சமீபத்தில் என்னுடைய பிறந்த ஊரான
சிவகங்கைச் சீமைக்கு உறவுகளைக் காணச் சென்றோம். சிவகங்கை என்றதும் முகநூல் தோழியான
S MalarVizhi Amudhan அவர்களின் நினைவு தானே வந்தது! திருச்சியிலிருந்து ரயிலில்
தான் பயணம் – கொஞ்சம் தூரம் தான் என்றாலும் ரயில் பயணம் தான் எனக்குச் சரிப்பட்டு
வரும் என்பதால் Passenger இரயிலில் ஒரு பயணம்!
ஏறியதிலிருந்து தின்பண்டங்களை
வரிசையாக உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் பயணிகளும், அலைபேசியில் பொழுதை
கடத்துபவர்களும், எதிர் இருக்கை காலியாக இருந்தும் அடம்பிடித்து இந்த இருக்கையில்
தான் அமருவேன் என்று அடம்பிடிக்கும் மனிதரும், இதற்காக அரசியல் பேசுபவரும்,
வழியெங்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாக குல்மொஹர் மரங்களும் அதையொட்டிய என்
சிறுபிராயத்து நினைவுகளும் என பயணம் சுகமாக சென்றது. என் தாய் மாமா அங்கே தான் பல
வருடங்களாக இருக்கிறார் என்பதால் சிவகங்கை நினைவுகள் நிறையவே உண்டு. வீட்டுக்குச்
சென்று ஓய்வெடுத்து, பிறகு சில இடங்களுக்குச் சென்று பார்க்க வேண்டும் என்பது
திட்டம்.
நினைத்தபடியே சிவகங்கைச்
சீமையை கொஞ்சம் சுற்றிப் பார்த்தோம். எவ்வளவோ மாற்றங்கள்!! சிறுபிராயத்தில் விடுமுறைக்காகச்
சென்ற போது பார்த்த காட்சிகளை இன்று தேடினால் எங்கே இருக்கும்!!
மனோகரன் மாமாவின் கடை
ரோஸ்மில்க்காக அன்று பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஓடுவோம். சிலசமயம் ஃப்ரூட்மிக்ஸும்
இருக்கும். மாமா வீட்டின் கொல்லைப்பக்க கதவைத் திறந்தால் அடுத்த தெரு வந்துவிடும்.
குளிர்சாதனப் பெட்டி இல்லாததால் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஓடி வாங்கி வந்து ருசிப்போம்.
இன்று அந்தக் கடை பிரம்மாண்டமாக புதிய பரிமாணங்களுடன் இருக்கிறது. இந்தப்
பயணத்திலும் அங்கே ரோஸ்மில்க்கை வாங்கி ருசித்தோம்.
சிவன்கோவிலுக்கு அருகில்
இருந்த அத்தையின் பெரிய வீடு இன்று கல்யாண மண்டபமாகி விட்டது. வராண்டா, ரேழி, கூடம்,
முற்றம், பூஜையறை, ஸ்டோர் ரூம், சமையலறை, விறகுகள் அடுக்கி வைக்கும் அறை, கிணற்றடி,
தோட்டம் என்று இந்த தெருவில் ஆரம்பித்து அடுத்த தெரு வரைக்கும் செல்லும்.
கடைத்தெருவை சுற்றி வந்தோம்.
பழைய மெருகு குன்றாத கட்டிடங்கள் ஒருசில இருந்தன. புதுவிதமான படி வைத்த ஆட்டோக்கள்
இங்கு உள்ளன. எதில் அமர்வது என்று குழப்பம்! முதல்தளம், இரண்டாம் தளம் போல ஆட்டோவில்
அமைப்பு!
இவ்வளவு சுற்றிய பின்
நான் தேடியது ஒன்றை மட்டுமே! அது - பன்றிக்குட்டிகள்! குடும்பம் குடும்பமாக சாலையில்
சுற்றிக் கொண்டிருந்த பன்றிக்குட்டிகள் இன்று கண்களில் தென்படவில்லை.
மாலை சிவன்கோவிலுக்குச்
சென்றோம். பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் ஆகியிருக்கிறது.
அடுத்துச் சென்றது சிவகங்கை
அரண்மனை உள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு. அமைதியான சூழலில் உள்ள கோவில். இப்போதுள்ள
ராணி மதுராந்தக நாச்சியார். அவரின் கட்டுப்பாட்டுக்குள் தான் இந்தக் கோவில்கள் உள்ளன.
அடுத்து பேருந்து நிலையத்தின்
அருகில் உள்ள பெரியநாயகி சமேத சசிவர்ணேஸ்வரர் கோவிலுக்கும் சென்று வந்தோம். தெப்பக்குளத்தின்
வழியே வந்தோம். சிறிதும் தண்ணீர் இல்லை.
