செவ்வாய், 12 ஜூன், 2018

விசிறி – அரைவயிற்றுப் பசியேனும் – புகைப்படக் கவிதைஞாயிற்றுக் கிழமை வெளியிட்ட புகைப்படத் தொகுப்பிற்கான கவிதைகள் மூன்று – முகநூல் வழியே ஒன்றும், WhatsApp வழியே இரண்டும்! மூன்றும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். மற்ற படங்களுக்கான கவிதைகள் வந்தால் அவையும் அவ்வப்போது வெளியாகும்!படம் எடுக்கப்பட்ட இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

மே மாத வெய்யிலுக்கு – அதுவும் கத்திரி வெய்யிலுக்கு கேட்கவா வேண்டும் – கொளுத்தித் தள்ளுகிறது! அந்த சமயத்தில் தேர்த் திருவிழா பார்க்க வந்தவர்களிடம் விற்பனை செய்கிறார் – விற்பனைப் பொருள் விசிறி! உழைத்து உழைத்து, வெய்யிலில் திரிந்து கருத்துப் போன உழைப்பாளி.

கவிதை-1: அரை வயிற்றுப் பசியேனும்…

விசிறிகள் இத்தனை இருந்தென்ன லாபம்…
விற்பவர் வெக்கை தணிக்கத் தோதில்லையேதும்…
வீதிகளை அளந்து களைத்த பாதம் நினைந்தோ…
விதியினை நொந்து சலித்த முகம் பார்த்தோ…
விற்குமோ… ஒற்றை விசிறியேனும்…
ஆற்றுமோ… அரைவயிற்றுப் பசியேனும்.

கீதா மதிவாணன், சிட்னி. 
வலைப்பூ- http://geethamanjari.blogspot.com

கவிதை-2: ரங்கத்தில் நாதரொடு…

- கவிஞர் கணக்காயன் [இ.சே.இராமன்]/11.06.2018 
 வலைப்பூ: http://www.kanakkayan.blogspot.com

கவிதை-3: அரங்கனும் ஆவாரோ அவர் விசிறி?

கொளுத்தும் வெயிலுக்கு
வெளுத்த உடை
தேர்காண வந்தோரின்
வேர்வை போக்கிட
விரிந்த கரங்களில்
விற்பதற்காய் விசிறிகள்
அரங்கனின் பார்வைக்கு
அவர் விசிறி
செய்யும் தொழிலதனை
தெய்வமாய் நினைப்பதால்
அரங்கனும் ஆவாரோ
அவரின் விசிறி?
கடைக்கண் பார்வைக்குக்
காத்திருக்கும் அவருக்கு
அரங்கன் அருளால்
அகலட்டும் அல்லல்கள்!

காரஞ்சன்(சேஷ்),
வலைப்பூ: http://esseshadri.blogspot.com/

என்ன நண்பர்களே, படத்திற்கான கவிதைகளை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

22 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  அத்தனையும் படத்திற்கேற்ற அருமையான கவிதைகள். அனைத்தையும் படித்து ரசித்தேன். கவிதைகளை படைத்தவர்களுக்கும் அதை எங்கள் பார்வைக்கு விருந்தாக படைத்த தங்களுக்கும் என மனம் நிறைந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 6. கவிதைகள் அருமை.
  மூவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 7. மிக அருமையான உணர்ச்சிகளை வடித்த கவிதைகள்.
  வெப்பம்
  விசிறி அடித்து வெய்யில் அகன்ற உணர்வு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 10. விசிறி படமும் பதிவும் அருமை.
  நாம் இருப்போம் பலருக்கு விசிறியாக...
  நமக்கும் தேவை கத்திரியில் நிம்மதியான நித்திரைக்கு ஒரு விசிறி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரங்கா.

   நீக்கு
 11. கவிதைகளை ரசித்தோம் வெங்கட்ஜி! மூவருக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....