இருமாநில பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இருமாநில பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஜூன், 2018

குஜராத் போகலாம் வாங்க – பயணத்தின் முடிவு – நல்ல மனம் வாழ்க

இரு மாநில பயணம் – பகுதி – 49

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

Riverfront, Ahmedabad

அழகிய விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆற்றங்கரையில் [Riverfront, Ahmedabad] சில மணித்துளிகள் இருந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த பிறகு எங்கள் தங்குமிடத்திற்குத் திரும்பியபோது இரவு மணி 10.30-க்கு மேல். அடுத்த நாள் காலையில் அஹமதாபாத் நகரிலிருந்து நான் தலைநகர் தில்லிக்கும் கேரள நண்பர்கள் திருவனந்தபுரத்திற்கும் செல்ல வேண்டும். எங்கள் விமான நேரங்களுக்கிடையே ஒரு மணி நேரத்திற்கும் மேல் என்பதால் நான் முதலில் புறப்பட வேண்டும். அவர்கள் ஒரு மணி நேரம் கழித்துப் புறப்படுவார்கள். காலை நேரத்தில் அறையைக் காலி செய்யும் போது கணக்கு வழக்கு பார்க்க முடியாது என்பதால் முதல் நாள் இரவிலேயே அறை வாடகை பாக்கியும் கொடுத்து, பயணத்திற்கான எங்கள் பங்கினையும் கணக்கிட்டு கொடுக்கல் வாங்கல்களை முடித்துக் கொண்டோம்.

புதன், 6 ஜூன், 2018

குஜராத் போகலாம் வாங்க – ஒன்பதாம் மாடியில் உணவகம் – நதியை நோக்கியபடி

இரு மாநில பயணம் – பகுதி – 48

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

நண்பர் குரு காலையில் சொன்னபடியே, சரியாக எட்டு மணிக்கு மேல் அழைத்தார். ”தயாராக இருங்கள், இதோ வந்து கொண்டிருக்கிறேன் – தங்குமிடம் பெயர் மட்டும் இன்னுமொரு முறை சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொள்ள பெயரையும் முகவரியும் சொல்ல, நாங்கள் தயார் ஆகியவுடன் வந்து சேர்ந்தார். நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைத்த பிறகு அவரது வாகனத்திலேயே எங்களை உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். எந்த உணவகம் – சைவமா அசைவமா என்ன சாப்பிட்டோம் என்பதையெல்லாம் சொல்லத் தான் போகிறேன்! கொஞ்சம் காத்திருங்கள்! அதற்கு முன்னர் எந்த உணவகம் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.

திங்கள், 4 ஜூன், 2018

குஜராத் போகலாம் வாங்க – ஓட்டுனரின் படபடப்பு – பிறந்த நாள் பரிசு

இரு மாநில பயணம் – பகுதி – 47

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகத்திலிருந்து வெளியே வரும்போதே ஓட்டுனர் முகேஷ் கொஞ்சம் படபடப்புடன் தான் இருந்தார் – ஒரு வாரமாக எங்களுடனேயே பயணித்து அவரும் கொஞ்சம் தளர்ந்திருந்தார். எங்கள் அடுத்த திட்டம் என்ன என்று கேட்க, ரிலையன்ஸ் மெகா மார்ட் அழைத்துச் செல்லக் கேட்டுக் கொண்டோம். அவரது படபடப்பு என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. மெகா மார்ட் சென்று வாகன நிறுத்துமிடத்தில் இறக்கிவிட நண்பர்கள் முன்னே சென்றார்கள். நான் கொஞ்சம் பின் தங்கி, முகேஷிடம் என்ன விஷயம் சொல்லுங்க, என்று கேட்க, “இல்லை இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும் அதான்!” என்று சொல்லி காரணத்தினையும் சொன்னார் – அவரது மகன்களுக்கு – இரட்டைக் குழந்தைகள் – அன்று பிறந்த நாள் – அதனால் கொஞ்சம் சீக்கிரம் போனால் கொண்டாட வசதியாக இருக்கும் என்று சொன்னார்.

