புதன், 6 ஜூன், 2018

குஜராத் போகலாம் வாங்க – ஒன்பதாம் மாடியில் உணவகம் – நதியை நோக்கியபடிஇரு மாநில பயணம் – பகுதி – 48

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!நண்பர் குரு காலையில் சொன்னபடியே, சரியாக எட்டு மணிக்கு மேல் அழைத்தார். ”தயாராக இருங்கள், இதோ வந்து கொண்டிருக்கிறேன் – தங்குமிடம் பெயர் மட்டும் இன்னுமொரு முறை சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொள்ள பெயரையும் முகவரியும் சொல்ல, நாங்கள் தயார் ஆகியவுடன் வந்து சேர்ந்தார். நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைத்த பிறகு அவரது வாகனத்திலேயே எங்களை உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். எந்த உணவகம் – சைவமா அசைவமா என்ன சாப்பிட்டோம் என்பதையெல்லாம் சொல்லத் தான் போகிறேன்! கொஞ்சம் காத்திருங்கள்! அதற்கு முன்னர் எந்த உணவகம் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.
 
ஆம்தாவாத் எனும் அஹமதாபாத் நகரில் பார்க்க வேண்டிய இடம் என்று சொன்னால் முதலிடம் பெறுவது சபர்மதி ஆஸ்ரமும், இந்த ஆற்றங்கரையும் தான் – River front என்று சில வருடங்கள் முன்னர் அழகுபடுத்தி, மிகவும் அழகாக ஆற்றங்கரையினை பராமரிக்கிறார்கள். அந்த ஆற்றங்கரையின் மிக அருகிலேயே, ஆஷ்ரமம் சாலையில், Fortune Landmark கட்டிடத்தில் இருக்கும் ஒரு உணவகம் - Earthern Oven – ஒன்பதாம் மாடியில் அமைந்திருக்கிறது இந்த உணவகம். உணவகத்திலிருந்தே விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் ஆற்றங்கரையைப் பார்த்தபடி மெல்லிய இசை பின்னணியில் ஒலிக்க அமைந்திருக்கும் உணவகத்திற்குத் தான் எங்களை அழைத்துச் சென்றார். நண்பர் அங்கே அடிக்கடி செல்பவர் என்பதால் நல்ல வரவேற்பு. வாகனத்தினை நிறுத்த Valet Parking வசதி!


உணவகத்தின் உட்புறம்... 
படம் இணையத்திலிருந்து....

ஒன்பதாம் மாடிக்கு மின்தூக்கியில் சென்று உணவகத்தில் அமர, நண்பர் குரு என்னிடமும் மற்ற நண்பர்களிடமும் பயணம் எப்படி இருந்தது, அவர் ஏற்பாடு செய்து கொடுத்த வாகனத்தில் ஏதும் குறையுண்டா, பயணத்தில் என்னென்ன இடங்கள் பார்த்தீர்கள் என்றெல்லாம் விசாரித்தார். அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் சமயத்திலே, சைவம் எத்தனை பேர், அசைவம் எத்தனை பேர் என்பதை விசாரித்துக் கொண்டு, உணவகச் சிப்பந்தியை அழைத்து என்ன தேவை என்பதை முடிவு செய்து சொன்னார்.  Starter ஆக Dahi Kabab [சைவம்] மற்றும் Chicken Fry [அசைவம் எனச் சொல்ல வேண்டுமா என்ன!] வந்தது. அதைக் கொறித்தபடியே பேச்சு தொடர்ந்தது.சில நிமிடங்கள் கழிந்த பிறகு உணவு சாப்பிட என்ன வேண்டும் என சிப்பந்தி வந்து கேட்க, எங்களுக்குத் தேவையானவற்றை சொன்னார். சைவத்தில் – Palak Mushroom, Dal Makhani, Mutton மற்றும் Butter Roti! கூடவே Salad! நானும் நண்பர் குருவும் சைவம் சாப்பிட மற்ற நண்பர்கள் அசைவம் சாப்பிட்டார்கள். உணவு மிகவும் நன்றாகவே இருந்தது. அனைவரும் நண்பர் குருவிடம் பேசியபடியே உணவை உட்கொண்டோம். அத்தனை அருமையான உணவகத்திற்கு அழைத்துச் சென்று எங்களுக்கு இரவு உணவு வாங்கித் தந்த நண்பருக்கு – அதுவும் அவரது வேலைச் சுமைகளுக்கு இடையில் வந்ததற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். சுவையான உணவிற்குப் பிறகு வாகன நிறுத்துமிடம் வந்து அனைவரும் புறப்பட்டோம்.

எங்கள் அனைவரையும் எங்கள் தங்குமிட வாயிலில் விட்டு அவர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற போது மணி ஒன்பதரைக்கு மேல். அன்றைக்கு நடு இரவில் அவர் பெங்களூர் பயணிக்க வேண்டியிருந்தது. அத்தனை நெருக்கடியிலும் எங்களை வந்து சந்தித்து, சுவையான உணவினை, சிறப்பான உணவகத்தில் அளித்த நண்பர் குருவிற்கு எங்கள் நன்றி – அப்போதே சொல்லி இருந்தாலும் இப்போது மீண்டும்! அறைக்குச் சென்று எங்கள் உடைமைகளை எல்லாம் முதுகுச் சுமையில் போட்டு, கணக்கு வழக்குகளைப் பார்க்க வேண்டும் என நண்பர் சொன்ன போது, ஆற்றங்கரைக்கு போகவில்லையே என்ற நினைவு வந்தது. நாங்கள் தங்கியிருந்த இடத்தின் அருகில், சற்றே நடக்கும் தொலைவில் தான் ஆற்றங்கரை என்பதால், காலார நடந்தோம்.
  