மாமா மாமியின் அன்பான உபசரிப்பில் இரண்டு
நாட்கள் இருந்தாச்சு. மாமா பிள்ளைகளின் அன்பிலும் திளைத்தாச்சு. பிறந்த வீட்டிலிருந்து
கிளம்பும் உணர்வு.
பிறந்த ஊரை சற்று சுத்தியும் பார்த்தாச்சு.
அதையொட்டிய நினைவுகளை மனதில் அசை போட்டேன். அது என்றும் பசுமையானது. கவலைகளும் பொறுப்புகளும்
இல்லாப் பருவம்.
மாமா வீட்டு முருங்கையும். கறிவேப்பிலையும்,
வடாமும், புளியும் தாம்பூலமும் கட்டி எடுத்தாச்சு. அம்மாவை நினைத்துப் பார்க்கிறேன்,
அஞ்சு ரூபாய் பணமானாலும் உடன்பிறந்தவன் தாம்பூலத்தில் வைத்துக் கொடுத்தால் எத்தனை மகிழ்ந்திருப்பாள்.
அங்க தான் வேலை செஞ்சிண்டே
இருக்கே!! போய் உட்காரு!! என்ற வார்த்தைகள் மனதுக்கு இதமளித்தது! எத்தனையோ விதமான உணர்வுகளைத் தந்த இந்தப் பயணம் மனதுக்கு நெருக்கமானது, நிறைவானது.
நட்புடன்
ஆதி வெங்கட்
குட்மார்னிங் திருமதி வெங்கட். குட்மார்னிங் வெங்கட். முகநூலில் வாசித்திருக்கிறேன், இந்த விவரங்களை.
பதிலளிநீக்குவிவரங்கள் முகநூலில் வந்தவை தான் - ஒரு தொகுப்பாக இங்கே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அந்த 'மாடி ஆட்டோ' வில் சென்னையில் நானும் பயணித்து அவஸ்தைப் பட்டிருக்கிறேன். வேறு வழி இல்லாத நேரம் அது! ஆனால் இப்போது நல்ல வேளையாக அந்த ஆட்டோக்கள் சென்னையில் வழக்கொழிந்துவிட்டன (என்றுதான் நினைக்கிறேன்)
பதிலளிநீக்குஸ்ரீராம்... இது ஷேர் ஆட்டோ இல்லையோ? வாழ்க்கையில் முதல் முறையாக இரண்டு மாதங்களுக்கு முன்பு திருவான்மியூரில் பயணித்தேன். ஆனாலும் அது அவஸ்தை.
நீக்குஷேர் ஆட்டோதான். அதில் உட்காரும் வகையால் பெரும் அவஸ்தை. முன்வரிசை தரைடிக்கெட் மாதிரி. காலை மடக்கி உட்காரவேண்டும். பின்வரிசை பெஞ்ச் போல இருந்தாலும் காலே வைக்க முடியாது. சமயங்களில் முன்னால் ரெண்டு வரிசை தரை டிக்கெட் இருக்கும். வெவ்வேறு பெயர் இருந்தாலும் கட்டணம் ஒன்றுதான்!
நீக்குஆனால் இப்போது இந்த மாடல் ஆட்டோ இல்லை.
சென்னையிலோ வேறு எங்குமோ நானும் இந்த ஆட்டோக்களைப் பார்த்ததில்லை. சிவகங்கையில் இம்மாதிரி ஆட்டோக்கள் நிறையவே ஓடுகின்றன.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இது ஷேர் ஆட்டோ மாதிரி தான் - சிவகங்கையில் பள்ளிச் சிறுவர்களை இம்மாதிரி வண்டியில் தான் அழைத்துச் செல்கிறார்கள். ஷேர் ஆட்டோ ஒரு பெரும் அவஸ்தை. அதை விட அவஸ்தை இங்கே உத்திரப் பிரதேசம்/பீஹார் பகுதிகளில் இருக்கும் ஃபட்ஃபட்டியாக்கள்! ரொம்பவே அதிகமான ஆட்களை ஏற்றுவார்கள். தொங்கிக் கொண்டு வருவதைப் பார்க்க முடியும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
அட இதுல தரை டிக்கெட் வேறயா... ரொம்ப கஷ்டம் தான்! அதுவும் உயர மனிதர்களுக்கு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
கோவில் புகைப்படம் அழகாய் எடுக்கப் பட்டிருக்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குமுகநூலில் படிச்சேன். அருமையான நினைவுகள். அந்த ஆட்டோவில் எல்லாம் என்னால் உட்கார்ந்து போவது ரொம்பக் கஷ்டம். நல்லவேளையா இங்கே இல்லை. ஆட்டோவில் ஏறும் இடம் கொஞ்சம் உயரமாக இருந்தாலே என்னால் ஏற முடியறதில்லை! :(
பதிலளிநீக்குஆமாம் அந்த ஆட்டோவில் பயணிப்பது ரொம்பவே கஷ்டம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
படங்கள் அருமை
பதிலளிநீக்குவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்
ஆமாம் ஐயா. சிறப்பான இடம் தான். நிறைய சுற்றிப் பார்க்க முடியவில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
லேட்டாகிப் போச்சு...ஆதி அண்ட் வெங்கட்ஜி குர்மார்னிங்க்...