வெள்ளி, 1 ஜூன், 2018

குஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்

இரு மாநில பயணம் – பகுதி – 46

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

Dastan Auto World – விண்டேஜ் வில்லேஜ் கார்கள் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியான விண்டேஜ் வில்லேஜ்-லியே சாப்பிடலாம் எனச் சொன்னதற்கு “விலை அதிகம்” என்று கேரள நண்பர்கள் சொல்ல, மீண்டும் நகரத்திற்குள் வந்து முதல் நாள் சாப்பிட்ட அதே உணவகத்திலேயே சாப்பிட்டோம். தொடர்ந்து ஒரு வாரத்தில் மூன்று நான்கு முறை இங்கே வந்து விட்டதால், சிப்பந்திகளுக்குக் கூட எங்களை அடையாளம் தெரிந்து விட்டது! ஏதோ கொஞ்சம் சப்பாத்தி, இரண்டு சப்ஜி, ராய்தா, சாலdட், பாப்பட் [அப்பளம்], Chசாச்ch என சாப்பிட்டதற்கே 1800 ரூபாய் ஆனது – விண்டேஜ் வில்லேஜ் சாப்பாட்டுக்கான தொகையை [ஒருவருக்கு 240/-] விட இங்கே அதிகம்! கண் கெட்ட பிறகு சூரிய உதயம் – நண்பர்கள் உணவுக்கான Bill பார்த்த போது – அங்கேயே சாப்பிட்டு இருக்கலாம் என்றார்கள்! சரி பரவாயில்லை – அடுத்து எங்கே!

புதன், 30 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – விண்டேஜ் வில்லேஜ் – கார்களின் மதிப்பு கோடிகளில்

இரு மாநில பயணம் – பகுதி – 45

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

அடலாஜ் கி வாவ் – ரூதாபாய் படிக்கிணறுகளைப் பார்த்த பிறகு நாங்கள் புறப்பட்டுச் சென்ற இடம் – Dastan Auto World - விண்டேஜ் வில்லேஜ் - இந்த இடத்திற்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என கேரள நண்பர் ப்ரமோத் திட்டமிட்டிருந்தார் – அப்படி என்ன ஸ்பெஷல் அங்கே? ஒரு தனி நபர் எத்தனை கார்கள் வைத்திருக்க முடியும்? அதுவும் மிகவும் புராதனமான விண்டேஜ் வகைக் கார்கள் எத்தனை வைத்திருக்க முடியும் – ஒன்று, அல்லது இரண்டு – அதிக பட்சமாக 10! இந்த இடத்தில் மட்டும் இருக்கும் கார்கள் 106! இதைத் தவிர இவர் பங்க்ளாக்களில் இருக்கும் கார்களின் எண்ணிக்கை 134 – ஆக மொத்தம் 250 கார்கள்! அத்தனை கார்களின் மதிப்பு கோடிக் கணக்கில்.

திங்கள், 28 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு

இரு மாநில பயணம் – பகுதி – 44

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

தண்ணீரில் பிம்பம்.... கூடவே வெள்ளையாய் சிறு சிறு புள்ளிகள் - 
அது என்ன? இதைப் புகைப்படப் புதிராக வைத்துக் கொள்ளலாம்!
அடலஜ் கி வாவ்....

காந்திஜியின் சபர்மதி ஆஸ்ரமத்திலிருந்து புறப்பட்டு அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் ஒரு படிக்கிணறு – அஹமதாபாத் நகரின் எல்லைக்குள்ளேயே அமைந்திருக்கும் இந்த படிக்கிணற்றின் பெயர் அடலஜ் கி வாவ்.  இந்தப் பயணத் தொடர் ஆரம்பிக்கும் போது எழுதிய ராணி கி வாவ் பதிவுகள் உங்களுக்கு நினைவிலிருக்கலாம். இல்லாதவர்கள் மீண்டும் ஒரு முறை படித்து, படங்களைப் பார்த்து விடுவது நல்லது – அந்த படிக்கிணற்றுக்கும் இந்த படிக்கிணற்றுக்கும் இருக்கும் வித்தியாசங்கள் உங்களுக்குப் புலப்பட ஏதுவாக இருக்கும். அடலஜ் கி வாவ் – இங்கே என்ன இருக்கிறது, இந்த இடத்தில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

வெள்ளி, 25 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – தமிழனும் மலையாளியும்

