற விலைவாசில, எவ்வளவு தங்கம் கிடைச்சாலும் சந்தோஷம் தானே! :)அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

34 comments:

 1. படம் 6: சிவசங்கர்

  படம் 7: சேலம் தேவா

  படம் 10: தமிழ் டால்லி

  ReplyDelete
  Replies
  1. தகவல்களுக்கு மிக்க நன்றி சிவகுமார்.

   Delete
 2. சென்ற தொகுப்பு:

  படம் 11: குகன்(நாகரத்னா பதிப்பகம்)
  படம் 12: விஜய்

  ReplyDelete
  Replies
  1. சென்ற பதிவில் இன்னும் இரண்டு பேர்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி சிவகுமார்.....

   Delete
 3. படம் 11: அன்றைக்கு எனக்கு அறிமுகமான நண்பர் ராகவாச்சாரி அவர்கள்தான் [குகன் என சிவகுமார் கூறி இருப்பது குற்றம் குற்றமே !]

  ReplyDelete
  Replies
  1. சபாஷ் சரியான போட்டி! :)

   இரண்டில் யார் சரியென சம்பந்தப்பட்டவரே வந்து சொன்னால் தான் உண்டு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
  2. சிவா சொன்னது சென்ற தொகுப்பின் படம் 11...

   Delete
  3. சென்ற தொகுப்பின் படம் 10: சேதுராமன் (வாசகர்)

   Delete
  4. தகவலுக்கு நன்றி ஃபிலாசபி பிரபாகரன்.

   Delete
  5. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஃபிலாசபி பிரபாகரன்.

   Delete
 4. ஆறு வரைக்கும் வந்தாச்சா?? மிச்சமெல்லாம் மத்தியானமாப் பார்க்கிறேன். இதிலே தருமி சாரைத் தவிர மத்தவங்களைத் தெரியாது. :)

  ReplyDelete
  Replies
  1. தங்கக் காசு விட்டுதாதீக :)))வாழ்த்துக்கள் தோழி ...

   Delete
 5. படம் 6: பிரபல முகமூடி பதிவர்
  படம் 8: கருத்து கந்தசாமி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஃபிலாசபி பிரபாகரன்.

   Delete
 6. Geetha Sambasivam: இதிலே தருமி சாரைத் தவிர மத்தவங்களைத் தெரியாது///

  எனக்கு அவர் கூட ஜோதிஜியையும் தெரியும்.... எல்லாரையும் தெரிஞ்சிக்க முடியாதுதான். ஒருத்தர் எழுதின ஒரு சில பதிவுகளையாவது படிச்சவங்களுக்குத்தான் அவங்கள நேர்ல பாத்ததும் அட இவரா! என்று அடையாளம் கண்டுக்கொள்ள முடியும். அது அங்கு வந்த எத்தனை பேரால் முடியும்?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   எல்லோரையும் தெரிந்து கொள்வது கொஞ்சம் கடினமான விஷயம் தான்.

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 8. அறிமுகங்களுக்கு நன்றி !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 9. சொக்க சொக்க நீ எங்க இருக்குற ?...!!!!

  வறுமைக் கோட்டின் எல்லைக்குள்
  வாடி வதங்கும் இம் முல்லைக்கு
  எளிய வழிகளைச் சொல்லாயோ
  ஏற்றம் கண்டு நான் வாழ .............

  தங்கப் பணத்தை அள்ளித் தரும்
  தாரள குணத்தில் வள்ளலையா
  உன்னைத் தொழுதால் போதாதா
  உயிரைக் கூடத் தருவாயே ............

  இனியும் பெயர்கள் தேவையோ
  இன்பக் கவிதை போதாதோ ?....
  நற் கருமம் ஆற்று மகனே நீ
  நன்மை பெறுவாய் இதனாலே :)))))

  இரங்க மாட்டீர்களோ சகோதரா ?..பெயர்கள்
  தெரிந்தால் நாம் ஏன் வைத்துக் கொண்டு
  வஞ்சனை செய்யப் போகிறோம் ?....:)))))))
  அவ்வளவும் தங்கக் காசு !!!!...அம்மாடியோய்
  கிடைத்தால் எட்டுக் கிடாய் வெட்டலாம் யாருக்குத் தான்
  அடிக்கப் போகுதோ இந்த அதிஸ்ரம் :))சொக்கா சொக்கா
  இது எனக்கு இல்ல ,( :))))))))))))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்....

   கவிதையாகவே பதில் எழுதியமைக்கு நன்றி. விரைவில் உங்கள் போல கவிதாயினிகளுக்கு/கவிஞர்களுக்கு எனது பக்கத்தில் ஒரு வாய்ப்பு தர இருக்கிறேன். :)

   Delete
 10. எனக்கு தருமி சார் மட்டும் தான் தெரியும்.ஜோதிஜி திருப்பூர் அவர்கள் வலைத்தளத்தில் அவர் படம் பார்த்து இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 11. எனக்கும் தான். அதனால் நானும் இரண்டு தங்கக் காசு எடுத்துக்கறேன்:)
  படங்கள் அருமை வெங்கட். அருமையான உழைப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 13. தங்கக் காசுகளுக்கு நன்றி வெங்கட்...!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.....

   Delete
 14. தங்க காசுகள் :)))

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 15. ஆஹா.... நிறைய பேரை எனக்கு இதில் தெரியவில்லை.. கண்டுப்பிடிச்சு சொன்னா மட்டும் தான் தங்கக்காசான்னு கேட்கிறவர்களுக்கும் அள்ளிக்கோங்கன்னு இப்படி கொட்டி குவிச்சு இருக்கீங்களேப்பா தங்கக்காசு தாராள மனசுக்காரா வெங்கட்.. :)

  ReplyDelete
  Replies
  1. கையில் இருக்கிறதோ இல்லையோ, மனதளவிலாவது தாராள மனசு இருப்பது நல்லதல்லவா :)

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....