பதிலளிநீக்குபுகைப்படங்கள் அழகு. நல்ல நினைவுகள்....இங்கும் அந்த மாதிரி ஆட்டோ இருந்தது இப்போது குறைந்திருக்கு என்றாலும் இன்னும் இருக்கு...அந்த ஆட்டோவில் உங்களைப் போன்றோர் பயணிப்பது ரொம்பக் கஷ்டம் (உங்க உயர ஃபேமிலிக்கு ஹா ஹா ஹா ஹா) என்னைப் போல நாலடியாருக்கு ஓகே...இருந்தாலும் கஷ்டம்தான்....
பிறந்தவிட்டுச் சீருடனா ஆஹா!! சூப்பர்.
கீதா
ஆறடி ஆசாமிகளுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் அந்த ஆட்டோ பயணம்.
நீக்குபிறந்த வீட்டுச் சீர்! :) அது மகிழ்ச்சியான விஷயமாச்சே...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
மறக்க முடியாத பயணம்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஎன்றும் இதம் தரும் நினைவுகள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்குதமிழக வரலாற்றுப்பக்கங்களில் முக்கிய இடத்தினைப் பிடித்துள்ள இதுவும் ஒன்று. உங்களுடன் இன்று பயணித்தோம். நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஅனுபவத்தை பகிர்ந்த விதம் அருமை சகோ
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஒரு இடத்தை, சூழலை விட்டு வந்தபிறகு திரும்பவும் அந்த அந்த இடங்களுக்குப் போனால் நமக்கு ஏமாற்றம் வருவதைத் தவிர்க்க இயலாது.
பதிலளிநீக்கு//மாமாவின் கடை ரோஸ்மில்க்காக//-என் பதின்ம வயதில், நெல்லையில், ஐஸ் பாளங்கள் (சும்மா 1-2 கிலோதான்) வாங்கிவருவதாற்காக 2 கி.மீட்டர் நடந்து வாங்கிவருவோம். எங்க மாமா, எசென்ஸ் வச்சு கூல் டிரிங்க்ஸ் (2 வகை) பண்ணுவார். இது 79கள்ல அபூர்வம்.
உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. ஐஸ் பாளங்களிலிருந்து கூல் ட்ரிங்க்ஸ்! வாவ்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
அருமையான நினைவுகளை சுமந்த பயணம்.
பதிலளிநீக்குமீண்டும் அருமையான நினைவுகளை கொண்டு வந்த பயணம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஅருமையான பழைய நினைவுகளை அசை போட்டு அதன் இனிமையை ரசித்தபடி அமைந்த பயணம். நன்றாக அனுபவித்து சந்தோஷமாக இருந்ததற்கு வாழ்த்துக்கள்.
தங்கள் உதவியில் நானும் ஊர் சுற்றிய திருப்தி கிடைத்தது. கோவில்களின் படங்கள் மிகவும் அழகாயிருந்தது.
கடைசி வரிகள் என மனதையும் சற்று கலங்க வைத்தன. உடன் பிறந்த பாசம் என்றுமே மறக்க இயலாதது.
/அங்க தான் வேலை செஞ்சிண்டே இருக்கே!! போய் உட்காரு!! என்ற வார்த்தைகள் மனதுக்கு இதமளித்தது/
என் அம்மாவும் இப்படித்தான் கூறுவார்கள். பழைய நினைவுகள் எனக்குள்ளும்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குபலப்பல உணர்வுகளை தந்த பயணம்.
பதிலளிநீக்குஇவ்வகை ஷேர் ஆடோக்கள்தான் சென்னையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவை வழக்கொழியவில்லை. சென்னையின் தவிர்க்கமுடியாத அவஸ்தைகளில் இவ்வகை ஷேர் ஆடோக்களும் ஒன்று.
சென்னையின் தவிர்க்க முடியாத அவஸ்தைகளில் ஒன்று ஷேர் ஆட்டோக்கள் - உண்மை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ்.
சிவகங்கை சீமை என்று ஒருப்டம்வந்திருந்தது அதற்கு விமரிசனகாக சிவகங்கை மீசை என்று ஒரு பத்திரிக்கை வெளிட்டது நினைவுக்கு வருகிறது
பதிலளிநீக்குசீமை - மீசை! ஹாஹா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
படங்களுடன் பகிர்வு அருமை
பதிலளிநீக்குதொடர நல்வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்கு