இரு மாநில பயணம் – பகுதி – 43

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

சென்ற பகுதியில் சபர்மதி ஆஸ்ரமத்தின் சில காட்சிகளையும் தகவல்களையும் பார்த்தோம். அங்கே சொல்லாமல் விட்ட சில விஷயங்கள் இங்கே இன்றைக்கு தனிப்பதிவாக…..  ஆஸ்ரமத்தின் நுழைவாயிலில் ஒரு அறிவிப்புப் பலகை – இங்கே இருக்கும் தபால் பெட்டியில் போடும் தபால் அட்டையில் சர்க்கா அதாவது இராட்டை வடிவம் பொறித்து அனுப்பப்படும் – சாதாரண வட்ட வடிவ Seal போல இல்லாது இராட்டை வடிவ Seal வைத்து அனுப்புவார்கள் என தகவல் தெரிவித்தது. அதற்கான தபால் அட்டைகளும் ஆஸ்ரமத்திற்குள்ளேயே கிடைக்கிறது. வெளியில் பார்த்தபோதே ஒரு தபால் அட்டை வாங்கி மகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

புதன், 23 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம்

இரு மாநில பயணம் – பகுதி – 42

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

ஆஸ்ரமத்தின் நுழைவாயில்....

சபர்மதி ஆஸ்ரமம்....

அமைதியான சூழலில்...
சபர்மதி ஆஸ்ரமம்....

முதல் நாள் இரவு வந்து தங்குமிடத்தில் படுத்ததும் உறங்கி விட்டோம். அடுத்த நாள் காலை எழுந்த போது மணி 7-க்கு மேல் ஆகியிருந்தது. அனைவரும் குளித்து தயாரான பிறகு தங்குமிடத்தின் உள்ளேயே இருந்த உணவகத்திற்குச் சென்றோம். இந்த தங்குமிடத்தில் [ஹோட்டல் க்ரிஸ்டல்] காலை உணவும், WIFI-யும் Complimentary என்பதால் தனியாக அதற்குக் கட்டணம் தேவையில்லை – தங்குமிடக் கட்டணத்திலேயே சேர்த்திருப்பார்கள் – சும்மாவா கொடுக்க முடியும்! இதெல்லாம் ஒரு வித வியாபார தந்திரம். Buffet உணவு தான் – வேண்டியதை எடுத்துச் சாப்பிடலாம் –பரோட்டா, தயிர், ஊறுகாய், மிக்ஸ் சப்ஜி, ப்ரெட்-பட்டர் டோஸ்ட், கார்ன் ஃப்ளேக்ஸ் [பாலுடன்], மற்றும் தேநீர் – வேண்டியதை எடுத்துச் சாப்பிடலாம். அவரவர்களுக்குத் தேவையானவற்றை போட்டு எடுத்துக் கொண்டு அமர்ந்து சாப்பிட்டோம்.

திங்கள், 21 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது

இரு மாநில பயணம் – பகுதி – 41

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

சென்ற பதிவில் சொன்னது போல, கேரள நண்பர்கள் அசைவ உணவு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு [இரண்டு நாட்கள் முன்னர் தான் தியுவில் சாப்பிட்டார்கள் - இரண்டு நாளே ரொம்ப நாள் அவர்களுக்கு!] என்று குறைபட்டுக்கொள்ள ஆம்தாவாத் நகரின் எல்லையில் இருந்த ஒரு பெரிய உணவகத்தில் – உணவகத்தின் பெயரே கொஞ்சம் கார சாரமாக இருந்தது – மிர்ச் மசாலா என்பது தான் உணவகத்தின் பெயர்! மிர்ச் என்றால் மிளகாய்! – வாகனத்தினை நிறுத்தினார். அவரையும் சாப்பிட அழைக்க, இல்லை எல்லை நான் வீட்டுக்குச் சென்று என் மனைவியின் கையால் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டார். வெளி உணவு அடிக்கடி சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்குதான் வீட்டு உணவின் அருமை தெரியும்!

வெள்ளி, 18 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – வித்தியாசமான நெடுஞ்சாலை உணவகம்

இரு மாநில பயணம் – பகுதி – 40

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

Gகிர் வனத்திலிருந்து ஆம்தாவாத் நோக்கி பயணம் செய்தபோது ராஜ்கோட் அருகே ஒரு உணவகத்தில் தேநீர் அருந்த வண்டியை நிறுத்தினோம்.  அந்த உணவகத்தின் பெயர் “Horn OK Please!”.  Bansal Petroleum என்ற பெட்ரோல் பங்க் உரிமையாளர் பெட்ரோல் பங்க் வளாகத்திலேயே நடத்தும் உணவகம் தான் இந்த Horn OK Please! முழுக்க முழுக்க நெடுஞ்சாலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான் இந்த உணவகத்தின் Theme! ஒரு லாரியின் முகப்பினை வைத்து அதிலிருந்து உணவு தருகிறார்கள்.  உணவகத்தின் சுவர்களில் லாரிகளில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள்.