ஆற்றங்கரையில் அமர்ந்தபடியே அன்றைய கணக்கு வழக்கை முடித்தோம்! நிறைய பேர் அங்கே இயற்கையை ரசித்தபடி இருந்தார்கள். நாங்களும் ரசித்தோம். நேரம் போவதே தெரியாமல் போய்க் கொண்டிருந்தது. அடுத்த நாள் காலையில் விமான நிலையம் செல்ல வேண்டும் என்பதால் தங்குமிடத்திற்குத் திரும்பினோம். அடுத்த நாள் – பயணத்தின் முடிவு எப்படி இருந்தது என்பதை அடுத்த பகுதியில் – இந்தப் பயணத்தொடரின் கடைசி பகுதியாகச் சொல்கிறேன். 
 
தொடர்ந்து பயணிப்போம்.
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

26 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட். சுவையான பதிவு இல்லையா?!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம். இணைய இணைப்பு சரியாகி விட்டது போலும்.

   நீக்கு
 2. தமிழ்ப்படமா இருந்திருந்தா இந்நேரம் அங்க ஒரு பாடல் காட்சி படமாக்கி இருப்பார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... இங்கேயும் எடுத்திருக்கலாம்.

   தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. நீங்கள் படத்தில் போட்டிருப்பது தஹி கபாபா, சிக்கன் ஃப்ரையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் படம் தஹி கபாப். மூன்றாவது சிக்கன் ஃப்ரை ஸ்ரீராம்.

   நீக்கு
 4. ஆஹா ஸ்ரீராம் இன்று முந்திக் கொண்டுவிட்டார்....நெட் பயங்கர ஸ்பீட்..போல ஹா ஹா

  இனிய காலைவணக்கம் வெங்கட்ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதா ஜி! சில நாட்கள் இல்லாததால் சேர்த்து வைத்து ஸ்பீட் தருகிறார்கள் போலும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. சுவையான பதிவு...முதல்படம் கண்ணைப் பறிக்குது.. இரண்டாவது நமக்கில்லைனு தெரியுது....முதல்?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... முதலாவது படம் நமக்குரியது தான் கீதா ஜி - அது தஹி கபாப்! சாப்பிடலாம் சைவம் தான்! மூன்றாவது படம் நமக்குக் கிடையாது - அதற்கு போட்டியும் அதிகம் - சிக்கன் ஃப்ரை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. அருமையான உணவகம். நாங்கள் பயணத்தின் போது கார் ஓட்டுநர் சுட்டிக்காட்டியதில் ஆற்றங்கரையைப் பார்க்க முடிந்தது. ஆனால் செல்ல முடியலை. பொதுவாக குஜராத் மக்கள் இரவு வெகு நேரம் பொழுதுபோக்குகளில் செலவு செய்வார்கள். காலை மிக மெதுவாக வேலையை ஆரம்பிப்பார்கள். வங்கிகள், அரசு அலுவலகங்கள் கூடக் காலை பதினோரு மணிக்குத் தான் ஆரம்பம் ஆகும். வாழ்க்கையை ரசித்துக் கழிப்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த முறை அங்கே பயணிக்கும் வாய்ப்பு இருந்தால் மாலை வேளையில் ஆற்றங்கரைக்குச் சென்று வாருங்கள். நன்றாக இருக்கும்.

   ஆமாம் கொஞ்சம் மெதுவாக எழுந்திருப்பவர்கள் தான்! வடக்கில் பெரும்பாலான இடங்களில் இப்படித்தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   நீக்கு
 8. ஆற்றங்கரை படங்கள் இடவில்லையா ஜி ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்றைக்கு ஆற்றங்கரை சென்ற போது என்னுடைய கவச குண்டலம் என்னுடன் இல்லை! :) அலைபேசியில் எடுத்த படம் அடுத்த பகுதியில் போடுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. புதிய உணவகமா ? பார்த்த நினைவில்லை... நாங்க போயே வருசம் எட்டாச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதிய உணவகம் அல்ல. முன்பே இருந்தது தான் என்று சொன்னார் நண்பர். நீங்கள் சென்றபோது இருந்ததா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 11. சபர்மதி ஆசிரமம் பார்க்க ஆசை உண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது அங்கே சென்று வாருங்கள் ஜி.எம்.பி. ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  அழகான பயணங்கள் . இங்கெல்லாம் எப்போது போய் பார்க்கப் போகிறோம் என்றிருக்கிறது. தங்கள் எழுத்து நடையில் தாங்கள் சுற்றிப் பார்த்த அனைத்து இடங்களுக்கும் நானும் சென்று வந்த திருப்தி கிடைத்தது. மிகவும் நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் இந்த மாதிரி இடங்களை பார்க்கும் அனுபவம் கிடைக்கட்டும் கமலா ஹரிஹரன் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. ஒன்பதாம் மாடி உணவகமா? சாப்பிட்டுவிட்டு கீழே இறங்குவதற்குள் செரித்துவிடுமே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... மேலே செல்வதற்கும் கீழே வருவதற்கும் மின் தூக்கி உண்டு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....