புதன், 16 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – கிர் வனத்திலிருந்து தங்குமிடம் – காலை, மதிய உணவு – அஹமதாபாத் நோக்கி…

இரு மாநில பயணம் – பகுதி – 39

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

நாங்கள் பயணித்தது இந்த வாகனத்தில் அல்ல!
Gகிர் வனத்திலிருந்து அஹமதாபாத் நோக்கி....

வனப்பயணத்தினை முடித்து வனத்துறையின் அலுவலகத்திற்கு வந்து சில நினைவுப் பரிசுகளை வாங்கிக் கொண்டு வெளியே வந்த நாங்கள், எங்கள் வாகன ஓட்டுனர் முகேஷ்-ஐ அழைத்தோம். காலையில் எங்களை வன அலுவலகத்திற்கு அருகே விட்டுவிட்டு அவர் தங்குமிடம் சென்று விட்டார். வாகனத்தினை கொஞ்சம் நீராட்ட வேண்டும் – Water Wash – என்று சொல்லி இருந்தார். அவரை அழைத்து எங்கள் வேலை முடிந்ததைச் சொன்னோம். சில நிமிடங்களில் அவர் வந்து சேர வேண்டும் – அது வரை வெளியே நின்று கொண்டிருந்த எங்களை வனத்துறையைச் சேர்ந்த சிலர் சிங்கம் பார்க்க வேண்டுமானால் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறோம் என கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

திங்கள், 14 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – மான் கண்டேன் மயில் கண்டேன்

இரு மாநில பயணம் – பகுதி – 38

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

மான் கண்டேன்...  மானும் எங்களைக் கண்டது...
Gகிர் வனத்திற்குள்....

எட்டு சிங்கங்களை அவ்வளவு கிட்டத்தில் பார்த்ததில் எங்கள் குழுவில் இருந்த அனைவருக்குமே மகிழ்ச்சி. வேறு எதைப் பார்க்க முடிகிறதோ இல்லையோ, சிங்கங்களுக்குப் பெயர் போன Gகிர் வனத்திற்குள் வந்துவிட்டு சிங்கங்களைப் பார்க்க முடியாமல் போனால் என்ன பலன்! அதுவும் கேரளத்திலிருந்து இதற்காகவே வந்து என்ன பலன்! அதனால் கேரளத்திலிருந்து வந்த நான்கு நண்பர்களும் “வாழ்க்கையின் பலனையே அடைந்த” ஒரு உணர்வில் இருந்தார்கள். நானும் இந்த மாதிரி நிறைய வனப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன் – அனைத்திலுமே எனக்கு பிடித்தது – அசாமின் காசிரங்காவும் குஜராத்தின் இந்த Gகிர் வனமும் தான். எங்களுடன் வந்திருந்த வழிகாட்டியும் நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள் போலும் என்று சொல்லிக் கொண்டு வந்தார். சிலர் ஒரே நாளின் இரண்டு மூன்று பயணங்களை மேற்கொண்ட பிறகும் சிங்கங்களைப் பார்க்க முடியாமல் போனதுண்டு என்றும் சொன்னார்.

வெள்ளி, 11 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – கண்டேன் சிங்கங்களை

இரு மாநில பயணம் – பகுதி – 37

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

முந்தைய பதிவில் சொன்னது போல, சாஸன் Gகிர் வனப்பயணத்திற்காக, எங்களுக்குக் கிடைத்த Route – பாதையின் எண் இரண்டு – ஏழு பாதைகளில் எங்களுக்குக் கிடைத்த பாதையில் பயணித்துக் கொண்டிருந்தோம். சிங்கங்கள் எங்களுக்குக் காட்சி கொடுக்குமா, கொடுக்காதா என்ற எண்ணமே அனைவருக்கும் இருந்தது. காலை நேரத்திலேயெ பயணிப்பதால் கொஞ்சம் குளிரும் இருந்தது – பொதுவாக வனப்பகுதிக்குள் குளிர் சற்று அதிகமாகவே இருக்கும் என்பதால் அதற்குத் தகுந்த உடை அணிந்து செல்வது நல்லது. அதைப் போலவே சிவப்பு வண்ண உடைகளையும் தவிர்ப்பது நல்லது! மிருகங்களுக்கு சிவப்பு வண்ணம் பார்த்தால் “ஆஹா நமக்கு இரை கிடைச்சுதடா!” என்று உங்கள் மேல் தாவிட வாய்ப்புண்டு!

புதன், 9 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்

இரு மாநில பயணம் – பகுதி – 36

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

வன அலுவலகத்தின் முன்னர் சிங்கங்களின் பொம்மை....

முதல் நாள் இரவு நேரத்தோடு உறங்கி அதிகாலையிலேயே விழித்து வனத்திற்குள் செல்வதற்குத் தயாரானோம். இந்த Gகிர் வனப்பகுதியின் முழுப்பெயர் சாஸன் Gகிர் என்பது தான். பெரும்பாலும் நாம் படிக்கும்போது Gகிர் என்று மட்டுமே படித்திருக்கிறோம் அல்லவா. இந்த சாஸன் Gகிர் வனத்திற்குள் செல்ல வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். நாள் ஒன்றுக்கு இவ்வளவு பெர்மிட் என்ற கணக்கு உண்டு. அதற்கு மேல் தருவதில்லை. அதனால் இணையம் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம். அங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம் எனப் போனால் வனப்பயணம் செய்வது சந்தேகம் தான்.

திங்கள், 7 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே

இரு மாநில பயணம் – பகுதி – 35

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

காட்டு ராஜா...

இரவு நேரத்தில் வனப்பகுதியில் உலா போகலாமா என்று மோஹித் கேட்க, போகலாம் என்று சொல்லி விட்டோமே தவிர, அதற்கு அனுமதி கிடையாதே, எப்படிச் செல்ல முடியும் என்று தோன்றியது. வனப் பகுதி என்றால் வனப்பகுதி அல்ல. இந்தப் பகுதியில் நிறைய கிராமங்கள் – Bபோஜ்டே கிராமம் போலவே நிறைய கிராமங்கள் உண்டு – வனப்பகுதிக்கு வெளியே அமைந்துள்ள இந்த கிராமங்களில் அவ்வப்போது சிங்கத்தின் நடமாட்டம் இருப்பதுண்டு. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அப்படி வெளியே நடமாடும் சிங்கத்தினைப் பார்க்க முடியும் என்று சொன்னார் மோஹித். இப்படி நடமாட்டம் இருந்தால் அதைப் பார்த்து தகவல் சொல்லிக் கொள்கிறார்கள் – இங்கே இருக்கும் தங்குமிட உரிமையாளர்கள்.

வெள்ளி, 4 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – மாஞ்சோலைக்குள் நீச்சல் குளம் – இரவு உணவு

இரு மாநில பயணம் – பகுதி – 34

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

சென்ற பதிவில் சொன்னது போல, Gகிர் வனப் பகுதியில் இருக்கும் Bபோஜ்டே கிராமத்தில் அமைந்திருக்கும் Shiv Farm House எனும் இடத்தில் தான் எங்களது இரவுத் தங்கலுக்காக நான் தேர்ந்தெடுத்திருந்த இடம். இந்த இடம் வனப்பகுதியில் ஒரு சிறிய கிராமம். உரிமையாளர் மோஹித் அவரது பரம்பரை சொத்தான மாந்தோப்பில் சில அறைகளைக் கட்டி வாடகைக்கு விடுகிறார். வாயில் எப்போதும் Gகுட்கா மென்று கொண்டிருக்கும் இளைஞர் – தங்குபவர்களுக்கு எல்லா ஏற்பாடுகளையும் சுறுசுறுப்பாகச் செய்து கொடுக்கிறார். சுற்று வேலைகளை பார்த்துக் கொள்ள சில சிப்பந்திகள் உண்டு. சமையல் பார்த்துக் கொள்ள ஒரு பெண்மணி. வீட்டுச் சாப்பாடு போலவே சமைத்து நன்றாக பரிமாறுகிறார்கள்.  

புதன், 2 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – தியுவிலிருந்து கிர் வனம் நோக்கி

இரு மாநில பயணம் – பகுதி – 33

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

ஒரு கடி கடிச்சுக்கலாம்!
தியு - கிர் சாலை வழி உணவகத்தில்.....

தியு நகரிலிருக்கும் சில இடங்களையும், தியு நகரிலுள்ள போர்த்துகீசியர்கள் கட்டிய கோட்டையையும் பார்த்த பிறகு நாங்கள் தியுவிலிருந்து புறப்பட்டோம். இன்னும் சில இடங்கள் – குறிப்பாக கடற்கரைகள் இருந்தாலும், அடுத்த நாள் காலை நாங்கள் குஜராத்தின் Gகிர் வனப் பயணத்திற்கு முன்பதிவு செய்திருந்ததால் மதியமே புறப்பட்டோம். முதல் நாள் இரவு கிடைத்த அனுபவத்தினால் மதிய உணவினை வழியில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். தியு நகரிலிருந்து குஜராத் - Gகிர் வனம் சுமார் 70 கிலோமீட்டர் தொலைவு தான் என்றாலும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. வழியில் குஜராத் எல்லையில் தியுவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களுமே நிறுத்தப்படுகிறது.

திங்கள், 30 ஏப்ரல், 2018

தியு போகலாம் வாங்க – கோட்டையும் சிறைச் சாலையும்

இரு மாநில பயணம் – பகுதி – 32

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

பார்வை போகும் தூரம் வரை கடல்.....
தியு கோட்டையிலிருந்து....

தேவாலயத்தினையும் மேரி மாதாவினையும் தரிசித்த பிறகு நாங்கள் சென்ற அடுத்த இடம் தியுவின் கோட்டை. கடலை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோட்டை மிகவும் அழகிய கோட்டை. கடலை கோட்டை மேலிருந்து பார்ப்பது ஒரு அற்புதக் காட்சிதானே…. அங்கே தான் இப்போது நாம் போகப் போகிறோம். தியு கோட்டை போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை மற்ற அரசாங்கங்களால் எடுக்கப்படும் படையெடுப்புகளை – தடுக்க, தங்களை தற்காத்துக் கொள்ள கட்டப்பட்ட கோட்டை. 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை எனத் தெரிகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து சில வருடங்களுக்குப் பிறகு வரை கூட போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்திருக்கிறது இந்தப் பகுதி.

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

தியு போகலாம் வாங்க – புனித பால் தேவாலயம், தியு

இரு மாநில பயணம் – பகுதி – 31

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

நாய்தா குகைகளைப் பார்த்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் சென்று சேர்ந்த இடம் St. Paul’s Church, Diu! கிட்டத்தட்ட 408 வருடங்கள் பழமையான தேவாலயம். போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் இன்றைக்கும் வழிபாட்டுத் தலமாக இருக்கிறது. அவர்கள் காலத்தில் தியுவில் கட்டப்பட்ட பல கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்கள் சிதிலமடைந்துவிட்டாலும் இன்றைக்கும் நிலைத்து நின்று கொண்டிருக்கும் இந்த St. Paul’s Church ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. 1601-ஆம் வருடம் கட்ட ஆரம்பித்து 1610-ஆம் ஆண்டு கட்டி முடித்திருக்கிறார்கள்.  இதே சமயத்தில் தான் போர்த்துகீசியர்கள் ஆண்ட மற்றொரு இந்திய மாநிலமான கோவாவிலும் இதே போன்று ஒரு வழிபாட்டுத் தலத்தினை [Bom Jesus Basilica, Goa] கட்டி இருப்பதாகத் தெரிகிறது.

புதன், 25 ஏப்ரல், 2018

தியு போகலாம் வாங்க – நாய்தா குகைகள் - இயற்கையா செயற்கையா

இரு மாநில பயணம் – பகுதி – 30

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

நாய்தா குகைகள், தியு

குகை வாசலில் நான்....

நாய்தா குகைகள், தியு

கடற்கரையில் இருந்த கங்கேஷ்வர் கோவிலும், அங்கே அலைகள் அலுப்பில்லாமல், சிவபெருமானுக்குச் செய்து கொண்டிருக்கும் அபிஷேகத்தினையும் பார்த்த பிறகு தன்னம்பிக்கைப் பெரியவர் Bபவன் அவர்களையும் பார்த்து பேசிக் கொண்டிருந்து அங்கிருந்து புறப்பட்டோம். குகைக் கோவிலுக்கு அடுத்ததாக இருந்த எங்கள் இலக்கும் குகைகளாகத் தான் இருந்தது. தியு நகரில் இருக்கும் புகழ்பெற்ற குகைகளான நாய்தா குகைகளைக் காண்பது என்பது தான் எங்கள் அடுத்த திட்டம். கோவிலிலிருந்து சிறிது தொலைவிலேயே இருக்கும் இந்த நாய்தா குகைகள் இயற்கையிலேயே உருவானது என்றும், இல்லை இல்லை கோட்டை கட்டும்போது பாறைகளை வெட்டியதால் உருவானது என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு – எதுவாக இருந்தாலும் இப்போது சுற்றுலாத் தலமாக இருக்கிறது!